12 ஆம் பாவகத்தில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் அமர்ந்தால் என்ன பலனை தரும்?

 

12 ஆம் பாவகத்தில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் அமர்ந்தால் என்ன பலனை தரும்?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.

- ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம், இப்ப பன்னிரண்டாம் பாவகத்தில் ஒரு கிரகம் இருந்ததுனா, 12 என்கிறது விரையம் செலவு தூக்கமின்மை அலைச்சல்.

 

உதாரணமாக கிரகங்களை வைத்து பார்க்கும் போது பன்னிரண்டாம்  பாவகத்தில் சூரியன் இருந்தா நமக்கு அப்பாவால  விரயமாகும் செலவாகும். அதிகப்படியான செலவுங்கிறது இந்த காலகட்டத்தில் நடக்கும் என்று சொல்லலாம்.

 

உதாரணமாக சந்திரன் இருந்தார்னு வச்சுக்கங்களேன் அம்மாவுக்காக செலவு பண்றது வீட்டுக்காக செலவு பண்றது. அதே மாதிரி நமக்குத் தேவையான பொருட்களுக்கான அதிக ஆடம்பர செலவு இந்த இடத்துல பண்றது நடக்கும்.

 

சரிங்க எனக்கு பன்னிரண்டாம் பாவகத்தில் புதன் இருக்குது. இந்த புதன் இருக்கும்போது படிப்புக்காக அதிக செலவு இருக்கும். அதே மாதிரி படிக்கிறவங்க வந்து இவங்க இரவு நேரங்களில் தான் அதிகமான படிப்புக்கு நேரம் செலவு என்பது பண்ணுவாங்க.

 

உண்மையிலேயே 12ஆம் இடத்தில் புதன் இருந்ததுனா வெளிநாட்டில் போய் படிக்கக்கூடிய ஒரு யோகத்தை கொடுக்குமானா கண்டிப்பாக கொடுக்கும் என்று சொல்லலாம்.

 

அதே மாதிரி இந்த புதன்  சகோதரனுக்காக செலவு பண்ணக்கூடிய ஒரு தன்மை. காதலுக்காக செலவு பண்ணக்கூடிய ஒரு தன்மை இந்த புதன் கொடுப்பாரா? கண்டிப்பா கொடுப்பார் என்று சொல்லலாம்.

 

அதே மாதிரி சுக்கிரன் இருந்தார்னு வச்சுக்கோங்களேன் மனைவிக்காக செலவு இங்க நடக்கும். அதே மாதிரி நண்பர்களுக்காக செலவு பண்ணக்கூடிய ஒரு தன்மை இங்க இருக்கும். அத்தைக்காக செலவு பண்றது. ஆடம்பர பொருள்காக செலவு பண்றது டிரஸுக்காக செலவு பண்றது.

 

இப்ப சிலர் பார்த்தீங்கன்னா ஒரு சின்ன கம்மல் வாங்குவாங்க இன்னொரு ஆறு மாசம் கழித்து மறுபடியும் ஒரு கம்மல் வாங்குவாங்க. மோதிரம் வாங்குவாங்க மறுபடி ஒரு மோதிரங்கிறது  வாங்குவாங்க. இந்த சிறு தங்கம்னு சொல்லக்கூடியது யாருன்னா சுக்கிர பகவான். இந்த சுக்கிர பகவான் 12-ல் இருக்கும் போது இதற்காக சேமிப்புக்கு உண்டான செலவாக இருக்கும்.

 

மாத்தி மாத்தி பண்ணுவாங்கன்னு சொல்லுவோம் தெரியுமா இதை போட்டுட்டு அது அதை போட்டுட்டு இது என்று அவங்க செஞ்சுக்கிட்டே இருப்பாங்க என்று சொல்லலாம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/b04NxSEQUC8?si=GcENiPJvJWxwOnO-

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR