மறுமண நிகழ்வைப் பற்றிய ஜாதகம்
வீடியோ
லிங்க்
:
https://youtu.be/z8oHJJp1m_8?si=NGqGThR3Cj3edrwO
-
ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.
-
ALP ஜோதிடர்.
வணக்கம்.
என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். நான் திருவனந்தபுரத்தில்
இருக்கிறேன். நிறைய ஜாதக ஆய்வுகள் அட்சய லக்ன பத்ததி முறையில் நம்ம
பார்த்திருக்கோம்.
இப்போ
ஒரு சின்ன ஜாதகம் நான் முழு ஜாதகம் இங்க பதியல. ஏன்னா இரண்டே இரண்டு கிரகங்கள்
வச்சு அவங்க கேட்கக்கூடிய கேள்விகளுக்கு விளக்கமான பதில் நம்ம ALP
கிடைக்கும் அப்படிங்கறதுக்காகதான் இங்க சம்பந்தப்பட்ட கிரகங்களை மட்டுமே இங்க
பதிவு பண்ணி இருக்கேன்.
ALP கன்னி லக்னம் :
இந்த
ஜாதகர் பிறப்பு லக்னம் ரிஷபம். இப்ப ALP லக்னம்னு சொல்லக்கூடியது
கன்னி லக்னம் சித்திரை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் போய்கிட்டு
இருக்கு.
இங்க
லக்ன அதிபதி எங்க இருக்காருன்னு பாத்தீங்கன்னா ஆறாம் இடத்தில் கும்பத்தில்
அமர்ந்திருக்கிறார். ஜாதகருக்கு வேலை அழுத்தம் அப்படிங்கறதுல ஜாதகர்
அமர்ந்திருக்கிறார்.
அதே
மாதிரி நட்சத்திரப் புள்ளினு சொல்லக்கூடிய செவ்வாய் எங்க இருக்காருன்னா ஏழாம்
இடத்தில் மீனத்தில் இருக்கிறார். அவர் யாருன்னு கேட்டீங்கன்னா மூன்றுக்கும்
எட்டிருக்கும் அதிபதி ஏழாம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.
இந்த
ஜாதகிக் கேட்ட கேள்வி முதல் திருமணம் அப்படிங்கறது முடிவடைந்து விட்டது. இரண்டாம்
திருமணத்திற்கான அமைப்பு இருக்குதா அப்படிங்கற மாதிரி தான் இந்த ஜாதகி
கேட்டாங்க. இந்த ஜாதகி கிட்ட சொன்னோம்.
ஹஸ்தம்
நட்சத்திரம்
:
இந்த
ஜாதகிக்கு அதாவது இங்க ஹஸ்தம் நட்சத்திரம் சந்திரனோட நட்சத்திர
புள்ளிகள் போகும்போதே ஹஸ்தம் நட்சத்திரம் போகும்போதே இரண்டாம்தார அமைப்பிற்கு
யோகம் வந்திருக்கும் அப்படிங்கறது சொன்னோம். நான்கு வருடத்திற்கு முன்பே
அப்படின்னு சொன்னோம். அவங்க ஆமாம்னு சொன்னாங்க.
நீங்க
சொன்னது சரிதான்.
எனக்கு நாலு
வருஷத்துக்கு முன்னாடியே ஒரு நண்பரோட நான் பழகிட்டு இருக்கேன். இப்போ திருமணம்
செய்து கொள்ளலாமா அப்படிங்கறத அவங்களுடைய கேள்வி. நாலு வருடமாக வெயிட் பண்ணி இப்ப
பண்றீங்க அப்படின்னா கண்டிப்பாக இதுல ஒரு சிறு பிரச்சனை இருக்குமா.
செவ்வாய்
பகவான்
:
ஏன்னா
இப்போ செவ்வாயோட நட்சத்திர புள்ளி போய்க்கிட்டு இருக்கு. அவர் வந்து
அஷ்டமாதிபதி அந்த அஷ்டமாதிபதி வந்து ஏழாம் இடத்தில் அமர்ந்திருக்கிறதுனால
கண்டிப்பாக இந்த காலகட்டத்துல அதாவது தற்போது செய்யக்கூடிய திருமணம் அப்படிங்கிறது
சிறு பிரச்சனைகளையும் பிரிவுகளையும் தான் தரும்.
இப்போ
உங்களுக்கு மனம் அப்படிங்கறது ஒரு நிலையான ஒரு எண்ணம் இல்ல
அப்படிங்கற மாதிரி சொன்னோம் அவங்ககிட்ட. அஷ்டமாதிபதி நட்சத்திர புள்ளி தான்
இவருக்கு இந்த கன்னி லக்னத்திற்கு போய்கிட்டு இருக்கு.
சரி
,இரண்டாம் திருமணத்திற்கு
என்ன எல்லாம் பொசிஷர் அப்படின்னு நமக்கு தெரியும். 11 ஆம் அதிபதி சம்பந்தப்படனும்
2 ஆம் அதிபதி சம்பந்தப்படனும். 11 ஆம்
அதிபதி யாருன்னு கேட்டீங்கன்னா சந்திர பகவான். அவர் எங்க
அமர்ந்திருக்கிறார் அப்படின்னா கன்னி லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் மகரத்தில்
அமர்ந்திருக்கிறார்.
இந்த
லக்னாதிபதியும் இந்த நட்சத்திர புள்ளி, அதாவது 11 ஆம் அதிபதின்னு சொல்லக்கூடிய
சந்திரன் எப்படி உட்கார்ந்திருக்கிறார் என்றால் லக்னாதிபதியிலிருந்து 12ஆம்
இடத்தில் அதாவது விரைய ஸ்தானத்தில். அப்போ இந்த காலகட்டத்தில் செய்யக்கூடிய
திருமணம் அப்படிங்கிறது கொஞ்சம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதுலயும்
பிரிவு அப்படிங்கிற மாதிரி தான் காட்டுது.
அதனாலதான்
கவனமா பேசுங்க கவனமாக பழகுங்க. இந்த காலகட்டத்தில் திருமணம் செய்வது வேண்டாம்.
இப்படியே நட்பாக இருங்க அப்படிங்கறது தான் இந்த ஜாதகருக்கு சொன்னோம்.
ஏன்னா
இப்ப சித்திரை நட்சத்திரம் ஒன்று சித்திரை நட்சத்திரம் 2 வரும்போதே செவ்வாய்
அஷ்டமத ஸ்தானத்தில் தான் இருக்கிறார். இது இரண்டாம் தார திருமணமாகவே இருந்தாலுமே
இவருக்கு பிரச்சனை பிரச்சனை தான்.
ஏன்னா
இங்க லக்னப்புள்ளி மாற்றம் வரும் போதுமே அதாவது (துலாம் ALP வரும் போதுமே)
இங்கே சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் வரும். மூன்றாம் பாதம்
இயங்கும் போது மறுபடியும் ஏழாம் அதிபதி ஆறாம் இடத்தில் தான்
உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு பிரிவு ஒரு பிரச்சனை அப்படிங்கிறது தான்
காமிக்குது. கவனமாக செயல்படுங்கள் இந்த காலகட்டத்திற்கு இது ஒத்து வரல. உங்க நட்பை
நட்பாகவே தொடருங்கள் அப்படிங்கற மாதிரி இந்த ஜாதகருக்கு நம்ம பலனா சொன்னோம்.
அவரும் புரிந்து கொண்டார்.
அவர்
மனோபாவம் சொல்லக்கூடிய ஏன்னா அஷ்டமாதிபதி நட்சத்திர புள்ளி சம்பந்தப்படுறதுனால
இவருடைய மனம் ரொம்ப அழுத்தமான ஒரு சூழ்நிலை ஒரு விரைய சூழ்நிலை அப்படிங்கற
மாதிரி தான் காட்டுது. அதற்கு அட்சய லக்ன பத்ததின்படி அவருக்கு உண்டான
பரிகாரங்கள் சொல்லி இருக்கோம்.
இன்னும்
நான்கு வருடங்கள் கொஞ்சம் அமைதியாக இருப்பது சிறப்பு. அதுக்கப்புறம் யோசிங்க
திருமணத்தைப் பற்றி அப்படிங்கறது இந்த ஜாதகருக்கு பலனாக சொன்னோம்.
மூன்று
கிரகங்கள்
:
ஏன்
இத சொல்றேன்னா ஒரு லக்னம், லக்ன நட்சத்திரம் அந்த
லக்னாதிபதி அது சம்பந்தப்பட்ட கேள்வி இந்த மூன்று கிரகங்கள் 4 கிரகங்கள் வைத்தே
அந்த ஜாதகருடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கு அப்படிங்கிறது நம்மளால சொல்ல
முடியும். இது அட்ச லக்ன பத்ததியில் மட்டுமே சாத்தியம். இதை எங்களுக்கு கற்றுக்
கொடுத்த எங்கள் குருநாதர் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு
நன்றி கலந்த
வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள். மீண்டும்
ஒரு ஜாதக ஆய்வில் சந்திப்போம்.
Comments
Post a Comment