தசா புக்திகள் ALP லக்னத்திற்கு எப்படி இருக்கிறது என்று பார்த்தாலே நமக்கு வெற்றி நிச்சயம்!

 தசா புக்திகள் ALP லக்னத்திற்கு எப்படி இருக்கிறது என்று பார்த்தாலே நமக்கு வெற்றி நிச்சயம்!


தசா புக்திகள் ALP லக்னத்திற்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி  அட்சய லக்ன பத்ததி எனும் ஜோதிட முறையை உருவாக்கிய திரு.பொதுவுடைமூர்த்தி அவர்களின் பதிவு.

அனைவருக்கும் வணக்கம்! இந்த நாள் இனிய நாள்! வாழ்வில் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும்!

ALP ஜோதிட முறையில் விம்சோத்ரி தசா /  புக்திகளின் இயக்கம் :

ALP எனும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் விம்சோத்தரி தசா புக்திகள் எப்படி இயங்குகிறது?  மனிதனை எப்படி இயக்குகிறது? என்று கேட்பார்கள்.

                ALP லக்னத்திற்கு ALP தசா புக்தியை பார்க்க வேண்டும்.  ALP லக்னத்திற்கு விம்சோத்தரி தசா புக்திகள் பார்ப்பதற்கு ARP எனும் அட்சய ராசி என ஒன்றை வைத்துள்ளோம். பல பேர் கேட்கும்பொழுது  எனக்கு கேது தசா நடக்கிறது எப்படி இருக்கும்? எனக்கு சனி தசா நடக்கிறது எப்படி இருக்கும்? எனக்கு ராகு தசா நடக்கிறது எப்படி இருக்கும்? என்ற பயமும் பதட்டமும் இருக்கும். அதுவே குரு தசாவோ / சுக்கிர தசாவோ நடக்கிறது என்றால் பரவாயில்லை என்றும், இரண்டாவதாக சூரிய தசாவோ / சந்திர தசாவோ நடக்கிறது என்றாலும் பரவாயில்லை என்பார்கள். அதுவே செவ்வாய் தசா நடக்கிறது என்றால் கொஞ்சமாக பயப்படுவார்கள். அடுத்ததாக சனி தசாவோ / ராகு தசாவோ / கேது தசாவோ நடக்கிறது என்றால் ரொம்ப ரொம்ப பயப்படுவார்கள். எல்லோருமே என்ன சொல்கிறார்கள் என்றால், சனி தசாவா? கொடுக்கவே கொடுக்காது என்றும், ராகு தசாவைப் பொறுத்த வரை கொடுக்கவே கொடுக்காது, அதே ராகு தசா ஓஹோ என்று கொடுக்கும் என்பார்கள்.

தசா நடத்தும் கிரகம் :

                ALP லக்னத்திற்கு தசா நடத்தும் கிரகம் எங்கு உள்ளது என்று பார்க்க வேண்டும். ஏனெனில், ALP லக்னம் என்பது வயதோட்ட லக்னம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். உதாரணத்திற்கு ALP லக்னம் மிதுனம் 12-இல் (ரிஷபத்தில்) ராகு என்றால் ராகு தசாவில் கொடுக்கவே கொடுக்காது. அதுவே ALP லக்னம் துலாம் என்றால் அட்டமத்தில் (ரிஷபத்தில்) ராகு என்றால் ராகு தசாவில் எது பயன்படுத்தினாலும் பயனாகுமா என்றால் பயனாகாது. அதுவே ALP லக்னம் விருச்சிகம் என்றால் 10 வருட காலத்திற்கு 7-இல் (ரிஷபத்தில்) ராகு என்றால்  ராகு தசா நன்றாகவே இருக்கும், நல்ல யோகங்களைத் தரும். அதே விருச்சிக லக்கினம் முடிந்து தனுசு லக்னம் ALP லக்னமாக வரும்பொழுது 6-இல் (ரிஷபத்தில்) ராகு என்றால் ராகு தசா போராட்ட காலமாக இருக்கும். இப்போது கேள்வி என்னவென்றால், 6-இல் அசுபர் இருந்தால் நல்லது தானே என்று? ஆனால் இந்த காலத்தில் ஜாதகர் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த தொழில் செய்தாலும் தனக்கு தானே எதிரியாகவும், தனக்கு தானே எதிரிகளையும் உருவாக்கிக் கொள்வார். இக்காலத்தில், நோய்,  தேவையில்லாத கடன், பிரச்சனைகளைக் கொடுக்கும். மற்ற கிரகங்கள் துணை புரிகிறது ஜாதகர் நன்றாகத்தான் இருக்கிறார் என்றால் யாருக்கு தெரியும் எவ்வளவு முதலீடு, எவ்வளவு கடன் என்ன செய்கிறார் என்று?

ALP ஜோதிடர்களும்! கடந்த கால நிகழ்வு சம்பந்தப்பட்ட ஆய்வுகளும் :

                அட்சய லக்ன பத்ததி படிக்கக்கூடிய நண்பர்களுக்கு செய்முறையாக நடந்து முடிந்த நிகழ்வுகளை வைத்துப் பார்க்க சொல்லப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட வயதில் ஒரு தேதியில் உதாரணத்திற்கு 14.05.2009 அன்று நடந்த நிகழ்விற்கும் ஜாதகத்திற்கும் பொருத்தம் உள்ளதா என்று பார்க்க சொல்கிறோம். உதாரணத்திற்கு, ஜென்ம லக்னம் சிம்மம், சிம்மத்திலேயே ராகு, ராகு தசா நடக்கிறது என்றால் நன்றாக இருக்கும் என்பார்கள், ஆனால் வயதோட்டத்தின்படி ALP லக்னம் மகரம் என்றால் அட்டமத்தில் ராகு தசா என்றால் மொத்தமும் காலி, வீடு ஜப்திக்கு வந்துவிட்டது, வங்கியிலிருந்து வீட்டை ஏலத்தில் விட குறிப்பாணை வந்துள்ளது என்கிறார்.

துலாம் :

                அடுத்த ஒரு நிகழ்வில், ஜென்ம லக்னம் துலாம், துலாத்திலேயே ராகு, ராகு தசா நடக்கிறது என்றால் பெரிய பிரச்சனை என்பார்கள், அப்படிப் பார்த்தால் பல பேருக்கு துலாமில் ராகு தசா நடக்கும். அதே ALP லக்னம் மீனம் என்றால் அட்டமத்தில் (துலாமில்) ராகு, ராகு தசா நடக்கும்போது நீதிமன்றம், வம்பு வழக்கு,  சிறை தண்டனை அனுபவிக்கிறார். எனவே, ALP லக்னத்திற்கு தசா புக்தி எங்கு இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம். இதில் ராகு தசா மட்டும் இப்படி, சனி தசா மட்டும் இப்படி என்று இல்லை சுக்கிர தசா / சூரிய தசா / சந்திர தசா என எதுவாக இருந்தாலும் அப்படித் தான் நடக்கும். இவை எல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான்.

                அடுத்ததாக, உதாரணத்திற்கு, ALP லக்னம் மேஷம், சூரியன் 5-இல் இருந்து தசா நடத்தக்கூடாது, நடத்தினால் என்ன செய்யும்? எல்லாவிதமான எண்ணங்களையும், ஆசைகளையும் தூண்டி, பரப்பி, வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை என்று சந்தோசமாக அருமையாக ஜாதகர் இருப்பார். ஆனால், சூரிய தசா முடிவதற்குள் அந்த ஜாதகர் மொத்தத்தையும் இழந்து காலி செய்யும். அதே போல், மகரத்திலோ, சிம்மத்திலோ இருக்கக்கூடிய சூரியன் தசா நடத்தினால் கண்டிப்பாக ஒரு போராட்டம் இருக்கும். அதிலும், 30 முதல் 50 வயது வரையுள்ளவர்களுக்கு மகரத்திலோ, சிம்மத்திலோ இருக்கக்கூடிய சூரியன் தசா நடத்தும் பொழுது, ALP லக்னம் நன்றாக அமைந்து விட்டால் ஜாதகர் தப்பித்துக் கொள்வார். அதுவே ALP லக்னமும் மகரமோ, சிம்மமோ என்றால் கண்டிப்பாக பெரிய போராட்டம் தான்.

                 அடுத்த ஒரு நிகழ்வில், ஜென்ம லக்னம் தனுசு, 6-இல் (ரிஷபத்தில்) செவ்வாய் இருந்து, செவ்வாய் தசா நடக்கிறது, 42 வயதிற்கு பின் ஓஹோ என்று இருக்கும் என்பார்கள். அதே ஜாதகம், 42 வயது ALP லக்னம் ரிஷபம் ஆரம்பமாகிறது என்றால், 7, 12-இற்குரிய செவ்வாய் லக்னத்திலிருந்து தசா நடத்துகிறது என்றால் ஓஹோ என்று தான் இருக்கும். காரணம், திருமணம் என்பது 7, வெளிநாடு என்பது 12, வெளிநாடு சம்பந்தப்பட்ட கேள்வியை ஜாதகர் கேட்கிறார். 12 ஆம் அதிபதியான செவ்வாய் லக்னத்திலேயே இருப்பதால்  ஜாதகர் வெளிநாட்டில் இருக்கிறார், இவ்வளவு தான் விஷயம்.

                அடுத்ததாக, 3-ஆம் அதிபதி சந்திரன் 12-இல் உள்ளார் எனில் ஜாதகர் வெளிநாட்டில் உள்ளார், நிரந்தரமாகக் குடியுரிமை பற்றி கேட்கிறார். இவ்வளவு தான் விஷயம்.

பாரம்பரிய ஜோதிடருக்கு ALP ஜோதிடம் கற்பதில் ஏற்பட்ட புரிதல் :

பாரம்பரிய ஜோதிடர் ஒருவர், என்னுடைய வகுப்பில் கலந்து கொள்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால், என்னை நம்பி, ஜாதகம் அவ்வளவு தூரம் புரிகிறது ஆனால் உள்ளுக்குள் ஒரு விஷயம் தசா / புக்திகளை இணைத்துப் பலன் சொல்லனும் என்பது அவரது எதிர்பார்ப்பு. சரி உங்களுடைய தனிப்பட்ட கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள் நான் பேசுகிறேன் என்றதும், எனக்கு ரிஷப லக்னம், 1992-இல் சனி தசா / சூரிய புக்தியில் திருமணம் நடைபெற்றது.  சனி பகவான் எங்கு உள்ளார் என கேட்டதற்கு அவர் கும்பத்தில் என்றார். அப்போது அவருக்கு, ALP லக்னம் சிம்மம், 6- இற்கும் 7-இற்கும் உடைய சனி பகவான் 7-இல் இருந்து தசா நடத்தியுள்ளார் எனவே திருமணம் நடைபெற்றது. அதே விஷயம், ஜென்ம லக்னமான ரிஷபத்திற்கு என்றால், 9- இற்கும் 10-இற்கும் உடைய சனி பகவான் என்ன செய்திருக்க வேண்டுமென்றால், தொழிலிலோ / வேலை வாய்ப்பிலோ எதிர்பாராத யோகத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பிறந்த தேதி, ஜாதகம், நடந்த நிகழ்வு ஆகிய இவை அனைத்தும் உண்மை. எனவே, நடந்த நிகழ்வு ஒன்றை எடுத்துக் கொண்டு, விதி விலக்குகளைத் தவிர்த்து, காலத்தை அறுதியிட்டு கூற வேண்டும். 1992-இல் திருமணம் என்றால், மகம் நட்சத்திரம், 7-இல் சனி பகவான் நின்று தசா நடத்தி திருமணம் நடந்துள்ளது. ஒரு புறம் வசதிகள் இருந்தும், மறுபுறம் வசதிகள் குறைந்திருந்தும் எதிர்பாராத திருமணத்தை நடத்தியுள்ளார். நாங்கள் சொல்வது என்னவென்றால், ALP லக்னத்திற்கு தசா / புக்திகளைப் பாருங்கள் என்கிறோம். அதனால் தான், அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் விம்சோத்தரி தசாவிற்கென தனி நிகழ்வு ஏற்படுத்த எண்ணுகிறேன். ஏனெனில், 2027, 2030 பற்றியோ, 2035 பற்றியோ இங்கு பேசவில்லை, மாறாக 1990, 1995, 1997, 2000, 2015 என கடந்த கால நிகழ்வுகளை தான் இங்கு பேசுகிறொம்.       

                ஒரு நிகழ்வில், 2015-இல் ஒருவர் வீடு வாங்கியுள்ளார். ALP மேஷ லக்னமாக இருந்து 4ம் அதிபதி சந்திரனின் தசா / சந்திர புக்தி நடந்தால் வீடு வாங்கியிருப்பார். அதுவே, ALP  லக்னம் கடகம் என்றால் 4-ஆம் அதிபதி சுக்கிர தசா / சுக்கிர புக்தியோ அல்லது சனி தசா / சனி புக்தியோ நடந்தால் வீடு வாங்குவாரா என்றால் வீடு வாங்கியே ஆகணும் என்பது அமைப்பு. ஆனால், இடம் சம்பந்தப்பட்ட போராட்டத்தையும் நிகழ்த்தும். அப்போ, நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.

                மற்றொரு கேள்வி என்னவென்றால், ஜென்ம லக்னம் விருச்சிகம், புதன் 8-இல் இருந்து தசா நடத்துகிறார், பயமாக உள்ளது என்றார். பயப்பட வேண்டாம், ALP லக்னம் கும்பம், 5-இல் இருந்து புதன் தசா நடத்துகிறார். அல்லது ALP லக்னம் மீனம் எனில், 4-இற்கும், 7-இற்கும் உடைய புதன் 4-இல் இருந்து தசா நடத்துகிறார், வீடு / வண்டி / வாகனம் / சொத்து / சுகம் அமையும்.

மற்ற ஜோதிட முறைகளில் மாறுபடும் பலன்களும், ALP ஜோதிட முறையின் பலன்களும் :

  பல பேர் சொல்வார்கள், எனக்கு நேரமே சரியில்லை என்று கூறியுள்ளனர்,  ஆனால் எனக்கு வாழ்க்கை நன்றாக இருக்கிறது. அதுவே நேரம் அருமையாக உள்ளது என்று கூறினார்கள், ஆனால், எனக்கு வாழ்க்கை சரியில்லை என்ற இந்த இரண்டையும் கேட்டிருப்போம். அதே போல், இந்த சனிப் பெயர்ச்சி எனக்கு நன்றாகவே இருக்காது என்றார்கள், ஆனால் நான் அருமையாக தொழில் செய்தேன், வீடு , வண்டி, சொத்து வாங்கினேன், லாட்டரிச் சீட்டு போல் பெரிய அளவில் பம்பர் பணம் வந்தது, எனக்கு அப்பா கொடுத்தார், அம்மா கொடுத்து உதவினார் என்றும் கேட்டிருப்போம். எனக்கு நடக்கவே நடக்காது என்று ஜோதிடர் சொன்ன கால கட்டத்தில் நடக்கும். அதுவே உங்களுக்கு அருமையாக இருக்கும் என்று சொல்வார்கள் எதுவுமே நடக்காமலும் இருக்கும். இது எங்கிருந்து பார்க்க வேண்டுமென்றால், வயதோட்ட லக்னமான ALP லக்னத்திலிருந்து தான் பார்க்க வேண்டும். வேண்டும் என்றாலும், வேண்டாம் என்றாலும் இது தான் உண்மை. ALP லக்னத்திற்கு தசா / புக்தி எடுத்தால் தான் சரியாக இருக்கும். இப்போது என்ன வயதோ, அதற்கு தசா / புக்தி எடுத்துப் பாருங்கள். அதிலும், ALP-இல் இருந்து ARP-க்கு எடுத்துப் பார்த்தால் இன்னும் அழகாக இருக்கும். ALP என்பது நமது உடலின் வளர்ச்சி, ARP என்பது நமது மனதின் வளர்ச்சி. இந்த இரண்டையும் ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்தாலே நமக்கு உடல் மற்றும் மனதின் இயக்கங்கள் அழகாகப் பொருந்தும்.

                உதாரணமாக தனுசு லக்னம் செல்கிறது, 4-ஆம் அதிபதி குரு 4-இல் மீனத்திலிருந்து தசா நடத்துகிறார் என்றால், சொத்து சுகம் வாங்க வேண்டும் என்பார். அதுவே, ALP லக்னம் ரிஷபம், 4-ஆம் அதிபதி சூரியன் 8-இல்(தனுசு) இருந்து தசா நடத்தினால் எப்படி வீடு வாங்க முடியும்? மீறி வாங்கினால் பிரச்சனை, போராட்டம் இருக்கும். தசா புக்தியில் இப்படித் தான் பலன்களை அமைக்க வேண்டும். இதில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஒருவர், ஜென்ம லக்னத்தில் இருந்து தான் பார்க்க வேண்டும் என்பார், அது அவர் விருப்பம். நாங்கள் ALP லக்னத்திலிருந்து தசா / புக்தி சொல்கிறோம், அவ்வளவு தான் விஷயம்.

ரோகினி நட்சத்திரம் :

ALP லக்னத்திற்கு ALP தசா / புக்தி என உள்ளது. அது 405 நாட்களையோ, 45 நாட்களையோ தசா / புக்திகள் இயக்கும். ஆனால், ARP பார்க்க வேண்டுமெனில், ALP-ஐ வைத்து கவனமாகத் தான் பார்க்க வேண்டும். ALP லக்னம் என்றால் வயதோட்ட லக்னம், அட்சய ராசி என்பது சந்திரனின் நகர்வுகள். உதாரணமாக, மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருப்பார், தற்போது சந்திர தசா என்றால், ரோகிணி நட்சத்திரம் தான் அவரை இயக்கும். ரோகிணி நட்சத்திரம் செல்லும் போது, மாமனுடன் சண்டைப் போட்டு சுற்றிக்கொண்டிருப்பார். அப்போ, என்ன நிதர்சனமோ, அதைப் பயன்படுத்திப் பாருங்கள். ரோகிணி நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது என்பது சரிதான். மேஷ ராசியில் பிறந்து, ரோகிணி நட்சத்திரம் செல்லும் போது, அதாவது சந்திர தசா நடக்கும்போது, மாமன் சம்பந்தப்பட்டது / மாமன் உறவுகள் சம்பந்தப்பட்டதில் சண்டை வரும் என்பது எந்த ஜாதகமாக இருந்தாலும் இது தான் அமைப்பு.

மூலம் நட்சத்திரம் :

                அடுத்ததாக, எனக்கு மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் பார்த்து திருமணம் செய்ததில் நன்றாகவே இல்லை என்பார்கள், பார்த்தால் அவர் விருச்சிக ராசியில் அனுச நட்சத்திரத்தின் இறுதியில் பிறந்திருப்பார். அனுசம், கேட்டை நட்சத்திரங்கள் முடிந்து மூலம் நட்சத்திரம் வரும்போது தான் திருமணம் நடைபெற்றிருக்கும். அந்த காலகட்டம் நன்றாக இருந்திருக்காது தான். போராட்டம் தான். உடல் இயக்கத்திற்கு தகுந்தாற்போல் நட்சத்திரப் புள்ளிகள் நகரும்பொழுது நாம் வளர்ச்சி பெறும்போது ஏற்படக்கூடிய நிறைய மாற்றங்கள் நடக்கும். அதை விடுத்து, சுக்கிர தசா நன்றாக இருக்கும், குரு தசா நன்றாக இருக்கும், என்பார்கள். ஆனால், சுக்கிர தசாவும், குரு தசாவும் பலரையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். அதுவே, சனி தசா ஓஹோ என ஆக்கிவிடும். எனவே, தசா / புக்திகள் ALP லக்னத்திற்கு எங்கு உள்ளது எனப் பார்த்து அதன் பிறகு தான் அமைக்க வேண்டும். இனி வரும் காலங்களில், அட்சய லக்னப் பத்ததி முறையில் தசா / புக்திகளின் அமைப்பு பயன்படுத்தப்படும். அதை மிகப்பெரிய அளவில், அடுத்தடுத்த காணொளிகளில் காணலாம். மிக்க மகிழ்ச்சி, நன்றி, வணக்கம்.

வீடியோ லிங்க் https://youtu.be/IGKHASSXlu4?si=DkO5zSiO6uwuvDT4

 

Website: www.alpastrology.com

 

Contact: 9786556156 / 9363035656.

 

Comments