உங்கள் ஜாதக கட்டத்தில் ராகு கேது எங்கு இருக்கு? அப்போ இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்.


 

 - திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா.

- ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.

 

அனைவருக்கும் வணக்கம். அட்சய லக்ன பத்ததில நிழல் கிரகங்கள் ராகு கேதுக்கள் எப்படி கணக்கில் கொள்ளப்படுகிறது  அல்லது எப்படி வந்து மக்களுக்கு பயன்படுது அப்படிங்கறது மிக முக்கியமான கேள்வி.

நிறைய ஆய்வுகள் வந்து நாங்க பார்க்கும்போது இந்த சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் ,குரு,  சுக்கிரன், சனி ,ராகு ,கேது இந்த ஏழு கிரகங்கள் பிளஸ் ரெண்டு கிரகங்கள்

இந்த ராகு கேதுகளுக்கு மட்டும் வந்து நம்ம வந்து ஆதிபத்திய பலன்கள் கிடையாது எப்பவுமே. அப்ப ஆதிபத்திய பலன் இல்லை அப்படின்னா உங்க ஜாதகத்தை எடுத்துக்கோங்க. நீங்க என்ன லக்னமா வேணும்னாலும் இருக்கட்டும்.

உதாரணத்துக்கு ரிஷபத்துலயோ அல்லது கன்னிலயோ இல்ல மகரத்திலயோ ராகு பகவான் இருக்குன்னா  உங்களுக்கு வழி வம்சமாக எப்படி இடம் சம்மந்தப்பட்டது வீடு சம்பந்தப்பட்ட சொத்து சம்பந்தப்பட்டது வாகனம் சம்பந்தப்பட்டது மனை சம்மந்தப்பட்டது அல்லது ஜாதகருடைய நோய் சம்பந்தப்பட்டது திடீர் திடீர்னு வரக்கூடிய நோய்கள் சம்பந்தப்பட்டது எதிர்பாராத நடக்குமா? நடக்கும்.

 

தயவு செய்து இந்த காலகட்டங்களில் இந்த நிகழ்வு மிக முக்கியமான காலங்கள் அப்படின்னு பார்த்தீங்கன்னா, இந்த ராகுவினுடைய நட்சத்திரம் போகும்போது திருவாதிரை நட்சத்திரம் அல்லது சுவாதி நட்சத்திரம் போகலாம் அல்லது சதய நட்சத்திரம் போக கூடிய காலங்களில் ரொம்ப கவனமா இருக்கணும். இந்த காலகட்டங்களில் கனவுகள் சம்பந்தப்பட்டது எதிர்பாராத நிகழ்வுகள் கற்பனைகள் எதிர்பாராத வரவுகள் திடீர் பணம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதிகமா பணம் வருது வாய்ப்பு இருக்கு. இந்த மாதிரி பிரச்சனைகளும் அதிகமா வரதுக்கு வாய்ப்பு இருக்கு.

உங்கள் ஜாதகத்தில் ரிஷபத்துல ராகுவோ அல்லது கன்னில ராகுவோ அல்லது மகரத்தில் ராகுவோ இருந்துச்சுன்னா கண்டிப்பா மிக மிக கவனமாக எடுத்துக்கணும். உங்க ஜாதகத்துல இருக்கான்னு பாருங்களேன்.

ஏன்னா இந்த ராகு கேதுக்களை இப்படித்தான் நம்ம கணக்குல எடுத்துக்கணும். கேது என்ன பண்ணலாம் அப்படின்னா உதாரணத்திற்கு  கடகத்துல எப்பவுமே வந்து நீர் ராசினு  சொல்லக்கூடிய இடத்துல கடகத்தில் கேதுவோ அல்லது விருச்சிகத்தில் கேதுவோ அல்லது மீனத்தில் கேதுவோ இருந்துச்சுன்னா கண்டிப்பா என்ன பண்ணனும்னா ஒரு வழிவம்சமாக வரக்கூடிய நோய்கள் அல்லது தொற்று நோய்கள் அல்லது வழிவம்சமாக வரக்கூடிய எண்ணங்களோடு பிரதிபலிப்புகள் இது வந்து உள்மூலமாக செயல்படக்கூடியது.

ஒரு மனிதனுடைய இயக்கத்தில் இருக்கக்கூடிய பயமா இருக்கலாம் குரூர எண்ணங்கள் ஆக இருக்கலாம் கோபங்களாக இருக்கலாம் பொறாமையா இருக்கலாம் பயமா இருக்கலாம் இப்படி எண்ணங்களை  அதிகமா வந்து இந்த நேரத்துல இருக்கும்.

சார் இப்படியே வந்து எல்லா லக்னத்துக்கும் எல்லா காலகட்டமும் இது பயன்படுமா. எல்லா காலகட்டத்துக்கும் இது நமக்கு இருக்குமா அப்படின்னா குறிப்பா வந்து சப்போஸ் ஒருத்தருக்கு வந்து அஸ்வினி நட்சத்திரம் நாலு வருஷம் அஞ்சு மாசம் பத்து நாள்  போகலாம்.

இல்ல  யாரோ ஒருத்தவங்களுக்கு மக நட்சத்திரம் போகலாம். யாருக்காவது மூல நட்சத்திரம் போகலாம். இந்த நட்சத்திரங்கள் போகும்போது மட்டும் நீங்க கவனமா இருந்தா போதுமே தவிர, மத்தபடி வந்து மீனத்தில் கேது இருக்கு சார் பயம் எப்பவுமே இருக்கு. பயம் இருக்கும்னா அதிகமான பயம் இந்த காலகட்டங்கள் குறிப்பிட்ட உங்களுக்கு ஏஎல்பி லக்னத்தில இல்ல உங்களுக்கு கேது திசை நடந்துச்சுன்னு வைங்களேன் கண்டிப்பா இந்த பாதிப்பு இருக்குமா இருக்கும்.

நீங்க தயவுசெய்து வந்து உங்களுடைய ஜாதகத்தில் ராகு கேது எங்க இருக்கு அப்படின்னு பாருங்க. இந்த ராகு கேதுக்கள் ராகுகள் வெளிப்புறமாகவும் கேதுகள் உள்புறமாகவும் ஒரு மனிதனை ஆட்டி படைக்குமானா ஆட்டி படைக்கும்.

ஒருத்தருக்கு பணம் வர்றதோ இல்ல வெளில வந்து ஏற்படக்கூடிய காயங்கள் எல்லாமே ராகுவோட நட்சத்திரங்கள் போகும்போதும் கேது நட்சத்திரங்கள் போகும்போது எல்லாமே உள்ளுக்குள்ள ஏற்படுத்தக்கூடிய ஒரு கட்டிகள் ஏற்படுத்துமானா கட்டிகள் ஏற்படுத்தும். கவனமா இருங்க.

கண்டிப்பா வந்து ராகு கேதுகள் மத்த இடத்துல இருந்தா நல்லதானா நல்லது. சார் எனக்கு வந்து மேசத்துல இருக்கு. மிதுனத்தில் இருக்கு உங்களுக்கெல்லாம் ராகு வந்து நீ பயப்படவே வேண்டாம். நீங்க உங்க வாழ்க்கையில் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். நல்லபடியா வாழ்க்கையை வாழுங்க.

சார் இப்ப வந்து ராகு கேதுக்கள் ரிஷபத்தில் இருக்கு அப்படின்னா கண்டிப்பா ஏதாச்சும் ஒரு பூமியை வந்து யாருக்காச்சும் ஒருத்தருக்கு தானமாகவோ கொடுக்கிறதோ ஒரு அன்னதானம் கொடுக்கிறதோ தர்ப்பணங்கள் செய்றதோ இல்ல திதி கொடுப்பாங்கல்ல பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தாத்தா பாட்டன் பாட்டி அதுக்கு முன்னோர்கள் வந்து முப்பாட்டன் பாட்டி அவங்களுக்கு கொடுத்தா போதுமானது. கண்டிப்பா இதை மட்டும் செய்யுங்க. உங்க வாழ்க்கையில அவ்வளவு சந்தோசம் இருக்கும். ரொம்ப சந்தோசம். நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtu.be/nqbwaT8DvAc?si=cCqT8lxn3V-0YlIB

 

Comments