முக்கோணம் வடிவில் வீட்டில் விளக்கு ஏற்றினால் சுபிட்சம் உண்டாகும் - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட் - ALP அஸ்ட்ராலஜர்.

 


full video link:  https://youtu.be/4voHrZHA-Zo?si=xq1Tup7-8IRwrfjw

வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட்.  திருவனந்தபுரத்தில் இருந்து. நம்ம ஒவ்வொரு நட்சத்திர புள்ளிகள் போகும்போது அதனோட பலன்கள் எப்படி இருக்கும். அந்த நாலு வருஷங்கள் அவங்க வாழ்க்கை இல்லை. அந்த நாலு வருஷம் ஐந்து மாதம் பத்து நாள் அவங்க வாழ்க்கையில என்ன என்ன மாற்றங்கள் நடக்கும் அப்படிங்கறத பார்த்திருக்கோம். ஒவ்வொரு நட்சத்திர புள்ளிகளுக்கும் ஒவ்வொரு பலன் அப்படிங்கறது கண்டிப்பாக இருக்கு. அது தொகுத்து சிறு வடிவில அப்படிங்கறது நான் இங்க கொடுக்கப்பட்டிருக்கிறது.

பரணி நட்சத்திரம் :

பொதுவாக பரணி நட்சத்திரம் அட்சய லக்னம், மேஷ லக்னம் பரணி நட்சத்திரம் செல்லக்கூடிய காலங்கள்ல எப்படி இருக்கும் பாத்தீங்கன்னா, இவங்களுக்கு உடல் உஷ்ணம் அப்படிங்கறது அதிகமாக இருக்கும்.

இவங்களுக்கு உணவுகளாக இருக்கட்டும் உடல் ஆனாலும் சரி, தலையானாலும் சரி அதிகமான உஷ்ணம் அப்படிங்கறது ஏற்படும். தேவையில்லாமல் கால் பாதமும் சரி உங்களுக்கு ஒரு சூடு அப்படிங்கறது இருந்து கொண்டே இருக்கும்.

அதே மாதிரி வார்த்தைகள்ல நிறைய வித்தியாசம் அப்படிங்கறது இவங்களை உணர்வாங்க.

சிலர் வந்து பேசுற பாஷையில் இருந்து, உணவுல இருந்து நிறைய மாற்றங்கள் அப்படிங்கறது இவங்களுக்கு கொடுக்கும். சிலர் வந்து உடல் பருமன் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் அப்படிங்கறது சொல்லலாம்.

தாமிரப் பொருட்களை அதிகமாக இந்த காலகட்டங்களில் யூஸ் பண்ணுவாங்க. அதே மாதிரி இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்கள் இவங்க அதிகமாக யூஸ் பண்ணக்கூடிய தன்மை அப்படிங்கறது இருக்கும்.

முக்கோண வடிவ விளக்கு :

நெல்லிக்காய்  உணவுகள்ல அதிகமாக எடுத்துப்பாங்கன்னு சொல்லலாம். அதே மாதிரி முக்கோண வடிவம்னு அவங்க யூஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. சில வீடுகள்ல முக்கோண வடிவத்துல விளக்கு வச்சு அதை ஏத்தக்கூடிய சந்தர்ப்பம் நம்ம பாப்போம்.

கார்த்திகை தீபங்களை ஏத்துறது பார்த்திருப்பீங்க. அதே மாதிரி மூன்று விளக்குகளை சேர்த்து வைத்து முக்கோணமாக ஏற்றி வழிபடும் ஒரு வழிபாட்டு முறை இந்த பரணி நட்சத்திரக்காரர்களுக்கு ரொம்ப சிறப்பாக இருக்கும்.இவங்க நினைத்த ஒரு வரம் என்பது இந்த வழிபாட்டில் கிடைக்கும்.

ஈரோடு :

ஈரோடுகின்ற ஒரு இடத்துக்கு ஒரு மகத்துவம் இருக்கு. இவங்க ஏதோ ஒரு காரணமாக ஈரோடு வரை சென்று வருவது இவங்களுக்கு இருக்கும்.

என்னுடைய நண்பர் ஒருவர் பரணி நட்சத்திரம் சொல்லும் போது தற்போது நீங்க ஈரோடுக்கு எங்கேயும் போயிட்டு வந்தீங்களா இந்த ஒரு வருஷத்துல அப்படின்னா ஆமா நாங்க ஈரோடுக்கு போயிட்டு வந்தோம். எங்களுடைய ஒரு திடீர் நண்பருக்கு அவங்க திருமணத்திற்காக போயிட்டு வரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. நண்பருடைய திருமணத்திற்கு திடீர் நிகழ்வாக அந்த இடம் வரைக்கும் போயிட்டு வரக்கூடிய அமைப்பு இருந்தது அதனால போயிட்டு வந்தேன்னு சொன்னாங்க.

எதற்காக இத சொல்றோம்னா ஏதோ ஒரு வாழ்க்கையில நம்ம இந்த செயல்கள் நம்ம வாழ்க்கையில் நடக்கும். ஏன்னா அவர் இருக்கிறது ஒரு இடம். அவருக்கு அந்த இடம் அப்படிங்கறது போகக்கூடிய வாய்ப்பு ரொம்ப கம்மி. அப்ப இவங்க போவாங்ககளானா? போவாங்க.

சிலர் நெல்லிக்காய் உணவுல சேர்த்துப்பாங்க. தேன் நெல்லிக்காய் சாப்பிடக்கூடிய ஒரு வாய்ப்பு அவங்களுக்கு ஏற்படும். ஒரு சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, பல் சம்மந்தப்பட்ட பிரச்சனை, இந்த பல் கட்றது வெள்ளி கம்பி போடுறது, அதெல்லாம் இவங்களுக்கு இந்த காலகட்டத்தில் நடக்கும்.

ஒருத்தவங்களுக்கு தீபம் ஏற்றுவது கோயிலுக்கே போகாம இருப்பாங்க. ஆனா கோயில்ல போயிட்டு தீபம் ஏத்துவாங்க. சிலர் மாலை நேரத்துல மட்டும்தான் விளக்கேற்ற வழக்கமாக இருக்கும் இந்த காலகட்டங்கள்ல.

பரணி நட்சத்திரம் சொல்லக்கூடிய நண்பர்களுக்கு காலையில் விளக்கு ஏத்துற தன்மை நல்ல ஒரு குணம் அப்படிங்கறது இப்ப அவங்களுக்கு வந்திருக்குன்னு சொல்லலாம்.

வீட்ல அரிய வகை செடிகள்னு சொல்லலாம் சிலர் துளசி வளர்க்கிறதுக்கு ஆரம்பிப்பாங்க. திருநீற்றுப்பச்சைன்னு சொல்லுவாங்க, கற்பூரவள்ளி இலை, பிரண்டை அந்த மாதிரி செடி வகைகளை அவங்க வீட்டுல வளர்க்கிறதுக்கும் அது தானாக வளர்வதற்கும் உள்ள காலமாக இந்த காலகட்டங்கள் அமையும்.

சிலர் பெரிய தூண்களை போய் பார்க்க கூடிய சந்தர்ப்பம். நம்ம சொல்லணும் அப்படின்னா இந்த மஹால் மாமல்லபுரம் போய் தரிசனம் பண்ணுவாங்க. அங்க பெரிய தூண்கள் பழைய குடைவரை கோவில்கள் எல்லாமே இருக்கும். அங்க போயிட்டு வருவாங்க. சிலர் வந்து மதுரை மஹால் மதுரையில் இருக்கக்கூடிய திருமலை நாயக்கர் மஹால் போய் தரிசனம் பண்ணுவாங்க. அங்க அவங்களுக்கு போகக்கூடிய சந்தர்ப்பம் இந்த பரணி நட்சத்திரம் போகும்போதுதான் அமையுமானா? கண்டிப்பாக அமையும்.

அரிய வகை பொருட்கள் :

அரிய வகை பொருட்கள்ன்னு சொல்லுவோம். அரியவகை பூ இவங்க வந்து இந்த கூந்தல் பனைன்னு சொல்லுவாங்க, பனை வந்து எத்தனையோ வருஷத்துக்கு ஒரு தடவை தான் பூக்குமாம். அந்த பூவை பார்க்க கூட சந்தர்ப்பம் இந்த பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தாங்கன்னா கிடைக்குமானா கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லலாம்.

சிலர் நறுமணப் பொருட்கள் நிறைய யூஸ் பண்ணுவாங்க. அந்த பொருட்களை அடுத்தவர்களுக்கு தானமும் பண்ணுவாங்க. அதாவது நிறைய வாங்கிட்டு அடுத்தவங்களுக்கு கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் அப்படிங்கறது இவங்க வாழ்க்கையில இருக்குமானா கண்டிப்பாக இருக்கும்.

சிலருக்கு இசை நாட்டம் அதிகமாக இருக்கும். கடன் வாங்கக் கூடிய சந்தர்ப்பம் இவங்களுக்கு ஏற்படும்.

ஒரு சிலர் இத்தனை நாளா கிளாஸ் யூஸ் பண்ணிட்டு இருந்திருப்பாங்க. அதாவது நம்ம கிளாஸ் ஏதோ ஒரு விதமான பாத்திரம் அப்படின்னு யூஸ் பண்ணுவாங்க. இப்ப என்ன பாத்தீங்கன்னா இந்த கண்ணாடி பொருட்களை யூஸ் பண்ணக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இவங்களுக்கு இருக்கும்.

கண்ணாடி கப்ல டீ குடிக்கிறது. அந்த கிளாஸ்ல தண்ணி குடிக்கிறது. அந்த மாதிரி வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய சந்தர்ப்பம் இந்த பரணி நட்சத்திரம் போகக் கூடிய காலங்களில் அமையுமானா? கண்டிப்பாக அமையும்.

ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடு :

இவங்க யாரை வழிபாடு பண்ணனும் அப்படின்னா இந்த பரணி நட்சத்திரக்காரர்கள் ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடு இவங்களுக்கு ரொம்ப சிறப்பாக இருக்கும். துளசிக்கு தினமும் தீபம் ஏற்றுவது நல்லா இருக்கும். அதே மாதிரி சுவாமிக்கு அன்னதானம் கோவில்ல அன்னதானம் பண்றது இவங்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும்.

இதே போல அடுத்த ஒரு லக்னம் அவங்க நட்சத்திர புள்ளிகள் போகும்போது அவங்க வாழ்க்கையில என்ன மாற்றம் நடக்கும் அப்படிங்கறத பார்க்கலாம். நன்றி.

 ALP ASTROLOGY: +91 9363035656 | +91 9786556156

 www.alpastrology.com

Comments