சுக்கிரன் இந்த இடத்தில் இருக்கக் கூடாது. - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட். - ALP Astrology

full video link: https://youtu.be/nctvu2Vq57w?si=RqxCxGOtur5KWVM2

வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட் திருவனந்தபுரத்தில் இருந்து. நம்ம நிறைய ஜாதகங்கள் அப்படிங்கிறது பார்த்திருக்கோம். எல்லாருக்குமே ஒரு கேள்வி அப்படிங்கிறது இருக்குது.  கேள்வி அப்படின்னா சுக்கிரன் இந்த இடத்தில் இருக்க கூடாதாமே. இருந்தால் இவங்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. அப்படிங்கிற கேள்வி எல்லாருக்குமே இருக்கு.

நீங்க எந்தெந்த லக்னங்களுக்கு சுக்கிரன் அமர்ந்தால் அவங்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனையாக இருக்கும் அப்படிங்கிறது நம்ம பார்க்கலாம்.

 மேஷ லக்னம் :

இப்போ உங்களுக்கு உதாரணமாக மேஷ லக்னம் அப்படின்னா சுக்கிரன் வந்து துலாத்தில் இருக்கிறாங்க அப்படின்னா இவங்களோட வாழ்க்கையில பிரச்சனை இருக்குமானா இருக்காது. இவங்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமண உறவு அப்படிங்கிறது நல்லா இருக்கும். மனதுக்கு பிடித்த திருமணம் அப்படிங்கிறது நடக்கும்.

 அதே மாதிரி வரக்கூடிய வரன் அப்படிங்கிறது தந்தை வழி கிடைக்கக்கூடிய ஒரு வரனா தான் இருப்பாங்க. இவங்களுடைய மனம் அப்படிங்கிறது தந்தை மூலமாக அப்பா என்ன சொன்னாலும் கேட்டுக்க கூடிய ஒரு தன்மை அப்படிங்கிறது இந்த ஜாதகிக்கு அதிகமாகவே இருக்கும் அப்படிங்கிறது சொல்லலாம்.

ரிஷப லக்னம் :

அதே மாதிரி அவங்களுடைய ALP லக்னம் அதாவது அட்சய லக்னம் ரிஷப லக்னமாக இருக்கும்போது சுக்கிரன் இங்க ஏழாம் இடத்தில் விருச்சிகத்தில் இருக்கலாமானால் இந்த இடத்தில் சுக்கிரன் அமர்வு கூடாது. அப்படி இருந்தது அப்படின்னா அவங்க வாழ்க்கையில கண்டிப்பாக பிரச்சனை அப்படிங்கிறது இருக்கும்.

 சரி, இந்த பிரச்சனை எப்படி அமையும் அப்படின்னா எனக்கு வீடு, வண்டி ,வாகனங்கள் சரியில்லை. அங்க அம்மா சொல்றத கேட்டு நான் திருமணம் செய்து கொண்டேன். அதனால ஒரு அழுத்தம். நான் எதிர்பார்த்தது அப்படிங்கிறது கணவர் இடத்தில் இல்லை அப்படிங்கிறது குறிக்காட்டும்.

 இந்த ஜாதகி இந்த ஜாதகருக்கு பிரச்சனை அப்படிங்கிறது அவங்களுக்கு தெரியாது. ஏன்னா என்னதான் ஒரு முழுமையான தன்மையாக இருந்தாலுமே அதை வந்து அரை மனதாக ஏற்றுக்கொள்ள தன்மை இந்த ஜாதகிக்கு இந்த கணவர் மூலமாக ஒரு அழுத்தத்தை கொடுக்கும்.

 அதே மாதிரி வீடு, வண்டி, வாகனங்களால பிரச்சனை. தான் நினைச்சது வந்து வெளியூர் போகணும் அதற்கான வாய்ப்புங்கிறது இல்ல அப்படிங்கிற அமைப்பு தான் இந்த ஜாதகருக்கு இருக்கும். இதனாலே பல திருமணங்கள் அப்படிங்கிறது பிரச்சனைக்குரியதாக இருக்கானா கண்டிப்பாக ஆயிருக்குன்னு சொல்லலாம்.

 ஆனா எல்லா காலங்களிலுமே கிடையாது. சில நட்சத்திரங்கள் போகும்போது மட்டுமே இந்த குறிகாட்டல் அப்படிங்கிறத சொல்லலாம்.

 இவங்களுக்கு உதாரணமாக இவங்களுக்கு ரோகினி நட்சத்திரம் போகும்போது அதுவும் இந்த மூன்றாம் பாதம் நான்காம் பாதம் போகும் போது இந்த அமைப்பு இருக்குதா அப்படின்னா கண்டிப்பாக இருக்குன்னு சொல்லலாம்.

 அந்த ரோகினி நட்சத்திரம் 2,3,4 போகும்போது இவங்களுக்கு இந்த அமைப்பு அப்படிங்கிறது கண்டிப்பாக கொடுக்கும் அப்படிங்கறத சொல்லலாம்.

ALP லக்னம் மிதுனம் :

அதே மாதிரி ALP லக்னம் மிதுன லக்னமாக போகும்போது சுக்கிரன் வந்து தனுசு வீட்டில் இருந்தால் இவங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. மனதுக்குப் பிடித்த திருமணம் அப்படிங்கிறது இவங்களுக்கு கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லலாம்.

 அதே மாதிரி ஒரு தாய் மாமா வந்து ஒரு பையனை கொண்டு வருவாங்க. அந்த பையன் வந்து இவங்களுக்கு பிடிச்சிருக்கும். யார் மூலமாக இவங்களுக்கு வரணும் இல்லைனா பெண்ணோ களத்தரம் அமையும். கேட்டீங்கன்னா தாய்மாமா வழி வரக்கூடிய ஒரு களத்திரமாக கண்டிப்பாக இருக்கும் அப்படிங்கிறது சொல்லலாம். அப்போ இவங்க திருமண வாழ்க்கை நல்லா இருக்குமானா கண்டிப்பாக நல்லா இருக்கும்.

 இவங்க எதிர்பார்த்த மாதிரி அப்படிங்கிறத அந்த எண்ணத்தை மட்டும் மாற்றிக் கொண்டாலே இவங்களோட வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும் அது அவங்களுக்கு அப்படித்தான் அமையும்ன்னு கூட சொல்லலாம்.

 ALP கடக லக்னம் :

ALP லக்னம் கடக லக்னமாக இருந்தது அப்படின்னா ஏழாம் இடமான மகரத்தில் சுக்கிரன் அமரலாமா கேட்டீங்கன்னா இந்த இடத்தில் சுக்கிரன் அமரக்கூடாது. இவங்களுக்கு அது பிரச்சனைக்குரிய காலமாகவே இருக்கும். என்ன தான் இவங்க வந்து ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தாலுமே அவங்களுக்குள்ள சிறு சிறு தொந்தரவுகள் நோய் சார்ந்த தொந்தரவுகள் தம்பதிகளுக்கு இடையே ஒரு பிரிவு பிரச்சனை அப்படிங்கிறத கொடுக்கும்.

 சரி, இந்த கணவர் வந்து வெளியூர் போயிருப்பாரா வெளிநாடு போயிருப்பாரா அப்படின்னா வேலை நிமித்தமாக இவங்களுக்குள்ள ஒரு பிரிவு அப்படிங்கிறது இங்க அழகாக குறிக்காட்டும். அப்போ இந்த லக்னத்திற்கு சுக்கிரன் என்பது இந்த இடத்துல இருக்கக்கூடாது.

சிம்ம லக்னம் :

அதே மாதிரி ஒருத்தவங்களுக்கு அட்சய லக்னம் சிம்ம லக்னமாக இருக்குது. அப்ப சுக்கிரன் கும்பத்துல இருக்காரு அப்படின்னா நல்லா இருக்காரா நல்லா இருக்காரு. ரொம்ப சூப்பரா இருக்காரு. அவங்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகளோ, எந்த விதமான ஒரு நோய் தொந்தரவுகளோ எதுவுமே இருக்காது. ரொம்ப சிறப்பாக அமையும் வாழ்க்கைனு சொல்லலாம்.

 இவங்க எதிர்பார்த்த மாதிரி ஒரு வாழ்க்கை. மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு வாழ்க்கை. வேலை செய்ற இடத்துல ஒரு வரன் அமைவதற்கு வாய்ப்பு. நான் வேலை தேடுற இடத்துல யாராவது சொல்லுவாங்க. இந்த மாதிரி ஒரு பொண்ணு இருக்கு அதை பாக்கணும் அதை திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அப்போ அவங்களுக்கு அமையுமானா அமையும்.

 எப்போ அப்படின்னா இதுல சில நட்சத்திரப் புள்ளிகள் போகும்போது மட்டுமே இந்த அமைப்பு அப்படிங்கிறது இங்க குறிக்காட்டும்.

 அதே மாதிரி கன்னி லக்னம் ALP லக்னமாக இருக்கும் போது சுக்கிரன் வந்து மீனத்துல இருக்காங்க. அப்ப திருமண உறவுல பிரச்சனை இருக்குமானா கண்டிப்பாக இருக்கும். அதுவும் இவங்களுக்கு ஹஸ்த நட்சத்திரம் போகும்போது குழப்பான மனநிலை ஜாஸ்தியா இருக்கும்.

 தான் எதிர்பார்த்ததை விட அதிகமான எண்ணங்கள் அப்படிங்கிறது இருக்கும். கணவனை ரொம்ப அதிக இமேஜினேஷன் அப்படிங்கிறது இந்த மனைவி அவங்களுக்கு இருக்கிறதுனால இந்த உறவுல திருமண உறவுல பிரச்சனை அப்படிங்கிறது குறிக்காட்டும். இவங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகளும் மன அழுத்தங்களும் அதிகமாகவே குறி காட்டும்னு சொல்லலாம்.

 அப்ப தேவையற்ற ஒரு தன்மை இவங்களுக்குள்ள பிரிவு அப்படிங்கிறது கண்டிப்பாக கொடுக்கும். சின்ன சின்ன சண்டையா தான் இருக்கும். வீட்டுக்கு அத வாங்கணும் இத வாங்கணும். வெளியில போகணும். தொலைதூர பயணங்கள் மூலமாக ஒரு பிரச்சனை. நல்லா தான் இருப்பாங்க. ஒரு இடத்துக்கு வெளியில போயிட்டு வந்தாங்க  இல்ல ஒரு வீட்டுக்கு போயிட்டு வந்தாங்கன்னா அந்த பிரச்சனை அப்படிங்கிறது அந்த இடத்துல வந்து இவங்களுக்கு ஆரம்பிக்கும் அப்படின்னு தான் சொல்ல முடியும்.

 மேக்சிமம் இவங்க சும்மா இருந்தாலுமே இவங்க உறவுகள் அதாவது குடும்ப உறவுகளில் யாராவது ஒரு பெண்மணியோ ஆணோ ஏதாவது ஒரு சிறு நிகழ்வுகளை கூறும்போது இவங்களுக்குள்ள பிரச்சனை அப்படிங்கிறது ஆரம்பிச்சுடும்.

 அப்போ சுக்கிரன் எந்த இடங்களில் இருந்தால் சிறப்பு. எந்த இடங்களில் இருந்தால் அவர்களுக்கு ஒரு அழுத்தத்தை தரும் அப்படிங்கிறது பார்த்தோம். பொதுவாக எல்லா லக்னக்காரர்களுக்குமே அந்த அமைப்பு இருக்குமானா இருக்கும். ஆனால் குறிப்பிட்ட கால அளவுகள் மட்டும் தான் இருக்கும். அப்போ சுக்கிரன் ஏழாம் இடத்தில் இருக்கிறதும் ஒரு பிளஸ். ஏழாம் இடத்தில் இருந்தாலும் ஒரு மைனஸ் அப்படிங்கிறது தான் நம்மளால சொல்ல முடியும் மீண்டும். மீண்டும் இது போல் ஒரு ஆய்வில் சந்திப்போம்.

நன்றி.

ALP Astrology Office: +91 9363035656 | +91 9786556156

www.alpastrology.com

 

Comments