தீபம் ஏற்றும் முறையும் அதன் சிறப்பம்சமும்.


தீபம் ஏற்றும் முறையும் அதன் சிறப்பம்சமும்.

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.

 - ALP ஜோதிடர்.

 


தொகுப்பாளர்:

 

வீட்ல வந்து ஒரு விளக்கு தான் ஏத்தணும் இல்ல, ஒரு விளக்கு ஏத்தக்கூடாது துணை விளக்க ஒன்னை ஏத்தணும் அப்படின்னு சொல்லி கேக்குறாங்க. அது ஏதாவது சாஸ்திரப்படி அந்த மாதிரி ஏதாவது இருக்காங்க மேடம்?

 

உமாவெங்கட் மேடம்:

கண்டிப்பாக. இப்ப நம்ம ஒரு கல்யாணத்துக்கு போறோம். கல்யாணத்துக்கு மாலை போடுறது நிறைய பேர் பார்த்திருப்போம். எத்தனை மாலை போடுறாங்க.

                   

தொகுப்பாளர்:

 

இரண்டு மாலை போடுறாங்க.

 

உமாவெங்கட் மேம்:

துணைமாலை அப்படிங்கறது சேர்த்து தான் போடுவாங்க. சிலர் பாத்தீங்கன்னா ஒரு பிரதான விளக்கு அப்படிங்கிறது ஏத்துவாங்க. அதற்கு துணை விளக்கு அப்படிங்கிறது ஏத்துறது கிடையவே கிடையாது. நம்ம சாஸ்திரத்துல என்ன சொல்லுவாங்கன்னா ஒரு நல்லெண்ணெய் தீபம் ஒரு நெய் தீபமும் ஏத்தணும் சொல்லுவாங்க.

 

இந்த நல்லெண்ணெய் தீபம் அப்படிங்கிறது பகவானுக்கும் நெய் தீபம் அப்படிங்கிறது அம்பாளுக்கும் ஏற்றக்கூடிய ஒரு தன்மை. சிவனும் பார்வதியுமாக அந்த விளக்கு ரூபத்தில் நமக்கு பிரதிஷ்டப்படுவாங்க நம்ம ஆத்துல அப்படிங்கிறது தான் ஐதீகம்.

 

இன்னும் சில பேர் என்ன செய்வாங்கன்னா இந்த நான்கு  முக தீபம்கிறது போடுவாங்க. விளக்கு இன்னொரு துணைவிளக்கு குலதெய்வத்திற்காக ஒரு விளக்குன்னு தனியா போடுவாங்க.

 

பரணி தீபம் :

 

நம்ம கோவில்கள்ல நம்ம தீபம் போடுறோம் இப்ப  பரணி தீபம் என்பது எல்லாருக்கும் தெரியும். அன்னைக்கு தீபம் எப்படி போடுவாங்கன்னா நம்ம தினமும் ஒரு திரி அப்படிங்கிறது நம்ம கணக்காயிட்டு கோவில்ல ஏத்தணும் அப்படிங்கறது ஐதீகம் அப்படித்தான.

இப்ப கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திரத் அன்னைக்கு பரணி மகா தீபம் என்பது ஏத்துவாங்க. அதோட ஐதீகம் என்னனு உங்க எல்லாருக்குமே தெரியும். 365 திரிகளை ஒருமிச்சு போட்டு அதுல தீபம் ஏற்றுவது அப்படிங்கறது சிறப்பு. அதுதான் அதோட ஐதீகம்.

 

நம்ம தினமும் போய் கோவில்ல தீபம் போட முடியாது. ஆனா அந்த பரணி தீபம் போடுவதின் மூலமாக அந்த ஒரு நாள் அந்த விஷயத்தை செஞ்சுறலாம் அப்படிங்கிறது இன்னைக்கு எல்லாருமே செஞ்சிட்டு வராங்க. பாத்தீங்கன்னா பெரிய அகல்விளக்கு பரணி என்பது வாங்கிட்டு அதுல போய் தீபம் அந்த 365 திரியை எண்ணி கட்டி அதுக்கப்புறம் அதுல தீபத்தை கோவிலில் போய் போடுவாங்க இதோட ஐதீகம்கிறது அதுதான். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/S6oJzMQzv_4?si=KOdi7GzV1qbUe-wr

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR