இவ்வளவு எளிமையாக ஜோதிடம் உருவானதற்கு என்ன காரணம்?

 

இவ்வளவு எளிமையாக ஜோதிடம் உருவானதற்கு என்ன காரணம்?

 

 - முனைவர் திரு. பொதுவுடைமூர்த்தி  ஐயா.

  - ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.

 


சாந்தகுமார் சார்:

நிறைய முறைகள் இருக்கு இந்த முறையில எளிமைப்படுத்துதல் மூலமாக இந்த வகுப்பை எப்படி கொண்டு சேர்க்க விரும்புகிறீங்க.  ஏன்னா எனக்கு தெரியுது. நான் உங்க கூடவே பயணிக்கிறேன் எனக்கு புரியுது. ஆனா இந்த வீடியோ பார்க்கிற பல பேருக்கு நம்ம என்ன பண்ணிட்டு இருக்ககோம்னே தெரியாது. அவங்களுக்கு நீங்க என்ன சொல்றீங்க?

 

ஐயா  :

 

ரெண்டு பகுதியா பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று மக்களுக்கானது ஒன்று ஜோதிடர்களுக்கானது. மக்களுக்கு அன்றைய கேள்வி அன்றைய பதில்கள் அது மட்டும் தான் அதுக்கு முக்கியம். நான் ஒரு வீடு வாங்கலாமா? எப்ப வாங்கலாம்? எப்படி வாங்கலாம்? இந்த கேள்விக்கான பதில் அப்பவே முடிஞ்சு போச்சு.

 

வீடு வாங்கலாம்னா அடுத்தடுத்த ஸ்டெப் வாங்கலாம். நல்லா இருந்தா வாங்கலாம். வாங்க வேண்டான்னா வாங்க வேண்டாம் இது முடிஞ்சு போச்சு.

 

இது அப்படி கிடையாது. இது ஒரு ஆலமரம் மாதிரி. இங்க ஜோதிடம் என்பது எப்படின்னா நீங்க என்ன கேள்வி கேட்டாலும் நாளைக்கு  பொது மக்களுக்கு எல்லா கணக்கு முறைகளும் இந்த ஜோதிடர்கள் தெரிஞ்சு வச்சிருக்கணும்னு பிள்ளையார் சுழி அ முதல் ஃ வரைக்கும்  இங்களுடைய நிகழ்வுகளை ஸ்டெப் பை ஸ்டெப்பா என்ன பண்றோம் இந்த மாதிரி அமைப்பு என்று சொல்லி படிநிலைகளாக பதிவு பண்ணிக்கிறோம்.

 

அந்தப் படிநிலைகளை நான் ஒன்னொன்னா சொல்றேன். முதல் படிநிலை எப்பவுமே வந்து ஒரு நிகழ்வு ஆரம்பிக்கும் போது ஒரு வகுப்பு ஆரம்பிக்கும் போது இறைவணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்கிறோம்.  அதுவும் பாத்தீங்கன்னா காலைல பாத்தீங்கன்னா 4:32 ல இருந்து  6:32 மணி வரைக்கும்.

 

4:32 இருந்து ஒரு ஒன்பது நிமிஷத்துக்கு ஒரு மியூசிக் மட்டும் தான் ஓடும். 6:41 வரைக்குமே. இந்த ரெண்டு மணி நேரத்தை ஒவ்வொரு நாளும் டிசைன் பண்றோம்.

 

எப்படின்னா கற்றல் அனுபவங்களை வந்து அழகா சொல்றோம். முதல் நாள் எப்பவுமே ஜோதிடம்னு வந்தா பஞ்சாங்கம் தான். பஞ்சாங்கத்தில அடிப்படையான குணங்கள் ஒண்ணு  இருக்குல்ல நாளோ நட்சத்திரமோ திதியோ யோகமோ கரணம் இந்த அஞ்சு பிரிவுகள் எதெதெல்லாம் தேவை எதெல்லாம் தேவையில்லை.

 

பஞ்சாங்கத்தை பத்தி வகுப்பு எடுக்கிறதுனா. பத்து நாள் இல்ல ஒரு வருஷம் கூட பத்தாது.

ஆனால் உங்களுக்கும் எனக்கும் எது தேவை அந்த அஞ்சு விஷயங்களை முதல்ல கத்துக்கணும். இது வந்து அடிப்படையான ஜோதிடத்திற்கு முதல் ஒரு படி. இது தெரியாம இது படிக்காம நீங்க அடுத்த இடத்திற்கு போகக்கூடாது.

 

அடுத்து என்ன  பண்ணுவோம்னா தன்மைகள்  அப்படின்னு  12 கட்டங்களுக்கு பாவங்களுடைய தன்மைகள். நல்லா கேட்டுக்கோங்க பாவங்கள் உடைய தன்மைகள். நீங்க யாரு நீங்க என்ன பண்றீங்க நீங்க எப்படி பேசுவீங்க நீங்க எப்படி சிரிப்பீங்க நீங்க எப்படி முயற்சி பண்ணுவீங்க உங்களுக்கு வீட்டோட அமைப்பு எப்படி இருக்கும், உங்க குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம் எப்படி இருக்கும், உங்க கடன் எப்படி இருக்கும்? உங்க எதிரி எப்படி இருக்கும். உங்க திருமண உறவுகள் எப்படி இருக்கும் காதலிக்க கூடிய பையன் எப்படி இருப்பான்  காதலிக்க கூடிய பொண்ணு எப்படி இருக்கும் அடுத்து தேவையில்லாத பிரச்சனைகள் எப்படி இருக்கும்.

 

இல்ல அப்பா எப்படி இருப்பாரு எனக்கு வேலை எப்படி இருக்கும் என்னுடைய தொழில் எப்படி இருக்கும் என்னுடைய லாபம் எப்படி இருக்கும் 

 

இத நான் சொல்றது 00.01 அங்க ரெண்டு மணி நேரத்துல  அதனுடைய விளக்கம் வேற மாதிரியா இருக்குமானா  இருக்கும்.  இதுல நிறைய சின்ன சின்ன தகவல்கள் அங்கங்க சில உதாரணங்களும் கதைகளும்  வைத்திருப்போம்.  அது ஒரு பக்கம் அடுத்து வரக்கூடியது தான் கிரகங்கள். நன்றி

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/esSevDBS4jo?si=611S4BDucdcNeFnG

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR