2026ல் பிரச்சனைக்குரிய கிரகங்கள் மற்றும் லக்னங்கள் எது?

 

2026ல் பிரச்சனைக்குரிய கிரகங்கள் மற்றும் லக்னங்கள் எது?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்

- ALP  ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.

 


அனைவருக்கும் வணக்கம்,

 துலா லக்னம் :

துலா லக்னத்திற்கு சனி பகவான் இப்ப 6இல் இருக்கிறார்.  ஐந்தாம் அதிபதி 4, 5 சனி பகவான் உண்மையிலேயே துலாம் லக்னத்திற்கு நன்மைகளை செய்யக்கூடியவர்.

இந்த நன்மையை செய்யக்கூடியவர் போய் 6ம் இடத்தில் உட்காரும்போது என்ன பண்ணும்? அந்த நன்மைகளுக்கு பதிலாக நமக்கு கடனையும் நோயையும் அதிகப்படுத்திடும் என்று சொல்லலாம்.

அதனால கொஞ்சம் ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கு என்றால் உடனே கொஞ்சம் பார்த்துக்கிறது தான் நல்லது. கொஞ்சம் லேட்டா தான்  குணமாகும் என்ற ஒரு சூழ்நிலைகள் இருக்கு.

அதே மாதிரி குரு பகவான் இப்ப பெரிய இஸ்யூல இல்ல. உங்க இஷ்ட தெய்வ கோயிலுக்கு போகக்கூடிய ஒரு வாய்ப்புகள் கடகத்துக்குள்ள குரு மாறதுக்கு முன்னாடியே கிடைக்கும்.

அதனால இந்த நேரத்துல ஏதாவது ஆன்மீக பயணங்கள் போறீங்க என்றால் தாராளமா போயிட்டு வாங்க. அதுக்கான அமைப்பு உங்களுக்கு ரொம்ப நல்லாவே இருக்கு.

ராகு கேதுக்கள் உங்களுக்கு ஒண்ணும்  பிரச்சனைகளையோ இடைஞ்சல்களையோ  தரக்கூடிய இடத்துல இல்ல. அதனால அவங்கள பத்தி நம்ம கவலைப்பட வேண்டிய அவசியமும் கிடையாது என்றும் சொல்லலாம்.

அப்ப இந்த காலகட்டங்களில்  நீங்க என்ன பண்ணனும்? யாரை வழிபாடு பண்ணனும்?

 

இந்த 6ல சனிபகவான் மறைஞ்சு இருக்கிறதுனால, காலபைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு பண்ணுங்க. சனி பகவான் உங்களுக்கு நன்மையை தரக்கூடிய வாய்ப்புகளை அதிகமாக கொடுக்கும் என்று சொல்லலாம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/eZ0RiGgr9Nc?si=Ki8pD-3sTNP2HeBn

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!