வீடு வாங்குவதற்கு யார் ஜாதகத்தை பார்த்து வாங்க வேண்டும். வீடு வாங்குவது பிறந்த மாதத்தில் வாங்கலாமா?
வீடு வாங்குவதற்கு யார் ஜாதகத்தை பார்த்து வாங்க வேண்டும். வீடு வாங்குவது பிறந்த
மாதத்தில் வாங்கலாமா?
- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.
- ALP
ஜோதிடர்.
தொகுப்பாளர்:
இப்ப வீடு வாங்குறோம் அதுக்கும்
நாள் நட்சத்திரம் பார்த்து தான் வாங்குறோம். அதுவும் இந்த மாதிரி ஏதாவது
மாதத்தில் இந்த மாதத்தில் தான் வாங்கினால் சிறப்பு என்று ஏதாவது இருக்கா மேம்.
உமாவெங்கட் மேம்:
கண்டிப்பா. வீடு வாங்குவதே பாத்தீங்கன்னா
அந்த வீடு கிரகப்பிரவேசமாக இருந்தாலும் சரி அந்த மனை என்றது இருந்தாலும் சரி, அந்த
வீட்டில் உள்ள பெண்களுக்கு அது உகந்ததாக இருக்குதா என்பது முதலில்
பார்க்கணும்.
ஏன்னா மனை வாங்குவது ஆணாக இருந்தாலும்
சரி, வாஸ்து படி அந்த மனையில் வசிக்கக்கூடியது அந்த வீட்டின் சமையலறைன்னு
சொல்லக்கூடிய அறையை பயன்படுத்தக்கூடியது முக்கியமானது பெண்கள் மட்டும்தான்.
இப்ப ஹவுஸ் வார்மிங் நீங்க டைம்
குறிக்கிறீங்க என்றால் அந்த நேரத்துல அந்த வீட்டினுடைய பெண்களுக்கு உண்டான
பிறந்த நட்சத்திரம் மாதத்தை வச்சுதான் குறிக்கிறோம்.
அவர்கள் ஜாதகப்படி அவங்களுக்கு இந்த நான்காம் பாவகம் மனை அமைப்பு எப்படி இருக்குது?
அன்னைக்கு அந்த கோச்சார சந்திரன்
எப்படி இருப்பாங்க இன்று பாத்துட்டு தான் சொல்லணும். இது ஆண் ஜாதகத்தில்
பார்க்கணுமா கண்டிப்பாக வேண்டாம். பெண் ஜாதகத்தில் அவருடைய மனைவி ஜாதகத்துலையோ
இல்லனா தாயார் என்றால் தாயார் ஜாதகத்திலையோ பார்த்து செய்தால் சிறப்பாக இருக்கும்
சொல்லலாம்.
பொதுவாகவே அந்த மனைவியோட ஜாதகத்துல நான்காம் பாவக கிரக அமைப்பு நல்ல நிலையில்
இருந்தது என்றால் அந்த நாளில் செய்யலாம்.
பொதுவாக ஒருத்தவங்க பிறந்த நட்சத்திரம் மகம்
நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு
இந்த மார்கழி மாதத்தில் வீடு குடி போகுதல் சிறப்பாக இருக்காது
உதாரணமாக சொல்றோம்.
அதே மாதிரி பங்குனி மாதத்தில் வீடு
குடி போவது சிறப்பாக இருக்காது இது உதாரண ஜாதகம். அவர்கள் ஜாதகத்தை
பார்த்துவிட்டு எந்த மாதத்தில் மனை அமைப்பு நன்றாக இருக்கிறது, என்னைக்கு அவங்க
பால் காய்ச்சல், ஹவுஸ் வார்மிங் பண்ணினால் சிறப்பாக இருக்கும் என்பது அவர்கள் ஜாதகம்
பார்த்தால் தான் கூற முடியும் என்பது உண்மை. நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/24DFhH86h0s?si=JC16IpayOV2nr_1X
Comments
Post a Comment