உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் இங்க தங்க வையுங்க – அட்சய வாஸ்து

 உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் இங்க தங்க வையுங்கஅட்சய வாஸ்து

 


 

  - ஸ்ரீ குரு டாக்டர் சத்திய நாராயணன்.

  -   ALP ஜோதிடர்.

 

அனைவருக்கும் வணக்கம். நண்பர் வந்து கேள்வி கேட்டு இருக்காங்க. என்னன்னு பார்த்தீங்கன்னா வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வராங்க. அந்த கெஸ்ட்டை வந்து எந்த பகுதியில் தங்க வைக்கலாம். இல்ல சார் நான் வீடு கட்ட போறேன் சார் கெஸ்ட் ரூம்னு எங்க சார் நான் ப்ரொவைட் பண்றது அப்படிங்கிற ஒரு கேள்வி வந்திருக்கு.

சாதாரணமா வீடு கட்ட போறாங்க இல்ல புதுசா ஒரு வீட்டுக்கு போறீங்க. அந்த வீட்டில ட்ரிபிள் பெட் ரூம் இருக்குன்னு வச்சுக்கோங்களேன். எந்த இடத்தில கெஸ்ட் ரூம் ப்ரொவைட் பண்றது அப்படின்ற ஒரு விஷயம் வந்து முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கக்கூடிய தன்மை.

இப்போ உதாரணமாக இப்ப நீங்க இருக்கக்கூடிய பகுதி வந்து பாத்தீங்கன்னா தென்மேற்கு மூலையில் நீங்கதான் தங்குவீங்க. அதுதான் மாஸ்டர் பெட்ரூம்னு சொல்வோம். தென்மேற்கு மூலைனு சொல்லப்படுகின்ற நிகழ்வு மாஸ்டர் பெட்ரூம்னு சொல்வோம்.

வடமேற்கு :

ஒரு கெஸ்ட் வரப்போறாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா வடமேற்கு மூலையில் தான் தங்க வைக்க வேண்டும். அதாவது வாயு மூலைன்னு சொல்லப்படுகிற அந்த பகுதில நீங்க தங்க வச்சீங்க அப்படின்னு சொன்னா அந்த கெஸ்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா சுமூகமாக நீங்க வந்து போறதுக்கு உண்டான தன்மையை கொடுக்குமா கொடுக்கும்.

 

என்ன நிகழ்வுன்னு பார்த்தீங்கன்னா இப்ப அதே கெஸ்ட் வந்து நான் தென்மேற்கு மூலையில் நான் வந்து தங்க வைக்கிறீங்க அப்படின்னு சொன்னா, அந்த கெஸ்ட் வந்து பெர்மனெண்டாக அங்கே இருப்பார். அவர் ரெண்டு நாள் வேலை ஒரு வேலை  மதுரையிலிருந்து சென்னைக்கு வர்றார்ன்னு வச்சுக்குவோம். ரெண்டு நாள் முடிய வேண்டிய வேலை வந்து பார்த்தீங்கன்னா இலாங்கேட் ஆகும்.

அதாவது பார்த்தீங்கன்னா ரெண்டு நாள்ல முடியாது அங்கேயே நீண்ட நாட்கள் தங்க வேண்டிய ஒரு தன்மை கொடுக்குமா கொடுக்கும். இதே வந்து பாத்தீங்கன்னா நீங்க வடமேற்கு மூலைனு சொல்லப்படுகின்ற வாயு மூலைன்னு சொல்லுவாங்க அந்த வாயு மூலையில் தங்க வச்சீங்க அப்படின்னா அவர் சீக்கிரமா அந்த வேலையை முடிச்சிட்டு போறதுக்கான தன்மை இருக்குமா? இருக்கும்னு சொல்லலாம்.

அதே மாதிரி நீங்க கெஸ்ட் பெட்ரூம் ஒன்னு போடுறிங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா எந்த இடத்தில போடுவீங்கன்னா கண்டிப்பாக வடமேற்கு மூலையில் தான் கெஸ்ட் பெட்ரூம் அப்படின்ற விஷயமே போடணும் அப்படின்ற ஒரு நிகழ்வு இருக்கா இருக்கு.

அதனால இந்த விஷயங்கள் வந்து நீங்க அதே மாதிரி கெஸ்ட் வராங்க அப்படிங்கும் போது அந்த கெஸ்ட் எப்படிப்பட்டவர்கள் தெரியாது நாம ஏற்கனவே சொல்லி இருக்கோம் யாராவது வீட்டுக்குள்ள வராங்க அப்படின்னு சொன்னாலே கிழக்கு பக்கமாக பார்த்து நீங்க கண்ணாடி வைங்கன்னு சொல்லி இருக்கோம்.

அந்த கண்ணாடி படும்போது பார்த்தீங்கன்னா அவங்களுடைய போட்டி, பொறாமைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்னடா இது இவங்க நல்லா இருக்காங்க அப்படின்னு மனசுல நினைச்சா கூட அந்த திருஷ்டி தோஷங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நமக்கு தாக்கத்தை கொடுக்குமா? கொடுக்கும்.

அதனாலதான் அந்த கண்ணாடி ரிப்லெக்ட் பண்ணிடும். அதே மாதிரி கண்ணாடி நீங்க என்ன பண்ணனும் பாத்தீங்கன்னா ஒரு கண்ணாடி வாயு மூலைன்னு சொல்லப்படுகிற வடமேற்கு திசையில வச்சீங்க அப்படின்னா அவங்க கிட்ட இருக்குற நெகட்டிவ் போர்ஸ்னு சொல்லப்படுகிற நெகட்டிவ்வான சிந்தனைகள் எல்லாமே பாத்தீங்கன்னா நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. அது அப்படியே அங்க ரிப்லெக்ட் ஆயிடும். நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

அதனால கண்டிப்பாக வடமேற்கு மூலையில் ஒரு கண்ணாடி ரூமுக்குள்ள நான் சொல்றது வடமேற்கு மூலையில ரூம்குள்ள ஒரு கண்ணாடி அப்படிங்கற ஒரு விஷயம் வைக்கணும். அந்த வடமேற்கு மூலையில் இருக்கிற கண்ணாடியை கெஸ்ட் பாத்துட்டாங்க அப்படின்னு சொன்னாலே அந்த தாக்கம் அந்த நெகட்டிவ் போர்ஸ் சொல்லப்படுகின்ற நெகடிவ் வைப்ரேஷன் திருஷ்டி தோஷங்கள் எல்லாமே போக்குவதற்கு உண்டான தன்மைகள் அந்த கண்ணாடி கொடுக்குமான கொடுக்கும்னு சொல்லலாம்.

அவங்க என்ன நிலைப்பாடு இப்ப கண்ணாடிங்கறது நான் சிரிச்சா கண்ணாடி சிரிக்கும். நான் அழுதால் கண்ணாடி அழும். என்னுடைய உருவத்தை தான் கண்ணாடி வந்து ரிப்லெக்ட் பண்ணுது.

அந்த மாதிரி இருக்கும்போது நீங்க கண்ணாடி வந்து விருந்தினர்கள் பார்த்தாங்க அப்படின்னு சொன்னா திருஷ்டி தோஷங்கள் போக்குவதற்கான தன்மை இருக்குமா இருக்கும் சொல்லலாம். அந்த திருஷ்டி தோஷங்கள் யார் வந்து ஹவுஸ் ஓனரா இருக்காங்களோ அவங்களுக்கு தாக்கத்தை கொடுக்காது. இது வந்து கவனமா பார்த்து இத பண்ணிங்க அப்படின்னு சொன்னாலே கெஸ்ட் அறை அப்படின்னு சொல்லப்படுகிற விருந்தினர் அறை என்றால் வடமேற்கு திசையில் அப்படின்னு எடுத்துக்கிட்டு அது வந்து நீங்க அமைத்து கொண்டால் உங்களுடைய வாழ்க்கை சிறக்கும் அப்படின்னு ஒரு விஷயத்தை நம்ம பதிவு பண்றோம். நன்றி. வணக்கம்.

 

வீடியோ லிங்க் :

https://youtu.be/BqZGy2Eokhw?si=wz_gs_9Q4gxJAZib

 

 

Comments