பிரம்மிப்பூட்டும் சந்திரன் சேர்க்கையின் அற்புதம்! 11 கிரகங்களுடன் இணைந்தால் என்ன தாக்கம்?

 ிரம்மிப்பூட்டும் சந்திரன் சேர்க்கையின் அற்புதம்! 11 கிரகங்களுடன் இணைந்தால் என்ன தாக்கம்?


 

- ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.

- ஸ்ரீ குரு  சாந்தகுமார்.

- ALP ஜோதிடர்கள்.

 

சாந்தகுமார் சார்:

வணக்கம். நான் சாந்தகுமார், ALP அஸ்ட்ரலஜர், சென்னையில் இருந்து. நம்ம கூட ஸ்ரீ குரு  சத்யநாராயணன் சார் போன தடவை ஆசைகள் பற்றி 12 ஏஎல்பி களுக்கு பேசினோம். இன்னிக்கு கிரக இணைவுகள் பற்றி அந்த வீடியோவில் பேசலாம்னு சொல்லி இருந்தோம். நேரம் கருதி அது இன்னொரு வீடியோவா போடுறோம்.

சார் போன தடவை நிறைய பேசினோம். நிறைய நல்ல கமெண்ட்ஸ். இப்போ நமக்கு கிரக இணைவுகள் அப்படின்னு பேசுவோம். இப்ப சந்திரன் அப்படின்னு எடுத்துக்கிடுவோம். சந்திரன் மனோகாரகன்னு சொல்றோம். ஏன் சந்திரனை மனோகாரகன்னா முதல்ல எடுத்துக்கிறோம்.

 

சத்ய நாராயணன் சார்:

எப்பவுமே இந்த மனம் வந்து எங்கிருந்து இயக்குகிறது அப்படின்னு சொன்னா  இந்த மனசே வந்து அம்மாகிட்ட இருந்து தான் வருது  அப்படின்னு சொல்லலாம்.

ஏன்னா இந்த பாசத்திற்கு கால புருஷ லக்னத்திற்கு நாலாம் பாவகம்  சொல்லப்படுகின்ற  இந்த பாசத்திற்கு அதிபதி யாரு அப்படின்னு சொன்னா சந்திர பகவான்.

இந்த சந்திர பகவான் உடைய தன்மையை பொறுத்துதான் உலகமே இயக்குது அப்படின்னு சொல்லலாம்.

ஒரு உதாரணம் எடுத்துப்போம் இந்த சந்திர பகவான் பௌர்ணமியாக இருந்தால், சூரியனும் சந்திரனும் 180 டிகிரி  இருக்கும். 

பௌர்ணமியின் போது கடலுடைய அலைகள் வந்து பாத்தீங்கன்னா பிரம்மாண்டமாக ரைஸ் ஆகும். அதே மாதிரி தேய்பிறை என்று சொல்லப்படுகின்ற சந்திரன் சூரியனும் ஒன்றாக இருக்கும் போது ஒரே டிகிரியில் இருக்குனு வச்சுக்கங்க. அதே மாதிரி தான் ஒன்னு வந்து பாசிட்டிவ் எஃபக்டிவாக இருக்கும். இன்னொன்னு நெகட்டிவ் எபக்ட்டிவ்வா இருக்கும்.

இந்த நெகடிவ் எபக்ட்டு , பாசிட்டிவ் எபக்ட்டு எதை அடிப்படையாகக் கொண்டது அப்படின்னு பாத்தீங்கன்னா சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. ஏன்னா சந்திரன் என்பது சாட்டிலைட் அப்படின்னு சொல்லுவோம். பூமிக்கு சுத்தி சந்திரன்தான் இருக்கும். பூமியை சுற்றி சந்திரன் தான் சுத்திகிட்டே இருக்கு அப்படிங்கிற மாதிரி ஒரு அமைப்பு இருக்கு அப்படின்னு சொல்லலாம்.

இன்னொரு விஷயம் சொல்லணும் அப்படின்னு பாத்தீங்கன்னா உடம்புல 70% வாட்டர் 30% தான் ஃபிளாஷ் எலும்பு இது சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் உடம்புல இருக்கு.

எப்படி அலைகள் வந்து  பிரம்மாண்டமா ரைஸ் ஆகுதுனு சொல்றோமோ, அதே சந்திரன் தான்  உடம்பில்ல இருக்கக்கூடிய தண்ணியையும் இயக்குகிறது அப்படின்னு சொல்லலாம்.

அப்போ மனம் சம்பந்தப்பட்ட வழி இயக்குவது அப்படின்னு சொன்னா சந்திரனுடைய மனப்பான்மை கொண்டு சொல்லலாம் அப்படின்னு சொல்லலாம்.

 

சாந்தகுமார் சார்:

சூப்பர் சார். நன்றி.

 

சத்ய நாராயணன் சார்:

நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/_RQmSQOIj9Q?si=gZLN1OkIUEb3j6vw

 

Comments