வாஸ்து பூஜை எப்போது எதற்காக செய்ய வேண்டும்? – அட்சய வாஸ்து படி விளக்கம்.
வாஸ்து
பூஜை எப்போது எதற்காக செய்ய வேண்டும்? – அட்சய வாஸ்து
படி விளக்கம்.
- ஸ்ரீ குரு
டாக்டர் சத்தியநாராயணன்.
- ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்.
அனைவருக்கும் வணக்கம்,
வாஸ்து நாள் இன்று சொல்லப்படுகின்ற நாள் ஒரு ஒரு மாதமும்
இருக்கு. அந்த எல்லா நாட்களும் வாஸ்து என்று வந்தாலே எல்லாரும் வந்து சார் வாஸ்து நாள்ல தான் நான்
பூஜை பண்ணனுமானு கேப்பாங்க.
எப்போது பூஜை செய்யனும் ?
இப்ப எல்லாருமே வாஸ்து நாள்னு ஒரு நாள் வந்ததுனு வச்சுக்கங்களேன் கண்டிப்பாக வாஸ்து சம்பந்தப்பட்ட
விஷயத்துக்காக நம்ம வந்து பூஜை செய்ய வேண்டுமா கண்டிப்பாக பூஜை செய்ய
வேண்டும்னு என்று சொல்லலாம்.
நீங்க வீடு கட்டுறீங்க இல்ல சார் வீடு கட்டும்போது தான்
பூஜை பண்ணுவோமா இல்ல வீடு நிலம் வாங்கும்போதுதான் பூஜை பண்ணனுமா, அடி கால் நடும்போதுதான் பூஜை பண்ணுமா இல்ல அந்த மாதிரி கிடையாது.
எல்லாருமே பாத்தீங்கன்னா வீட்டுக்குன்னு ஒரு எனர்ஜி
இருக்கு. பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அந்த வாஸ்து நாள்ல கண்டிப்பாக வீட்லயே
எல்லாருமே பூஜை பண்ணலாமா கண்டிப்பாக பண்ணலாம் என்று சொல்லலாம்.
வாஸ்து கலசம் :
முக்கியமாக கலசம் ஒன்னு வச்சு வாஸ்து கலசம்னு
சொல்லுவாங்க அந்த கலசம் வச்சு அந்த கலசம் வந்து நூல் சுத்தி அதுல தண்ணி ஊத்துங்க பன்னீர்
ஊத்துங்க மஞ்சள் போடுங்க ஏலக்காய் போடுங்க கிராம்பு போடுங்க எல்லாமே போட்டுட்டு
மாவிலை வைங்க வெட்டிவேர் உள்ள போடுங்க.
வெட்டிவேர்
போட்டுட்டு மா இலை வைங்க. மா இலை வச்சிட்டு தேங்காய் வைங்க. அது வந்து வாஸ்து
கலசம்னு சொல்லுவாங்க.
நீங்க இந்த ஒரு மாசம் ஃபுல்லா அந்த வாஸ்துக்கலசத்தை வீட்ல வச்சுக்கோங்க. அதுக்கு வந்து
“ஓம் வாஸ்து புருஷாய வித் மஹே
பூமிபுத்ராய தீமஹி தன்னோ வாஸ்து ப்ரசோதயாத்”
இதுதான் மூல
மந்திரமே. வாஸ்து பகவானுக்கு உண்டான மூல மந்திரம்.
நிறைய மந்திரங்கள் இருக்கு அதுல முக்கியமான மந்திரம்
வந்து இதுன்னு சொல்லலாம். இந்த மந்திரத்தை ஜெபம் செய்து ஒரு பூ ஒன்னு வைங்க.
இந்த ஜெபத்தை இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் பண்ணி ஒரு பூ போடலாமா போடலாம்.
அதுக்கு நைவேத்தியம் சக்கரைப்பொங்கல் வைத்து நைவேத்தியம்
பண்ணி அதை விநியோகம் பண்ணலாமா பண்ணலாம்.
அதுக்கு ஆர்த்தி காமிங்க. இது வந்து ஒவ்வொரு வாஸ்து சம்பந்தப்பட்ட நாளிலேயே இது
பண்ணனும் அப்படின்னு ஒரு நிகழ்வு முக்கியமாக விஷயம் இருக்கு. நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/edKY3xfEDY4?si=mDSzcstKhcINnSl-
Comments
Post a Comment