வாஸ்து பிரச்சனை சரியாக செய்ய வேண்டியவை

 வாஸ்து பிரச்சனை  சரியாக செய்ய வேண்டியவை


வீடியோ லிங்க் :

https://youtu.be/O-VC0p07k_E?si=ajraQEmoMsle50h-

- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

- ALP ஜோதிடர். 

வணக்கம். நண்பர்கள் எல்லோருமே வாஸ்து பத்தி தகவல் அப்படிங்கறத கேட்டிருந்தாங்க. இந்த வாஸ்துங்குறது பிரச்சனை இருக்குதா எங்க வீட்டுல வாஸ்து பிரச்சனை இருக்குதா. எங்களுக்கு பணம் சம்பந்தப்பட்டது நிலையாக இல்ல. எதுவாது குறை இருக்குதா? எங்க வீட்ல எந்தெந்த பொருட்கள் வாங்கலாம்? எந்தெந்த பொருள் வைக்கலாம்? இந்த இடத்தில பொருட்கள் இருக்கிறது சரிதானா? அப்படிங்கிற கேள்வி எல்லாருக்குமே இருக்கும்.

இப்ப வாஸ்து அப்படிங்கறது  நம்ம ஜாதகத்தின் அடிப்படையில தான் வாஸ்து அப்படிங்கறது சொல்லணும். ஏன் அப்படின்னா என்னுடைய ஜாதகம் எந்த அளவுக்கு இருக்குதோ என்னுடைய வாஸ்து அதே அளவுக்கு வேலை கண்டிப்பாக பார்க்கும்.

வீடு அமைப்பு எப்படி இருக்கும் ?

ஒரு ஜாதகம் கொடுத்தாலே அதுல வாஸ்துவோட தன்மை எப்படி இருக்குன்னு சொல்ல முடியும். இப்போ ஒருத்தவங்களுக்கு விருச்சிக லக்னம் அட்சய லக்னமாக இருந்தது வச்சுக்கோங்க. அவங்களுக்கு வீடு அமைப்பு எப்படி இருக்கும் பாத்தீங்கன்னா தற்போது  அவங்களுக்கு இந்த அடுக்கல அதாவது கிச்சன்ல வந்து வாட்டர் சர்குலேஷன் இருந்துகிட்டே இருக்கும். டேப்ல தண்ணி ஒழுகிக்கிட்டே இருக்கும்.

விருச்சிக லக்னம் :

இப்ப ஒருத்தவங்களுக்கு விருச்சிக லக்னம் அட்சய லக்னமாக இருந்தது அப்படின்னா இப்போ உங்க வீட்டு கிச்சன்ல டேப் லீக் ஆகிக்கொண்டே இருக்கும். இல்ல அப்படின்னா ஏதாச்சும் ஒரு லீக்கேஜ் மேல இருந்து டேங்க் கூட லீக் ஆயிட்டே இருக்கும். அந்த மாதிரி ஒரு தன்மை அப்படிங்கறது இருக்கும்.

 

சிலருக்கு வந்து என்ன பண்ணனும்னா இப்போ ஒரு ஆறு மாசமாக அட்சய லக்னம் போறவங்களுக்கு  விருச்சிக லக்னம்  போறவங்களுக்கு பாத்ரூம்ல வந்து  டைல்ஸ் வந்து உடைந்து போய்விடும். புது டைல்ஸ் அப்படிங்கறது நீங்க மாற்றக்கூடிய தன்மைங்கிறது உங்க ஜாதகத்தில் இருக்கும். உங்களுக்கு அதனால பணம் விரையம். எதிர்பார்த்ததை விட அதிகமான பண இழப்பு அப்படிங்கறது நீங்க இந்த பாத்ரூம்க்காக சிலர் வந்து குளோசெட் மாத்துவாங்க. அது உடைஞ்சு போயிரும் ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் சிங்க் குளோசெட் பிளஸ் இந்தப் பாத்ரூம் டைல்ஸ்சு இந்த டைல்ஸ் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அப்படிங்கறது இப்போ உங்களுக்கு இந்த காலகட்டத்தில்  நடக்கக்கூடிய  அமைப்பு அப்படின்னு சொல்லலாம். இது வந்து நான் பார்த்த ஜாதகம் கூட வச்சுக்கோங்க.

சாமி அறை எப்படி இருக்கும் ?

இதே மாதிரி இந்த பூஜை சாமி ரூம் எப்படி இருக்கும் பாத்தீங்கன்னா நல்ல காற்றோட்டமாக இருக்கும். விளக்கு வந்து சீக்கிரமாகவே அணைஞ்சிடும்.  இந்த காற்று வந்து மிகுதியாக இருக்கறதுனால விளக்கு அணையக்கூடிய ஒரு தன்மை அப்படிங்கிறது சொல்லாம்.  அதே மாதிரி பக்கத்துல வந்து வெக்கை அப்படிங்கறது ஜாஸ்தியா இருக்கும். பக்கத்து ரூம் பாத்தீங்கன்னா, ஹீட் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். அதுவே உங்களுக்கு பூஜை ரூம்ல இருக்குற பொருள்கள் பூவெல்லாம் போட்டிங்கனா டக்குனு வாடி போகக் கூடிய ஒரு அமைப்பு உங்களுக்கு அதிகமா இருக்கும். இதெல்லாம் வாஸ்து பிராப்ளம்மான்னு அப்படின்னு  கேட்டீங்கன்னா கண்டிப்பாக வாஸ்து அந்த வீட்ல ஏதாவது ஒரு குறைபாடு அப்படிங்கறது இருக்கும். இதோட ரிலேஷன் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

பணம் வரவு :

சரி. எனக்கு பணம் வரவு எப்படி இருக்கும் கேட்டீங்கன்னா பணம் வந்து வந்து போகக்கூடிய ஒரு தன்மையாக இருக்கும். கடந்த ஒரு வருஷம் ஆகவே உங்களுக்கு பணம் அப்படிங்கறது நிலையானதாக இருக்காது. வரவு செலவு வரவு செலவு அப்படிங்கிற மாதிரி தான் இருக்கும். வரக்கூடிய லாபம் கூட வராமல் போகக்கூடிய ஒரு தன்மை இந்த காலகட்டத்தில் விருச்சிக லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடிய நண்பர்களுக்கு அதிகமாகவே இருக்குதுன்னு சொல்லலாம்.

மேஷ லக்னம் :

இந்த மேஷ லக்னக்காரங்களுக்கு இதே ப்ராப்ளம் அதிகமாகவே இருக்கும். மேஷ லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடிய நண்பர்கள், வீடு கட்டினாலுமே அந்த வீட்டில தங்கக்கூடிய ஒரு யோகம் அப்படிங்கறது இப்போதைக்கு இல்ல. கிடையாதுன்னு சொல்லலாம்.

அட்சய லக்னம் உங்களுக்கு மேஷ லக்னமாக இருந்து வீடு கடந்த ஒரு வருஷமா நான் கட்டிட்டேன் ஆனா அதுல ட்ரான்ஸ்ஃபர் பண்ணி போகணும்னு நினைக்கிறேன் என்னால முடியல.

இல்லைன்னா வீட்டை கட்டிட்டு இருக்கேன் அதை முழுமை படுத்தனு பால் காய்ச்சி ஹவுஸ் வார்மிங் பண்ணி அந்த வீட்டுக்குள்ள போகணும்னு நினைக்கிறேன் அதுவும் என்னால முடியல. இவங்களுக்கு இதுல வாஸ்து குறைபாடு இருக்குதானா கண்டிப்பாக இருக்கு.

அந்த வீட்டை அனுபவிக்கக்கூடிய தன்மை என் ஜாதகத்தில் தற்போது இல்லை அப்படிங்கறது தான் உண்மை. சிலர் வீடு கட்ட ஆரம்பிச்ச உடனே அந்த லோன் பிராப்ளம் அப்படிங்கறது வீடு அப்படியே தடைபட்டிடும். அங்க சரியா இருக்காது.

அதே மாதிரி பூஜா ரூம்ல ஏதாச்சும் ஒரு பிரச்சனைகள் அப்படிங்கறது அவர்களுக்கு இருந்துண்டே இருக்கும். அதுவுமே அவங்களுக்கு ஒரு திருப்திகரமாக அங்க இருக்காது. இருட்டு அடஞ்சிருக்கும் லைட் போடுறோம்னு போடுவாங்க அங்க வந்து சரியா இயங்காது. நிறைய ஜாதகங்கள் பார்த்திருக்கோம்.

வாஸ்துல நம்ம வீட்டை மட்டும் கிடையாது சுற்றும் சிலருக்கு வந்து ஃபாரின் போகக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது சொல்லலாம். வீடு கட்டி கொஞ்ச நாள்லயே அவங்க ஃபாரின் போய்டுவாங்க இந்த வீடுங்கிறது இங்க தான் இருக்கும். கணவன் மனைவி சேர்ந்து போயிருவாங்க. கட்டின வீடு அப்டிங்குறது அது அனுபவிக்க முடியாத ஒரு தன்மை சொல்லுவாங்க.

சில பாகங்கள் வலுத்திருக்கும் போது இவங்களுக்கு நோய் சம்பந்தப்பட்டது அப்படிங்கிறது அதிகமாகவே இருக்கும். கேன்சர் சம்பந்தப்பட்டது சிலருக்கு வந்து கடன் சம்பந்தப்பட்டது. சிலருக்கு வந்து கல்லீரல் பாதிப்பு இது மாதிரி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

என்ன தீர்வு:

சரி, இதற்கு எல்லாமே என்ன தீர்வு அப்படிங்கறது கேட்கலாம். ஒருத்தவங்களுக்கு வாஸ்து சம்பந்தப்பட்ட பிராப்ளம் இருக்குது. எனக்கு அது தெரியுது. பட் என்னால அதை தற்போது நிவர்த்தி பண்ண முடியல. தற்கால கட்டத்துக்கு நான் என்ன பண்ணனும் உங்களுடைய ஜாதகம் அப்படிங்கிறது வாஸ்துவுக்கு நிவர்த்தி காலமாக இருந்தால் மட்டுமே அதனுடைய வீட்டு அமைப்பு அந்த வருமானம் சம்பந்தப்பட்ட அமைப்பு அப்படிங்கிறது உங்களுக்கு நல்லா இருக்கும்.

இல்ல அப்படின்னா கண்டிப்பாக உங்களுக்கு ஒரு அழுத்தமும் அங்கு ஒரு விரையமும் அப்படிங்கிறது கொடுத்தே தீரும்.

இப்போ உங்களுக்கு மேஷ லக்னம் அட்சய லக்னம் ஒருத்தங்க  வீடு வாங்குறாங்கன்னு பாத்தீங்கன்னா இப்ப நீங்க வீடு வாங்கக்கூடிய வீடு அப்டிங்குறது அங்க நிலம் சம்பந்தப்பட்டது டாக்குமெண்ட்ஸ் ப்ராப்ளம் அப்படிங்கறத உங்களுக்கு கண்டிப்பாக குறிக்காட்டும்னு சொல்லலாம் அதுல எந்த மாற்றமும் கிடையாது.

வீடு வாங்கும் போது ஒன்னுக்கு ரெண்டு தடவ சிந்தித்து வாங்குறது அப்படிங்கறது ரொம்ப சிறப்பா இருக்கும். இதுக்கு எல்லாமே ஒரு நிவர்த்தி என்னன்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு வாஸ்து பிராப்ளம் வீட்ல இருக்குதா? முதல்ல நீங்க செய்ய வேண்டிய முதல் பரிகாரம் அப்படிங்கிறது வீட்டுல வந்து ஒரு சாண்டிங் பாக்ஸ் ( chanting box) அதை வாங்கி வைக்கிறது நல்லா இருக்கும். வீட்ல எப்போதுமே சுவாமி ரூம்ல ஒரு சாண்டிங் பாக்ஸ் வச்சுட்டு இல்லனா வீட்டுக்கு ஹால்ல வச்சுட்டு ரொம்ப மைல்டா ஏதாவது ஒரு சுவாமியோட மந்திரம் அப்படிங்கறது உச்சரிச்சுண்டே இருக்கணும். நிறைய மாற்றம் அதிர்வலைகள் ஒலி அலைகள் அப்டிங்குறது அந்த வீட்டோட தன்மைகளை அப்படியே மாத்தும். அதே மாதிரி வீட்ல இருக்க கூடிய உங்களுடைய மனம் அப்படிங்குறதும் கண்டிப்பாக மாற்றம் அடையும் அப்படிங்கறது சொல்லலாம்.

அதே மாதிரி இன்னொன்னு என்னன்னு பார்த்தீங்கன்னா உங்க வீட்ல எப்போதுமே ஒரு வேவிங் லென்த் இருந்துகிட்டே இருக்கும். ஃபர்ஸ்ட் சாண்டிங் பாக்ஸில் ஃபுல் ஃபில் சொல்லலாம்.

இரண்டாவது வந்து வீட்ல வந்து நீரோட்டம் சிலர் வந்து செயற்கையான  நீரோட்டம்  சொல்லுவாங்க. புத்தர் சிலை கணபதி சிலை வைக்கிறது வந்து  நீர் போற மாதிரி அந்த மாதிரி ஒரு இது இருக்கு. அது வாங்கி வீட்ல வைப்பாங்க அது வந்து ரொம்ப சிறப்பு.

 

இயற்கையான நீரோட்டமா இருந்ததுனா ரொம்ப விசேஷம். அது நம்ம வைக்க முடியாது  செயற்கையானது வைக்கக் கூடியது நன்றாக இருக்கும்.

அது மாதிரி செடி வளர்ப்பாங்க வீட்டுக்குள்ள. அது வந்து ஒரு குட் பைபிங்னு சொல்லலாம். ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட பிரச்சனைன்னு சொல்லுவாங்க. பட் அந்த செடி வளர்க்கிறதுளையுமே வீடு வந்து நிறைய மாற்றங்களை கண்டிப்பாக தெரியும். இந்த மணி பிளான்ட் வந்து வீட்ல வளர்ப்பாங்க. அது நிறைய மாற்றம் அந்த வீட்டோட தன்மைகளையும் மாத்தும்.

அந்த வீட்ல உள்ள நமக்கு மணி அப்படிங்கிறது அந்த மணி ப்லோ அப்படிங்கிறது நல்லா இருக்கும். அது வந்து நம்ம சுத்தமாக பராமரிக்கிறதுல ரொம்ப நல்லா இருக்கும். அதுவும் அந்த வாட்டர்ல இருக்கனும். நம்ம சட்டில மண் போட்டு வளர்க்கிறத விட அந்த தண்ணிக்குள்ள வளர்க்கிறது அப்படிங்கறது ரொம்ப சிறப்பா இருக்கும். தேவையான அளவு வளர்த்தா போதும். அதுக்கப்புறம் வெட்டி விட்டா கூட ஓகே தான். வளர்த்துக்கொண்டே இருக்கணும். அந்த வாட்டர் சர்குலேஷன் என்கிறது அந்த வீட்ல இருக்கணும்.

சில வீடுகள் எல்லாம் பார்த்தீங்கன்னா மீன் தொட்டி வாங்கி வைப்பாங்க. நீங்க நிறைய ஹோட்டல்ஸ்ல எல்லாம் பார்த்தீங்கன்னா, வாஸ்து பிராப்ளம் அவங்களுக்கு இல்லாம இருக்குமானா கண்டிப்பாக இருக்கும். அரோமா சொல்லுவாங்க. அந்த மீன வந்து பிரண்ட்லயே அவங்க வச்சிருப்பாங்க. பெரிய கிளாஸ்ல வச்சிருப்பாங்க. அந்த வாட்டர் பாத்தீங்கன்னா ரொம்ப ஃப்ரெஷ்சா இருக்கும். அதுக்கு ஆக்சிஜன் எல்லாம் கொடுத்திருப்பாங்க.  அந்த நீர் எப்போதுமே அவர்களுக்கு சுத்தமாக இருக்கும். வீட்ல வைக்கக்கூடிய நீராக இருந்தாலும் சரி பிளான்ல வளர்க்கக்கூடிய நீராக இருந்தாலும் சரி, அது எப்போதுமே சுத்தமாக இருக்கணும்.

இந்த வீட்ல வந்து மீன் வளர்ப்பது மீன் தொட்டி வளர்க்கிறது அந்த மீன் தொட்டி ரொம்ப சுத்தமா இருக்கணும். அந்த மீன் வந்து அதுல இருக்கும் போது அந்த தண்ணியோட சலனம் அப்படிங்கறது உங்க வீட்டோட தன்மைகளை மாற்றும். இது ஒரு பெரிய பரிகாரமா சொல்லப்படுது.

 

இது என்னன்னு பார்த்தீங்கன்னா இத வளர்க்க கூடிய முறைன்னு ஒன்னு இருக்குது. ஏழு வந்து கோல்ட் பிஷ் சொல்லுவாங்க ரெண்டு வந்து பிளாக் பிஷ். தங்க நிறத்தில் இருக்கிற மீன்  ஏழாகவும். இரண்டு வந்து பிளாக் ஃபிஷ் அப்படிங்கிறது இருக்கணும். அது அப்படி இருந்தது என்றால் வீட்டோட வாஸ்து பிராப்ளம் அப்படிங்கறது கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு கம்மியாயிட்டே  இருக்கும்.

அது போட்ட உடனே மீன்கள் எல்லாம் கொஞ்சம் சரியில்ல அப்படின்னு சொன்னீங்கன்னா வாஸ்து பிராப்ளம் வீட்ல நிறைய இருக்குதுன்னனு அர்த்தம். சில வீடுகள்ல பாத்தீங்கன்னா அந்தக் கிளாக் வால் கிளாக் வந்து ஆடினே இருக்கும். அத வாங்கி வைப்பாங்க. ஒரு அசைவு அதுக்கு 24 மணி நேரம்  24× 7 அது அசைஞ்சுக்கிட்டே இருக்கும். அது வந்து ஒரு  அதிர்வலை தான் இயங்க கூடியது. அதுல வந்து வாஸ்து பிராப்ளம் சரியாகும்மானா கண்டிப்பாக சரியாகும்.

சிலர் வீட்ல ஈசி சேர் பழைய காலங்களில் பாட்டிகள் தாத்தா இருக்கிற வீடுகள் எல்லாம்  பாருங்க ஈசி சேர் வச்சிருக்பாங்க. அங்கயுமே வாஸ்து ப்ராப்ளத்திற்கு அது ஒரு நிவர்த்தி  சொல்லுவாங்க ஹால்ல போட்டு அவங்க ஆடுவாங்க. அந்த வெவிங்  அப்படிங்கறது அந்த வீட்ல இருந்துட்டே இருக்கும்.

இன்னும் சொல்ல போனீங்கன்னா பழைய தளவாடு வீடுகள் ன்னு சொல்லுவாங்க. அக்ரகார வீட்ல எல்லாம் ஊஞ்சல் கட்டி இருப்பாங்க. அக்ரகாரத்தில இல்ல எல்லா வீடுகள்லயுமே மேக்சிமம் ஊஞ்சல் இருக்கும். இந்த  ஊஞ்சல் அப்படிங்கறது  பெரிய வாஸ்து நிவர்த்தினு சொல்லலாம்.

இந்த அளவுல ரொம்ப ரொம்ப முக்கியமான வீடுகள்ல ரொம்ப ரொம்ப இப்ப இருக்கிறதுக்கு 4 அடி சுவர், 4 அடி வீடு அதுல ஊஞ்சல் போட முடியாது. ஆனால் அன்றையுள்ள 10 ஹால்  அப்படியே நீளமா இருக்கும் அதுல ஒரு ஹால்ல கண்டிப்பாக ஊஞ்சல் அப்படிங்கறது எல்லா வீட்லயுமே இருக்கும். அது வந்து மிகப்பெரியது.

பழையதை கழித்தல் :

அதே மாதிரி  வர்ஷா வருஷம் வீட்ல வந்து என்ன பண்ணுவாங்க அப்படின்னா ஒயிட் வாஷ் பண்ணுவாங்க. உங்களுக்கு தெரிந்தது இந்த பொங்கல் டைம்ல வந்து வைட் வாஷ் பண்ணுவாங்க. ஏன் அப்படின்னா பழையதை வந்து கழிக்கணும்னு. இந்த போகி கொண்டாடுவது உங்களுக்கு நோக்கம் அப்படிங்கிறது அதுதான். பழையதை கழித்தல் நம்ம வீட்ல பார்த்தீங்கன்னா எல்லாமே பழசாதான் இருக்கும். தேவையில்லாத பொருள்களாக தான் இருக்கும். அதைத்தான் ரொம்ப ரொம்ப பத்திரமா நம்ம  பீரோல்ல அடுக்கி வச்சிருப்போம். புதியது அப்படிங்கறது பாத்திங்கனா ரொம்ப கம்மி. பழையது பொக்கிஷமாக நம்ம எடுத்து வச்சிருப்போம். அதுவுமே வாஸ்துவுக்கு ஒரு மிகப்பெரிய ஒரு காரணமாக அமைகிறது.

அந்த பழையதை  வர்ஷா வருஷம்  இந்த போகி பண்டிகை அப்போம் எப்போ களைய சொல்றாங்களோ அதாவது மாற்ற சொல்றாங்களோ  அதுதான் நமக்கு பெரிய நிவர்த்தி.

அன்னைக்கு பெரியவங்க இந்த வாஸ்துக்காக போகி கொண்டாடுவது. பிளஸ் வீட்ல  ஒயிட்வாஷ் பண்றது ஒயிட் வாஷ் பண்ணும் போது என்ன பண்ணுவோம் இந்த பொருளை இந்த பொருளை எங்கிருந்து நான் மாத்தி வச்சு அதை ஒயிட் வாஷ் பண்ணிட்டு மறுபடியும் அதே இடத்தில் நான் கொண்டு வைக்கிறேன்.

அப்ப அந்த பொருள் அந்த இடத்துல இருந்து சலனமாகி அடுத்த இடத்துக்கு போகுது. ஒரு பொருள் வந்து ஒரு 41 நாள் ஒரு இடத்தில் இருந்தாலுமே அதுல சிறு அந்த வாஸ்து அப்படிங்கறது அதுல தாக்கம் இருக்குமானா கண்டிப்பாக இருக்கும்.

பெரியவங்க சொல்லுவாங்க அந்த பீரோல நகட்டிட்டு பெருக்குன்னு சொல்லுவாங்க. அந்த கட்டில நகட்டிட்டு பெருக்குன்னு சொல்லுவாங்க. அந்த சலனம் அந்த கட்லுக்கும் அந்த பீரோலுக்கும் இருக்கணும் அப்படிங்கறது அன்னைக்கே எங்க பாட்டி தாத்தா எங்க கிட்ட சொல்லி இருக்காங்க. நாங்க கேட்டிருக்கோம்.

எங்க பாட்டி ரொம்ப முக்கியமா சொல்லி இருக்காங்க சலனம் அப்படிங்கறது இருக்கணும். ஒவ்வொரு பொருளுக்கும் சலனம் அப்படிங்கறது தேவை. முயற்சி பண்ண 41 நாளைக்கு ஒரு பொருளை வந்து ஒரே இடத்தில் வைக்க கூடாது. கொஞ்சம் நகட்டி வைத்துவிட்டு தான் வைக்கணும்னு சொல்லுவாங்க.

சபரிமலைக்கு கட்டு கட்டி போனவங்களுக்கு தீபம் ஏற்றும்போது தீபம் திருப்பி வரும்போது அந்த விளக்கு ஒரு நிமிஷம் மாத்தி வச்சிட்டு வையிங்க அப்படின்னு சொல்லுவாங்க. ஏன்னா அடுத்து வர 41 மணி நேரம் சாமி மலைக்கு போயிட்டு வந்தவங்க விளக்கு அப்படியே தான் எரிஞ்சுட்டு இருக்கும். அந்த விளக்கு ஒரு நிமிஷம் மாத்தி  வைக்கிறத கூட நிமித்தமாக அவங்க வச்சிருக்காங்க. ஒரு ஐதீகமா வச்சிருக்காங்க. 

வாஸ்து நம்ம முன்னோர்கள் செஞ்சது. நம்ம இன்னிக்கு யாருமே  செய்றது கிடையாது.  20 வருஷத்துக்கு முன்னாடி வாஸ்து பிராப்ளம் இருந்ததானா கண்டிப்பாக கிடையாது. இப்போ உள்ள ஜெனரேஷனுக்கு தான் வாஸ்து பிராப்ளம் இந்த வீட்டிலிருந்து ஒரு பொருளை கொண்டு வைக்கிறோம்னா அடுத்த வீட்டுக்கு போற வரைக்கும் அந்த பொருள் அங்கே தான் இருக்கும். அதுல தான் உங்களுக்கு வாஸ்து பிரச்சனை அப்படிங்கறது இருக்குது.

 பரிகாரம் :

எந்த பொருளாக இருந்தாலும் சரி அதைத் துடைத்து அதை மாற்றி அந்தப் பொருளை அசைத்து சளைத்து வைக்கிறது அப்படிங்கறது  வாஸ்துவிற்கு மிகப்பெரிய பரிகாரமாக இருக்குது. எல்லாமே நம்ம கையிலதான் இருக்கு. உருவாக்குவதும் நம்மளே அழிப்பதும் நம்மளே அப்படிங்கறது சொல்லலாம்.

ஒரு சின்ன சின்ன முயற்சிகளால் இதால மாத்த முடியுமானா கண்டிப்பாக மாற்ற முடியும். தேவையில்லாத பொருள்கள் அப்படிங்கறது கண்டிப்பாக மாத்தணும்.  விளக்குகிறது வீட்டில் எரிஞ்சுகிட்டே இருக்கணும்.

என்ன பண்ணுவாங்கன்னா பெரியவங்க சொல்லுவாங்க ஒரு நேரம் ஒரு காலம் திங்கட்கிழமை சாயந்திரம் விளக்கு ஏத்தணும்னா திங்கட்கிழமை ராத்திரி மட்டும் அந்த விளக்கு அப்படிங்கிறது எரியனும். எரிஞ்சது அப்படின்னா அந்த வீட்ல என்ன ஒரு பிரச்சனைகளாக இருந்தாலும் அந்த விளக்கின் ஒளியின் மூலமாக ராத்திரி ஃபுல்லா அந்த வீடு வெளிச்சத்தில் இருக்கும். ரொம்ப ஒரு  விசேஷமானதுன்னு சொல்லுவாங்க இன்று அளவிலும் நிறைய வீடுகள்ல நான் பரிகாரமா சொல்லக்கூடியது. 

ஒரு நாள் மொத்தமா விளக்கேத்தி வைங்க அப்படின்னு அந்த சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மறுநாள் சூரிய உதயம் வரை. அந்த விளக்கு அப்படிங்கிறது ஏத்தி வைக்கணும். அதுல நிறைய எண்ணெய் விட்டு ஏத்தி வைங்க முடிஞ்சா கொஞ்சம் நறுமணம் சார்ந்த பொருட்கள் அப்படிங்கறது கொஞ்சம் ஏற்றி வச்சிட்டு வாங்க ரொம்ப விசேஷமாக இருக்கும்.

நம்ம ஒரே ஒரு நாள் மட்டும் தான் எனக்கு தெரிந்து பண்ணுவோம் சரஸ்வதி பூஜை அன்னைக்கு மட்டும்தான் அந்த பூஜை ரூம்ல அன்னிக்கு ராத்திரி மொத்தமா விளக்கேத்தி வைக்கிற ஒரு பழக்கம் அப்படிங்கறது அன்னைக்கே இருக்கும். பாக்கியுள்ள நாட்களில் இருக்குமான்னு எனக்கு தெரியாது.

அப்ப வாஸ்து அப்படிங்கறது நம்மளாகவே ஏற்படுத்தக்கூடிய ஒரு தன்மை. வாஸ்து பிராப்ளம் நாமளாக ஏற்படுத்தக்கூடிய ஒரு தன்மை. இது வீடு அளவு மட்டும் தான் நான் சொல்லி இருக்கேன் இன்னும் நிலம் அளவு அப்படிங்கறது அதிகமாக இருக்குது. அடுத்த ஒரு வீடியோல அத பத்தி பார்ப்போம்.

நன்றி.

Comments