PhD படிப்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாமா?

 

PhD படிப்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாமா?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.

- ALP  ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

வணக்கம் மேம். இப்ப ஒருத்தர் கேட்டிருக்காரு PhD பண்ணிணால் லைஃப் வெற்றியடையமா? அதாவது பிஹெச்டி ல சக்சஸ் ரேட் பண்ண முடியுமா என்பது அவரோட கேள்வி அதற்கான பதில் இருக்காங்க மேம்.

 

உமா வெங்கட் மேம்:

 

கண்டிப்பாக, இந்த பிஹெச்டி  எல்லாராலையும் பண்ண முடியுமானா  எல்லாருமே போயி ஜாயின் பண்ணிடுவாங்க.  நிறைய பேர் நான் பார்த்ததுல C A பண்றவங்களும் இருக்காங்க பிஹெச் டி பண்றவங்களும் இருக்காங்க.

 

காலதாமதம் என்பது அவங்க ஜாதகத்துல இருக்கும். நாலு வருஷமா எழுதுறோம். அஞ்சு வருஷமா எழுதுறோம். ஏழு வருஷமா எழுதுறோம் எங்களால சக்சஸ் பண்ணவே முடியல என்று சொன்ன நபர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள்.

 

அவர்களுடைய கிரக அமைப்பு அவங்களுக்கு கோச்சார கிரகமும் அனுகூலமாக இருந்தால் மட்டுமே வெற்றி என்பது அவங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும்.

 

எந்த காலகட்டத்தில் வெற்றி கிடைக்கும் என்று ஒரு கேள்வி வந்ததுன்னா உதாரணமாக துலாம் லக்னம் அட்சய லக்னமாக இருக்குது, இந்த துலா லக்னத்திற்கு அட்சய லக்னத்திற்கு 9ம் பாவக கிரகமும் 11-ம் பாவக கிரகமும் நல்ல பாவகத்துல அமர்ந்திருந்தான்னா ஜாதகத்துல கண்டிப்பாக இவங்க பிஎச்டில ஒரு பெரும் புகழும் அதற்குண்டான தகுதி மானியம்  இவங்களால வாங்க முடியும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

 

ஜாதகத்தில் 9ம் பாவகமும் 11-ஆம் பாவகமும் நல்ல நிலையில் இருந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். கண்டிப்பா இவங்களுக்கு சக்ஸஸ்  தானாகவே அமையும். இந்த இரு பாவகங்களும் சரியாக இல்லை என்றால் கண்டிப்பாக பிரச்சனை இங்க கொடுக்கும்.

 

சிலர் பாத்தீங்கன்னா CA க்காக எழுதுவாங்க. ஒரு காலத்திலேயும்   நிறைவு என்பது அவங்களுக்கு அங்கே இருக்காது. கல்யாணத்துக்கு முன்னாடி படிப்பாங்க. கல்யாணம் ஆய்டும் குழந்தை பிறக்கும் குழந்தைக்கு ஒரு ரெண்டு வயசு வரைக்கும் ஆயிடும். அதுக்கப்புறம் அவங்க அதை படித்து அதுல வெற்றி என்பது அங்க கொடுக்கும்.

 

இது மாதிரி ஜாதக அமைப்பு பார்க்கும்போது நாங்கள் சொல்லுவோம் உடனே இது நடக்காது காலதாமதம்ங்கிறது  ஆகும். சோ பதட்டப்படாமல் நிதானமாக கையாளுங்கள் என்பதுதான் அவங்ககிட்ட சொல்றது.

 

இப்ப உங்களுக்கே தெரியும் நிறைய இடங்களில் இதை பதிவு பண்ணி இருக்கோம். திருமண தாமதம்னு ஒண்ணு  இருந்ததுனா இப்போதைக்கு திருமணத்திற்கு உண்டான காலங்கள்  இல்லை. தற்போது அந்த அமைப்புங்கிறது  கிடையாது. ஒரு வருஷம் இல்லனா ரெண்டு வருஷம் கழிந்து தான் அதோட அமைப்பு. அதுவரைக்கும் வெயிட் பண்ணித்தான் ஆகணும் வேற வழி கிடையாது என்று சொல்லுவோம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/_JxHNQN20Xw?si=wRWlX5QQkf8Awi0H

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!