எனக்குள் மாற்றத்தை கொண்டு வந்த ALP வகுப்பிற்கு நன்றி.
எனக்குள் மாற்றத்தை கொண்டு வந்த ALP வகுப்பிற்கு நன்றி.
வணக்கம் ஐயா. நான் ரமா முருகவேல், சென்னையில்
இருந்து பேசுறேன். என்ன சொல்றது எப்படி ஆரம்பிக்கிறது தெரியலையா. நான் ரெண்டு மூணு
வீடியோ காலைல இருந்து போட்டு அது அழுகையிலேயே முடிஞ்சு முடிஞ்சு டெலிட்
பண்ணிட்டேன் நான். அது எப்படி சொல்றது தெரியல வார்த்தைகள்
இல்லை. இரண்டாவது நிறைய பேசி பழக்கம் இல்லைங்கறதுனால அது வீடியோவா வார்த்தைகள்
வரல. மன்னிக்கணும் ஐயா. ஏதாவது தவறா பேசி இருந்தா.
முதல்ல நான் பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கும் மற்றும் நம் குருமார்கள்
எல்லாருக்கும் ரொம்ப சிரம் தாழ்ந்த வணக்கத்தை சொல்லிக்கிறேன். இது பெரிய பெரிய ஒரு
ஆப்பர்சுனிட்டி இது. இதுல என்ன சேர்த்துவிட்ட என்னுடைய சித்தி கீதா சங்கரன் அவங்க USAல இருந்து படிக்கிறாங்க.
அவங்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்றேன். அவங்க தான் என்னை இதுல சேருன்னு சொல்லி
சேர்த்து விட்டாங்க. ஆக்சுவலா ALP குள்ள நான் ஆறு மாதமா
டிராவல் பண்றேன். ஆனால் ALP ல நான் வந்தது இதுதான் முதல்ல.
அவங்க அங்க படிக்கிறதுனால அவங்களுக்கு அங்க ஜாதகம்
எல்லாம் கிடைக்காது. அப்படிங்கிறதுனால என்கிட்ட கேப்பாங்க
குழந்தை பிறக்காத ஜாதகம் ரொம்ப நாள் கல்யாணம் ஆகாத ஜாதகம் டைவர்ஸ் ஆன ஆகுற மாதிரி
ஜாதகங்கள் என்னை கலெக்ட் பண்ணி தர சொல்லுவாங்க இங்க இருந்து.
சோ நானு எங்க ரிலேட்டிவ்ஸ் , ஃபிரண்ட்ஸ் அந்த மாதிரி சர்க்கிள்ல இருந்து அவங்களுக்கு அந்த மாதிரி
ஜாதகங்கள் எடுத்து தருவேன். அவங்க ஆய்வு பண்ணிட்டு அவங்களுக்கு நைட்டு நமக்கு டே
இருக்கிறதுனால அவங்க போடுவாங்க இதெல்லாம் இருக்கான்னு கேளு. கேட்டா தான் அது
சரின்னு தெரிஞ்சாதான் நான் மேற்கொண்டு பண்ண முடியும். அவங்க நைட்டுல போட்டாங்கன்னா
திரும்ப நான் மார்னிங் படிச்சு பார்த்துட்டு நான் யார் கிட்ட கலெக்ட் பண்ணினனோ
அவங்க கிட்ட கேட்பேன். இந்த மாதிரி ஏதாவது இருக்கா அப்படின்னு. அவங்க சொன்னா நான்
ரிப்ளை போடுவேன். இப்படியே இது நடந்துட்டு இருந்தது.
ஒரு கட்டத்துல தான் நானும் ரொம்ப ஆர்வமா இத பத்தி
பேசும்போது இத நீ படி உனக்கு இருக்கிற குழப்பங்கள் தெரியும். நான் நிறைய கேள்விகள்
வேற கேட்பேன். அதனால உனக்கு இருக்கிறது எல்லாம் தெரியும் நீ படி என்று சொல்லி
ஆக்சுவலா டிசம்பர் கிளாஸ்ல மார்கழி மாசம் எப்படி எந்திரிச்சு இருப்பல காலைல
எந்திரிக்கணும் அப்படிங்கறது ஒரு இதுவா இருந்தது. அதனால மார்கழி மாசம் எந்திரிப்ப
நீ அப்ப படிச்சுருன்னு சொன்னாங்க. அப்பவும் என்னால சேர முடியல. இப்பதான்
சேர்ந்தேன். வார்த்தைகள் இல்லை ஐயா வார்த்தைகள் இல்லை. சொல்றதுக்கு கண்டிப்பா
வார்த்தைகள் இல்லை.
நான் ஜாதகம் போட்டு படிச்சு இதெல்லாம் என்ன பண்ணனும்
தெரியாது. என்னோட வாழ்க்கையில நான் என்னை நிறைய மாற்றி இருக்கேன். ஐயா காலையில கூடஅவர்
கிட்ட கேட்டேன் என் ஹஸ்பண்ட் கிட்ட வகுப்பு சேர்ந்ததுல உங்களுக்கு என்ன மாற்றம்
தெரியுது அப்படின்னு கோபம் குறைஞ்சிருக்கு படபடப்பு குறைஞ்சிருக்கு பொறுமையா
இருக்கேன் அப்படின்னு சொன்னாரு. இது எனக்கே தெரியுதுங்க ஐயா. பயங்கரமா கோவம் வரும்
எனக்கு இப்ப கோவப்படுறதில்ல இவ்வளவு கோவங்கள் தனிஞ்சிருச்சு. பேச வரலைங்கய்யா.
எனக்கு தெரியல என்ன பத்தி சொன்னா எனக்கு அழுகை தான் வருது.
இந்தப் படிப்பினை சொல்லித்தந்த பொதுவுடைமூர்த்தி ஐயா
அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வணக்கங்களும் ஐயா. இதை எப்படி நீங்க கிரியேட்
பண்ணீங்க எப்படி கொண்டு வந்தீங்க எப்படி நீங்க செய்றீங்கன்னு மிராக்கிள்.
கண்டிப்பா எனக்கெல்லாம் நிஜமா சொல்றேன் எல்லாரும் சொல்ற மாதிரி தான் என்
நட்சத்திரம் என் ஹஸ்பண்ட் நட்சத்திரம் என் குழந்தை நட்சத்திரம் மட்டும்தான்
தெரியும். ராசி கட்டங்கள் தெரியாது இதனை நட்சத்திரங்கள் தெரியாது எதுவுமே
தெரியாது. இதுல வந்து தான் இதெல்லாம் தெரியும்.
முதலில் என் ஹஸ்பண்ட் இதெல்லாம் வேண்டாம். அதான் சித்தி
படிச்சிருக்காங்கல போதும். ஏதாவது வேணும்னா அவங்கள கேட்டுக்கலாம்னு விட்டுட்டாங்க.
அதுக்கு அப்புறமா சித்தி சொன்னாங்க நானும் சேர்ந்தேன். அப்புறமா அவரே என்னை வீட்ல
அங்கங்க சாட் எல்லாம் ஒட்டி இருப்பேன் நட்சத்திர அதிபதி எல்லாம் எழுது. திடீர்
திடீர்னு வந்து கேள்வி எல்லாம் கேட்பார். இந்த நட்சத்திரத்திற்கு யார் அதிபதி
அப்படின்னு. நட்சத்திரங்கள் சொல்லு அப்படி எல்லாம் சொல்லி அவருக்கும் அதுல
இன்ட்ரஸ்ட் உண்டு. என்ன என்கரேஜ் பண்ணாரு படி அப்படின்னு.
சார் இது நீங்க எப்படி பண்ணிங்கன்னு தெரியாது. சரி ஆனா
சொல்லி கொடுத்த ஒவ்வொரு ஆசிரியர்களும் அத்தனை பொறுமை. அதாவது அவங்களோட வயசுல
சின்னவங்க இருக்காங்க அவங்களோட வயசு மூத்தவங்க இருக்காங்க அத்தனை பேரையும்
அனுசரிச்சு ஒருத்தர் மனசு புண்படாம எல்லாருக்கும் புரியிற மாதிரி ஒவ்வொரு
வார்த்தையும் அவங்க சொன்னது அப்படியே மனசுல பதியுது. அந்த அளவுக்கு வார்த்தைகள்
அதெல்லாம் உங்களுடைய ஒவ்வொன்னையும் சொல்லிட்டு எல்லாமே ஐயாவால தான் ஐயா தான்
சொல்லுவாங்க அந்த அளவுக்கு நீங்க அவங்கள தயார் பண்ணி இருக்கீங்க. அதெல்லாம் ரொம்ப
பெரிய விஷயம் ஐயா. ரொம்ப நன்றி.
ஐயா எல்லா குருமார்களுக்கும் ரொம்ப நன்றி. சாந்திதேவி
மேம், சாந்தகுமார் சார், பிரியா மேம் ,
அமுதா அம்மா சொல்லிக் கொடுத்ததெல்லாம் மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு
சார். எல்லாரும் சொல்ற மாதிரிதான் ஒரு கோபம்
வந்ததுன்னா பைத்தியக்காரத்தனம்றது அதெல்லாம் சின்ன வயசுல சொன்னாலே யாரும் பெருசா
ஏத்துக்க மாட்டோம். இந்த வயசுல அவங்க சொல்றதெல்லாம் மனசுல பதிஞ்சு ரொம்ப நல்லா
இருக்குது.
ஐயா நான் இதுல பர்சனலா மாறினது என்பது ரொம்ப ரொம்ப நிறைய
மாறி இருக்கேன் ஐயா. எனக்கே தெரியுது எனக்கு கோவம் வருது இல்ல. ஒரு அளவுக்கு
பொறுமையா தான் இருக்கேன். கோபம் வந்தாலும் அதை பத்து நிமிஷம் அப்படிங்கறது நானா
தள்ளி போட்டு இருக்கேன். இல்ல அந்த இடத்துல இருக்குறது இல்ல. முக்கியமா நான்
காசிப் பேசுறது இல்ல சார். அது எவ்வளவோ பெரிய மாற்றத்தை தந்திருக்கு.
யாரைப்பத்தியும் பேசுவதில்லை. முன்னெல்லாம் போன்ல யாராவது பேசினால் மணி கணக்குல
ஓடும் காசிப். யாராவது பேசினாலும் சரி வேண்டாம் விட்டுடு அவங்கள பத்தி நம்ம
எதுக்கு பேசணும். உனக்கு என்ன வேணும் எனக்கு வேணும் நம்ம அதை பத்தி பேசுவோம்
வச்சிரு அவ்வளவுதான். காசுப்பே நிறுத்தி ஆச்சு சார். அது எல்லாமே எனக்கு ஒரு
பாசிட்டிவ் தாட்ஸ் எனக்கே தருது.
இரண்டாவது கர்மானு வரும்போது இந்த மாற்றத்தை பார்க்க
எங்க அம்மா இல்லைகிற ஒரு வருத்தம். ஏன்னா நான் எங்க அம்மாவை நிறைய திட்டி
இருக்குகேன். எங்க அம்மா என் கூட இருந்தாங்க. நித்யா மேம் சொன்ன பிரேயர் டெய்லி
எங்க அம்மா கிட்ட அப்பா கிட்டையும் நைட்ல நான் பிரேயர் பண்றேன் சார். ரொம்ப நன்றி
ஐயா.
எனக்கு தெரிஞ்சு நிறைய ஜாதகங்கள் பார்க்கவில்லை
என்றாலும் குட்டி குட்டியா பார்த்து இருக்கேன். ஒரு 15, 20 பேருக்கு
பாத்திருக்கேன் சொல்லியும் இருக்கேன். அதுல மோஸ்ட்லி அண்ணே அண்ணி அண்ணன் பையன்
அந்த மாதிரி என்னுடைய ரிலேட்டிவ் நான் சொல்லும்போதே அவங்களே சொல்லுவாங்க ஓகே இட்
சம் வாட் ரீச்டு ஏதாவது ஒன்னு நீ கேர்ஃபுல்லா இருந்துக்கோ அப்படின்னு மொபைல்
ஏதாவது இதுவாகும் பாத்துக்கோ அப்படின்னு சொல்லுவேன். அவங்களே சொல்லுவாங்க போன்
பண்ணி என்னடி சொன்ன எப்படி சொன்ன மொபைல் இதுவாகும் சொல்லிட்டு மொபைல் இது
ஆயிடுச்சுன்னு சொல்லுவாங்க. சொன்னேன்ல கேர்ஃபுல்லா இருன்னு சொல்லிட்டு. அது ஜாலியா
சிரிச்சிட்டு சொல்லி இருக்கேன்.
ஓரளவுக்கு ஐயா ஜீரோல இருக்கிறவங்கல இந்த அளவுக்கு என்னைய
சுத்த ஹீரோ சார் ஜாதகம்னா என்னனு தெரியாது. எங்களையெல்லாம் கூட நீங்க இந்த
அளவுக்கு கொண்டு வந்தது ரொம்ப பெரிய விஷயம். நன்றி தவிர சொல்றதுக்கு எங்களுக்கு
வார்த்தை இல்லை. ஆசிரியர்களுக்கும் நன்றி. நன்றி. என்ன இதுல சேர்த்துவிட்ட கீதா
சங்கரனுக்கும் பெரிய நன்றி.
என்னுடைய கோச் கார்த்திகேயன் சார் யோசிப்பாங்க. மே பி
நான் பெருசா கார்த்திகேயன் சார் கிட்ட இன்ட்ராக்ட் பண்ண மாட்டேன். நோட்ஸ்
அனுப்புவேன். இடையில எங்க வீட்டுல மேரேஜ் ஒன்னு இருந்தது சார். அதனால என்னால கொஞ்சம்
நோட்ஸ் வந்து கோழிக் கிறுக்கிறது மாதிரி கிறுகிறுவேன் சார் எழுதும் போது
அதுக்கப்புறம் பேர் காப்பி எடுத்து இனிஷியலா சென்ட் பண்ணிட்டு இருந்தேன்.
அதுக்கப்புறம் பேர் காப்பி எடுக்குறதுக்கு எல்லாம் நேரம் இல்லை. வீட்ல பந்த கால்
அது இதுன்னு ரொம்ப பிசியா இருந்ததுல அனுப்ப முடியல சார்.
6:30 க்கு எல்லாம் குக்கிங் போயிடுவேன் சார். வீடியோ ஆப்
பண்ணிட்டு ஆடியோ மட்டும் இருக்கும். அதுக்கப்புறம் கேட்டுட்டே தான் சமையல்
பண்ணிட்டு இருப்பேன். ஏதாவது பாயிண்ட்ஸ் எழுதிக்கோங்க அப்படின்னா அங்கே ஒரு நோட்டு
வச்சிட்டு இல்ல ஸ்லேட் வச்சிருப்பேன் ஏதாவது பாயிண்ட்ஸ் கிடுகிடுன்னு எழுதி
வச்சிட்டு குக் பண்ணிட்டு இருப்பேன். என் ஹஸ்பண்ட் கிளம்பி போனதுக்கு அப்புறம்
8:30 கிட்ட அங்க யூ எஸ் ல சித்திக்கு அவங்க வாஸ்து பண்ணிட்டு இருந்தாங்க.
அவங்களுக்கு வாஸ்து முடியும் எனக்கு இங்க கிளாஸ் முடியும்.
இரண்டு பேரும் உட்கார்ந்து அன்னைக்கு என்ன எல்லாம்
சொல்லி கொடுத்தாங்க கேட்பாங்க. எனக்கு என்ன புரிதல் இல்ல கேட்பாங்க. எனக்கு இது
புரியல இது எப்படி வந்துச்சு திடீர்னு மேம் எல்லாம் வந்து ஏதாவது ஒரு வார்த்தைகள்
கொஞ்சம் பாஸ்டா சொல்லிடுவாங்க. அது நம்ம நோட் பண்ணி கிளாஸ்ல ஹாண்ட் ரைஸ் பண்ணி
கேட்டா கண்டிப்பா சொல்வாங்க. ஆனா நான் அந்த நேரத்துல சமையல் வேலைக்கு போறதுனால
என்னால ஹாண்ட் ரைஸ் பண்ணி அந்த கொஸ்டின கேட்க முடிகிறது இல்ல. மனசுல ஒரு தைரியம்
சரி சித்திய கேட்டுக்கலாம் அப்படிங்கற தைரியத்துல அமைதியா விட்டுருவேன். அந்த பாயிண்ட்
நோட் பண்ணி வச்சிருப்பேன் அப்புறமா சித்தி கிட்ட இந்த பாய்ண்ட்ஸ் வேகமா சொல்லிட்டு
போனாங்க அது எப்படி அப்படின்னு கேட்டு அவங்க எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க. அவங்கள
கேட்டு மொத்தமா கிளியர் பண்ணிப்பேன். மொத்தத்தையும் அன்னைக்கு இரண்டு மணி நேரம்
கிளாஸ் திரும்பவும் ரெண்டு மணி நேரம் நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு தான் வைப்போம்.
மொத்தத்தையும் முடிச்சுட்டு தான் அவங்களும் போய் படுப்பாங்க. ஒருநாள் ரெண்டு
இரண்டரை கூட ஆகும் நைட் அவங்க தூங்குறதுக்கு. அந்த அளவுக்கு எனக்கு சொல்லிக்
கொடுத்துட்டு தான் அவங்க படுப்பாங்க.
அதனால மோஸ்ட்லி நிறைய கார்த்திகேயன் சார்கிட்ட
இன்ட்ராக்ட் பண்ணது இல்ல. அவர் மே பி நினைச்சுக்கலாம் என்னை இவங்க பெருசா
இன்டராக்ட் பண்ணலையே எந்த கேள்விகளும் கேட்கலையே அப்படின்னு என்னுடைய புரிதலுக்கு
சித்தியே நிறைய எக்ஸ்பிளநேஷன் கொடுத்ததுனால நான் பெருசா கேட்டுக்கல சார் தப்பா சரியா
தெரியல. எனக்கு தேவையான புரிதல் கிடைச்சதனால நான் சார் கிட்ட இண்ட்ராக்ட் பண்ணல.
மே பி அவர் தப்பா நினைச்சிருந்தாலும் கார்த்திகேயன் சார் கிட்ட மன்னிப்பு
கேட்டுக்குறேன். மத்தபடி எல்லாமே குட் சார்.
என்னோட பொண்ணு எல்லாம் சேர்த்து விடணும்னு ஆசை. அவங்க
இப்போதைக்கு கன்னடால இருக்காங்க. கன்னடால இருந்து படிக்க முடியும். ஆனா
அவங்களுக்கு இருக்குற அவங்களே குக் பண்ணிக்கிட்டு அவங்களே வேலைக்கு எந்திரிச்சு
போறதுனால அவங்களுக்கு சொல்லி இருக்கேன் எப்போ இந்தியாவுக்கு வந்தாலும் இந்த கோர்ஸ்
சேர்ந்த நீ படிக்கணும் அப்படின்னு. அவங்க படிக்கிறேன்மா சொல்லி இருக்காங்க. ரொம்ப நன்றிங்க சார்.
வாழ்க்கையே புரட்டி போட்டு இருக்கு சார்.
அப்புறம் ஒரு இன்ஃபர்மேஷன் சொல்லும் சார். கிளாஸ்
ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி பிரேயருக்கு முன்னாடி உங்க கோர்ஸ் வச்சு ஒரு
மியூசிக் வரும் சார். அந்த மியூசிக் வந்து எப்படி சொல்றது ஒரு கூஸ்பம் ஆகும். பாதி
தூக்கத்துல எழுந்து வந்து அப்படியே ஏதோ பண்ணிட்டு இருந்தாலும் கூட சமைக்கல லேட்டா
எந்திரிச்சோம்னா அந்த மியூசிக் கேட்டோம்னா அடுத்த செகண்ட் ரெஃப்ரெஷ் ஆகும் பாருங்க
மைண்ட் அது என்ன மியூசிக் சார் அது. அப்படியே ரெபிரேஸ் ஆகும் சார் மைண்ட். அந்த
மியூசிக் வந்து அமேசிங் சார். தனியா சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன் சார்.
அந்த மியூசிக் ரொம்ப மைண்டுக்கு ரொம்ப பீஸ் ஃபுல்லா இருக்கு சார். தூக்கத்துல கூட
எனக்கு அந்த மியூசிக் ஓடும். எனக்கு அவ்வளவு அந்த மியூசிக் வந்து இஷ்டமான மியூசிக்
சார். தேங்க்யூ சார். நிறைய பேசணும்னு நினைச்சேன் இது எத்தனாவது வீடியோன்னு தெரியல
சார். இதுக்கு மேல நான் டெலிட் பண்ணல சார். தேங்க்யூ சோ மச் சார்.
வீடியோ லிங்க் :
https://www.facebook.com/share/v/1Erf9PwQjm/
Comments
Post a Comment