ஜோதிடம் படிப்பதால் இதை நாம் உணர முடியும்

 

 ஜோதிடம் படிப்பதால் இதை நாம் உணர முடியும்

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்தகுமார்

- ALP ஜோதிடர்.

 


சாந்தகுமார் சார்:

 

அனைவருக்கும் வணக்கம். இப்ப பால அவருக்கு போடுறாங்க. அந்த பால அவர் சிக்ஸர் அடிச்சிடுவாருன்னு கேரண்டி சொல்ல முடியுமா? கட்டாயமா முடியாது. அவர் மனசுக்குள்ளார இந்த இது தான் இருக்குது. எந்த மாதிரி சூழ்நிலை இருந்தாலும் அதை  நான் கையால தயாராயிட்டேன் என்ற பக்குவம் தான் அந்த ஜெயிப்ப கொண்டு வந்து கொடுக்குது.

 

தொகுப்பாளர்:

 

இப்ப என்ன சொல்றேன் ஒருத்தர் பதட்டத்தோடையே அணுகுகிறார்னு வச்சுக்குவோம். ஜெயிக்கப் போறோம்னு  அவருக்கு தெரியாது. பதட்டதோடையே அந்த பால அணுகுறாரு பட் என்ன ஆயிடுச்சு? 4 ஆயிடுச்சு ஏதோ ஆயிடுச்சு ஏதோ குருட்டாம்போக்குல அடிச்சு வந்திருச்சின்னு வச்சுக்கோங்க. இத நம்ம என்ன பண்றது இது மாதிரி சூழ்நிலையில சூழ்நிலையினு ஒதுக்கி இந்த மாதிரி நடக்கிறதுக்கு வாய்ப்பு இல்ல என்ற ப்ராபப்ல்டிய இங்க உள்ள  கொண்டு வரணுமா?

 

சாந்தகுமார் சார்:

      

சூழ்நிலை அவருக்கு சாதகமாக இருந்தது அதனால ஜெயிச்சுட்டாரு அவ்வளவுதான். இதைதான் லக்குனு சொல்லிகிறார்கள்.

லக் என்று ஒண்ணு தனியா இல்லை. அவருடைய செயல்பாடே  இல்லாம அதுவாவே நோ பால் போட்டு அது 4 போயிடுச்சு அதனால வின் ஆயிடுச்சு என்பது வேற விஷயம். அது லக் என்று சொல்லலாம். அவருடைய முனைப்பு எங்கயுமே இல்லை. ஒரு வீசு வீச தான் செய்றாரு பால் பேட்ல மீட் ஆனா தான் அந்த இதுக்கு அவரு காரணியா வாராரு.

 

தொகுப்பாளர்:

 

கிரிக்கெட்டை பத்தி ஸ்டார்ட்  பண்ணதுனால ரெண்டு  பிளேயர் மட்டும் விளையாடல அப்படிங்கும் போது அப்ப வெற்றி தோல்வி என்பது ஒரு டீமுக்கு தான் இருக்கே தவிர ஒரு தனிப்பட்ட நபருக்கு இல்ல.

 

சாந்தகுமார் சார்:

 

சூப்பரா சொல்லிட்டீங்க இப்போ ஆனா இத இன்னும் அழகா சொல்ல முடியும். வெற்றி தோல்வி என்பது நான் என்ன செய்கிறேன் என்கிறது  என் கட்டுப்பாட்டுல இருக்கு. நான் எல்லாரையும் கட்டுப்படுத்துறேங்கிறதுல அர்த்தமும் இல்லை.

 

ரெண்டு டீம் இப்ப  இந்தியாவும் நியூசிலாந்துன்னு எடுத்துக்குவோம். 11 பிளேயர்ஸ் பெஸ்ட்  பிளேயர்ஸ் தான்  செலக்ட் பண்ணி கொண்டு வந்திருக்காங்க. அங்கேயும் 11 பெஸ்ட் பிளேயர்ஸ் தான் கொண்டு வந்திருக்காங்க. தனிப்பட்ட திறன்களால தான் ஜெயிச்சுட்டு இருந்த ஒரு காலகட்டமெல்லாம்  இருந்தது. இப்ப எல்லாம் டீம் ஒர்க் ல தான் ஜெயிக்கிறாங்க.

 

இந்த டீம்ல எது சக்சஸ் ஆகுது என்றால் அதுலயும் மனோ ரீதியான பலன்கள்ல தான் ஜெயிக்க முடியும். இன்னைக்கு இருக்கிற போட்டி நிறைந்த உலகம் எப்படி இருக்குன்னா வெறும் தனிப்பட்ட திறன்கள்ல ஜெயிக்கிறது இல்ல. கூட்டுத்திறன் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா எப்படி நடந்துக்கணும் டீம் ஒர்க் பண்றதுல தான் ஜெய்ப்புகளே நடக்குது.

 

வாழ்க்கை கூட அப்படித்தான் நான் மட்டும் சிறந்தவனா இருக்கேன் நல்லவனா இருக்கேன் என்பதுனால ஜெயிப்பு வர்றது இல்ல. நன்றி.

 

வீடியோ லிங்க்:

https://youtube.com/shorts/kSqXdKP0hw4?si=zbXWQl7S2CwHf90m

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR