ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தா பத்து வருடம் போராட்டம் தான். ALP அஸ்ட்ராலஜர் Dr ஸ்ரீ குரு உமா வெங்கட்

 

வீடியோ லிங்க்https://youtu.be/6aSLNsnPDS8?si=nPTQr46em9Q3-ahC

அட்சய ராசி :

அட்சய ராசி அப்படிங்கறது நம்ம எல்லாருக்குமே தெரியும். என்னது அட்சய ராசி? நம்மளுடைய தசா புத்தி. இப்போ உங்க எல்லாருக்குமே தெரியும் தசா புத்தி அப்படிங்கிறது எல்லாருக்கும் தெரியும். அட்சய லக்ன பதத்தி படி அட்சய ராசினு இருக்கும். நீங்கள் ALP  சாப்ட்வேர் வச்சிருந்தீங்கன்னா அதுல ARP னு பதிவு பண்ணி இருக்கும். ARP என்ன நட்சத்திரம் என்ன நட்சத்திர புள்ளினு பாருங்க. உங்களோட தசை அப்படிங்கறது இந்த இடத்தில தான் நடக்குது.

 சரிங்க இந்த தசைய நான் எப்படி கணக்கு பண்றதுன்னு ஒரு கேள்வி இருக்கும். தசை பலம் ஏன்னா உங்களுக்கு தெரியும். தசா புத்தி வழியாக தான் ஒரு செயல் நடக்குது அப்படிங்கறது நீங்க சொல்லுவீங்க.

 ஒரு சுக்கிர திசை நடக்ததுன்னா சுக்கிர திசை ஓஹோன்னு ஆயிருச்சு. சுக்கிர திசைல திருமணம் ஆயிடுச்சுன்னு சொல்லுவீங்க. சந்திர தசைல பாடா படுத்து எடுத்திருச்சுன்னு சொல்லுவீங்க. ராகு தசையில் திருமணமும் ஆச்சு. ராகு திசையில பிரச்சனையாவும் ஆச்சின்னு சொல்லுவீங்க.

 அவனுக்கு என்ன குரு தசா நடக்குது கோடி புண்ணியம். கோடி கோடியா சம்பாதிக்கிறான் அப்படிங்கற ஒரு வார்த்தையும் சொல்வீங்க.

 நீங்க எல்லாமே சொல்லக்கூடிய வார்த்தைகள் அந்த தசா புத்தி வலிமையானது அப்படிங்கிற வார்த்தை மட்டும் தான் எல்லாரும் யூஸ் பண்றீங்க. நானும் அதைத்தான் கூற விரும்புகிறேன். என்னுடைய குருநாதர் திரு பொதுவுடைமூர்த்தி ஐயா சார் அதைத்தான் ரொம்ப அழகா எக்ஸ்ப்ளைன் பண்ணி இருக்காரு.

 அட்சய ராசின்னா உங்களுடைய நட்சத்திரம். அட்சய நட்சத்திரம் அப்படிங்கறது. பிறந்த நட்சத்திரம் என்னவோ அதுல இருந்து பிறந்தது தான் அட்சய நட்சத்திரம்.

 நம்ம எப்படி வளர்ந்து வர்றோமோ நம்மளுடைய லக்னம் எப்படி வளர்தோ அதே மாதிரி ஒருத்தவங்களுக்கு அட்சய ராசி அப்படிங்கறது வளருது.

 வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமா வெங்கட்.

உதாரணம் சொல்லப்போனால் ஒருத்தவங்களுக்கு 45 வயசு. அவங்க பிறந்த நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம். முதல் தசை அப்படிங்கறது சூரிய தசை. முடிஞ்சு அவங்களுக்கு என்ன சந்திர தசை. சந்திர தசை முடிஞ்சு செவ்வாய் திசை. செவ்வாய் திசை முடிஞ்சு ராகு தசை. ராகு தசை முடிஞ்சு தற்போது அவருக்கு குரு தசை அப்படிங்கறது இயங்கிக் கொண்டிருக்கும்.

 அப்போ இந்த குரு திசை அப்படிங்கறது  தான் அவருக்கு பலம். நீங்க சொல்லக்கூடிய வார்த்தைகள் நண்பர்கள் எல்லாருமே நம்மன்னு இல்ல. நம்ம பாட்டி தாத்தா முதற்கொண்டு இந்த தசைகள் தான் நமக்கு வலு அதுதான் நம்மளுடைய இயக்கம் அப்படிங்கறது சொல்லி இருப்பாங்க.

தசை என்னுடைய லக்னத்திற்கு எப்படி இருக்குது?

அந்த தசை என்னுடைய லக்னத்திற்கு எப்படி இருக்குது. என்னுடைய அட்சய லக்னத்திற்கு. எந்த இடத்துல இருந்து தசாநாதன் அதை நடத்துகிறார்? எனக்கு அது அனுகூலமாக இருக்குதா? அப்படிங்கிறது தான் கேள்வி. இப்ப நான் சொன்னது இந்த குருதசை நடக்கிறது அப்படிங்கறது ஓகேவா.

 இப்போ ஒரு ஜாதகர் பிறந்த நட்சத்திரம் அப்படிங்கறது திருவோண நட்சத்திரம். அவருக்கு பிறந்த  லக்னம் அப்படிங்கறது மேஷ லக்னம் தற்போது அவருக்கு அட்சய லக்னம் அப்படிங்கறது கடக லக்னம்.

 அவருக்கு இப்போ இவருடைய வயசு அனுசரிச்சு இவருடைய தசை அப்டிங்கறது ராகு தசையா இருக்கு. 35 லிருந்து 40 வயசுக்குள்ள வச்சுக்கோங்க. இப்போ இவங்களுடைய நட்சத்திரம் லக்னம் அனுசரித்து கடக லக்னமும் திசையை அனுசரிச்சு திருவோண நட்சத்திரத்தில் இருந்து ராகு தசை கும்ப ராசியிலிருந்து நடத்துவார்.

 அப்ப இவங்க எப்படி இருப்பாங்கன்னு பாத்தீங்கன்னா, இந்த பத்தாண்டு காலங்கள் அப்படிங்கறது இந்த ஜாதகருக்கு பயங்கர போராட்டமாக இருக்கும்.

 கடக லக்னம் :

இந்த கடக லக்னம் எப்ப ஆரம்பிச்சதோ, அப்பவே அவருக்கு மனப்போராட்டம் திருப்தி அற்ற தன்மை. நான் வீடு வாங்கினேன். எனக்கு அந்த வீட்டில் நிம்மதிங்கறது இல்ல. நான் ஒரு செயலை செய்றேன். தொழிலே ஆரம்பிக்கிறேன் தொழில்ல திருப்தி அப்படிங்கிறது இல்ல. ஏன்னா இந்த தசையும் லக்னமும் 6, 8 ஆக இருக்கு. அட்சய லக்னமும் அட்சய ராசியும் 6, 8 ஆக இருக்கு.

 சஷ்டாஷ்டகமாக இருக்கும்போது, இந்த ஜாதகருக்கு திருப்தி அற்ற தன்மை அப்படிங்கறது தான் கொடுக்கும். இவங்களுக்குத் திருமணம் பண்ணாலுமே நல்ல ஒரு அழகான மனைவி அமைந்தாலுமே அவங்களுக்கு மனதிருப்தி ஏற்படுமானா? கண்டிப்பாக ஏற்படாது. அவங்களுக்கு ஏதோ ஒரு சேடிஸ்பேக்சன் இல்லாத ஒரு வாழ்க்கை அப்படிங்கிறது இந்த கடக லக்னம் அட்சய லக்னத்திலிருந்து சிம்ம லக்னம் மாறுற வரைக்கும். 10 வருடம் ஒரு லக்னம் னு சொல்லி இருக்கோம்.

 இந்த பத்து வருட காலம் அமைப்புங்கிறது மாற்றம் அடையுற வரைக்கும் இந்த ஜாதகருடைய தன்மைகள் அப்படிங்கறது அப்படித்தான் இருக்கும். அதுல எந்த மாற்றமும் இருக்காது.

 அப்போ என்னோட தசை என்னது? என்னோட தசாநாதன் எந்த நட்சத்திரப் புள்ளியில இருந்து நடத்துறாரு?

 நான் வந்து கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தேன் அப்படினா, எனக்கு நடக்கக் கூடியது தற்கால கட்டத்திற்கு குருதசையாக இருந்தது. புனர்பூசம் அப்படின்னா நான் கொடுக்கக்கூடியது என்னை வலுப்படுத்தக் கூடியது குருபகவான் மட்டுமே. அப்போ நான் அர்ச்சனை செய்யக்கூடிய நட்சத்திரம் என்னைக்கா இருக்கும்?

அர்ச்சனை :

புனர்பூசம் நட்சத்திரத்தில் தான் என்னுடைய அர்ச்சனை அப்படிங்கறது நான் பண்ணனும். ஏன்னா எனக்கு தசாநாதன் தான் வலு.

 அப்ப தசாநாதன் எந்த இடத்தில இருக்காரோ? அவர் எந்த நட்சத்திரத்தில் இயங்குகிறார்?

 நான் முதலில் சொன்னேன். திருவோண நட்சத்திரத்தில் ஒருத்தவங்க பிறந்தாங்க. இப்போ அவங்களுக்கு ராகு தசை நடக்குது. இப்ப அவங்களுக்கு என்ன நட்சத்திரத்தில் அர்ச்சனை பண்ணனும்? சதய நட்சத்திரத்தில்.

 என்னுடைய பிறந்த நட்சத்திரம் அப்படிங்கறது திருவோணம் நட்சத்திரம். இப்போ எனக்கு அட்சய ராசி அப்படிங்கறது சதயம் நட்சத்திரம் கும்ப ராசி. அதுல அர்ச்சனை பண்ணுவது. அந்த நாளுக்குள்ள கோயிலுக்கு போவது.

 நீங்க ஏதாவது பூஜைக்கு கொடுக்குறீங்கன்னா உங்களுடைய தசாநாதன் என்ன நட்சத்திரத்தில் நிற்கிறாரோ அந்த நட்சத்திரத்து அன்னைக்கு நீங்க பலப்படுத்துவதுங்கறது உங்க வாழ்க்கையில பெரிய ஒரு மாற்றத்தை கொடுக்குமானா? கண்டிப்பாக கொடுக்கும்.

 இந்த ஆறு எட்டாக இருக்கிற லக்னமும் அவங்களுடைய தசாநாதனும் ஆறு எட்டாக இருக்கும் காலங்கள்ல நிறைய மாற்றங்களை இந்த அர்ச்சனையும் இந்த தெய்வ வழிபாடும் உங்களுக்கு கொடுக்குமானா? கொடுக்கும்.

வழிபாடுகள் :

ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவங்க ஜாதகத்தை அனுசரிச்சு ஒரு ஒரு வழிபாடுகள் அப்படிங்கறது நாம சொல்லிட்டு வாரோம். ஏன்னா அவங்களுடைய நட்சத்திர புள்ளிகள் வச்சு தான் அத சொல்ல முடியும்.

 உதாரணம் சொல்லனும்னா ஒரு சில கோயில்கள போய் தேங்காய் உடைங்கன்னு சொல்லுவோம். சில கோயில்கள்ல போய் ஏதாவது வாங்கி கொடுக்கன்னு சொல்லுவோம். அப்போ அவங்களுடைய ஜாதக அமைப்பு தான் இந்த இந்த பரிகாரங்கள் அப்படிங்கிறத அங்க சொல்ல முடிகிறது.

நன்றி.

 - Dr. ஸ்ரீ குரு உமாவெங்கட்( ALP ASTROLOGER ).

www.alpastrology.com

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments