கடனில் இருந்து தப்பிப்பது எப்படி?

கடனில் இருந்து தப்பிப்பது எப்படி?



வீடியோ லிங்க் :https://youtu.be/lpfKCzKKlDs?si=bZ4uZnXcP0jU0hpQ


- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட் மற்றும்  ஸ்ரீ குரு டாக்டர் சாந்தகுமார்.

- ALP ஜோதிடர்கள்.

 

வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட். வணக்கம் சார்.

 

வணக்கம். நான் சாந்தகுமார், ALP அஸ்ட்ராலஜர், சென்னையில் இருந்து.

அதாவது நீங்க சொல்லியிருந்தீங்க வருமானத்தை பத்தி, கடன பத்தி. மக்கள் வந்து கடன் அப்படிங்கறது தான் மறுபடி மறுபடி  முன் வைக்கிறாங்க. அதற்கு மூல காரணம் என்ன? இந்த கடன் வாங்காம  தப்பிக்கிறதுக்கு எப்படி? என்ன வழி.

சார் :

நல்ல கேள்வி இப்ப கடனுங்குறது அத்தியாவசியமான நிகழ்வாகவே மாறி போயிருக்கு. கடன் வந்து தவிர்க்க முடியாத இடத்தில் தான் இருக்கும். கடன் தப்பான விஷயமும் கிடையாது. நம்ம ஏற்கனவே பணத்த பத்தி ஒரு வார்த்தை போன தடவை  பேசினோம் கத்தி அப்படின்ற மாதிரி.

கத்திங்கிறது யார் கையில் இருக்கின்றது பொருத்துதான் அது நல்லதா கெட்டதான்னு இருக்குதே தவிர கத்தி நல்லது கெட்டது கிடையாது. கத்தி ஒரு டாக்டர் கையில இருந்தா நல்ல விஷயத்துக்கும், அதுவே ஒரு கொலைகாரன் கையில் இருந்தா ஒரு உயிரை எடுப்பதற்கு பயன்படும்னு சொல்றோம். அந்த மாதிரி தான் பணம். பணம்னு வந்ததுனா வருமானமும் அப்படித்தான் கடனும் அப்படித்தான். கடனும் நல்ல கடன்னு இருக்கு கெட்ட கடன்னு இருக்கு.

நல்ல கடன் எது? கெட்ட கடன் எது?

ஜோதிட ரீதியா முதல்ல பேசுவோம். அப்புறம் பொருளாதாரம்  ரீதியாகவும் அது எப்படி என்று பார்க்கலாம்.

ஜோதிட ரீதியா லக்னம் வந்து அதாவது லக்னாதிபதியோ நட்சத்திராதிபதியோ 6 ல போய் நின்னா அது ஜாதகரா ஏற்படுத்தக்கூடிய கடன். இது நல்ல கடன்னே சொல்லுவேன். இது சரியா பயன்படுத்திக்க முடியும். திட்டமிட முடியும். ஜாதகரா உருவாக்கிறதனால தன் தேவை உணர்ந்து எனக்கு  இவ்வளவுதான் பணம் தேவை அப்படின்னு சொல்லி முடிவெடுத்து ஜாதகர் போய் கடன் வாங்கிக்குவார். இந்த அமைப்பு நல்ல கடன்.

 

இதுவே ஆறாம் அதிபதி 6 க்கு பொறுப்பானவர் யாரோ அவர் போய் லக்னத்தில் உட்கார்ந்தார் வச்சுக்கோங்களேன் கடன் தேடி வரும். நமக்கெல்லாம்  கால்ஸ் வரும். உங்களுக்கு ஃப்ரீ அப்ரூவ்ட் லோன் வந்திருக்குங்க அப்படின்னு சொல்றதை கேட்டு இருப்பீங்க. இந்த ஃப்ரீ அப்ரூவ்ட்  லோன் அப்படின்னா அவங்க எனக்கு வந்து பணம் தேவையே நான் உணரல.  தேவை இருந்தா நான் பேங்க் போய் அப்ரோச் பண்ணி எனக்கு கடன் கொடு அப்படின்னு கேட்டா இத கூட அதை கொடு என்று ஏகப்பட்ட டாக்குமெண்ட் கேட்டு உங்களுக்கு எலிஜிபிலிட்டி இருக்குன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு தான் அந்த லோனை சான்ஷன் பண்ணுவாங்க.

இங்க அப்படியே உல்ட்டால இருக்கும். அவங்க முதல்ல ஒரு அமௌன்ட சான்ஷன் பண்ணி விடுவாங்க .

ஃபார் எக்ஸாம்பிள் 2 கோடி ரூபாய் சான்ஷன் ஆயிடுச்சுங்க உங்களுக்கு அப்படின்னு வந்துருச்சு. இதை நீங்க தேவையே இருக்கல உங்களுக்கு பிராக்டிகலா கரெக்டா. உங்களுக்கு தேவை உணராத போது உங்களை தேடி வரும் கடன் உங்களுக்கு பேட்  டெபிட் முதல்ல. இது முதல்ல புரியணும்.

உங்களுக்கு பணமே தேவைப்படல திடீர்னு உங்ககிட்ட பணம் வருதுன்னு உடனே வர்றத  பயன்படுத்திக்கணும் அப்படிங்கிற ஆசைதான் முதல்ல வரும் கரெக்டா.

 

அப்போ இந்த பணம் வந்த பிறகு தான் அந்த பணத்தை என்ன பண்ணனும் அப்படிங்கற திட்டமிடலே நடக்குது.

இது பொதுவா இப்ப நான் வந்து ஒரு வீடே வாங்கணும்னு நினைக்கிறேன் அப்படின்னா ஒரு 40 லட்சத்துல என்னால அடைக்க முடியும்னு பார்த்துட்டு ஒரு 35 லட்சம் லோன் எடுத்து அந்த வீடு வாங்குவதற்கு நான் முயற்சி பண்ணுவேன். இதே உல்ட்டால ரெண்டு கோடி ரூபா சான்ஷன் ஆயிடுச்சுன்னா இருக்கிற வீடு ஏன் 40 லட்சத்துல கட்டணும் ரெண்டு கோடிக்கு கட்டனும்னு கெட்டிடுவேன். கற்றது ஒண்ணும் பெருசா இருக்காது. ஆனா கட்டி முடித்த பிறகு தான் இந்த கடனை அடைக்கிறதுக்கான வசதி என்கிட்ட இல்லை அப்படிங்கிற நிலைமையில இந்த கடன் வந்து பேட் டெபிட்டா மாறும்.

அப்போ நம்ம புரிஞ்சிக்க வேண்டியது கடன் நல்லது கெட்டது இல்ல. கடன நான் என்ன மாதிரி வாங்குறேன். என்னுடைய தேவைக்கு தகுந்த மாதிரி வாங்குறேனா தேவைக்கு மீறி வாங்குறேனா அப்படிங்கறது பொறுத்துதான் கடன் நல்ல கடனா கெட்ட கடனா அப்படிங்கறது.

 

மேம்:

கண்டிப்பா சார். நீங்க சொல்ல வர்றது என்னன்னா அந்த ஜாதகருடைய  பேராசையின் காரணமாக ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வு அப்படிங்கறது தான் கடன் மட்டுமே.

பூர்வ ஜென்ம தொடர்பு :

சார்:

அப்படி இல்லமா. இது இன்னொரு விஷயமா பார்க்கலாம். இது பூர்வ ஜென்ம தொடர்பு இந்த கடன் வாங்கியே தீரணும் என்கிற அமைப்பு. அதனாலதான் ப்ரீ அப்ரூவ்ட் லோனு வந்து நிக்குது. உங்களை யாராவது கதவ தட்டி உங்களுக்கு பணம் தரேன்னு சொல்றாங்கனா அது ஒரு ட்ராப்னு நேச்சுரலா உங்களுக்கு புரியும். நீங்க ஆனா இந்த இடத்துல அதைத் தவிர்க்க முடியாத இடத்தில் தான் இருப்பீங்கறதுதான் விஷயம்.

ஆனா இந்த இடம் வரும் போதும் உங்களுக்கு உண்மையிலேயே கிரகங்கள் வழி கொடுத்தால் நான் சொல்ற மாதிரி கேளுங்க.

40 லட்சத்தை ப்ராப்பரா வீடு மட்டும் வாங்குங்க. மீதி பணத்தை என்ன பண்ணனும்னு பாருங்க. இல்ல வேற எந்த அத்யாவசிய செலவுகளோ இல்ல அத்தியாவசிய இந்த கடன அடைக்க முடியாத நிலைமை இருந்தா இந்த லோனை ரீபே பண்ணிடுங்க. எதுக்கு அத கைல வச்சிக்கிட்டு. இந்த புத்திசாலித்தனம் இருக்கணும். இதுதான் ஜோதிடம் படிக்க சொல்வதற்கான காரணம்.

 

இதனால இது எப்படி கையாள முடியும் அப்படிங்கிறது. ஒரு விஷயம் சொல்றேன்ங்க இந்த இடத்துல குறிப்பிட்டு நான் சொல்ல வேண்டிய நிகழ்வு என்னன்னா? எல்லா விஷயங்களுக்கும் உணர்ச்சி பூர்வமா முடிவெடுக்கணும். ஆனா பொருளாதாரத்தை பொறுத்த அளவு மட்டும் அறிவுபூர்வமா முடிவெடுக்கணும். கணக்கு போட்டு தான் நீங்க பண விவகாரங்களை கையாளனுமே தவிர உணர்ச்சி பூர்வமா கையாண்டிங்கனாலே அது பிரச்சினையாகும். இத முதல்ல நம்ம தெளிவா புரிஞ்சுக்கணும்.

 

மேம்:

கண்டிப்பா சார். உண்மை அதுதான் இப்ப நீங்க சொன்னீங்கல சுப கடன், அசுபக்கடன் அப்படிங்கறது இப்ப நீங்க சொன்னதுதான் கடன் வந்து வீடு தட்டி வந்து தேடி வந்து கொடுப்பாங்க யாருன்னு பார்த்தீங்கன்னா ஆறாம் அதிபதியின் சொல்லக்கூடிய கிரகமும், எட்டாம் அதிபதியின் சொல்லக்கூடிய கிரகமும் லக்னத்தில் இருந்தாங்கனா சார் சொன்ன மாதிரி தான். நம்ம வீட்ல இருந்தா போதும் போன் மூலியமா போன் நாலஞ்சு தடவை லோன் கொடுக்கிறோம் அது கொடுக்கிறோம் கிரெடிட் கார்டு கொடுக்குறோம் வாங்கிக்கோங்க அப்படின்னு தான். உங்களுக்கு தகவல் வந்ததுன்னா சார் சொல்றதுதான். தேவையில்லாத நிகழ்வுகளை நீங்க நடுவுல போக வேண்டாம். அந்த தேவை உங்களுக்கு கடனை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள்.  பிரச்சனைகளை தேடி வரக்கூடிய நிகழ்வாக தான் இங்கு கண்டிப்பாக அமையும் என்று சொல்லலாம்.

இன்னொரு கேள்வி சார் உங்களுக்கு கடன பத்தி சொல்லிட்டீங்க. இந்த பெருங்கடன் அப்படிங்கறத சொல்றாங்க. அதுவும் இதே கேட்டகிரியில் தான் வருதுங்களா?

சார்:

பெருங்கடன். கடன் என்பது அமௌன்ட் பொறுத்து இல்லைங்க எனக்கு இரண்டு லட்சம் கூட பெருங்  கடனுங்க. இன்னொருத்தருக்கு 2000 கோடி கூட சிறு கடன்தான். ஆள பொறுத்தது அவங்கவங்க கெப்பாசிட்டியை பொறுத்து. இது கடன் பெருசா சின்னதாகிறது இல்ல என்னால அடைக்க முடியுமா முடியாதாங்கிறதுல தான் இருக்கு. உங்களுக்கு ஈஎம்ஐ பே பண்ற கெப்பாசிட்டி இருந்தா 2000 கோடி ஒரு பெரிய கடனே இல்ல தப்பான விஷயமும் இல்லை. ஆனால் ரெண்டு லட்சம் கூட உங்களுக்கு அடைக்க முடியாத சூழ்நிலையில் நீங்க டீஃபால்ட் ஆகுறிங்கனா தான் அது தீராத கடன் எட்டாம் இடம் அப்படிங்குறதுக்கான நிகழ்வா மாறுது.

அப்போ உங்களுடைய கெப்பாசிட்டி புரிஞ்சுக்காம செயல்பட்டா ஆறு எட்டாயிடும். கரெக்டா கெப்பாசிட்டி புரிஞ்சு நடந்துகிட்டா எட்டு கூட ஆறா மாறிடும். இந்த எட்டா ஆறா அது மாத்தல நம்ம தான் மாத்திக்கணும். அப்படிங்கறது தான் நிகழ்வு.

 

மேம்:

கண்டிப்பா சார்.

இந்தப் பெருங்கடன் அப்படிங்கறது கண்டிப்பா கிடையவே கிடையாது தெரிஞ்சுக்கோங்க.  ஒரு கடன அடைக்கிறேன்னு இன்னொரு கடன் வாங்கி அந்த கடனை அடைக்கக் கூடியதுதான் உங்களுக்கு பெருங்கடன். முதல்ல வாங்கக்கூடிய கடன் உங்களுக்கு தேவையா? சார் சொன்ன மாதிரி உங்களுக்கு இத்தனை அமௌன்ட் தேவை அப்படின்னா அதை மட்டும் வாங்கி செயல்படுங்க. எப்போதுமே பொதுவுடை மூர்த்தி சார் சொல்றது. உதாரணமா பத்தாயிரம் சம்பளம் வாங்குறேன்னா எனக்கு பத்தாயிரம் ரூபாய்ல 2500 தான் கடன் கட்ட முடியும். இந்த அளவுக்கு என்னுடைய கடன் அளவு இருக்கணும். உதாரணமா சார் சொல்ல கூடிய தகவல். அதை மீறி போச்சுன்னா நான் வாங்குவது கடன் கடனாகவே நீங்க சொல்ற பெருங்கடனாகாவே கண்டிப்பாக அமையுமானா அமையும் அப்படிங்கறதுல எந்த மாற்றமும் கிடையாது.

சார் உங்கிட்ட மீண்டும் ஒரு தகவல் கடன பத்தி நிறைய நீங்க பார்த்திருப்பீங்க. நிறைய நண்பர்களுக்கு நிறைய குறிப்புகள் கொடுத்து இருப்பீங்க. ஜாதக ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி அதை பற்றி சிறு தகவல்கள் நம்மளுடைய நண்பர்களுக்காக.

 

சார்:

கடன் வாங்குவது எதுக்கு வாங்குறீங்க முதல்ல தெளிவா இருக்கணும். பர்பஸ் இல்லாம வாங்கக்கூடிய கடன் அத்தனையுமே தீரா  கடனா தான் போகும் முதல் விஷயம். இப்போ கடன் வாங்குறது அப்படிங்கிற போது இன்டென்ஷன் ஆஃப் பையிங் அப்படின்னு சொல்லுவாங்க. கடன் எதுக்காக வாங்குறீங்க முதல் விஷயம். இரண்டாவது விஷயம் திருப்பிக் கொடுக்கிறதுக்கு நீங்க என்ன திட்டம் வச்சிருக்கீங்க அப்படிங்கறது. மூணாவது விஷயம் திருப்பி கொடுக்க முடியாத பட்சத்தில் அதுக்கு ஆல்டர்னேட் என்ன பண்ணி வச்சிருக்கீங்க. இந்த இது இல்லாம கடனுக்குள்ள போகவே கூடாதுங்க. இன்னைக்கு கிரெடிட் கார்டு கிடைச்சுதுன்னா அது ஏதோ ஸ்வைப் பண்ண ஈசியா இருக்குங்கிறதினாலே படபடன்னு ஸ்வைப் பண்ணிடலாம். இதுதான் பெரிய ட்ராப்பா இருக்கு. இன்னைக்கு வந்து எல்லா இடத்துலயும் பொருளாதார ரீதியா உங்கள லாக் பண்றதுக்கான நிகழ்வுகள் எல்லா இடத்திலும் நடக்குது.

நான் முதற்கொண்டு உட்பட எந்த கவர்மெண்ட் இந்தியன் கவர்மெண்ட், அமெரிக்கன் கவர்மெண்ட் வித்தியாசம் கூட கிடையாது. இதுல எல்லா கவர்மெண்டும் ஜனங்களை டிராப் பண்ற இடத்துல தான் இருக்குது. ரைட் தப்புன்னு அந்த டிஸ்கஷன்குள்ள போக வேண்டாம். நீங்களா பார்த்து உங்க பொருளாதாரத்த பாத்துக்கிட்டா மட்டும் தான் நீங்க அதில் தப்பிக்க முடியும். அதனாலதான் ஜோதிடம் படிங்க அப்படின்னு சொல்றோம். எந்த இடத்துல கடன் வாங்கலாம் வாங்க கூடாது.

இப்ப நம்ம இன்னொரு தகவல் சொல்லி இருந்தோம். உறவுக்கும் உணர்ச்சிகரமாக முடிவெடுக்க கூடாதுன்னு பேசுவோம். பணம் விவகாரங்கள் வரும்போது எல்லாம் உறவு முறையில் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நிறைய நடக்கும். யாருக்காக கடன் வாங்குறீங்க வரும்.

இப்போ எனக்கு சொல்லிக்கொடுத்த பொருளாதார என்னுடைய கோச் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு சில தகவல்களை இங்கே சொல்லணும் நினைக்கிறேன். பணம் வாங்கினால் முதலீடு செய்வதற்கு கடன் வாங்கலாம். விரையம் செய்ய கடன் வாங்க கூடாது முதல் விஷயம். அப்போ கடன் முதலீடு செய்வதற்காக வாங்கலாம் விரையம் செய்றதுக்கு தான் வாங்க கூடாது. அப்ப எது முதலீடு முதல்ல தெரியணும். சரிங்களா பணம் போடுற இடமெல்லாம் முதலீடு கிடையாது. மனுசங்க கூட முதலீடு தான். அதையும் புரிஞ்சுக்கணும்.

இப்போ உமாவெங்கட் இருக்கீங்க. நீங்க என்கிட்ட கடன் கேக்குறீங்க கேக்க மாட்டீங்க என்கிட்ட உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. கேட்கிறதா வச்சுக்கிடுவோம் உதாரணத்துக்கு உமா மேடத்தை உபயோகப்படுத்துகிறேன். இந்த இடத்துல பயன்படுத்துகிறேன். உமா மேடம் பணம் கேட்டா கொடுத்தாலும் திருப்பி தரலைன்னா உறவு கெட்டு போயிரும். கொடுக்க முடியாதுன்னு சொன்னாலும் உறவு கெட்டுப் போயிடும் இப்ப இந்த உறவு கெட்டு போறதுக்கு பணம் ஒரு காரணமா இருக்குமா கண்டிப்பா கட்டாயமா காரணமா இருக்கும். அதனாலதான் ஆறாம் இடம் பகை வச்சிருக்காங்க இதை புரிஞ்சுக்கணும். இந்த இடத்துல ஏன் இந்த பகை சம்பந்தப்படுது பிரச்சனை பிரிவு இதெல்லாம் வருதுங்குறத புரிஞ்சுக்கணும். இதுக்கு தான் இந்த தகவல் சொல்றேன். ஏழாம் இடமா இன்னைக்கு இருக்கிறதெல்லாம் நாளைக்கு ஆறாம் இடமா நகர்ந்து போகுது. லக்னம் நகரும்போது நகருது அப்படிங்கறது எவ்வளவு அழகா பார்க்க முடியும் என்று பாருங்கள். கரெக்டா

மேம்:

கண்டிப்பா சார்.

நல்ல பிரண்ட்ஷிப்ல இருந்தது ஒரு பணம் பரிமாற்றம் பிரச்சனையா மாத்தி கொடுத்துடும்.

சார்:

 இப்ப பணம் கேட்டாங்கன்னா நான் என்ன பண்ணனும் ரொம்ப முக்கியமான தகவல் முதல்ல இத புரிஞ்சுக்கணும். நிறைய நேரத்தில கடனு தன்னுடைய திட்டமிடலுக்கு இல்லாம மத்தவங்களுக்காகவே கடன் படுறவங்க தான் இன்னைக்கு ஜாஸ்தியா இருக்காங்க. இந்த நிகழ்வை நம்ம நிறைய பார்க்கிறோம். அதனால இந்த தகவல் சொல்லணும்னு நினைக்கிறோம்.

இப்ப உமா மேடத்துக்கு என்கிட்ட 50000 கேக்குறாங்க. நான் ஐம்பதாயிரம் குடுக்குற இடத்துல இருக்கிறேனா முதல்ல பாக்கணும். சரியா குடுக்க முடியாத இடத்துல இருந்து இன்னொருத்தர் கிட்ட இருந்து கடன் வாங்கி கொடுக்கிறேன்னா என்ன விட பெரிய முட்டாள் வேற யாரும் இல்லை. முதல்ல இது தெளிவா புரிஞ்சுக்கணும். கரெக்டா ரைட் அப்ப நான் கொடுக்கணும்னா என்கிட்ட இருந்தா குடுக்கணும். என்கிட்ட 50000 தான் இருக்குது. ஐம்பதாயிரம் தான் கேக்குறாங்க என்பதற்காக கொடுக்கணுமா கொடுக்கக் கூடாதா? என்னால அவங்க திருப்பி கொடுக்காட்டா சமாளிக்க முடியும் என்கிற அமௌன்ட் என்ன. என்னால பத்தாயிரம் தான் சமாளிக்க முடியும். அவங்க திருப்பி தரலைன்னா எனக்கு சங்கடமா இருக்கும் அப்படின்னா இந்த ஐம்பதாயிரத்தை நான் கொடுக்க கூடாது. பத்தாயிரம் தான் கொடுக்கணும்.

அம்மா என்கிட்ட பத்தாயிரம் தான் இருக்கு என்னால முடிஞ்சது இவ்வளவுதான் அப்படின்னு சொன்னா அதை ஹேண்டில் பண்ண அவங்களுக்கு வேற வழி பாத்துக்குவாங்க. நம்ம நிறைய கற்பனை பண்ணிக்கிறோம். உமா மேடம் என்னவோ என்னையே நம்பியே வந்துட்டு இருக்க மாதிரி ஒரு கற்பனையில நம்ம இருந்துக்கிறோம்.

பிரண்ட்ஷிப்ல எல்லாம் இப்படித்தான் குழப்பிக்கிறோம். அவங்க அவங்களுக்கான வாழ்க்கையும் வழிமுறைகளும் அவங்க அங்களுக்கு இருக்கத்தான் செய்யுது. கரெக்டா அப்போ இந்த கடன் வாங்குவது கொடுக்கிறதுல உங்க கெப்பாசிட்டி புரிஞ்சு கடன் கொடுக்கணும். கடன் கொடுக்கும்போதே அது திருப்பி வராதுன்னு நம்பிக்கையோடு  குடுங்க. ஏன்னா அவங்க குடுக்காட்டாலும் அந்த உறவு கரெக்டா மெயின்டெயின் பண்ணிக்கலாம். இது ஆனா டெபாசிட் அப்படின்னு சொல்லிரனும் ரிலேஷன்ஷிப் டெபாசிட் சொல்லுவோம். ரொம்ப முக்கியம் பணத்தைவிட அந்த பத்தாயிரம் முக்கியமா உமா வெங்கட் மேடம் முக்கியமானா கேட்டா உமா வெங்கட் மேடம் உடைய நட்பு தான் முக்கியம் அப்படின்னு நம்பி கொடுக்கணும்.

இந்த பணம் வரலைனா பரவால்ல அப்படின்னு நம்பிக்கை இருந்தா குடுங்க இல்ல அவ்வளவு முக்கியம் இல்ல உமா வெங்கட் மேடம் உடைய நட்பு எனக்கு அவ்வளவு முக்கியம் இல்ல அப்படின்னு நான் நம்புனேன்னா பத்தாயிரம் வீணா ஏமாத்திக்காதீங்க. உங்கள நீங்களே 10,000 சேஃப்டி பண்ணிட்டு உமா வெங்கட் மேம் ஃப்ரெண்ட்ஷிப்பை பணம் கொடுக்காமல் கட் பண்ணி விடுங்க.

ஏழாம் பாவகம் :

அப்ப ஒரு உறவையும் பணத்தையும் எங்க வச்சிக்கணும் முதல்ல தெளிவா இருந்தீங்கனாலே நிறைய நேரத்துல தேவையில்லாம கடன் பட மாட்டீங்க. இதை நான் குறிப்பிட்டு இங்க சொல்லணும்னு நினைக்கிறேன். திரும்ப சொல்றேன் இன்னைக்கு ஏழாம் பாவகம் என்பது நட்பு இதுதான் லக்னம் மாறும்போது ஆறாம் பாவகமா மாறும். இன்னைக்கு ஏழு தான் நாளைக்கு ஆறு. அப்ப இன்னிக்கு நான் சரியா நட்பை கரெக்டா வச்சுக்கிட்டேனா நாளைக்கு அது பகையாகாமல் பார்த்துக்க முடியும். இன்னைக்கு என்ன விதைச்சேனோ நாளைக்கு அதுதான் முளைக்க போகுதுங்கும் போது இந்த உறவை மெயின்டெயின் பண்ணுறதுக்கு பணம் விவகாரங்கள் ரொம்ப முக்கியம்.

அதே நேரத்தில் கடன் ஆகுதுன்னா ஐயோ ஃப்ரெண்ட் என்ன நெனச்சுக்குவானோ நெனச்சு நானே போய் புதைகுழியில விழுந்துக்கிறேனா அது பிரண்டு வந்து காப்பாத்த போறது இல்லை  தெரிஞ்சிருந்ததுனா அப்புறம் ஏன் பண்ண போறோம்.

 

அப்போ ஜோதிடம் படித்து இருந்தீங்கன்னா இது வந்து புதைகுழி நம்ம மாட்டக்கூடாது என்று புரியும். இந்த நட்பை விட என் வாழ்க்கை எனக்கு முக்கியம் ஒன்னு புரிஞ்சுக்கோங்க உமா வெங்கட் மேடம் நான் காப்பாத்தணும்னு நம்புறேனா நான் முதல்ல சேஃப்டியா இருந்துட்டு தான் காப்பாத்த போகணும். நான் சேஃப்டி இல்லாம அவசர அவசரமா உமா மேடம் பொதக்குழியில இருக்காங்கறதுக்காக நானும் குதிச்சிட முடியாது. நான் முதல்ல இடுப்பு காயிதுல கட்டிட்டு தான் கை நீட்டனும். உமா வெங்கட் மேடத்துக்கு ஹெல்ப் பண்றதுக்கு. கரெக்டா இதை முதல்ல தெளிவா புரிஞ்சுக்கோங்க.

 

பொருளாதார விஷயங்கள் மத்தவங்கல காப்பாத்தணும் நீங்க நினைக்கிறீங்கன்னா முதல்ல உங்கள சேப்டியா வச்சிருங்க. அதுல ரொம்ப ரிஜிட்டா இருங்க. இது ஒன்னும் தப்பே கிடையாது. இது சுயநல சிந்தனை கிடையாது. ஏன்னா நீங்க பொதக்குழியில குதிக்கிறதால மட்டும் உமா வெங்கட் மேடம் காப்பாற்ற போறதில்ல. கரெக்டா நீங்க முதல்ல சேப்டியா இருந்தா மட்டும் தான் உங்க இலக்கே நீங்க அடைய முடியும் என்கிறது உங்கள முதல்ல சேஃப்டி பண்ண சொல்றோம். அதனுடைய பிறந்த நோக்கமே அது காரணமா இருக்கும். இதை மனசுல வச்சுக்கோங்க. நன்றி.

 

மேம்:

 

கண்டிப்பா நன்றி சார். நிறைய தகவல்கள் கடன் எதற்காக வாங்குறோம். சார் சொன்ன மாதிரி இன்னைக்கு ஏழாம் பாவகம் அதீத நட்பாக இருக்கக்கூடியது நண்பன் தோள் கொடுப்பான் தோழன் என்று சொல்லுவாங்க. அவனுக்கு தோளை கொடுத்துட்டு நாளைக்கு அதே நண்பரை ஆறாம் பாவகத்தில் தான் எதிரி அப்படிங்கறதும் பகை அப்படிங்கறது இருக்கு. அந்த பகையை உருவாக்கிக் கொள்ளாமல் ஜாதகர் லக்ன பாவகம் அப்படிங்கறது கரெக்டா முடிவெடுத்தீங்க அப்படின்னா இந்த பாவகங்கள் எல்லாம் உங்களால காப்பாத்த முடியுமானா கண்டிப்பாக. எதிர்காலத்தில் அதை காப்பாத்த முடியுமானா கண்டிப்பா முடியும். கடன் கொடுப்பதும் கடன் வாங்குவதும் உங்க கைக்குள்ள தான் இருக்கு. உங்களுடைய சிந்தனைகள் அடிப்படையில் தான் இது உங்களுக்கு கரெக்டா இருந்ததுன்னா நீங்க ஒவ்வொரு செயலும் கவனமாக பார்த்து தான் செய்வீங்க அப்படிங்கறது சாந்தகுமார் சார் சொல்லுறாங்க. நன்றி சார். இது போல் மீண்டும் ஒரு நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி.

 ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156 www.alpastrology.com



Comments