தீராத நோய்களும் திசை தெரியாமல் போகும்

 தீராத நோய்களும் திசை தெரியாமல் போகும்.

 


- ஸ்ரீ குரு  சாந்தகுமார்.

 - ALP ஜோதிடர்.

 

அனைவருக்கும் வணக்கம். நான் சாந்தகுமார், ALP அஸ்ட்ராலஜர். அதுபோக நான் ஒரு நியூட்ரிஷியனிஸ்ட் கூட. ஒரு 20 வருஷமா நியூட்ரிஷியன் ப்ராக்டிஸ் இருக்கு. அந்த அனுபவத்தையும் ஜோதிடத்தையும் கலந்து இன்னைக்கு ஒரு ஆய்வு ஜாதகம் பார்க்க போகிறோம்.

இந்த ஜாதகருக்கு தலை சுத்தல் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு அவர் எல்லா மெடிக்கல் டெஸ்ட்டும் எடுத்துட்டாரு. ஆனா அவருக்கு எந்த பலனும் கிடைக்கல. எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க டாக்டர். ஆனா பிரச்சனை இங்க தான் இருக்குன்னு ஐடென்டிஃபை பண்ணவும் இல்ல. அது மாதிரி ஒரு குழப்பம் மனநிலையில ஒரு பய உணர்வோட என்கிட்ட வந்து சேர்ந்தார்.

எனக்கு பயமா இருக்கு தல சுத்தி எங்கேயாவது விழுந்துருவானா எனக்கு ஏதாவது ஆபத்து வந்துருமோ அப்படின்றதுதான் அவருடைய கேள்வியா இருந்தது. ஏதாவது ஆக்ஸிடெண்ட் ஆயிட கூடாது வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தல சுத்தல் வந்தா ஆக்சிடென்ட் ஆயிடும் அப்படிங்கறத பயம் அவர்கிட்ட இருக்குது அப்படிங்கறது என்கிட்ட பகிர்ந்துகிட்டார்.

அவருக்கு  ALP முறையில் துல்லியம்மா அவருக்கு என்ன நடந்தது அப்படிங்கறத அவர்கிட்ட என்ன சொன்னேன் என்பதை உங்க கூட பகிர்ந்துக்கிறேன்.

ALP  கன்னி லக்னம்:

அவருக்கு ஜென்ம லக்னம் ரிஷபம். இந்த ரிஷப லக்னத்திலிருந்து 40 வயதை கடந்தவர். அவருடைய ஏஎல்பி எங்க இருக்கு இப்போ கன்னியில் வந்திருச்சு. இந்த கன்னியை லக்னமாக வைக்கும் போது அதை தான் ALP லக்னம் அப்படின்னு சொல்றோம். இது லக்னம்னு எடுத்துக்கிறோம். இதை வச்சு எப்படி பலன் பார்க்கிறோம் அப்படின்னு பாத்தீங்கன்னா, இவருக்கு பாத்தீங்கன்னா முதல் விஷயம் இவருக்கு ஹஸ்தம் ஒன்றாம் பாதம் போய்கிட்டு இருக்கு.

இந்த ஹஸ்தம் ஒன்றாம் பாதம் சந்திரனை குறிக்கிறது. சந்திரன் ஆறில் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். சோ அவருக்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கு அப்படிங்கறது காட்டுது. எது சம்பந்தமான விஷயம்னு பாத்தீங்கன்னா அந்த வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல பிரச்சனை இருக்கு அப்படிங்கிறத காட்டுது.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தலை சுத்தல் வருமா?

அப்படின்னு கேட்டா எஸ் வர முடியும். வயிற்றில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட அளவு பாக்டீரியா கிடைக்கலைன்னா அதனாலயும் தலை சுத்தல் வரும். அது வந்து உங்களுக்கு பிரைன் ஃபங்ஷன் இங்கே அஃபெக்ட் பண்ற அளவுக்கு ஒரு வாய்ப்பு வயித்துல இருக்கு அப்படிங்கறத அவர்கிட்ட சொன்னேன்.

இரண்டாவது விஷயம் பாருங்க தலை அப்படின்னா லக்னம் ரிஷப லக்னம் காலியாருக்கு ப்ரீயா இருக்கு. அங்க எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த ALP லக்னத்தில் (கன்னியில்) பாருங்க யாரு இருக்காங்க. செவ்வாய்னு ஒருத்தர் இருக்காரு சனின்னு ஒருத்தர் இருக்காரு.

செவ்வாயினுடைய காரகத்துவம் பார்த்தீங்கன்னா சூடு, வேகம் அப்படின்னு சொல்லலாம். இன்னொரு பக்கம் சனி பகவான் அப்படின்னா குளிர்ச்சி நிதானம். இது ரெண்டுக்கும் நடுவுல இருக்குற போராட்டம். ஒரு தலைக்கு போற ரத்தத்தினுடைய அளவு ஒரு நேரம் வேகமாகவும் ஒரு நேரம் மிகவும் ஸ்லோவாகவும் மாறி மாறி நிகழும் போது நடக்கிற ஒரு நிகழ்வுக்கு தான் அவருக்கு பிரச்சனை வருது அப்படிங்கறத குறிப்பிட்டு சொல்ல முடியும்.

ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதி :

ஆறாம் அதிபதி சனி லக்னத்தில் எட்டாம் அதிபதி செவ்வாய் லக்னத்தில். இவங்க ரெண்டு பேருக்கும் நடக்கிற போராட்டம் அவர் மண்டைக்குள்ள இருக்கு. அப்போ அவருடைய இரத்த ஓட்டம் அப்படிங்கிறது எப்படி பார்க்கிறது? தலைக்கு ரத்தம் போகிற வேகம் வேகமாகவும் ரொம்ப ஸ்லோவாவும் நடக்குதுனா அது கழுத்து சம்பந்தப்பட்ட விஷயம்னு சொல்லுவோம்.

அதற்கு லக்னத்துனுடைய அதிபதி புதன் மூன்றில் இருக்கிறார். மூன்றிலிருந்து கிட்டு அவருக்கு இந்த பிரச்சனைகளை ரத்த ஓட்டம் சீர் இல்லாமல் நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல பாதிப்பு அப்படின்னு இவருக்கு காட்டுச்சு. இந்த பாதிப்புடைய விளைவுகள் அவருக்கு தலைக்குள்ள தலை சுற்றலாக ஒரு நிதானம் இல்லை அப்படிங்கிற பிரச்சனை வருது. அப்போ இது என்ன பாக்கணும் அப்படின்னு பார்த்தீங்கன்னா இவருடைய காது போய் செக் பண்ண சொன்னேன். காதுக்குள்ள இயர் டிரம்முன்னு இருக்கு.

இதுதான் நேரா நிக்க வைக்கிறதுக்கான ஒரு விஷயம். ஒரு குடிமகன் சோம பானத்தை குடிச்சாச்சுனா அவருக்கு என்ன டிஸ்டர்ப் ஆகும்னா இந்த இயர் ட்ரம்ல தான் முதல்ல நிதானம் இழக்கும். அதுதான் தலைசுற்றல் ஓட ஆரம்ப புள்ளி.

நம்ம உடல் இயக்கம் எப்படி அழகா  ALPல அழகா ரிப்லேக்ட் ஆகுதுங்கறது காட்டுறதுக்கு தான் இவ்வளவு விஷயமும் உங்களுக்கு காட்டுறேன். இப்போ இங்க இருக்கிற விஷயம் லக்னத்தை பாதிக்கும். லக்கனாதிபதி இப்படி இருக்கிறது எட்டாம் இடத்துக்கு (மேஷத்திற்கு) எட்டாம் இடமா (விருச்சிகம்) மூன்றாம் இடத்தில் புதன் உட்கார்ந்திருந்து அவருக்கு பய உணர்வை உருவாக்குது. மாரகத்திற்கு ஒப்பான அப்படின்னு சொல்றது.

இவருக்கு மாரகமெல்லாம் நிகழல. ஆயுள் பலம் நல்லா இருக்கு. ஆனாலும் அந்த மாதிரி இடத்துல லக்னம் போய் உட்கார்ந்தது அவருக்கு உயிர் பயத்தை உருவாக்குச்சி அப்படிங்கறத இங்க பார்க்க முடியுது. ஆனால் எல்லாமே நல்லா இருக்கு. இவர் இதை விட்டு அழகா வெளியே வர முடியும். இவருக்கு ரொம்ப சிம்பிளான சில நியூட்ரிஷியன் சம்பந்தமான விஷயங்கள் பரிகாரமா சொன்னேன்.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு வயிற்றில் இருக்கிற பாக்டீரியா போதுமான அளவு நல்ல பாக்டீரியா கிடைக்காதனால இவருக்கு இந்த பிரச்சினைனு சொல்லணும்.

இவர் ட்ரீட்மென்ட் எடுக்குறேன் ட்ரீட்மென்ட் எடுக்கிறேன்னு சொல்லி அந்த ட்ரீட்மென்ட் எடுத்த மருந்து மாத்திரைகளுடைய விளைவுகள் கெட்ட பாக்டீரியாவை அழிக்கிறதுக்கு பதிலா நல்ல பாக்டீரியாவையும்  சேர்த்தே அழிக்கும். எப்பவுமே வயிறை சுத்தம் பண்ணா அப்படித்தான் ட்ரீட்மென்ட் நடக்கும். அதாவது நல்ல பேட்டரியா கிடைக்காம போனதுனால வர்ற விளைவுகள்னு சொல்லணும்.

அதுக்காக யோகட்டுன்னு சொல்லுவாங்க. ப்ரோ பயோடிக்ஸ்ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி விஷயங்கல ஒரு வாரத்திற்கு சாப்பிட சொல்லி இருக்கேன். இரண்டாவது விஷயம் காது க்ளியர் பண்ண சொல்லி இருக்கேன். காது டாக்டர்கிட்ட இஎன்டி கிட்ட போயி செக் பண்ண சொல்லி இருக்கேன்.

மூன்றாம் விஷயம் :

அவருக்கு கழுத்து நரம்புகள் ரத்த ஓட்டம் தலைக்கு போனும்னா ஸ்பாண்டலைடிஸ் அப்படின்னு சொல்லுவாங்க. கழுத்து எலும்பு தேய்மானம் இருந்தாலும் இந்த பிரச்சனை வரும் அதற்கு பிசியோதெரபி பண்ண சொன்னேன்.

இதெல்லாம் சிம்பிளான விஷயம். அவர் பல லட்சங்கள் செலவு பண்ணிட்டு பயந்து போய் உட்கார்ந்து இருக்காரு. டாக்டர் என்னென்ன கண்டுபிடிக்கவே இல்ல. ஆனா ஒரு ALP ஜாதகம் எடுத்தா ஒரு நோய் என்னதுன்னு அழகா கண்டுபிடிச்சு அதற்கான எளிய முறையில் உள்ள வழிமுறைகளை அழகா கைடு பண்ணி குடுத்தாச்சு. இவ்வளவு அழகா இவ்வளவு துல்லியமா இவ்வளவு ரசிச்சு ருசித்து பார்க்கிற மாதிரியான ஒரு விஷயமா ஒவ்வொரு ஜாதகமும் நமக்கு பாக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு.

இங்க இந்த மாதிரி விஷயங்கள் ஈஸியா கத்துக்கிட்டோம்னா நம்ம வாழ்க்கையில நமக்கு என்ன நடக்குதுன்னு பார்த்து நம்ம தெளிவா ஒரு முடிவுகளும் அதற்கான வழிமுறைகளும் காட்டும் போது அதுக்கடுத்து என்ன பண்ணும் என்றது நம்ம வழிகளை பார்த்துக்க முடியும் அப்படிங்கறது தான் ஏஎல்பினுடைய சிறப்பு.

இதை உருவாக்கி கொடுத்து நம்மை வழிநடத்தி இதுதான் இது இப்படித்தான் சொல்லிக் கொடுத்து சிம்பிளா யாருக்குனாலும் புரிஞ்சுக்கலாம் அப்படிங்கற முறைக்கு கொண்டு வந்து கொடுத்திருக்காங்க. நம்ம பொதுவுடைமூர்த்தி ஐயா அவருக்கு மிகப்பெரிய நன்றி. நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtu.be/i1T9q6cr0F8?si=ssmwEjowvga0pQbb

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR