நமக்கான பாதையை நாமே தெரிந்து கொள்ளலாம் ALP ஜோதிட வகுப்பு மூலம்.

 

நமக்கான பாதையை நாமே தெரிந்து கொள்ளலாம் ALP ஜோதிட வகுப்பு மூலம்.

 


எல்லாத்துக்கும் வணக்கம். என் பெயர் அவினாஷ். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர். இப்பொழுது இருக்கிறது வெளிநாட்டில். எனக்கும் ஜோசியத்துக்கும் என்ன பழக்கம் பாத்தீங்கன்னா இந்த 20 வருஷமா யாராவது பலன் பாத்து சொல்லுவாங்க அதுக்கு தட்சிணை கொடுத்துட்டு வர்றதுதான். அந்த பலன் நல்லா சொல்றாங்களா இல்ல மாத்தி சொல்றாங்களா என்றெல்லாம் எனக்கு தெரியாது. கேட்டு வருது அவ்வளவுதான்.

பிப்ரவரி 2026லிருந்து :

இப்போ இந்த பிப்ரவரி 2026லிருந்து எனக்கு ALP என்று ஒரு சிஸ்டம். அதோடு ஒரு சொந்தம் பந்தம் ஆரம்பிச்ச காலம் என்று சொல்லலாம். அதுக்கு முன்னாடி டிசம்பர் 2025-ல் தான் எனக்கு ALP என்று ஒன்று இருக்குன்னு தெரிய வந்துச்சு. ALP ஒரு சிஸ்டம் இருக்கு தெரிய வந்துச்சு. அதுக்கு முன்னாடி ALP எனக்கு தெரியல எங்க இருக்குன்னு தெரியாது. அப்படி இருக்கிற காலத்துல ஒரு மூன்று வருடமாக நான் லேட் ஆக்டர் மிஸ்டர் ராஜேஷ் சார் உடைய வீடியோ நிறைய பார்ப்பேன். மூணு வருஷமா பாத்துட்டு இருக்கேன்.

 

இந்த மூன்று வருஷத்துல அவருடைய வீடியோஸ் ஃப்ரீயா இருக்கிற டைம் எல்லாம் தேடி தேடி போய் பார்ப்பேன்.  அவர் நிறைய விஷயங்கள் பேசி இருக்காரு. புரியாத புதிர் என்று ஒரு புக் பத்தி பேசி இருக்காரு. அவரே எழுதின புக் தான். அப்புறம் நேரம் பத்தி பேசி இருக்கார் காலங்கள் பற்றி பேசி இருக்காரர் கர்மா பத்தி பேசி இருக்கார் மருத்துவம் பற்றி பேசி இருக்கார் வாழ்க்கை பத்தி பேசி இருக்கார் நிறைய விஷயங்கள் பேசிருக்கார். அதுல எனக்கு சில கேள்விகள் எல்லாம் இருக்கும். அந்த கேள்வி எல்லாம் அவருடைய இன்டர்வியூலயோ அல்லது அவருடைய வீடியோஸ் பார்க்கும்போது எனக்கு ஒரு புரிதலோ ஒரு பதிலோ கிடைக்கும் அந்த மாதிரி உணர்வு இருக்கும்.

 

பல காலமாக இருக்கிற கேள்விகள் எல்லாம் அவர் வீடியோ பார்த்து தான் எனக்கு பதில் கிடைக்கும். இன்பாக்ட் அவரும் அஸ்ட்ராலஜர் என்று சொல்வார். நிறைய இன்டர்வியூல கூட சொல்லி இருக்காரு அவர் ஜாதகம் பார்ப்பாரு என்று இப்ப பார்க்கிறதுல ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பாத்துட்டு இருந்தேன் என்ற மாதிரி சொல்லிட்டு இருந்தார்.

 

அவர் வீடியோ ஒன்னு வருது 2025 ல யூடியூப் ஃபீல்டுல அந்த வீடியோல ஒரு நாலு பேரை இன்டர்வியூ எடுத்துட்டு இருக்கார். எனக்கு ஆச்சரியம் என்னன்னா அவருடைய இன்டர்வியூ தேடி தேடி பார்க்கிறேன் இருக்கிற சமயத்தில் ஏன் இந்த வீடியோ மட்டும் கண்ணுக்கு படல அப்படின்ட்டு. ஏன்னா இந்த வீடியோ போஸ்ட் பண்ணி ரெண்டு வருஷம் ஆச்சு. நான் மூணு வருஷமா அவர ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். ரெண்டு வருஷம் முன்னாடி போஸ்ட் பண்ண வீடியோ நான் போன டிசம்பர் 2025  பாக்குறேன். அதுல  ALP பத்தி பேசுறாங்க. ALPல படிச்ச ஒரு நாலு பேர இன்டர்வியூ எடுக்கிறார். அந்த இன்டர்வியூவில்  ALP வந்து எவ்வளவு ப்ரசைஸா கணிக்க முடியுது பலன் சொல்ல முடியுது என்பது பேசுறாங்க.

 

அப்போ கூட இந்த வீடியோ பார்த்தும் போது கூட எனக்கு ஓகே நம்ம அஸ்ட்ராலஜி படிக்கணும் நான் ALP படிக்கணும் அப்படிங்கற எண்ணமோ ஆசையோ வரல. அந்த வீடியோ பார்த்தேன் பார்த்துட்டு ஓகே இப்படி ஒரு சிஸ்டம் இருக்கு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன் பேசாமல் விட்டுவிட்டேன். அதுக்கு பிறகு டிசம்பர், ஜனவரியில் எனக்கு என்னை சுத்தி வரவங்க பேசுறவங்க எல்லாரும் நீ அஸ்ட்ராலஜி படிக்கக்கூடாது, நீ அஸ்ட்ராலஜி தெரிஞ்சுக்க கூடாது அப்படிங்கிற மாதிரி அப்ரோச்சிலேயே பேசுற மாதிரி எனக்கு ஒரு உணர்வு.

 

சரி என்னை தேடி ஒரு விஷயம் வருது அப்படின்னா நான் யூஸ்வலா அதுல கொஞ்சம் ட்ரை பண்ணி என்ன இருக்குன்னு பாப்பேன். எனக்கு இந்த மாதிரி ஒரு விஷயத்தில் அனுபவம் இருக்கு. என் கூட இருக்கிறவங்க கிண்டல் அடிப்பாங்க. மாசத்துல 10 கால் வரும் கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்க , பேங்க் லோன் எடுத்துக்கோன்னு கூட வரும். என்ன லோன் கிரெடிட் கார்டு வாங்கிட்டியான்னு. எனக்கு தேடி வர்றது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாவும் இருக்கலாம். நல்லதோ கெட்டதோன்னு தெரிஞ்சுக்கறதுக்காக நான் எப்பவுமே ப்ரூஸ் அண்ட் கான்ஸ்( pros and  cons ) லைக் பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் கொண்டு அந்த விஷயத்துல பேங்க்லோனா இருந்தாலும் சரி, கிரெடிட் கார்டு இருந்தாலும் சரி, இந்த ALP விஷயத்திலும் சரி பாசிடிவ் நெகட்டிவ் கூட அந்த பாஸிட்டிவ் நெகட்டிவ் எனக்கு எவ்வளவு ஒத்துப்போகிறது என்று பார்ப்பேன். அந்த விஷயத்தை வச்சுதான் நானு அதுக்கப்புறம் ஸ்டெப்ஸ் எடுப்பேன்.

 

சோ அப்படித்தான் வந்து  ALP ஃபர்ஸ்ட் என்கொயரி பண்ணேன். அவங்க டீடெயில்ஸ் கொடுத்துட்டாங்க. அந்த டீடைல்ஸும் அப்புறம் அஸ்ட்ராலஜி படிக்கிறதோட ப்ரூஸ் அண்ட் கான்ஸ் அந்த டீடைல்ஸ் வச்சு பார்த்தேன்.  பார்க்கும்போது எனக்கு நிறைய விஷயங்கள், நிறைய பாய்ண்ட்ஸ் எழுதினேன். பட் நான் சொல்ற மூணு பாயிண்ட்ஸ் எனக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தது.

 

என்னனு பாத்தீங்கன்னா ஸெல்ஃப் ரிஃப்ளக்ஷன். நம்மளுடைய ரிஃப்ளக்ஷன் எப்படி கண்ணாடில பார்க்கிறோமோ அது மாதிரி வாழ்க்கையோட ரிஃப்ளக்ஷன் பாத்துக்கலாம் அப்படிங்கற புரிதல் வந்துச்சு. அப்போ செல்ஃப் ரெஃப்ளக்ஷன் தெரிஞ்சுச்சு அப்படின்னா நம்ம நிறைய விஷயங்கள் மாத்திக்கலாம் புரிஞ்சிக்கலாம் தெரிஞ்சுக்கலாம் என்ற புரிதல் வந்துச்சு.

 

இரண்டாவது பாயிண்ட் என்னன்னா ஒரு ஜோசியர் கிட்ட போய் பலன் கேட்கிறோம் அப்படிங்கும் போது அவர் கரெக்டா தான் சொல்றாரா என்பது ஏன்னா நிறைய பேர் கிட்ட போயி கன்பியூசன்ஸ் சொன்னது ஓகே பட் என்ன அப்படின்னு கன்ஃபியூஸ்டேட்டில் வந்தது உண்டு. சோ இவர் சொல்றத நம்பலாமா வேண்டாமா அப்படிங்கிற புரிதலுக்காக  படிச்சுக்கலாம்னு தோணுச்சு.

 

மூணாவது, ஒரு செல்ப் ரிப்ளெக்ஷன்ஸ் கிடைச்சதுக்கு அப்புறம் ஒரு செல்ப் ரியலைசேஷன் கிடைக்கும் அப்படின்னு ஒரு தோணல். இந்த மூன்று விஷயங்களுக்காக தான் ஏஎல்பி அஸ்ட்ராலஜி படிக்கலாம் என்று முடிவு பண்ணி கோர்ஸ் ஜாயின் பண்ணேன்.

 

கோர்ஸ் ஜாயின் பண்ண உடனே ஃபர்ஸ்ட் டே இந்திரோடக்சன் கிளாஸ். கிளாஸ்ல வந்து 170 பேர் இருக்காங்க. 170 பேரும் நம்ம கோச்சஸ், குரு பவுண்டர் எல்லாரும் பேசுறாங்க.

 

பேசும்போது பவுண்டர் நிறைய விஷயங்கள் பேசுறாரு நிறைய கேள்விகள் கேட்கிறாரு. அந்த கேள்விகளுக்கு பதில் சொல்றாரு. நிறைய பேர் கை தூக்குறாங்க. அந்தக் கை தூக்கும் போது அவங்களும் இந்த வீடியோல இருந்து இந்த கேள்விக்கான பதில் கொஞ்சம் விளக்கி சொல்லுங்க. இல்ல இந்த வீடியோல பார்த்தேன் அந்த பதில் எனக்கு கொஞ்சம் புரிதல் கொடுத்தது அதுக்கு நன்றி சொல்றாங்க. கேள்விகள் கேக்குறாங்க புரிதலுக்காகவும் இன்னும் விளக்கமா சொல்லுங்கன்னு கேக்குறாங்க. அப்படி பார்க்கும்போது நான் இவரை இதுக்கு முன்னாடி பார்த்ததும் இல்ல கேள்விப்பட்டதும் இல்லை. அதுதான் முதல் தடவை ஒரு அறிமுகமான இந்திரோடக்சன் கிளாஸ்ல இப்படி ஒருத்தர் இருக்காரு அப்படிங்கறது அறிமுகமாகிறேன்.

 

அப்படி ஆகும்போது எனக்கும் ஒரு கேள்வி வருது. நான் கடந்த பத்து வருஷத்துல நிறைய விஷயங்கள் எனக்கு ஒரு லேர்னிங் இருந்தது லைஃப் லேர்னிங் என்று சொல்லுவாங்கல அது கேரியர்ளையும் சரி பர்சனல் லைஃப்லையும் சரி.  அந்த லேர்னிங்ஸ்ல இருந்து பொதுவான கேள்வியை நான் வைக்கிறேன். அதுக்கு அவர் ஒரே ஒரு பதில் சொல்றார். நீங்க ஜாயின் பண்ணிட்டீங்களா ஒரு 15 நாள் டைம் கொடுங்க. உங்களுக்கு புரிதல் கிடைக்கும். அது ஏன் நடந்துச்சு ஏன் நடக்காம போச்சு அப்படிங்கிற புரிதல் கிடைக்கும் அப்படின்னாரு. அவர் பெயர்தான் டாக்டர் பொதுவுடைமூர்த்தி ஐயா.

 

அவருக்கு பல வருஷங்கள் ரிசர்ச்ல இருந்திருக்கார். இந்த அஸ்ட்ராலஜி கர்மா அப்படிங்கிறது பல வருஷம் ரிசர்ச் ல இருந்து அதுக்கப்புறம் இது ஒரு சிஸ்டம் ஆக்கி, இது எல்லாருக்கும் போய் சேரனும் அப்படின்னு ALP அப்படின்னு ஆரம்பிச்சு கொடுத்திருக்கிறார். அதுல நானும் ஜாயின் பண்ணி கிளாஸ் போயிட்டு இருக்கு. இன்ட்ரொடக்சன் கிளாஸ் முடிஞ்சவுடனே ஃபர்ஸ்ட் கிளாஸ் பஞ்சாங்கம். இது ஒரு திங்கட்கிழமை கிளாஸ் நடக்குது. பஞ்சாங்கத்தில் நிறைய டாபிக்ஸ் போகுது. திதி வாரம் இதுல வாரம் என்று சொல்லும்போது ஏழு நாள் பத்தி எடுக்குறாங்க. ஏழு நாள்ல வெள்ளிக்கிழமை பொதுவா ஒன்னு சொல்றாங்க.

 

அதுல என்ன சொல்றாங்கன்னா ஆண்கள் வெள்ளிக்கிழமை ஹேர் கட் பண்றது சேவ் பண்றது நல்லது. சுத்த பத்தமா இருந்தால் செல்வம் பெருகும். அதாவது சுக்கிர பகவான் அருள்வார் அப்படின்னு சொல்றாங்க. எனக்கு அது ஏதோ ஒரு விஷயங்கள் உணர்த்தது என்னன்னு பார்த்தீங்கன்னா எங்க வீட்ல வெள்ளிக்கிழமை சேவ் பண்ண கூடாது ஹேர் கட் பண்ண கூடாது சொல்வாங்க பொதுவா.

 

எனக்கு சில தெரிஞ்சவங்க வீடு எல்லாம் வெள்ளிக்கிழமை குப்பையை கூட தூக்கி போட மாட்டாங்க. அப்படி இருக்கும்போது இவங்க இப்படி சொல்றாங்களே இதுவ ஆண்களுக்கு மட்டும் தான் சொல்றாங்க. பெண்களுக்கு கிடையாது. ஆண்களுக்கு மட்டும்.

 

சேவ் பண்ணலாம் ஹேர் கட் பண்ணலாம் சுத்த பத்தமாக இருந்தால் சுக்கிர பகவானுடைய அருள் கிடைக்கும் சொல்றாங்க. எனக்கு இரண்டு நாள் திங்கட்கிழமை கிளாஸ் அட்டென்ட் பண்ணேன். திங்கள் செவ்வாய் புதன் மூணு நாள் இது மனசுல ஓடிக்கிட்டே இருக்கு ஒரு ஓரமா. அதுக்கப்புறம் புதன்கிழமை ஒரு முடிவு பண்றேன் இந்த வெள்ளிக்கிழமை நாம ட்ரை பண்ணுவோம். ஒரு நாள் மட்டும் ட்ரை பண்ணுவோம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம் அப்படின்னு.

 

நான் ஒரு ரெண்டு வாரம் ட்ரை பண்ணிட்டேன் மூணாவது புதன்கிழமையும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமை வரதுக்கு முன்னாடி எனக்கு வரவேண்டிய பணம் எல்லாம் வருது. பாஸ்டியர்ஸ்க்கு முன்னாடி சில பேருக்கு கொடுத்த பணம் எனக்கு திருப்பி கேட்கலாமா வேண்டாமா அப்படிங்கிற சிட்டுவேஷன். எனக்கு ஒரு சிட்டேஷன் சரி நம்ம கொடுத்த பணம் தானே கேட்கலாம்  நினைப்பேன். இருந்தாலும் இது கேட்டு ஒரு சிட்டுவேஷன் உருவாக்க வேண்டாம் புதுசா அப்படின்னு சொல்லி விட்டுருவேன். அப்படி போயிட்டு இருந்ததுல நான் கேட்காமலேயே பணம் வந்துடுச்சு எனக்கு அது ஒரு ஆச்சரியம் கொடுத்தது. அப்புறம் அந்த வெள்ளிக்கிழமை போகுது அந்த வெள்ளிக்கிழமை அதே மாதிரி நான் ஃபாலோ பண்றேன்.

 

அப்புறம் அடுத்த வாரம் என்ன நடக்குதுன்னா எனக்கு கிரெடிட் கார்டுல லிமிட் இன்க்ரீஸ் பண்ணி கேட்டேன். நான் கேட்டு ரெண்டு வருஷம் ஆச்சு. திடீர்னு அவங்களே இன்க்ரீஸ் பண்ணி ஒரு மெயில் வந்தது. எனக்கு ஒரு ஆச்சரியம் இது என்னடா அப்படின்னு அப்போ இன்னும் இன்ட்ரஸ்ட் ஜாஸ்தி ஆகுது. அதுக்குள்ள நடுவுல கிளாஸ்ல போயிட்டு இருக்கு. கிரகங்கள் பத்தி போச்சு. அதோட பிஹேவியர்ஸ் எப்படி இருக்கும். அப்புறம் ஹவுசஸ் பத்தி எல்லாம் போகுது. புதனுக்கு இரண்டு வீடு சுக்கிரனுக்கு இரண்டு வீடு செவ்வாய்க்கு ரெண்டு வீடு குருக்கு இரண்டு வீடு அந்த மாதிரி எல்லாம் போகுது அப்புறம் தனி தனி வீடு சனி பகவான் ரெண்டு வீடு சந்திர பகவானுக்கு ஒரு வீடு சூரிய பகவானுக்கு ஒரு வீடு இப்படி எல்லாம் கிளாசஸ் போகுது. அதோட பிஹேவியர் அதோட குட் அண்ட் பேட் சூரிய பகவானோட நல்ல செயல் என்ன கெட்ட செயல் என்ன ஒரு மனிதருக்கு ஜாதகத்துல உட்கார்ந்தா எப்படி அப்படிங்கற மாதிரி பொதுவா பேசிக்கா எடுக்குறாங்க. இந்த மாதிரி போய்க்கிட்டு இருக்கு. பேசிக்கெல்லாம் முடிஞ்ச உடனே ஒரு ரெண்டு செஷன் நடுவுல ஒன்னு வருது.

அது என்ன பார்த்தீங்கன்னா கர்மா பத்தி சொல்றாங்க. நம்ம நிறைய விஷயங்கள் செய்கிறோம் வாழ்க்கைல அது நல்லது செஞ்சா நல்ல கர்மா கெட்டது செஞ்சா கெட்ட கர்மா. பட் அது நம்ம தெரியாமலே சில விஷயம் செஞ்சிகிட்டு இருக்கோம். அது நமக்கே தெரியாம அது கெட்ட கர்மாவா மாறிக்கிட்டு இருக்கு மாறுவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கு. அதனால அது எப்படி ஜஸ்ட் சும்மா கர்மா பத்தி எடுக்குறாங்க. அதுல சில கதைகள் சொல்றாங்க. இந்த கதைகள் நிறைய பேருக்கு தெரிஞ்சி இருக்கலாம் தெரியாம இருக்கலாம். பட் இவங்க சொல்லும்போது என்ன ஆகுது அப்படின்னா அது கரெக்ட் பண்ண முடியுது.

 

தெரிஞ்ச கதையாவே இருந்தாலும் அது வாழ்க்கையோட நம்ம எங்க என்ன பண்ணிட்டு இருந்தோம்னு கரெக்ட் பண்ண முடியுது. அந்த கதையோட உள் அர்த்தம் புரிதல் வந்து அழகா எடுத்துக் கொடுக்கிறார்கள். அந்த கர்மா அப்படிங்கிற ஒரு டூ டே செஷன் நடந்தது. அப்போ எப்படி குடும்பத்துக்குள்ள இப்படி இந்த கர்மா ரியாக்ட் ஆகுது. குடும்பத்துக்கு வெளியில எப்படி ரியாக்ட் ஆகுது. யார் மூலமாக கர்மா வருது சொல்றாங்க. அதுக்கு நாம என்ன பண்ணனும் எங்க நாம கரெக்டா நடந்துக்கணும் எங்கெல்லாம் கரெக்டா நடந்துக்கிட்டோம்னா அந்த கர்மா இன்னும் கெட்ட கர்மா சேர்த்துக்காம எப்படி அதிலிருந்து வெளியில வரது. அந்த கர்ம பேட்டன் இருந்து வெளிய வருது அப்படிங்கறது சொல்லி கொடுத்தாங்க.

 

எனக்கு அது ரொம்ப புடிச்ச செஷன்னா கர்மா செஷன். இந்த ஹோல் கோர்ஸ் பிடிச்சிருந்தது கர்மா செஷன் அந்த ரெண்டு கிளாஸ் என்னோட ஃபேவரைட் சொல்லலாம். அதுக்கப்புறம்

 

ஹியூமன் பிஹேவியர் நம்ம எல்லாருமே கோபப்படுவோம். இந்த உலகத்துல கோவப்படாத மனிதரே கிடையாது சொல்லலாம். என்னை பொறுத்த வரைக்கும்.

பட் அந்த கோபம் வீட்டுக்குள்ள எங்க படணும் படக்கூடாது. அதே மாதிரி வெளியே எங்க படணும் படக்கூடாது அப்படிங்கறதுக்கு விளக்கம் அவ்வளவு தெளிவாக இருந்தது. அங்க அதனால கோபத்தை கண்ட்ரோல் பண்றதுனால வாழ்க்கையோட மாற்றங்கள் என்னென்ன நடக்கும் என்பது கிளாஸ்ல ஒரே ஒரு ஸ்டேஷன்தான் நடந்தது. அது அவ்வளவு ஒரு புரிதலோடு நடந்தது.

 

எனக்கு மட்டும் இல்ல கிளாஸ்ல இருந்த 170 பேருக்கும் அந்த புரிதல் கிடைச்சது. நிறைய பேர் எமோஷனலா இருந்தாங்க கிளாஸ்ல. நம்ம தெரியாம இவ்ளோ கோவப்பட்டு இருக்கோம். இந்த கோபத்தினால் இவ்வளவு இழந்து இருக்கோம் அப்படிங்கிற புரிதல் வந்துச்சு. சில பேர் கை தூக்கி சொன்னாங்க இதுக்கு அப்புறம் நான் இப்படி நடந்துக்க மாட்டேன்னு சொன்னாங்க. சில பேர் நான் மாத்திக்கிறேன் சொன்னாங்க. சில பேர் நான் மாத்திட்டேன்னு சொன்னாங்க. அந்த மாதிரி நிறைய பேருக்கு புரிதல் கிடைச்சது. எனக்கும் கிடைத்தது. சில விஷயங்கள் நானும் மாத்திட்டேன். அந்த மாதிரி இட்ஸ் நாட் ஒன்லி அபௌட் ஹாரோஸ்கோப் பர்த் சார்ட்டை எடுத்து நம்ம வச்சு கத்துக்க போறோம் அப்படிங்கறது மட்டும் கிடையாது. இதுல என்ன சொல்ல வராங்கன்னா ஹார்ஸ்கோப் ஒரு சப்ஜெக்ட் படிக்கிற மாதிரி பாக்காம ஒரு வாழ்க்கையோட பைன்டட். இது எல்லாத்தோட பைன்டடான ஒரு விஷயம்  வாழ்க்கைக்கான ஒரு விஷயங்கள் அப்படிங்கறது அவங்க சொல்றாங்க. அது உணர்த்தவும் செய்றாங்க.

 

இன்னொன்னு என்னன்னா இதுல முக்கியமான விஷயம் இவங்க பலனே நம்ம தான். இப்போ எனக்கு ஒரு விஷயம் நடக்குதுன்னா அது பலனும் நான்தான். கோயிலுக்கு போய் அது செய்றது செய்றதெல்லாம் கிடையாது. என்ன நான் மாத்திக்கிட்டாலே என்ன சுத்தி இருக்கிறது மாறும். பஸ்ட் உனக்குள்ள இருக்கிறத மாத்திக்கிட்டா உன்னை சுத்தி இருக்கிறது மாறும் சொல்லுவாங்க இல்லையா அது எப்படி பண்றது அது நிறைய பேர் சின்ன வயசுல இருந்து சொல்லுவாங்க எண்ணம் போல் வாழ்க்கை உனக்குள்ள இருக்கிறதை மாத்து உன்னை சுத்தி இருக்கிறது மாறும் சொல்லுவாங்க. ஆனா இந்த கிளாஸ் வந்து உனக்குள்ள இருக்கிறது எப்படி மாத்தறது  சொல்லுவாங்க. அது எப்படி மாத்தறதுக்கான வழியை காட்டுவாங்க உணர்த்துவாங்க. அதுக்கு கதைகள் மூலமாகவும் ஒரு அட்வைஸ் மூலமாகவும் இல்ல கேள்வி பதில் மூலமாகவும் சொல்வாங்க. அது இந்த கிளாஸ் இந்த பேசிக் கோர்ஸ் நல்லா அவுட் கம் எனக்கு கொடுத்தது.

 

இது கர்மா செசன் முடிஞ்சது. ஹியூமன் பிஹேவியர் செசன் முடிஞ்சது. அதுக்கு முன்னாடி பஞ்சாங்கம் அப்புறம் பேசிக் சார்ட் எப்படி பார்க்கிறது கிரகங்களுடைய பிஹேவியர் அதோட பாசிட்டிவ் நெகட்டிவ் அதெல்லாம் சொல்லி முடிச்சாச்சு இப்போ பலன் எடுக்கற கிளாஸ் வந்துட்டாங்க.

 

நம்ம இருட்டுல இருக்கோம் வழி இல்லையே அப்படின்னா ALP ஒரு டார்ச் லைட் மாதிரி வச்சுக்கோங்க. இந்த டார்ச் லைட் வச்சு நம்ம வீ கேன் கோ சம் வேர் நியர் பை ஏதாவது ஒரு சிட்டிக்கோ வில்லேஜ்கோ போகலாம். அப்புறம் அங்க இருந்து என்ன பண்ணலாம் என்பதற்கு ஒரு ஐடியா. சோ இந்த  ALP எல்லாரும் படிக்கலாம் எல்லாரும் பலனடையலாம்.

 

யார் படிக்கலாம் இவங்க படிக்கலாம் அவங்க படிக்கலாம் அப்படி எல்லாம் இல்ல. படிக்கலாம் படிச்சு எல்லாரும் மேம்படலாம். நான் இப்போ பலன் எடுத்துகிட்டு இருக்கேன். நான் எனக்கு மட்டும் பலன் எடுக்குறது இல்ல. எங்க அப்பா அம்மாக்கு எனக்கு தெரிஞ்சவங்களுக்கு என்னோட பிரண்ட்ஸ்க்கு இந்த மாதிரி பலம் எடுக்கிறேன். இப்ப வரைக்கும் எடுத்தவங்க எல்லாருமே சொன்ன ஃபீட்பேக் என்னனா எங்க அப்பா அம்மா ஓட ஃபீட்பேக் மட்டும் விட்றலாம். என் ஃபிரண்ட்ஸ் சொன்னது எல்லாமே என்னன்னா ப்ரீசைசா இருக்கு கரெக்டா சொல்ற. அதாவது கரெக்டா சொல்ற அப்படின்னா இட்ஸ் நாட் லைக் நான் சொல்றதில்ல இந்த ஏஎல்பி ல இருந்து கத்துக்கிட்டு அதுல இருக்கிற ரூல்ஸ் வச்சி பலன் சொன்னதுனால ப்ரீசைஸா இருக்கு.

 

சோ ALP காட்டுன வழியில பொதுவுடைமூர்த்தி சார் கொடுத்த வழியில இதை என்னால கரெக்டா எடுக்க முடியுது. அது ப்ரிஸைசா அவங்களுக்கு இருக்கு. என் பிரெண்ட்ஸ் நிறைய ஃபீட்பேக் கொடுத்தாங்க. இப்போ டெய்லி ஏதாவது ஒரு கேள்வி வந்து கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. சோ இது எனக்கு ஒரு ப்ராக்டிஸ் மாதிரி போயிட்டு இருக்கு.

 

பலன் எடுக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எனக்கு நிறைய தெளிவு கிடைச்சது. என் வாழ்க்கைக்கு தெளிவு கிடைக்குது. மத்தவங்க வாழ்க்கையோட பிரச்சனை வந்து எனக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ். சோ அது ஒரு மாதிரி புரிதல் கிடைக்குது. இந்த மாதிரி நிறைய விஷயங்கள் வாழ்க்கையோட வாழ்வோடு சேர்ந்து வருது. எல்லாரும் கத்துக்க பாருங்க. டைம் கிடைக்கும் போது ஒரு ஃப்ரீ டைம் இருக்கும்போது டெய்லி பிராக்டிஸ் பண்ணுங்க.

இது ஒரு நல்ல ஒரு ஆப்பர்சூனிட்டி. நல்ல ஒரு வாழ்க்கை புரிதலுக்கான செல்ஃப் ரியலைசேஷனுக்காக செல்ஃப் பெர்ஷப்ஷனுக்காக உங்களுக்கு ஒரு புரிதலுக்காக பண்ணலாம். இது எனக்கு ஒரு பெரிய வரம் இல்ல பாக்கியம். ALP ஓட பந்தம் சொந்தம் அந்த மாதிரி அமைஞ்ச மாதிரி யுனிவர்ஸ் எனக்கு கொடுத்த ஒரு பிளஸ்ஸிங் அப்படின்னு நான் எடுத்துக்கிறேன்.

 

எல்லா குருமார்களுக்கும் நன்றி. எல்லா கோச்சுகளுக்கும் நன்றி. சொல்லிக் கொடுத்தவங்களுக்கும் நன்றி. இதுல நிறைய கேள்வி கேட்டாங்க என்னுடைய சக மாணவர்கள் 170 பேர் இருந்தாங்க. நிறைய கேள்வி கேட்டாங்க. அந்த கேள்வில எனக்கு புரிதல் கிடைச்சது. அவங்களுக்கு நன்றி. அப்புறம் ராஜேஷ் சார் அவர் இப்ப இல்ல. பட் இருந்தாலும் அவருடைய இன்டர்வியூ பார்த்ததுக்கு அப்புறம் ஜாயின் பண்ணேன். அவருக்கும் நன்றி.

இதுக்கு எல்லாத்துக்குமே வழிகாட்டி ஆரம்பித்து வைத்த பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கு நன்றி. ALPக்கும் நன்றி.


வீடியோ லிங்க்:

https://www.facebook.com/share/v/17YSFroAnH/

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR