11:11 எண் உணர்த்தும் பிரபஞ்ச ரகசியம் என்ன? எல்லோருக்கும் இந்த எண் மாற்றத்தை தருகிறதா?
-
ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.
- ALP ஜோதிடர்.
வணக்கம்.
அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியர் ஸ்ரீ குரு உமாவெங்கட். புதியதாக ஒரு கேள்வி
வந்தது இப்ப பார்த்தீங்கன்னா யங்ஸ்டர்ஸ் எல்லாரும் என்ன பண்றாங்கன்னா 11:11. 11:11
அப்டிங்கிற டைம் எடுத்துக்குறாங்க. அது யுனிவர்சல் கோடு நம்பர்
அப்படிங்கற மாதிரி மாறிடுச்சு.
இந்த
நம்பர்ல ஒரு செயல் செஞ்சோம்னா அது வெற்றி கிடைக்கும் அப்படிங்கிறது அவங்க கருத்து.
நான் கேட்கிறேன் எல்லாருக்குமே இந்த டைமிங் அப்படிங்கறது ஒத்து வருதா? அப்படிங்கறத
மட்டும் தான்.
இப்போ
11: 11 க்கு ஒரு ஆக்சிடென்ட் நடக்காம இருக்கா? 11: 11க்கு ஒரு சர்ஜரி நடக்காம
இருக்கா? குழந்தை பிறக்கிறது வேற நார்மல் டெலிவரின்னு சொல்லிட்டு அதே நேரத்துல ஒரு
சிசேரியன் அப்படிங்கறது நடக்குது. அப்ப யாருக்கு பிளஸ்? யாருக்கு மைனஸ்?
இந்த
பிரபஞ்சம் அப்படிங்கறது யாருக்கு நன்மை கொடுக்குது? யாருக்கு நன்மை கொடுக்கல?
என்னுடைய ஜாதகத்துல இந்த 11: 11 எந்த விதத்தில பயன்படுது? அப்படிங்கறத நம்ம
தெரிஞ்சுக்கணும்.
இது
ஒரு குருட்டு நம்பிக்கையா? அப்படின்னு கேட்டா மரம் பூரா மாங்காவா இருக்கு.
நான் அதை எடுக்கணும்னு நினைக்கிறேன். அப்போ நான் ஒரு கல் எடுத்து போடுறேன். நான்
போட்ட கல்லை விட நான் ஏதோ ஒரு மாங்காலப்பட்டு மாங்கா விழுகுது. அது மாதிரி தான்
எனக்கு தெரிஞ்சு.
ஏன்னா
நிறைய பேரு நான் நோட் பண்ணி இருக்கேன். இந்த நேரத்துல ஒரு தகவல் அனுப்புறது ரெஸ்யூம்
கூட சென்ட் பண்றாங்க. எனக்கு தெரிஞ்சு ஒரு காதல்ல சொல்றது அவங்க கிட்ட கேட்டதுக்கு
ஆன்ட்டி இதுல பண்ணா நல்லா இருக்குன்னு சொன்னாங்க. நான் பண்ணேன். எனக்கு எந்த
ரிப்ளையும் இல்ல அப்படின்னு. என்னுடைய மகனுடைய நண்பர். அதனால ரொம்ப பாசம். எனக்கு
ஆச்சரியமா இருந்தது. என்னப்பா அது எல்லாருக்குமே ஒர்க் ஆகும்னு நினைக்கிறியா
அப்படின்னு? இல்ல ஆன்ட்டி எனக்கு ஒர்க் ஆகல அப்படின்னுதான் சொன்னாங்க.
ஈர்ப்பு
சக்தி
:
அந்தப்
பிரபஞ்சத்த அந்த ஈர்ப்பு சக்தியை நல்ல விதமாக
பயன்படுத்துகிறவங்களுக்கு அது கை கொடுக்குமான கைகொடுக்கும். இப்போ நம்ம முன்னோர்கள்
வந்து ஒரு அபசகுனமான வார்த்தை பேசாதன்னு சொல்லுவாங்க. வீட்ல பேசும் போது ஆத்துல
பேசும்போது என்ன சொல்லுவாங்கன்னா தீர்ந்து போச்சுன்னு சொல்லாத காலியா போச்சுன்னு
சொல்லாத வாங்கணும் அப்படிங்கிற வார்த்தை யூஸ் பண்ணு அப்படின்னு சொல்லுவாங்க. அந்த
மாதிரி தான்.
எப்போதும்
ஒரு நிறைவான வார்த்தை ஒரு நிறைவுக்காக இல்லைனா ஒரு தரணும்ங்கறதுக்காக அந்த செயலை
பயன்படுத்துறோமோ அந்த நம்பரை அது வந்து கை கொடுக்கும்.
இப்போ
உதாரணமா பார்த்தீங்கன்னா ஒருத்தர் சித்திரை மாதத்தில் பிறந்து இருக்காங்க. அவங்க
பிறந்த நட்சத்திரம் அனுஷ நட்சத்திரம். இவர்களுக்கு இது பயன் கொடுக்குமான கண்டிப்பா
கொடுக்காது. இந்த 11:11 நம்பர் பயன் கொடுக்காது. இத நீங்க வேணா செக் பண்ணி
பாருங்க.
நான்
பிறந்த மாசமும் நான் பிறந்த நட்சத்திரமும் ஆறு எட்டாக இருக்கும்போது இது எனக்கு கை
கொடுக்குமா கண்டிப்பாக கை கொடுக்காது அப்படிங்கிறத இங்க சொல்ல முடியும். இதை நீங்க எப்படி
சொன்னீங்க? அப்படின்னா நிறைய பேர் கிட்ட இது ஆராய்ச்சிங்கிறது பண்ணியிருக்கோம்.
அதனாலதான் சொல்றோம்.
செக்
பண்ணி பாருங்களேன். நடக்கக்கூடிய
நிகழ்வுகள் இந்த ரெண்டு கிரகங்களும் நல்லா இல்லாத பட்சத்துல அது ஒத்துழைக்குமா
அப்படின்னா ஒத்துழைக்காது. 11:11 மணிக்கு ராத்திரி மெசேஜ் பண்ணுவாங்க. பகல்ல மெசேஜ் பண்ணுவாங்க. மத்தியானம் அந்த
டைமிங் பார்த்து மெசேஜ் பண்றவங்க இருப்பாங்க.
மேடம்
கரெக்டா எனக்கு இதுல ரிப்ளை கொடுக்கணும் அப்படின்னு ஒரு தன்மை இருக்கும். ஏன் 11:
11க்கு மெசேஜ் பண்ணீங்க அப்படின்னு தான் கேள்வி கேட்டேன்.
இல்ல
மேடம் அத பாத்துட்டு நீங்க எனக்கு கொடுத்துட்டீங்கன்னா அது எனக்கு பிளஸ் ஆக
இருக்கும்ல அதனால அப்படின்னு. எந்த நேரத்துல கேட்டாலும் சொல்லுவோம். இந்த 11 :11
கேட்டால் சொல்லுவோம் என்கிறது கிடையாது அப்படிங்கறது அவங்க கொடுக்கக்கூடியது.
இது
ஏன்னா நிறைய பேரு இதுக்கு அடிகிட் ஆகுறாங்க. தேவை அந்த நம்பிக்கையின் மேல தான் ஒரு
செயல் அப்படிங்கறது சொல்லுவோம். அதுக்கு இயற்கையிலே வந்து இதெல்லாம்
ஏஞ்சல்ஸ் நம்பர்னு சொல்லுவாங்க. அதுக்கு ஒரு பக்குவம் என்பது இருக்கு.
இந்த
நாலு நம்பரையும் கூட்டுனீங்கன்னா நாலு அப்படிங்கறது வரும். இந்த நாலுக்கு காரகம் யாரு
அப்படின்னு தெரிஞ்சுக்கணும். அந்த கிரகம் பலமா இருக்குதா தெரிஞ்சுக்கணும்.
அதுக்கப்புறம் தான் இந்த நம்பர் யூஸ் பண்ணனுமா யூஸ் பண்ண கூடாதா என்கிறது.
யூஸ்
பண்றவங்கள தப்புன்னு சொல்ல மாட்டேன். பட் எதற்காக பயன்படுத்துறீங்க. எந்த
காலகட்டத்தில் அது உங்களுக்கு பயன்படும். நான் பயன்படுத்துவது சரியா? எனக்கு ஒன்னு
தானாகவே கிடைக்குது. நான் ஏதாவது ஒரு மெசேஜ் பண்ணி நான் அதை நான் கெடுத்து
விட்டேன் அப்படின்னு சொன்னவங்க தான் அதிகம். சோ காலம் கனியும் வரை காத்திருப்பது
தான் சிறப்பு. இந்த 11: 11 அப்படிங்கற நம்பர் மட்டும் நம்மை செயல்படுத்துமா
அப்படின்னா ஒரு சிலருக்கு மட்டுமே அப்படிங்கறது இந்த இடத்தில் பதிவு பண்ணிக்கிறேன்.
நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtu.be/-fSJPq4-YP8?si=WEvNCjKX3tlI3kum
Comments
Post a Comment