ஆரோக்கிய எண்ணத்தோடு வாழ்வதற்கு இந்த ALP வகுப்பு.

 

ஆரோக்கிய எண்ணத்தோடு வாழ்வதற்கு இந்த  ALP வகுப்பு.

 


வணக்கம் ஐயா.

என் பெயர் வினோத்குமார். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும் எனக்கு கற்பித்த ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

இந்த ALP ஜோதிடத்தை மிகவும் சிறப்பாக நான் புரிந்து கொண்டேன். என் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் என்ன காரணங்கள் என்று மிகச் சரியாக நான் உணர்ந்து கொண்டேன். இதை வாழ்வில் நான் மாற்றி அமைப்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றேன்.

 

அதற்கான காரணிகளும் எனக்கு நன்றாக புரிகின்றது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தமைக்கும் நான் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் எனக்கு பதில் அளித்து அதற்கான தீர்வுகளையும் எப்படி பார்க்க வேண்டும் என்று சொல்லி கொடுத்த எங்க ஐயாவுக்கு நான் மிகப்பெரிய நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

எனக்கு ALP ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்கு வந்தது. ஆனால் அதற்கு காலம் எனக்கு வழி கொடுக்கவில்லை என்று நான் நினைக்கின்றேன். நான் எனது சூழ்நிலையை நான் எவ்வாறு அறிவது? இதற்காக நான் பல ஜோதிடரை நான் அணுகி இருக்கின்றேன். எனக்கு முரண்பாடான தகவல் கிடைத்ததில் நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நான் மாட்டிக் கொண்டேன். அவற்றை இதிலிருந்து நான் கண்டிப்பாக வெளியே வந்தே ஆக வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டு இருக்கையில் எனக்கு யூடியூபில் 30 நாளில் நம் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம் என்று சரியான நேரத்தில் என் கண்ணில் பட்டவுடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன்.

 

நான் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் எனக்கு காலை 4:30 மணி வகுப்பில் என்னால் சேர முடியாது. எனக்கு கணக்கு பார்த்தால் எனக்கு ராத்திரி 11:30 மணி இருக்கும். படிக்க முடியாது என்கிற ஒரு எண்ணம் இருந்துகிட்டே இருந்துச்சு.

 

ஆனா எதுக்கும் ஒருதடவை நாம் கேட்டு பார்க்கலாம் என்று எண்ணி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். தற்போது மாலை வகுப்பும் தொடங்கி இருக்கின்றோம் என்று தகவலை கண்டேன். நான் உடனடியாக நான் வகுப்பில் சேர்ந்து, வகுப்பில் மிகச் சிறப்பாக நான் கிரகித்து, சிறப்பாக கற்றுக் கொண்டேன்.

 

வகுப்பில் எந்தெந்த விஷயங்கள் நமக்கு மிகவும் இன்றியமையாததோ அவற்றை நமக்கு தெளிவாக கற்றுக் கொடுக்கின்றனர். நான் இரண்டு மூன்று வருடங்கள் முன்பே அய்யாவோட வீடியோ பார்க்கும்போது பத்து வருடத்திற்கு ஒரு முறை லக்னம் மாறும் என்று சொல்வதை நான் உணர்ந்தேன்.

 

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மனிதரோட குணாதிசயம் மாறிக்கொண்டே இருக்கின்றது. ஆனால் அதை வைத்து நாம் பலனை எளிதாக நாம் கணிக்கலாம் என்று கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது சரி என்று என் மனதும் சொன்னது. ஐயா அவர்கள் நடத்திய பாடம் ஆசிரிய பெருமக்கள் நடத்திய பாடம் அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தது. கற்றுக்கொள்கின்ற ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு கோச் பயிற்றுநர்கள் தனியாக இருக்கின்றார்கள். தினமும் நாம் ஒரு ஜாதகத்தை கணித்து, கணித்தது சரியா என்று அவர்களிடம் சரி பார்த்துக் கொள்ளலாம்.

 

கோச் அவர்களும் நமக்கு சரி செய்து இந்த முறையில் இப்படி மாற்றி இப்படி சொல்ல வேண்டும் என்று நமக்கு அறிவுரை செய்து, தற்போது நான் பார்த்தால் பலன் சொல்லும் அளவிற்கு நான் வந்து விட்டேன். அதற்கு அய்யா அவர்களுக்கும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் எனது கோச் அவர்களுக்கும் எனது மிகப் பணிவான வணக்கங்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

முதலில் எங்களுக்கு பஞ்சாங்க அறிமுக வகுப்பு நடந்தது. அதன் பிறகு திதி நட்சத்திரங்கள் ராசி நட்சத்திர அதிபதி ராசி அதிபதி இவைகள் எவ்வாறு செயல்படுகின்றனர் எங்களுக்கு இன்னும் பிரசன்னம் எப்படி பார்ப்பது என்று அதுவும் எங்களுக்கு சிறப்பாக கற்றுக் கொடுக்கப்பட்டது. ஒருவருக்கு ஜாதகம் இல்லை என்றால் மட்டும் பிரசன்னம் பார்த்தால் போதும். அல்லது ஒருவர் பொருள் தொலைந்து விட்டது என்று வந்தால் அவர்களுக்கு பிரசன்னம் பார்க்கலாம் என்று எங்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.

 

12 ஆதிபத்தியங்களும் சிறப்பாக சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவற்றை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் எந்த இடத்தில் எதை பயன்படுத்த வேண்டும் என்று எங்களுக்கு சிறப்பான அறிவுரையை கொடுக்கப்பட்டது. அவற்றை நாங்கள் சிறப்பாக பயன்படுத்தி பயிற்சி பெற்றோம்.

 

நம் ஜாதகத்தில் கடந்த காலத்தில் நடந்ததையும் நம்மால் சரி பார்க்க முடியும். கடந்த காலத்தில் நடந்தது சரியாக இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் இன்னும் எவ்வாறு இருக்கும் என்று நாம் பின்னுக்கு தள்ளியும் நாம் இதை சரி பார்த்துக் கொள்ளலாம். நாம் அதற்கு ஏற்றார் போல் நமது வாழ்வில் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைத்தால் அது சிறப்பாக இருக்கும் என்று நாம் இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதற்கேற்றார் போல் நம் வாழ்வை அமைத்தோம் என்றால் நாம் சுகமாக வாழ்வதற்கு இந்த ஏஎல்பி ஜோதிடம் எனக்கு மட்டுமல்ல கற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் சிறப்பான பயனை கொடுக்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகின்றேன்.

 

பொதுவாக திருமண பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக எதை பார்க்கணும் எதை பார்க்க கூடாது என்று எங்களது ஐயா சிறப்பாக கூறியுள்ளார். இந்த திருமண பொருத்தம் சரியாக பார்க்காத காரணத்தினால் பல குடும்பங்களில் பல வகையான பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிவுகள் ஏற்படுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது. அவ்வாறாக நாம் ஒரு பொருத்தம் பார்த்து கொடுத்தால் இது போல் வரக்கூடாது என்று எண்ணத்தில் ஐயாவோட கண்டுபிடிப்பு மிக சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கின்றது. இதற்கு அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

இந்த ALP ஜோதிட வகுப்பானது நாம் வெறும் ஜாதகத்தை மட்டும் கற்றுக் கொள்வதற்காக இங்கு இல்லை. நாம் வாழ்வில் சிறப்பாக வாழ நிம்மதியாக வாழ நம் மனதை எப்படி தயார் படுத்திக் கொள்ள வேண்டும் எப்படி எல்லாம் நாம் பேசலாம் எப்படி எல்லாம் நாம் பேசக்கூடாது என்பதற்கு இந்த வகுப்பு எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது.

 

நாம் பேசுகின்ற வார்த்தையின் மூலமாக தான் நமது செயல்களும் நமக்கு கிடைக்கின்ற பலன்களும் கிடைக்கின்றது. ஆகையால் எதிர்மறையான வார்த்தைகளை நம் வாயிலிருந்து வரக்கூடாது என்பதற்கு இந்த வகுப்பில் எங்களுக்கு மிகப்பெரிய பயிற்சியாக கொடுக்கப்படுகின்றது. ஒருவர் தவறுதலாக கூறிவிட்டாலும் அது மாதிரி சொல்லக்கூடாது ஐயா இது மாதிரி சொன்னீங்கன்னா அதனுடைய நிகழ்வுகள் தான் உங்களுக்கு வரும். அதனால இதை தவிர்த்துருங்க தவிர்த்தால் நல்லா இருக்கும் என்று சொல்லி, ஒவ்வொரு முறை தவறுதலாக கூறும்போது எங்களுக்கு அறிவுரை கிடைக்கின்றது.

 

கூடுமானவரையில் எங்களது வாயிலிருந்து எதிர்மறையான வார்த்தைகள் வருவதை நாங்கள் தவிர்த்து விட்டோம். இதை இதன் காரணமாக குடும்பங்களில் எங்களிடமிருந்து மிகப்பெரிய வித்தியாசத்தை காண்கின்றார்கள். இது எப்படி என்று பலரும் கேட்கின்றார்கள். எங்களது வகுப்பிலேயே பார்க்கப் போனாலும் ஒரே குடும்பத்தில் மூன்று உறுப்பினர்கள் படித்திருக்கின்றார்கள். முதலில் கணவன் படித்தார். அடுத்த மனைவி படிச்சாங்க. அடுத்து அவங்களோட குழந்தையும் இப்பொழுது ஜாயின் பண்றாங்க. ஆகையால் இந்த வகுப்பு இருக்கின்றதை வைத்து சிறப்பாக வாழ்வதற்கு இந்த  ALP ஜோதிட வகுப்பானது எங்களுக்கு மிகப்பெரிய தூண்டுகோளாக இருக்கின்றது.

 

ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஆரோக்கிய எண்ணத்தோடு வாழ்வதற்கு இந்த  ALP வகுப்பானது எங்களுக்கு மிகப்பெரிய அளவில் வாழ்வில் கைகொடுக்கும் என்று நான் நம்புகின்றேன். அதை நான் பின்தொடர்ந்து சென்று என் வாழ்வில் சிறப்பேன் என்று நான் நம்புகின்றேன்.

 

இதே வகுப்பு இதை நான் இன்னும் பயிற்சி செய்து கொண்டு அடுத்த அட்வான்ஸ் வகுப்பிலும் நான் சேர முயற்சிக்கின்றேன். ஓரிரு மாதங்கள் கழித்து இந்த அட்வான்ஸ் வகுப்பில் சேர்ந்து இன்னும் இந்த ஜோதிட அறிவை இன்னும் வளர்த்துக் கொள்ள நான் ஆசைப்படுகின்றேன். 

நன்றி. 

வணக்கம்.

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR