ALP படித்த பிறகு எனக்குள் ஒரு மாற்றம்

 

ALP படித்த  பிறகு எனக்குள் ஒரு மாற்றம்

 

வணக்கம். என் பெயர் சரவணகுமார். நான் மதுரையில் இருந்து பேசுறேன். எம் எஸ் சி புட் சயின்ஸ் முடிச்சுட்டு டிபன்ஸ் எக்ஸாம் பிரிப்பர் பண்ணிட்டு இருக்கேன். என் ஏஜ் 25. அப்பா முந்தின பேட்ச்ல ALP படிச்சாங்க. அது மூலமா எனக்கு அறிமுகமாச்சு.

 


ஸ்டாப்ஸ் எல்லாருமே ரொம்ப சிம்பிளா எல்லாருக்கும் எல்லா வார்த்தையும் புரியிற மாதிரி வார்த்தைகள் பயன்படுத்தி ரொம்ப பொறுமையா, ரொம்ப நல்லா சொல்லிக் கொடுத்தாங்க. ஸ்டாப்ஸ் எல்லாருக்குமே ரொம்ப நன்றி.

 

ALP படிச்சதுக்கு பிறகு ஒரு மாற்றம் என்றால் எனக்கு ஒரு சில அண்டர்ஸ்டாண்டிங் வந்திருக்கு எடுத்துக்கலாம். என்ன மாதிரி அண்டர்ஸ்டாண்டிங்னா இதுக்கு முன்னாடி நான் எடுத்த டெசிஷன்சும் சரி, எனக்கு நடந்த சூழ்நிலைகளும் சரி, சில தவறுகளும் சரி என் வாழ்க்கையில் நடந்த தப்பான விஷயங்கள் எல்லாம் நான் பிறர் மேல பிளேன் பண்ணிட்டு அவங்களால நடந்துச்சு சூழ்நிலைனால நடந்துச்சு தப்பா ஆயிடுச்சு இந்த மாதிரி நான் சொன்னேன்.

 

ஆனா நான் ஏஎல்பி படிச்சதுக்கு பிறகு ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்தது என்னன்னா, இதெல்லாம் நம்மளா செய்ற தாண்டி, இந்த கிரகங்கள் நம்மள சுத்தி இருக்கிறது அது இருக்கிற அமைப்பின்படி அது நம்ம கட்டத்தின்படி தான் செயல்படுது.

 

அப்போ நம்மளால செய்யக்கூடியது சில விஷயங்கள் இருந்தாலும் செய்ய முடியாத சில விஷயங்கள் இருக்குது. அதெல்லாம் நம்ம அக்செப்ட் பண்ணி தான் ஆகணும் என்று அண்டர்ஸ்டாண்டிங் வந்திருக்கு ஏ எல் பி கிளாஸ் அட்டென்ட் பண்ணதுக்கு அப்புறம்.

 

பிரச்சனையிலிருந்து அதுக்கு நான் தேடுற பதிலே சாருடைய எக்ஸ்சாம்பில் இருந்து கிடைக்கிற மாதிரி எனக்கு ரெண்டு மூணு வாட்டி அமைஞ்சது. அதுக்கு ரொம்ப நன்றி சாருக்கு.

 

எல்லா பிரச்சனையும் நடக்கும் அத நம்ம ஏத்துக்கிட்டு, பிராக்டிகல்னா சொல்யூஷன்ஸ் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு மூவாயுடனும் அங்கேயே ஸ்டக் ஆயிடக்கூடாது அப்படின்னு நான் எடுத்துக்கிறது.

 

அதுபோக நம்ம சாப்ட்வேர் இருக்கு நான் வேதிக் அஸ்ட்ராலஜி படிச்சது இல்ல. அதனால நிறைய விஷயம் தெரியாது. அப்பா கொஞ்சம் பேசிக் படிச்சதுனால அப்பா சொல்லுவாங்க இந்த இடத்துல இந்த மாதிரி கொஞ்சம் கால்குலேஷன் பண்ணனும். இங்கு இது நம்ம நியாபகம் வச்சுக்கணும். இந்த மாதிரி சில விஷயங்கள் இருக்கு சொல்லுவாங்க.

 

நம்ம கிளாஸ்லயுமே நம்ம படிக்கிறப்போ பாக்குறப்ப தான் எனக்கு தெரிஞ்சது. நம்ம கால்குலேட் பண்ணி போட வேண்டியது நம்ம சாஃப்ட்வேர் ல நம்ம டேட் ஆப் பர்த் என்ட்ரி பண்ணாலே வரிசையா வந்துருது. அப்போ நம்ம ஒரு ஸ்டெப் எடுத்து வச்சோம்னாலே நம்ம ஒரு பத்து இருபது ஸ்டெப் மேல சேர்த்து கொண்டு போய் வச்சிருது இந்த சாப்ட்வேர்.

 

இதே நம்ம தனியா நம்ம மேனுவல்லா செஞ்சோம்னா அது அதிகமான டைம் அதிகமா நம்ம கத்துக்கணும் நிறைய ப்ராக்டிஸ் பண்ணனும். இது ரொம்ப ஈஸியா அக்செஸ் ஆய்டுது.

 

60 வீடியோ நம்ம பார்த்து சில விஷயம் புரியலனாலும், புரியாம இருக்குதுனாச்சு நம்ம மைண்ட்ல ஸ்டோர் ஆகுது. ஸ்டோர் ஆகுறது நம்ம லைவ் கிளாஸ் பாக்குறப்போ ஆட்டோமேட்டிக்கா நமக்கு இருக்கிற கேள்வி அங்க க்ளியர் ஆகுது. அதனால இந்த 60 வீடியோ பார்த்துட்டு இதை பார்த்தால் புரிதல் இரண்டு மடங்கு அதிகம் ஆகுது கிளாஸ் பத்தின புரிதல். அதனால் 60 வீடியோ கட்டாயம் பார்த்துட்டு கிளாஸ் அட்டென்ட் பண்ணனும்.

 

அது போக ALP கிளாஸ் முடிச்சதுக்கு பிறகு நானா ஒரு புரிதல் வந்தது என்னன்னா நம்ம 12 கட்டத்துல ஒரு நாலு கட்டம் கட்டாயம் பிரச்சனை தரதாக தான் இருக்கு. நான் இதுவரைக்கும் என்ன நெனச்சேன் நாம இது செஞ்சுட்டா இந்த வேலை கிடைச்சுட்டா இந்த விஷயத்தை நம்ம அடைஞ்சிட்டோம்னா நமக்கு பிரச்சனை இல்ல சந்தோஷம்தான் நெனச்சிட்டு இருந்தேன்.

 

ஆனா அப்படி இல்ல கட்டாயம் ஒரு நாலு கட்டத்துல பிரச்சனை இருக்கத்தான் செய்யுது. அதையும் நம்ம ஃபேஸ் பண்ணி தான் ஆகணும். எல்லாரும் வாழ்க்கையிலும் பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை எல்லார் வாழ்க்கையிலும் பிரச்சனை இருக்குங்குறது நிரந்தரம். அது அக்சப்ட் பண்ணி அது நாம எப்படி கொண்டு போறோம் என்பது நம்ம கைல இருக்கு.

 

பிராக்டிகலான ரெமிடிஸ் செஞ்சே நம்ம லைஃப் நல்லா லீட் பண்ணி கொண்டு போகலாம். எந்த பிரச்சனை வந்தாலும் அக்செப்ட் பண்ணி மூவாகி தான் போகணும் என்பது ஏஎல்பி கிளாஸ் படிச்சதுக்கு அப்புறம் எனக்கு புரிஞ்சது. நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://www.facebook.com/share/v/1CD9eNajA5/

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR