2 ஆம் அதிபதி உங்களுக்கு ஒன்பதில் இருக்கா? அப்போ நீங்க ராஜா தான்!

 2 ஆம் அதிபதி உங்களுக்கு ஒன்பதில் இருக்கா? அப்போ நீங்க ராஜா தான்!


 

- ஸ்ரீ குரு  சாந்தகுமார்.

 - ALP ஜோதிடர்.

 

வணக்கம். காசு பணம் துட்டு மணி மணி கரெக்டா. எல்லாருக்குமே தேவை.

ஆனா இந்த ALP லக்ன அதிபதியோ ALP நட்சத்திராதிபதியோ இரண்டாம் அதிபதியோ ஒன்பதில் போய் உட்கார்ந்தா அந்த நிகழ்வே வேற மாதிரி இருக்குங்க. ரொம்ப கம்போர்ட் சோன்ல (comfort zone)  இருப்பாங்க.

விளம்பரம் பார்த்திருப்பீங்க இல்லையா ஒருத்தன் கால் மேல கால் போட்டு இருப்பான். ஆட்டிட்டு இருப்பான். ஏன்டா இந்த வயசுல கால் மேல கால் போட்டு ஆட்டிட்டு உக்காந்து இருக்கியே? ஏதாவது படிக்கலாம்ல.

ஆ படிச்சு?

படிச்சா நல்ல உத்தியோகத்திற்கு போலாம்.

உத்தியோகத்திற்கு போய்?

நல்லா காசு பணம் சம்பாதிக்கலாம்.

சம்பாதிச்சு?

கார் பங்கலானு வாங்கலாம்.

 வாங்கி?

கல்யாணம் பண்ணிக்கலாம்.

கல்யாணம் பண்ணி?

குழந்தை பெத்துக்கலாம்.

 குழந்தை பெத்துக்கிட்டு?

அப்புறம் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து இருக்கலாம் என்று சொல்வான். அதாண்டா நான் இப்பவே பண்ணிட்டு இருக்கேன் அப்படிம்பான்.

ஒன்பதில் இருந்தால் :

இந்த ஒன்பதுல இருக்கிற நிலை அப்படித்தான். இது வந்து கம்போர்ட் சோன் (comfort zone) அப்படின்னு சொல்லுவாங்க. முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறது இந்த கம்ஃபோர்ட் சோன். அதாவது ஹாப்பி பார் நவ் ஈகர் பார் மோர். இது இருக்கணும் வாழ்க்கையில முன்னுக்கு வரணும்னா.

இந்த ஒன்பதுல இருக்குறவங்களுக்கு இந்த ஈகர்னஸ் இருக்காது. முன்னேறனும்ங்குற அந்த உந்துதல் அவசியம் இல்லாத தனத்தை தோணும். நன்றி.

 

வீடியோ லிங்க்:

https://youtube.com/shorts/Kt7-6RnWQrA?si=FRNBJYiEZBIlln54

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR