குரு வலிமை குறைந்தால் குழந்தைகள் மூலம் பிரச்சினை வருமா?


குரு வலிமை குறைந்தால் குழந்தைகள் மூலம் பிரச்சினை வருமா?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்

   - ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம். குருவுடைய பொண்ணுக்கு கல்யாணம் அந்த கல்யாணத்துல அந்த பொண்ணுடைய ஜாதகத்துல என்ன இருக்குனா? கல்யாணமானா இந்த பையனும் பொண்ணும் ஒண்ணு சேர்ந்தாங்கன்னா கணவன் இறந்து விடுவான் என்று ஒரு தோஷம் இருக்கு.

இவருக்கு ஒரே பயமா இருக்கு. படபடப்பா இருக்கு. அய்யய்யோ நம்ம பிள்ளை ஜாதகத்துல இப்படி இருக்கே? என்ன பண்றது என்று ரொம்ப யோசிக்கிறார்.

 

யோசிச்சிட்டு அவருக்கு எதுவும் மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என்று தகப்பன் இல்லையா பரிதவிக்கிறார். கல்யாணம் ஆகுது, நைட்ல ரெண்டு பேரையும் ஒண்ணா தங்க வைக்கிறாங்க.

 

இவர் என்ன பண்றாரு அந்த பையனுக்கு ஏதோ ஆபத்து வந்துருமோ என்று அந்த சாவி துவாரத்தின் வழியாக பார்க்கிறேன். பார்க்கிறார், அந்த பையனுக்கு எந்த ஆபத்தும் இல்ல. அந்த குறிப்பிட்ட அந்த கண்ட நேரங்கிறது தாண்டி போயிடுது. என்னடா இது எதுவும் ஆகலையே என்று சொல்லி பார்க்கும்போது, அங்க தான் இந்த ஒரு வார்த்தை வருது.

 

குரு பார்த்க கோடி தோச நிவர்த்தி. நீ பாத்துட்ட அதனால அவங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ஒரு நிகழ்வு. அந்த மாதிரி அந்த குருவுடைய பார்வை இருந்தாலே அவங்களுடைய எல்லாமே அவங்களை விட்டு எந்த ஒரு கஷ்டமா இருந்தாலும் அவங்களை  விட்டு விலகிடும்.

 

இதே அங்க குரு நல்லா இல்ல பலவீனமா இருக்கிறார், வலிமை இழந்து இருக்கிறார். அப்ப என்ன நடக்கும்? குழந்தைகள் பிறக்காது. அந்த குழந்தைகள்  பிறப்புக்கான ஒரு சூழ்நிலை நம்ம உடம்புல இயங்காது.

 

சரி , அப்படியே குழந்தை பிறந்திருது, அந்த  குழந்தையினுடைய ஆரோக்கியம் நமக்கு பிரச்சனைக்குரியதாகும். இது எல்லாமே அந்த குரு நம்ம ஜாதகத்துல வலிமை இழந்து இருக்கிறதுனால ஏற்படக்கூடிய நிகழ்வு என்று சொல்லலாம்.

 

ஒரு ஜாதகத்துல இந்த குரு மட்டும்தான் இதெல்லாம் கொடுப்பாரானா இல்ல. ஐந்தாம்  பாவகமும் அங்க பலப்படணும். ஏன்னா குழந்தை என்பது ஐந்தாம் பாவகம் அதுவும் பலப்படணும்.

 

ஆனா அதை தாண்டி இந்த கிரகம் நல்லா இருந்தால் அதுவும் சேர்ந்து நமக்கு டபுள் சப்போர்ட்டா இருக்கும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/Wz2tKwpjKoQ?si=_TjEvH23RTbtYUuq

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR