புதன் வலிமை குறைந்தால் கம்யூனிகேஷன் பிளாக் ஆகுமா?

 

புதன் வலிமை குறைந்தால் கம்யூனிகேஷன் பிளாக் ஆகுமா?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.

- ALP ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

புதன் வலிமை குறைந்தால் கம்யூனிகேஷன் பிளாக் ஆகுமா என்று சொல்லி கேள்வி கேட்டிருக்காங்க மேம்.        

 

சாந்திதேவி மேம்:

கண்டிப்பா. ஏன்னா புதன் தான் வித்தைகளுக்கெல்லாம் அதிபதி. ஒரு விஷயம் படிக்கணும், நல்லா பேசணும் தடையில்லாமல் பேசணும் சரளமாக பேசணும் பாயிண்ட் பாயிண்ட்டா பேசணும் என்றால் அதுக்கெல்லாம் புதன் தான் காரணம்.

வலிமை குறைந்தால் :

அப்படிப்பட்ட புதன் வந்து வலிமை குறைந்து இருக்காருன்னா பேச்சு சரளமாக வராது. முக்கியமா இந்த இடத்துல இது அவங்க கிட்ட பேசினா நமக்கு ஒரு காரியம் சக்ஸஸ் ஆயிடும் அவங்கள பார்க்கிறதே பெரிய விஷயம் அப்பாயின்மென்ட் கிடைச்சுடும். போய் பார்ப்போம் ஆனால் முக்கியமான பாயிண்ட் மட்டும் கேக்காம விட்டுடுவோம். அதுதான் கம்யூனிகேஷன் பிளாக் ஆகிறது என்று அர்த்தம்.

 

அதே மாதிரி இன்டர்னெட் என்பதும் புதன் உடைய காரகத்துல வந்துடும். மொபைல்ல நாம பேசிகிட்டு இருக்கோம்.

ஒரு முக்கியமான செய்தி பேசிட்டு இருக்கோம். ஒரு முக்கியமான தகவல் அவங்களுக்கு கன்வே பண்ணனும். நம்ம அதை பேசும் போது பாதி தான் அவங்களுக்கு கேட்கும் பாதி கேட்காது. அது முழுமையாக போய் சேராது.

 

ஒரு இதுல சொல்லுவோமே கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதைனு அந்த மாதிரி நம்ம சொல்ற விஷயத்தை பாதி பாதியா ஒரு சுற்று அந்த காலத்தில் தான் இது ஒரு விளையாட்டாகவே பாரம்பரியத்தில் பரம்பரைல விளையாண்டு இருக்காங்க. ஒரு வார்த்தைகள் ஒரு சென்டென்ஸ் சொல்லுவாங்க அந்த சென்டென்ஸ் அப்படியே சுத்தி சுத்தி அது வேற ஒரு பொருளாக மருவி வந்துரும். அந்த மாதிரி தான் அந்த புதன் வந்து வலிமை இழந்து இருக்கு என்றால் அதனுடைய தாக்கம்  நமக்கு ரொம்ப நல்லாவே வேலை செய்யும்.

 

ஏன்னா அது புதன் நல்லா இருந்தா மட்டும்தான் ஒருத்தவங்க நல்ல கல்வியாக தேர்ந்தெடுத்து படிக்கக்கூடிய அந்த அறிவுங்கறது புதன்தான்.

புதன் வலிமை இழக்குது அப்படின்னா அவங்களுக்கு,

·         வாதம் சம்பந்தமான பிரச்சினைகள் வரும்.

·          செயார்டிகா பிரச்சனை வரும்.

·          நரம்பு இழுக்கிறது வரும்.

·         இந்த பச்சை நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்காது.

இது எல்லாமே அங்க பிரச்சனைக்குரியதாக ஆகும்.

அதே மாதிரி பச்சைக் காய்கறிகளே அவங்க எடுக்க மாட்டாங்க. அதனால கிடைக்கக்கூடிய சத்துக்கள் அவங்களுக்கு பற்றாக்குறையாக போயிடும். இப்படி பல பிரச்சனைகளை இந்த புதன் பலவீனமாக இருந்தால் அவங்க அனுபவிக்க முடியும் என்று சொல்லலாம். நன்றி.


வீடியா லிங்க் :

https://youtube.com/shorts/6ccaVu2dlKo?si=mXknJ1C6yDYdnpFq

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR