ஜோதிடம் படிப்பதால் சூழ்நிலைகளை கையாள முடிகிறது.

 

ஜோதிடம் படிப்பதால் சூழ்நிலைகளை கையாள முடிகிறது.

 

 - ஸ்ரீ குரு சாந்தகுமார்.

 - ALP ஜோதிடர்.

 


வணக்கம்.

பணம் எதுக்காக சம்பாதிக்கிறேன் பணத்தை வைத்து நான் என்ன பண்ண போறேன் என்ற தெளிவுகள் இல்லாத போது பணம் சம்பாதித்தாலும் அது தவறான பாதைக்கு போய் போய் சமூக மாற்றங்கள் ஏடாகூடமா போகுது.

சுய ஒழுக்கங்கள் :

இது முதலில் ஒழுங்கு பண்ணனும்னா சுய ஒழுக்கங்கள் முதல்ல வரவேண்டியது இருக்கு. இப்போ உங்களுக்கும் எனக்கு ஒரு பிரச்சனை நான் இத எப்படி கையாளுகிறேன் என்பது ஜோதிடம் தெரிந்தால் நான் எப்படி கையாளுவேன். ஜோதிடம் தெரியலைனா எப்படி கையாளுவேன் இதுல தான் பதில்கள் இருக்கு.

இப்போ உங்ககிட்ட நான் பணம் வாங்கிட்டேன் நான் திருப்பி கொடுக்க வேண்டி இருக்கு. நான் கொடுக்க முடியல இது நிலைமை. இந்த சூழ்நிலை எல்லாருக்கும் வரும். எனக்கு வரும் உங்களுக்கு வரும் அம்பானிக்கும் வரும். பணம் கொடுக்க வேண்டி இருக்கு நான் கொடுக்க முடியல. நான் மன்னிப்பு கேட்கணும்.

நீங்க என்ன நல்ல எண்ணத்தோடு கொடுத்தீங்க என்னால அதை திருப்பி கொடுக்க முடியாத  சூழ்நிலையில் இருக்கேன். நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்களை ஃபேஸ் பண்ணனும். எனக்கு அந்த துணிச்சல் ஜோதிடம் தருது முதல் விஷயம்.

பணத்தை இத்தனாம் தேதி தர முடியும்.  எப்போ எனக்கு வர முடியும் என்று எனக்கு ஒரு தெளிவு கிடைக்குது. இப்ப நான் வந்து ஜோதிடம் தெரிஞ்சதுனால உங்களை நான் பேஸ் பண்ற தைரியம் முதலில் எனக்கு வருது. 

 

இல்லாம இந்த தைரியம் இல்லாத பட்சத்தில் நான் எப்படி நடந்துக்கிறேன்னா உங்களை நான் தவறாக பேசுகிறேன். என் பிரச்சனையை உங்க பிரச்சினையாக மாற்றி விடுகிறேன். அது உங்களுக்கும் எனக்கும் இருக்க கர்ம வினைகளை கூட்டுது.

இதனுடைய தாக்கங்கள் உங்களுக்கும் ஜாஸ்தியாவது எனக்கும் ஜாஸ்தியாவது.  ஒரு சைக்கிள்ல போய் ட்ராப் ஆகுது.

இத்தனாம் தேதி வரைக்கும் எனக்கு வராது என்று தெரியுது. நான் என்ன பண்ண முடியும். எனக்கு தெரியாதுனால தான் நான் பதற்றேன் பயப்படுகிறேன் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.

எனக்கு இப்ப வரும்னு தெரியும் அது வரைக்கும் நான் பொறுமையா தான் இருந்தாகணும் என்று எனக்கு தெரியும். நான் இப்போ திரும்பவும் உங்க கூட நல்ல உறவை மெயின்டெய்ன் பண்ண முடியும் என்று எனக்கு தெரியும் போது நான் அழகா உங்களை கையாளுகிறேன் புரியுதுங்களா சொல்றது.

பணம் எப்போ வரும் என்று தெரியாததுனால தான் இந்த தப்புகளே நடக்குது. இத்தனாம் தேதிக்கு அப்புறம் வரும். எனக்கு திரும்ப கிடைத்துவிடும். எனக்கு வருமானம் சூழ்நிலைகள் நல்லா இல்ல இதுக்கு அப்புறம் எனக்கு வருன்றது தான் ஜோதிடம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/O0papuOeenY?si=YfQeXkxMNHfxykpX

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR