திருமணத்திற்கு எந்த திசையில் இருந்து வரன் அமையும்?

 

திருமணத்திற்கு எந்த திசையில்

 இருந்து வரன் அமையும்?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.

- ALP  ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம். அந்த ஒவ்வொரு லக்னத்திற்குமே அதனுடைய ஏழாம் பாவகம் தான் ஸ்பவுச் கொடுக்கக் கூடியது.  வாழ்க்கைத் துணையை பற்றி சொல்லக்கூடியது.

அந்த வாழ்க்கைத் துணையினுடைய நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்ம ஜாதகத்துல அந்த லக்னத்திற்கு ஏழாம் வீட்டு அதிபதி எந்த திசையில் இருக்கிறார்களோ அதற்கான இடத்திலிருந்து நம்மளை தேடி வரன் அமையும்.

அந்த வரன் தன்னால வருமா இல்லைன்னா நம்ம தான் போய் கேட்கணுமா என்று ஒரு  நிகழ்வுகள் எல்லாமே உங்க ஜாதகத்துல மாத்தி கொடுத்திடும். அதனால திசையை சொல்ல முடியுமா கட்டாயம் சொல்ல முடியும்.

இந்த திசையை சொல்றதுல ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் ரிஸ்க் அதிகம். ஏன்? அவங்க ஏதாவது மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருப்பாங்க. ட்ராவல் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.  அப் டூ டேட்  இந்த மாசம் இன்னைக்கு இன்னொரு மாசம் இன்னொரு பக்கம் அப்படியே மாறிக்கிட்டே இருப்பாங்க.

அப்போ அந்த மாற்றங்களை தரும்போது அவங்களுக்கு அந்த திசைகளை நாம் அரிது இட்டுச் சொல்ல முடியாது என்பதை நாம புரிஞ்சுக்கணும்.

ஏன்னா  அந்த மாற்றங்கள் இந்த மார்க்கெட்டிங் லெவல்ல இருக்கிறவங்களுக்கு பிரத்தியோகமா அந்த ALP லேயே ஒரு 45 நாள் பார்க்கிற மாதிரி இருக்கும்.

அந்த 45 நாள்ல கிரகங்கள் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ அந்த திசையில் இருந்து தான் அவங்களுக்கு வாழ்க்கை துணை அமையும் என்று தெளிவா சொல்லிட முடியும்.

அதனால எந்த திசையில் இருந்து வரும் என்று தெரிஞ்சு வாழ்க்கை துணையை அமைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/ZDqMcQKGd6I?si=JWFqNWdlLdOz3NCd

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR