எளிமையாக ஜோதிடம் உருவானதற்கு என்ன காரணம்?

 

 எளிமையாக ஜோதிடம் உருவானதற்கு

என்ன காரணம்?

 

- முனைவர் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா.

-  ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.

 


ஐயா:

அடுத்ததா வரக்கூடியது தான் கிரகங்கள் . கிரகங்களுக்கான ஒரு தன்மைகள். இப்ப சூரியனுக்குனா  ஒண்ணு  சந்திரனுக்குனா ஒண்ணு செவ்வாய்க்குனா ஒண்ணு. இப்படி ஒரு கிரகங்களுடைய தன்மைகளா இருக்கும்.

இந்த ஒன்பது  கிரகங்களும் என்னென்ன தன்மைகள்ல செயல்படுது என்று ஒருநாள் வகுப்பு இருக்கும். இதுக்கு பிறகுதான் இந்த மூன்று விஷயத்தையும் ஒரு பகுதியாக வெச்சிருக்கு.

ஏன்னா எப்பயுமே கிளாஸ் எடுக்கும்போது ஒரு விஷயம் ஆரம்பிக்கிறதும் ஒரு விஷயம் முடிக்கிறதுக்கும் ஒரே மாதிரியா இருக்கணும். பஞ்சாங்கம் கத்துக்கிட்டீங்க ஒரு அடிப்படையான ஜோதிடம் கத்து கொடுத்துட்டிங்கனு  சொல்லிட்டு போக முடியாது.

ஜோதிடம் படிக்கிற அத்தனை பேருமே ஆரம்பிச்ச இடத்திலிருந்து ஒரு ஜோதிட பலன் சொல்ற வரைக்கும் எப்படி? நானும் சொல்லணும் அதை நீங்களும் சொல்ல வைக்கணும். அதே பலன் சொல்லணும்.

உங்க ஜாதகம் போடுங்க. போடலாமா இல்லையா?  உங்க ஜாதகத்தை போடுங்க.

 

சாந்தகுமார் சார்:

அப்படின்னா தான் உண்மை என்னன்னு தெரியும்.

 

ஐயா:

ஜாதகத்தை போட்டு பலன் சொல்லுங்க ஃபர்ஸ்ட். நான் சொல்றது இந்தக் கணக்கு.  நீங்க சொல்றது சரியா? நேரலையில் உட்கார்ந்து  வகுப்பிலேயே பேசுறோம். இல்ல இல்ல நீங்க ஜாதகத்தை கொடுங்க நாளைக்கு உங்க ஜாதகத்தை ஆய்வு பண்ணிட்டு சொல்றேன். இந்த வேலையே ஆகவே  ஆகாது.

நீங்க  ஜாதகம் பார்க்க வந்துட்டு நாளைக்கு வாங்கன்னா சொல்றோம் நாம. மேஷ லக்னம் போகுது ALP மேஷ லக்னம் தம்பிக்கும் அக்காவுக்கும் ஆகாது. இரண்டு பேருக்கும் பிரச்சனை இருக்கும். மேஷ லக்னம் போகும்போது யாருக்காவது ஒருத்தருக்கு இந்த பத்து வருஷத்துக்குள்ள பாகப்பிரிவினை வரும். இந்த காலகட்டத்தில் பாகப்பிரிவினை பண்ணிக்கோங்க.

எனக்கும் தம்பிக்கும் பாகப்பிரிவினை வருது  சரிங்க சார் நாங்க பிரிச்சுக்கிறோம் முடிஞ்சு போச்சு. பெரிய அளவில் சண்டை சச்சரவு வேண்டாம். அந்த இடம் அங்கேயே தான் கிடக்கப்போகுது இவ்வளவுதான் விஷயம். இது பலன்  சொல்றதைவிட  எளிமைகள் ஈசி. இவ்வளவு தான் கேப்பாங்க. இங்க அப்படி கிடையாது.

நீ மேஷ லக்னத்தை பற்றியும் பேசணும் ரிஷப லக்னத்தை பற்றியும் பேசணும் 12 லக்னத்தை பற்றியும் பேசணும். இந்த 12 லக்னம் நமக்கு தெரிவதில்லை அவர்களுக்கு புரிய வைக்கணும். அப்ப இதுதான் நாம என்ன பண்றோம் ஆதிபத்தியம். நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/ALpEJ2lHY_c?si=cHrnEV-98eTaQPmw

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR