சிம்ம லக்னம் செல்லும் போது எந்த தொழில் ஜாதகருக்கு கை கொடுக்கும்?
சிம்ம
லக்னம் செல்லும் போது எந்த தொழில் ஜாதகருக்கு கை கொடுக்கும்?
- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். சிம்ம லக்னத்திற்கு
ஆறாம் அதிபதி என்று சொல்லக்கூடியது சனிபகவான். அந்த கடனுக்கு காரகன் என்று
சொல்லலாம். அந்த கிரகம் எங்க இருக்குது பத்தாம் இடத்தில். சிம்ம ராசிக்கு
பத்தாம் இடமான ரிஷப ராசியில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார்.
இவர் தொழிலுக்காக கடன் வாங்குவாரா என்றால்
கண்டிப்பாக வாங்குவார். வருமானம் இவருக்கு கிடைக்குமா கண்டிப்பாக வருமானம் என்பது கிடைக்கும்.
வருமானம் திருப்பிப்பெற முடியுமா?
கண்டிப்பாக
முடியும். ஏனென்றால் இந்த சிம்ம லக்னக்காரர்களுக்கு இரண்டாம் பாவக வருமானம்
என்பது உள்ளூரில் கிடையாது வெளியூர் அமைப்பு.
இப்ப இவர் பிசினஸை எந்த இடத்தில் பண்ண போறாங்க என்பது
ஒரு கேள்வியாக இருக்கும். பொதுவாக ஆறாம் அதிபதி பத்தில் இருக்கும்போது வேலை
பார்க்கக்கூடிய இடத்தில கடனும். அதே மாதிரி தொழிலுக்காக கடன் அமைப்பு இவங்களுக்கு கொடுக்கும்.
ஆனால் இவர்கள் எது சார்ந்த தொழில் பண்ண போறாங்க என்று
ஒரு கேள்வி. உதாரணமாக இந்த சிம்ம லக்னக்காரங்களுக்கு என்ன பிசினஸ் பண்ணலாம் என்று
ஒரு கேள்வி இருந்ததுன்னா டிபார்ட்மெண்ட்
ஸ்டோர் நல்லா இருக்கும்.
டெக்ஸ்டைல் சம்பந்தப்பட்டது நல்லா
இருக்கும். ஹோல்சேல் டு ரிடேட்
சொல்லுவாங்கல அந்த மாதிரி கடைகள் இவர்களுக்கு கை கொடுக்குமா? கை
கொடுக்கும்.
சிலர் மாவு அரைத்து விற்பார்கள் ,அப்பளம், வடகம் போட்டு கொடுப்பாங்க கேண்டீன் மாதிரி
உருவாக்கி வீட்டிலிருந்து அதை வெளியில கொண்டு போயி கொடுப்பாங்க. சிலர் அங்கே
இருந்து செய்யக்கூடிய ஒரு தன்மைங்கிறது இருக்கும்.
இந்த சனி பகவான் பத்தாம் இடத்தில் இருந்தால் நாம
என்ன செய்யணும் என்றால் மாலை நேர வேலைகள் அதிகமாக பண்ணனும். இப்ப நான் ஒரு
ஃபுட் போர்ட் போடுறேன்னு வச்சுக்கோங்களேன் ஈவினிங் மேல இவங்க போட்டாலே சக்ஸஸ்
என்று சொல்லலாம் இந்த சிம்ம
லக்னக்காரங்களுக்கு.
இல்லங்க நான்
ஒரு பொருளை வாங்கி வேறு ஒரு கையில மாத்தி கொடுக்கிறேன். இது எனக்கு எப்படி
இருக்கும் கேட்டீங்கன்னா ரொம்ப சூப்பரா
இருக்கும் சொல்லணும்.
ஏன்னா உங்களுக்கு வாக்கு அதாவது வாக்கு பலம்
என்பது அதிகம். பேசி சம்பாதிக்கக்கூடிய
தன்மை உங்களுக்கு நல்லா இருக்கும்.
பெரியவங்க சொல்லுவாங்கல்ல பேசியே மயக்கிடுவான் பேசியே
வித்துடுவான் சொல்லுவாங்கல அந்தப் பேச்சு
திறன் நல்லா இருக்கிறதுனால அந்த வார்த்தைகளில்
ஒரு கண்ணியம் என்பது கண்டிப்பாக இருக்கும்.
சனி பகவான் பத்தாம் இடத்தில் இருந்ததாலே வேலையில ரொம்ப சின்சியரா
பண்ணுவாங்க. இந்த தூக்கத்தை கெடுத்துட்டு வேலை பார்க்கிறது சொல்வோம் தெரியுமா உடல் உழைப்பு என்பது அந்த
வேலையில இவங்க அதிகமாக காண்பிப்பாங்க.
அதனாலேயே அந்த பிசினஸ் சம்பந்தப்பட்டது இவங்களுக்கு
ஓஹோன்னு இருக்கும் சொல்லலாம். ஆனா இவங்க அதிக நேரம் காலை நேரம் என்பதைவிட
மாலை நேரங்களில் செய்வது நல்லா இருக்கும்.
சிலர் பாத்தீங்கன்னா இந்த பர்னிச்சர் சம்பந்தப்பட்டது.
ஷோரூம் போவாங்க இல்லேன்னா அவங்க அதை எடுத்துட்டு வேற ஒருத்தருக்கு கைமாற்றிக்
கொடுக்கிறது அது சூப்பரா இருக்கும்.
சிலருக்கு வந்து பூர்வீக தொழில் அப்பாவுடைய
தொழிலை பண்ணனும் எண்ணம் இருக்கும். அப்படி பண்ணும் போது இன்வெஸ்ட்மென்ட் இவங்க முதலீடு இல்லாமல்,
இவுங்க அப்பா கடையில வேலை பார்ப்பது நலம்.
அப்பதான் இவங்களுக்கு கை கொடுக்கும் என்று சொல்லலாம்.
எப்போதுமே இந்த சிம்ம லக்னக்காரங்களுக்கு அப்பாவோட தொழில் கை கொடுக்குமா இந்த லக்னம் முடியக்கூடிய காலங்களில் சற்று யோசிக்க வேண்டும் என்று சொல்லுவோம். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/TA9Nm0VuAdc?si=7o8me9CLvxmZYanj
Comments
Post a Comment