பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா? ஜோதிடம் சொல்லும் ரகசியம்

 

பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா? ஜோதிடம் சொல்லும் ரகசியம்

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

- ALP  ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா என்ற கேள்வி கேக்குறாங்க மேம்.

 

உமாவெங்கட் மேம்:

 

நிறைய பேருக்கு அந்த கேள்விகள் இருக்கும். அடுத்த மாதம் பிள்ளைக்கு பிறந்தநாள் வருது அதே மாசத்துல திருமணம் வச்சுக்கலாமா என்ற கேள்வி வரும்.

 

எப்போதுமே பிறந்த மாதத்தில் திருமணம் வைப்பது சிறப்பாக அமையாது. அது செய்யக்கூடாது அப்படிங்கறது சாஸ்திரப்படி உள்ளது. கிரகங்களின்படியும் அது செய்யக்கூடாது அப்படிங்கறது உண்மை. அந்த மாதத்தை தவிர்த்தால் சிறப்பாக இருக்கும் அப்படின்னு சொல்லலாம்.

 

தொகுப்பாளர்:

 

ஓகே மேம். இது திருமணத்திற்கு மட்டும்தானா? இல்ல வண்டி வாங்குறது இப்ப நான் பொறந்த மாதத்திலேயே புதுசா ஒரு வண்டி எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுறேன் அதுக்கும் பார்க்கலாமா  மேம்.

 

உமாவெங்கட் மேம்:

 

கண்டிப்பாக பார்க்கலாமா அப்படின்னா உங்க ஜாதகத்தில் நான்காம் பாவக கிரகம் சொல்லக்கூடியது, நல்ல பாவகத்துல இருந்ததுனா வண்டி வாங்குவது நல்லா இருக்கும்.

 

உதாரணமாக,  ஒருத்தவங்க ரிஷப லக்னத்தில் பிறந்து இருக்காங்க. ரிஷப லக்னத்திற்கு நான்காம் அதிபதின்னு சொல்லக்கூடியது சூரிய பகவான். அவங்க பிறந்த மாதம் வைகாசி மாதமாக இருக்குது. அப்ப அந்த மாசத்துல வண்டி வாங்குறது சிறப்பா கேட்டீங்கன்னா என்னை பொருத்தவரைக்கும் அந்த வைகாசி மாதத்தில் அவங்களுடைய லக்னம் ALP  லக்னம் ரிஷப லக்னமாக இருந்ததுனா அந்த நான்காம் பாவக அதிபதி சூரியனாக இருந்தது அப்படின்னா இந்த வைசாசி மாதத்தில் வண்டி வாங்குவது அவ்வளவு சிறப்பாக இருக்காது அப்படின்னு தான் சொல்லுவேன்.

மீத மாதங்கள் எந்த மாதங்கள் பார்த்து அவங்க ஜாதகப்படி வாங்குறது நல்லா இருக்கும். ஏன்னா இந்த மாதத்தில் வாங்கினால் அவங்களுக்கு ஒரு அழுத்தம் , போராட்டம் இருந்துட்டே இருக்கும். இந்த மாதத்தில் செய்வது சிறப்பாக அமையாது என்பது சொல்லலாம். நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/Fge3KHmS-Ps?si=OIdp9wxXIdsAdzLC

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR