தனுசு லக்னத்திற்கு சனி பகவான் எங்கு இருந்தால் என்ன பலன்?

 

தனுசு லக்னத்திற்கு சனி பகவான் எங்கு இருந்தால் என்ன பலன்?

 

 

-  ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்

- ALP ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

தனுசு லக்னம் அட்சய லக்னம் செல்லும் பொழுது சனிபகவான் எங்கெங்கெல்லாம் இருக்கலாம்? எங்கெங்கே இருக்கக் கூடாது? மேம்.

 

உமா வெங்கட் மேம்:

இந்த தனுசு லக்னம் அட்சய லக்னமாக செல்லும் பொழுது  சனி பகவான் கும்ப ராசியில் அமரக்கூடாது. அதே மாதிரி பார்த்தீங்கன்னா துலாம் ராசியில் இருக்க கூடாது. அவங்க சிம்ம ராசியில் இருக்க கூடாது. இந்த ராசிகளில் இருந்தாங்கன்னா பிரச்சனை இருக்கும்.

அதே மாதிரி மிதுன ராசியில் குறிப்பாக இந்த ராசிகள் அல்ரெடி நம்ம சொல்லிட்டோம். மிதுன ராசியில் இருக்கும் போது நண்பர்களால் ஒரு அவமானம் என்பது இருக்கும்.

நான் சும்மா தான் இருப்பேன் என் பிரண்டு என்ன பண்ணுவான் இங்க வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாச்சும் பண்ணலாம் என்று கூப்ட்டு வச்சு கடன் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு என்பது இருக்கும்.

அதே மாதிரி நம்ம சாதாரணமா ஒரு மனிதரிடம் பேசிக்கொண்டிருந்தா கூட அந்த பிரச்சனைகள், கெட்ட பேர் வாங்கக்கூடிய ஒரு நிலை என்பது இந்த சனிபகவானால் ஏற்படுமானா? ஏற்படும்.

தனுசு ராசி , தனுசு லக்னம் அட்சய லக்னமாக செல்லும்போது ஏழாம் இடத்தில் சனி பகவான் இருக்கும்போது உங்களுக்கு பிரச்சனைகளை கொடுக்குமானா? கொடுக்கும். அதே மாதிரி வீடு வண்டி வாகனங்கள் சார்ந்த ஒரு அழுத்தத்தையும் போராட்டத்தையும் அந்த உறவுகள் சொல்லக்கூடியது அந்த இடத்திலே உங்களுக்கு போராட்டம் என்பது இருக்கும். அத கண்டிப்பா நீங்க சந்தித்துதான் ஆகணும்.

அதே மாதிரி நிறைய செலவு பிரெண்டு கூட வெளில போனா பிரெண்ட் பாக்கெட் மணி பர்ஸ் வீட்டிலேயே வச்சுட்டு வந்துருவாரு.   நம்ம தான் அவருக்காக செலவு பண்ணக்கூடிய ஒரு தன்மை இந்த தனுசு லக்னக்காரருக்கு.

கண்டிப்பாக நண்பர்கள் மூலமாக தீராத அழுத்தம் அவமானம் பிரச்சனைகள் சந்தித்தே ஆகவேண்டும். கவனம் தேவை என்பதை இந்த இடத்துல பதிவு பண்ணலாம். நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/H9NElR46ZQs?si=dTRA8QLuVwikc8N7

 

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR