வீடு வாசல் அமைப்பும் அதன் பலன்களும்
வீடு வாசல் அமைப்பும் அதன் பலன்களும்.
- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். வீடு பெண்கள் பேர்ல
வாங்குறாங்க என்றால் அந்த பெண்களுக்கு அந்த வாசல் வந்து எந்த
அளவுக்கு அமைப்புடையதாக இருக்கு. எந்த திசை நோக்கி வச்சா அவங்களுக்கு நல்லா
இருக்கும். எந்த பக்கத்து மனை அவர்களுக்கு
சிறப்பாக இருக்கும் என்று பாத்து வாங்கணும்.
இப்ப எனக்கு கிழக்கு தான் நல்லா இருக்கும்னா நான்
கிழக்கு வாசல் வச்ச வீட்டுக்கு போனா நல்லா இருக்கும். கொஞ்சம் சிறப்பாக
மகிழ்ச்சகரமாக இருக்கும்.
நான் மேற்கு வாசல் வீட்டுக்கு போறேன் என்றால்
எனக்கு கஷ்டங்களும் துன்பங்களும் நம்மளை அறியாமலே ஏன்னா ஒரு பொருந்தாத ஒரு
நிலை. எப்படி கணவன் மனைவிக்குள்ள பொருத்தம் பார்க்குறோமோ அதே மாதிரி தான்
நம்மளுடைய ஒவ்வொரு செயல்களுக்கும் நம்ம செய்யக்கூடிய தொழிலுக்கு பொருத்தம்
பாக்கணும் நாம வாழக்கூடிய வீட்டிற்கும் பொருத்தம் பாக்கணும்.
அந்த வீட்டுக்கும் எனக்கும் உள்ள பாண்டிங் நல்லா இருந்தா
மட்டும்தான் அந்த வீட்ல நம்ம சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
நிறைய பேர் வாஸ்து பிரச்சனை வாஸ்து பிரச்சனை
சொல்லுவாங்க. வாஸ்து அங்க பிரச்சனையே இல்ல.
உங்களுக்கும் அந்த வீட்டுக்குமான பிரச்சனைகள் தான் அங்க நிறைய இருக்கும்
என்பதை புரிஞ்சுக்கணும்.
அப்ப என்னுடைய நான்காம் பாவகம் என்ன சொல்லுது. ஒரு
ஜாதகத்தில் வீடு என்றால் நான்காம் பாவகம் தான். அந்த நான்காம் பாவகத்தின் நிலை உங்களுக்கு நல்ல அமைப்புல
இருக்கு என்றால் கண்டிப்பா உங்களால அந்த வீட்டில் நல்லா சந்தோஷமாக நிம்மதியாக வாழ
முடியும்.
இல்லைங்க நான்காம்
பாவக அதிபதி 11 ல இருக்கு வச்சா ஆஹா லாபம் மகிழ்ச்சி சந்தோஷம் என்று சொல்லி
நாம போய் வாங்கிட்டோம்னா அதுதான் நமக்கு துன்பத்தை தரக்கூடிய சூழ்நிலையாகவும் அமைஞ்சிரும்.
அப்ப நாலுங்குறது பதினொன்றோடு சம்பந்தப்படவே கூடாது. அது ஒரு பேராசையை கிரியேட் பண்ணிடும். பேராசை என்ன பண்ணும் அது மேலும்
மேலும் நமக்கு பத்தலங்குற ஒரு போதும் என்ற மனம் தான் பொன் செய்யும் மருந்துன்னு
சொல்லி இருக்காங்க. நமக்கு பத்தல அப்படின்ற மாதிரி தேடல் அதிகமாகும்போது இன்னும்
இந்த வீட்டுக்கு இதெல்லாம் வாங்கி போடலாம்.
சோபா ஆல்ரெடி இருக்கும். இல்ல இத மாத்திட்டு நான் புது
சோபா வாங்கி போடறேன். இந்த ஃபேன் வேண்டாம் நான் வேற ஃபேன் மாத்துறேன். இந்த பீரோ வேண்டாம் பழசு ஆயிருச்சு நான் வேற மாத்துறேன் என்று சொல்லி அவங்க அதை நோக்கி
ஆடம்பரத்தை யோசிக்கும் போது அது அவஸ்தை கூறியதாக மாத்திடும். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/J8pf2m1UVL8?si=ezjCdvY2XPadR6si
Comments
Post a Comment