நம் ஜாதகத்தில் கோவில் கட்டும் பாக்கியம் இருக்கிறதா?

 

நம் ஜாதகத்தில் கோவில் கட்டும் பாக்கியம் இருக்கிறதா?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.

- ALP  ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

வணக்கம் மேம்.

ஒருத்தர் வந்து கோயில் கட்டலாம்னு இருக்காரு. எந்த காலகட்டத்தில் கோயில் கட்டலாம் என்பது அவருடைய கேள்வி மேம்.

 

உமாவெங்கட் மேம்:

 

இந்தக் கோயில் கட்டுவது என்ற அமைப்பு எல்லாருக்கும் இருக்குமா? சிலருக்கு மட்டும் தான் அது பாக்கியமாக அமையும் என்று சொல்லலாம்.

 

எல்லா காலகட்டத்திலும் கோவில் கட்டுவதற்கான உண்டான எண்ணம் வந்து ஒரு ஜாதகருக்கு தோற்றுவிக்குமானா அதுவும் இல்ல. அவங்க ஜாதகத்துல ஒன்று குரு பகவானும் சனி பகவானும் சேர்ந்து இருக்கும்போது ஏன்னா கால புருஷனுக்கு ஒன்பதாம் பாவகமும் பத்தாம் பாவகமும் இணையும்போது தர்ம கருமாதிபதி யோகம் அப்படிங்கற ஒரு யோகத்தை கொடுக்கும்.

ஒன்பதாம் பாவக அதிபதியும் பத்தாம் பாவக அதிபதியும் :

இது கோவில் கட்டுவது சமூகத்தில் முடிந்த சேவை செய்வது என்ற ஒரு அமைப்பை கொடுக்கும். அவரவர் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவக அதிபதியும் பத்தாம் பாவக அதிபதியும் இணைந்திருந்தால் அந்த கிரக அமைப்பு அந்த கோவில் திருப்பணி செய்வதற்கு கோவில் கட்டுவதற்கு இவரும் ஒரு தூணாக இருப்பாரா? கண்டிப்பாக இருப்பார் என்று சொல்லலாம்.

 

ரிஷப லக்னம் :

 

நான் பார்த்த ஜாதகம் ரிஷப லக்னம் ஒன்பதாம் அதிபதி சனி பகவான் பத்தாம் அதிபதி சனிபகவான் அவர் எங்கே இருந்தார்னா ஐந்தாம் இடத்தில் இருந்தார்.  அப்ப அவருடைய குலதெய்வக் கோவிலை கட்டுவதற்கு உண்டான அமைப்பு அந்த ஜாதகருக்கு இருந்தது. அத முன்னாடியே அவருடைய ஜாதகத்துல சொன்னோம்.

 

அவருக்கு விருப்பம் இருக்குது  அதற்கு உண்டான வருமானமும் அதற்கு உண்டான ஒரு அமைப்பு எனக்கு தற்போது இல்லை அப்படிங்கிறது அவருக்குரிய பதில். அந்த கடவுள் அந்த கிரகத்தின் செயல்களை தானாக நடத்தி வைத்தது தான் உண்மை. அவர் குல தெய்வ கோவிலுக்கு அவர் முன் நின்று ஒரு தனியாக அந்த கோவில் கட்டுவதற்கு உண்டான அமைப்பை அந்த ஜாதகருக்கு கொடுத்ததா அப்படின்னா நன்றாகவே கொடுத்தது அப்படிங்கறது சொல்லலாம்.

 

இது இவர்களுக்கு மட்டுமே அப்படின்னு பாத்தீங்கன்னா ஒரு ஒரு ஜாதக அமைப்பின்படியும் அவர்களுக்கு இருக்கும். பொதுவாகவே நம்ம ஒரு திருப்பணி சம்பந்தப்பட்ட பணிகள் நடக்கும் போது இந்த குருவும் சனியும் சேர்ந்து இருக்கும் போது நடக்கும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/mURflhVgdws?si=mWp7tXSGr4bSIWcB

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR