பிரசன்னம் மூலம் குலதெய்வம் பார்த்து சொல்ல முடியுமா?

 

பிரசன்னம் மூலம் குலதெய்வம் பார்த்து சொல்ல முடியுமா?

 

 - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

 - ALP ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 பிரசன்னம் மூலமாக குலதெய்வம் பார்த்து சொல்ல முடியுமா? மேம்.

 

உமாவெங்கட் மேம்:

 கண்டிப்பாக. பிரசன்னத்தின் மூலமாக குலதெய்வம் கூற முடியும் என்பது உண்மை. அவங்க ஜாதகத்துல பிறப்பு லக்னத்தில் இருந்து குலதெய்வத்தின் அமைப்பு எப்படி இருக்கு பார்க்கிறோம்.

 

இல்ல எங்களுக்கு டைரக்ட்டா பிரசன்னம் மூலம் சொல்லலாம் என்றால் பிரசன்னத்திலும் இன்றைய காலகட்டத்தில் குலதெய்வத்தினுடைய அமைப்பு எந்த மாதிரி இருக்கு. அது கிடைக்குமா கிடைக்காதா?

இவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் சிறப்பாக இருக்கும்?

சிம்ம லக்னம் :

இப்ப ஒருத்தவங்களுக்கு சிம்ம லக்னம் அட்சய லக்னமாக போகுது, இவங்க இந்த சிம்ம லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி என்று சொல்லக்கூடியது குலதெய்வத்தினுடைய அமைப்பு. இந்த ஐந்தாம் அதிபதி யாரு என்றால் சிம்ம லக்னத்திற்கு குருவாக வருவார். இந்த குரு அஷ்டமஸ்தானத்தில் போய் உட்கார்ந்து இருக்கிறார்.

 

அவரும் அஷ்டம ஸ்தானத்தில் உட்கார்ந்து இருக்கும்போது குரு வழிபாடு இவங்க குலதெய்வம் தெரியாது என்ற அமைப்பு இருக்குது. அப்ப குல தெய்வமே தெரியாதா என்றால் குலதெய்வம் என்பது இவர்களுக்கு தெரியக்கூடிய அமைப்பு என்பது தற்பொழுது இல்லை.

கன்னி லக்னம் :

அடுத்த லக்னம் மாறும்போது சிம்ம லக்னத்தில் இருந்து கன்னி லக்னம் மாறும்போது இந்த கன்னி லக்னத்திற்கு ஐந்தாம் பாவகம் என்று சொல்லக்கூடியது மகர ராசி. அதனுடைய அதிபதி சனி பகவான். அவர் அங்கே உட்கார்ந்து இருக்கிறார்.

அப்ப அவங்களிடம் என்ன சொல்றோம் காவல் தெய்வம் இப்ப தேடினால் கிடைக்காது. அடுத்து வரக்கூடிய  காலங்களில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும்.

ஆனால் என்னன்னா குலதெய்வ கோவிலில் சண்டை போட்டு பிரிஞ்சிருப்பாங்க. தெய்வம் தற்பொழுது அனுகூலம் உங்களுக்கு இல்லை என்று சொன்னோம். அவங்க என்ன பதில் சொன்னாங்க என்றால் ஆமா மேடம் நீங்க சொன்னது உண்மைதான் குலதெய்வ கோயிலுக்கு நாங்க போறதே கிடையாது. சண்டை போட்டு அதை மாற்றி வச்சுட்டாங்க. அதோட முழுமை எங்க இருக்குது என்று தெரியல. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நாங்க அது கிடைக்கிற வரைக்கும் நாங்க வெயிட் பண்றோம் என்று சொன்னாங்க.

 

நீங்க சொல்ற மாதிரி குலதெய்வ அமைப்பு காவல் தெய்வம் , பெண் தெய்வம் என்பது அவர்கள் கூறிய பதில். அப்ப குலதெய்வம் ஆண் தெய்வமா? பெண் தெய்வமா? அது கிடைக்கக்கூடிய காலம் என்பதையும் பிரசன்னத்தில் சொல்ல முடியுமா? கண்டிப்பாக சொல்ல முடியும். நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/goh0nNBcTLk?si=4o5fJ-AetRvOP-z4

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR