செல்போன் பாருங்க பதில் கிடைக்கும் - மொபைல் பிரசன்ன ஜோதிடம் - ALP அஸ்ட்ராலஜர் டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்

 


full video link: https://youtu.be/pyJNtfPnKjU?si=IYDqwvHhKJCJQHWo


அனைவருக்கும் வணக்கம். ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார். நாம இன்னிக்கு ஒரு புதிய சப்ஜெக்ட்ட பேசப்போறோம். இது என்ன அப்படின்னா இது மொபைல் பிரசன்னம் அப்படின்னு சொல்றது.

 இந்த மொபைல் பிரசன்னத்துல அந்த மொபைல்ல ரேண்டமா வரக்கூடிய பிக்சர்களை வச்சே நம்ம எப்படி பலன்களை எடுக்க போறோம். இது வந்து எனக்கு எப்படி இத எடுக்கணும் தோணுச்சு அப்படின்னா. நான் அடிக்கடி எனக்கு பிடிச்ச இஷ்ட தெய்வம் கோயிலுக்கு போவேன்.

 அப்போ அங்க ஒரு அம்மா, பூஜை நடந்துட்டு இருக்கு. சுவாமிக்கு அபிஷேகம் போயிட்டு இருக்கு. ஒரு நெருக்கடியான நேரத்துல எனக்கு போன் பண்ணி கேக்குறாங்க. அந்த கேள்வி ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க. பண்ணியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். நான் பண்ணட்டுமா? வேண்டாமா? அப்படிங்கிற கேள்வி என்கிட்ட முன் வச்சாங்க.

 அப்போ அந்த கோயில்ல நான் சுற்றி உள்ளவர்களோடு சேர்ந்து இருக்கும்போது ஒரு நல்ல நிகழ்வுக்காக பாத்துட்டு இருக்கும் போது, இவங்க இப்படி சீரியசான விஷயத்தை பத்தி கேக்குறாங்களே என்ன பண்றது அப்படின்னு சொல்லிட்டு. டக்குனு என்னோட மொபைல் எடுத்து ஆன் பண்ணேன். அவங்க ஜாதகத்தை போடலாம் அல்லது பிரசன்னமா நம்ம போடலாம் அப்படின்னு சொல்லிட்டு.

 அப்படி மொபைல எடுக்கும் போது அந்த ரேண்டமா வந்த பிக்சர் வந்து எனக்கு சில விஷயங்களை சொல்லுச்சு. அத சொன்ன உடனே அந்த அம்மாவுக்கு சொன்னேன் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா ஆப்ரேஷன் சக்சஸ் தான். நீங்க பயப்பட வேண்டாம். தாராளமா பண்ணுங்கன்னு சொல்லிட்டேன்.

 அவங்களுக்கு சரின்னு அந்த நம்பிக்கைல நம்ம சொல்ற வார்த்தை ஒரு சிலருக்கு அது குடும்ப ஜோதிடர் மாதிரி வச்சுக்கோங்களேன். நம்மள கேட்டுட்டு தான் எந்த முடிவும் எடுப்பாங்க. அந்த மாதிரி சொன்னோம்னா அவங்களுக்கு அதே மாதிரி ஆபரேஷன் சக்சஸ் ஆயிடுச்சு. ரொம்ப கிரிட்டிக்கல் ஆன ஒரு ஆப்ரேஷன் அது சக்சஸ் ஆனதும் அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

மொபைல் பிரசன்னம் :

இப்ப இந்த மொபைல் பிரசன்னம் நிறைய பேருக்கு, திருமணத்துக்காக கேட்பாங்க போடுவேன். நீங்க வீடு வாங்கணும் நெனச்சிட்டு இருக்கீங்க. வீடு வாங்கினதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு திருமணம் அமையும்னு சொல்லி இருக்கேன். அதே மாதிரி ஒருத்தவங்க ரொம்ப கவலையா இருப்பாங்க. சரி நீங்கள் என்னதான் மனசுல நினைச்சு இருக்கீங்க அப்படின்னு நான் இப்ப போட்டுறேன். அப்படின்னு சொல்லி போட்டு பார்ப்பேன். அதுல ஒரு பிக்சர் வரும். அந்த பிக்சர் வச்சி அவங்களுக்கு பலன் சொல்லுவேன். இந்த மாதிரி அத சொல்ல சொல்ல என்ன சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே என்ன பாக்கும்போது மொபைல் பிரசன்னம் போடுங்கன்னு சொல்லி கேக்குற அளவுக்கு ஆயிடுச்சு.

 இப்போ இந்த சேனல் வழியாக இந்த ஜோதிடம் டிவிக்குனு நான் ஏன் இந்த வீடியோ பகிர்ந்துக்கிறேன் அப்படின்னா, இந்த ஜோதிடம் டிவிய எடுக்கக்கூடிய மனோசந்திரா அவர்கள் என்கிட்ட ஒரு கேள்வி கேட்டிருந்தார்போன ப்ரோக்ராம் அப்போ. இதே மொபைல் பிரசன்னம் போட்டு அவருக்கு நீங்க கோல் அடிக்க போறீங்க. உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு காத்துட்டு இருக்கு அப்படின்னு சொன்னேன். அவர் ரொம்ப ஆச்சரியப்பட்டாரு. அதே மாதிரி அந்த நிகழ்வு அவருக்கு நடந்தது. நீங்க வேணும்னா அதுல நம்பர் இருக்கு அவருக்கு போன் பண்ணி கேட்டுக்கலாம்.

எத்தனை மார்க் வாங்குவேன்னு?

என்னுடைய பையன் எக்ஸாம் எழுதுறதுக்காக ஒரு கேள்வி என்னிடம் கேட்டார். நான் எத்தனை மார்க் வாங்குவேன்னு? அப்போ ஒரு பிக்சர் என் கண்ணுல பட்டது. அந்த மார்க்க அவர்கிட்ட சொன்னேன். இவ்ளோ தான் நீங்க வாங்குவீங்க அப்படின்னு. அதே மாதிரி அதுல ஒரு ப்ரெசென்ட் கூட மாறாம அதே மார்க் வந்திருந்தது.

 இந்த மாதிரி அந்த மொபைல் பிரசன்னத்துல அந்த நிகழ்வுகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு அதுல என்ன பிக்சர் வருதோ அந்த பிக்சரை பொருத்தி உங்களுக்கு பலன் சொல்லுவோம். அந்த பலன்கள்  உங்களுக்கு 100% நீங்க நம்பி பண்ணீங்கன்னா உங்களுக்கு 100% நிச்சயமாக அது செயல்படும். இது வந்து நாம பார்க்கக் கூடியது கிரகங்களை வைத்து ஆய்வு பண்ணி பார்க்கக்கூடிய ஜோதிடம் அப்படிங்கறதுதான். என்னை சுற்றி உள்ளவர்கள் இந்த மொபைல் பிரசன்னத்துல ரொம்ப இம்ப்ரஸ் ஆகி இதை வெளிப்படுத்துங்கனு சொன்னதுனால இந்த வீடியோ உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன்.

 உங்களுடைய கேள்விகள் என்ன அப்படிங்கறத நீங்க மனசுல நினைச்சுக்கிட்டு. இப்போ ஒவ்வொரு ராசிகளோட பெயர்களை சொல்லுவேன். நீங்க உங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கோ அல்லது உங்களுக்கு என்ன கேள்விகள் இருக்கோ அத உங்க மனசுல நினைச்சுக்கோங்க. அந்த ராசிகள சொல்லி நான் மொபைல் பிரசன்னம் ஆன் பண்ணும்போது, அதுல என்ன நிகழ்வு வருது அப்படிங்கறத நான் உங்களுக்கு சொல்றேன். அதுதான் உங்களுக்கு அந்த கேள்விகளுக்கான பதிலாக அமையும்.

 மேஷ ராசி :

 நீங்க ஒரு கேள்வியை மனசுல நினைச்சுக்கோங்க. அந்த கேள்விக்கான பதில் என்ன வருதுன்னு பாத்துரலாமா?

 நீங்க ஒரு முக்கியமான வழிபாட்டு ஸ்தலத்துக்கு போக போறீங்க. அந்த வழிபாட்டு ஸ்தலத்துல போய் உங்களுடைய பிரார்த்தனைய வையுங்க. கண்டிப்பா அது ஒரு குறுகிய காலகட்டத்துக்குள்ள அந்த பிரார்த்தனை நிறைவேறும் அப்படிங்கறதுதான். அல்லது நீங்க ஒரு கோயிலுக்கு போகணும்னு நினைச்சுட்டு இருக்கீங்க. அங்க ஒரு வேண்டுதலை மிச்சம் வச்சிருக்கீங்க. அந்த வேண்டுதலை ஞாபகப்படுத்தி அதை போய் செய்யுங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கையில நல்ல மாற்றம் அப்படிங்கிறது கிடைக்கும்.

 ரிஷப ராசி :

 நீங்க உங்களுடைய கோரிக்கை என்ன அப்படிங்கறது மனசுல வச்சுக்கோங்க. உங்க கோரிக்கைக்கான பதில் என்ன வருதுன்னு பாத்துரலாமா?

 தயாராகிட்டு இருக்கீங்க. உங்களுடைய யோசனைகளை செயல்படுத்துவதற்கு ஆயத்தம் ஆயிட்டு இருக்கீங்க. ஆனா கொஞ்சம் யோசனை பண்ணிக்கிட்டே இருக்கீங்க. இப்ப போகலாமா? இவங்கள சந்திக்கலாமா? இவங்கள பார்த்தா அந்த காரியம் சக்சஸ் ஆகுமா? அப்படிங்கற மாதிரி யோசனை பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த யோசனை நீங்க பயப்படவே வேண்டாம். கொஞ்சம் நிதானமா பொறுமையா நீங்க காய் நகத்துங்க. கண்டிப்பா உங்களுடைய இலக்கை நீங்க அடையக்கூடிய காலம் வெகு சீக்கிரத்திலேயே பக்கத்துல இருக்கு அப்படிங்கிறத தெரிஞ்சுக்கலாம்.

 மிதுன ராசி :

 நீங்க உங்களுக்கு தேவையான கோரிக்கையை நினைச்சுக்கோங்க. உங்களுடைய கோரிக்கைக்கான பதில் என்ன வருதுன்னு பார்க்கலாம்.

 ரொம்ப பிரம்மாண்டமான ஒரு பெயர் சொல்ல கூடிய ஒரு வழிபாட்டு ஸ்தலத்திற்கு நீங்க போக போறீங்க அப்படின்னு சொல்லலாம். அதுக்கு போகணும் நீங்க ரொம்ப நாளா ஆசைப்படுறீங்க. அது ரொம்ப ரம்மியமான ஒரு இடமாகவும் அது இருக்கு. கண்டிப்பா கூடிய விரைவில் அந்த இடத்துக்கு போவீங்க. அங்க ஒரு நபரை சந்திப்பீங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கையில ஒரு நல்ல மாற்றம் அப்படிங்கிறது நிச்சயமாக உண்டு.

 கடக ராசி :

 இந்த கடக ராசிக்கு தான் மனசு கொஞ்சம் அலை பாஞ்சுகிட்டே இருக்கும். நீங்க யோசிக்கிறதுல கூட ஒரு ரெண்டு விதமா, இதை நினைக்கலாமா இத நினைக்கலாமானு யோசிச்சிட்டே இருக்கீங்க. உங்க கேள்விக்கான பதில் என்ன வருதுன்னு பாத்திரலாமா?

 மகிழ்ச்சிக்குரிய ஒரு நிகழ்வுதான் நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க. கூடிய விரைவில் உங்களுக்கு சந்தோஷமான அதுவும் ஆண்களாக இருக்கீங்க திருமணத்துக்காக நெனச்சீங்கன்னா கட்டாயம் உங்க மனசுக்கு பிடிச்ச மணவாழ்க்கை இப்போ நடக்க போகுது அப்படின்னு உறுதியா நம்பலாம்.

 சிம்ம ராசி :

 நீங்க உங்கள் வேண்டுதல் கோரிக்கைகளை மனசுல நினைச்சுக்கோங்க. உங்களுக்கு உரிய பிரசன்னம் என்ன வருதுன்னு பார்க்கலாம்.

 ஒரு சுற்றுலாவுக்காக நீங்க பிளான் பண்றீங்க அப்படின்னா, கண்டிப்பாக அது நல்லா இருக்கு. அல்லது விரைவில் ஒரு சுற்றுலாக்காக நீங்க ஒரு பிளான் பண்ண போறீங்க. அல்லது ஒரு பூங்காவிற்கு போயிட்டு வாங்க. அந்த பூங்காவில் இருந்து நீங்க யாரு கிட்ட பேசணும்? என்ன காரியத்துக்காக பேசணும்னு? நீங்க மனசுல நெனச்சிருக்கீங்களோ அவங்களுக்கு நீங்க கால் பண்ணுங்கஉடனே அதுக்கு உண்டான ரிசல்ட் உங்களுக்கு அங்கேயே கிடைக்கும்.

 கன்னி ராசி :

 கன்னி ராசிக்காரங்க உங்க மனசுல நீங்க என்ன விஷயத்தை நெனச்சிட்டு இருக்கீங்க? அந்த விஷயத்திற்கான பலன்கள் என்னவாக இருக்குனு பாத்துரலாமா?

 யாருக்கோ ஏதோ கிப்ட் பண்ணனும் யோசிச்சிட்டு இருக்கீங்க. அது ஒரு பெண்ணாக இருக்கு. நீங்க ஒரு குழந்தைகளுக்கு நீங்க ஏதாவது ஒரு கிஃப்ட் வாங்கி கொடுத்துட்டு. அதுக்கு அடுத்த விஷயத்தை நீங்க முயற்சி பண்ணுங்க. உங்களுடைய ஆடை அலங்காரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்க. அதுவே உங்களுக்கு பாசிட்டிவான ஒரு எனர்ஜியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 துலாம் ராசி :

 துலாம் ராசிக்காரங்க உங்களுடைய எண்ணங்களின் வலிமை எந்த அளவுக்கு இருக்குனு பாத்துரலாமா?

 பிரைட்டா இருக்கு. பிரகாசமா இருக்கு. நீங்க எது செஞ்சாலும் ஒரு இரவு நேரத்தில லைட் வெளிச்சத்துல நட்சத்திரங்களை பார்த்துட்டு, அந்த நட்சத்திரங்களுடைய பார்வையிலேயே நீங்க உங்களுக்கு வேண்டியத நீங்க ஒரு கோரிக்கையா வைங்க. கண்டிப்பா அந்த கோரிக்கையினுடைய வலிமை அதிகமா இருக்கும். அது சார்ந்த நிகழ்வுகள் உங்களுக்கு அடுத்தடுத்து படிப்படியாக நடக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கும்.

 விருச்சிக ராசி :

 நீங்க உங்க மனசுல உள்ள கோரிக்கையை நினைச்சுக்கோங்க. அதற்கு என்ன பிரசன்னம் வருகிறது என்று பார்த்திடலாமா?

 நீங்களும் ஒரு கட்டடம் கட்டுவதற்காக நீங்க முயற்சி பண்றீங்க. இடம் சார்ந்து வீடு சார்ந்த ஒரு விஷயத்தை எதிர்நோக்கி காத்துட்டு இருக்கீங்க. அதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையக்கூடிய வாய்ப்பு வெகு சீக்கிரத்திலேயே கிடைக்கும் அப்படின்னு சொல்லி இருக்கு. அதற்கு பூமிநாதரை நீங்க வழிபாடு செய்யுங்க. கண்டிப்பாக இந்த பூமி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

 தனுசு ராசி :

 தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன வருதுன்னு பார்த்திடலாமா? உங்க கோரிக்கை பிரார்த்தனைகளை மனசுல நினைச்சுக்கோங்க.

 ரொம்ப அழகா இருக்குங்க. பியூட்டிஃபுல் பிளேஸ். நீங்க உங்க மனசுல ஒரு சந்தோஷமான நிகழ்வுக்காக தான் நினைச்சு இருக்கீங்க. நீங்க என்ன மனசுல நினைச்சிருந்தாலும் அதனுடைய நிகழ்வு நீங்க நினைச்ச மாதிரியே நடைபெறும் அப்படிங்கறதுதான் இதனுடைய பலன்.

 மகர ராசி :

 உங்க மனசுல உள்ள கேள்விகளுக்கு விடையை பார்த்துரலாமா?

 கொஞ்சம் கரடு முரடா இருக்கு. நீங்க எதிர்பார்த்த விஷயங்கள் கொஞ்சம் உங்களுக்கு அந்த பதில் அப்படிங்கறது ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணனும். ஹார்ட் வொர்க் பண்ணினாலும் அது நடக்குமா அப்படின்னா ஒரு கேள்விக்குறியாகவே இருக்கு. அதனால கொஞ்சம் பிரயத்தனம் படனும் அப்படின்னு சொல்லலாம். அதாவது ஒரு மலையை புரட்டி போடணும்னு நினைக்கிறீங்க. அது சாத்தியமாகுமா? ஆகும். எப்படி இறைவனுடைய அனுகிரகம் இருந்தால் மட்டுமே. அதனால நீங்க ஒரு முறை உங்க ஜாதகத்தையும் பார்த்துட்டு அதுக்கு என்ன பண்ணனும் அப்படின்னு முடிவு பண்ணுங்க.

 கும்பம் ராசி :

 உங்களுக்கு என்ன கேள்வி என்ன பதில் வருதுன்னு பாத்துரலாமா?

 ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க. ஏதோ ஒரு லேடிஸ் கிட்ட கடலை போடணும்னு நினைக்கிறீங்க. ஒரு பெண்ணால உங்களுக்கு ஒரு சந்தோஷமான நிகழ்வு இருக்கு. அது குடும்பத்தில உள்ள மனைவியாக இருக்கலாம். சகோதரியாக இருக்கலாம். அம்மாவாக கூட இருக்கலாம். ஆனால் அம்மாங்கறதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மிதான். ஏன்னா இள வயசு பொண்ணா தான் இருக்கு. அதனால உங்களுடைய நட்பு வட்டத்தில் உங்களுடைய தோழிகளால உங்களுக்கு சந்தோஷமான ஒரு மனநிலை நிச்சயமாக உண்டு.

 மீன ராசி :

 உங்களுக்கான கேள்விக்கான பதில் என்ன வருதுன்னு பார்த்திடலாமா?

 ரொம்ப சிரமப்பட்டு ஒரு விஷயத்தை அடையணும்னு முயற்சி பண்றீங்க. உங்க முயற்சியினுடைய தன்மை உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்குனா கட்டாயம் அதற்கான இலக்கை நீங்க வெகு சீக்கிரத்தில் அடைவீங்க. ஆனா அதற்காக ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ண வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கு. ஒரு ஸ்டெப் பை ஸ்டெப்பா இன்னும் உங்க முயற்சியினுடைய தீவிரம் பத்தாது அப்படின்னு சொல்லுவோம். இன்னும் நீங்க முயற்சி பண்ணனும் அப்படிங்கறத தான் உங்களுடைய பிரசன்னத்திற்கான பலனாக இருக்கு.

கேள்விகள்- பதில்கள் :   

இந்த மாதிரி நாம என்ன கேள்விகள் கேட்கிறோமோ, இது இப்ப கேள்வியே என்னன்னு தெரியாது. இந்தக் கேள்வியை வச்சு நம்ம இந்த பலன்களை பார்த்து இருக்கோம். என்னன்னு தெரியாத ஒரு கேள்விக்கு இந்த ராசிக்காரர்களுக்கு இது பாஸிட்டிவா இருக்கு. இது நெகட்டிவா இருக்குனு பாக்குறோம். இதுவே கேள்விகளோட பார்க்கிறோம் அப்படின்னா, அதுக்கான அந்த பிக்சர்களை வச்சு அதற்கான பதில்களையும் தீர்வுகளையும் நம்மளால சொல்ல முடியும். ஆனா நாம ஒரு ஹாபியா இதை நம்ம ட்ரை பண்ணி பார்க்கலாம் அப்படின்னு தான் ட்ரை பண்ணி பார்த்து என்ன சுத்தி உள்ளவங்களுக்கு நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். இது மட்டுமே என்னுடைய முழுநேர வேலை கிடையாது.

 என்னுடைய வேலை அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் ஜாதகம் பார்ப்பது மட்டுமே. ரொம்ப எமர்ஜென்சி தேவை பாக்கணும் உடனடி பதில் வேணும் அப்படிங்கறது தான்.

 இப்ப பஸ்ல நாம ட்ராவல் பண்ணிட்டு இருக்கோம். திடீர்னு ஒரு கேள்விக்கான பதில் நம்ம ஜாதகத்துல PIRANTHA THATHI, PIRANTHA NERAM எல்லாம் வாங்கி போட்டு தட்டி அவங்களுக்கு சொல்றதுக்கு பதிலாக, இந்த பிக்சர் நாம எடுத்ததுமே அந்த பிக்சர் என் கண்ணுக்கு படும். அந்த பிக்சர்ல என்ன வருதோ அதுதான் உங்களுடைய பதிலாக இருக்கும்கிறத ஒரு ப்ராக்டிஸ் பண்ணி, அத என்னுடைய நடைமுறை வாழ்க்கையில நிறைய பேருக்கு ஒத்து வந்ததுனால இது கேரண்டியா உங்க முன்னாடி சமர்பிக்கணும் அப்படின்னு இந்த ஜோதிடம் டிவிக்காக மனோசந்திரா அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இந்த நிகழ்வு. நன்றி. மீண்டும் MATதொரு நிகழ்வில் சந்திப்போம். வணக்கம்.

 - Dr. ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார்

   ( ALP ASTROLOGER )

WEBSITE: www.alpastrology.com

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments