10th, 12th நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க எளிய பரிகாரம். - Dr. ஸ்ரீ குரு உமாவெங்கட் ALP ASTROLOGER.


 வீடியோ லிங்க்https://youtu.be/HPhDxNQ44NY?si=20HxnyQs0M8lqJim

வணக்கம். என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். என்கிட்ட ஒரு ஜாதகம் வந்தது. என்னனு பாத்தீங்கன்னா அந்த குழந்தை நீட் எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருக்காங்க. அவங்க மருத்துவ கல்வி அப்படிங்கிறது படிக்கிறாங்க. அவங்க ஜாதகத்துல அந்த அமைப்பு இருக்குதா? அப்படிங்கற ஒரு கேள்வி வந்தது.

 அவங்களுடைய பிறந்த லக்னம் அப்படிங்கறது மிதுன லக்னம். இப்ப அட்சய லக்னம் அவங்களுக்கு சிம்ம லக்னமா இருக்குது. இப்பதான் இந்த லக்னம் அப்படிங்கறது ஆரம்பிச்சிருக்கு.

மருத்துவ கல்வி அமைப்பு :

இந்த மருத்துவம் கல்வி சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கிறவங்களுக்கு என்ன மாதிரி கிரக அமைப்பு இருக்கு. இதை நாம வந்து ரொம்ப எளிமையா ALP மெத்தட் ல சொல்ல முடியும்.

 பாரம்பரியத்தில் சொல்ல முடியுமானா? அந்த தசா புத்தி அத வச்சு தான் சொல்ல முடியும். ஆனா ALP  மெத்தட்ல இந்த லக்னம் இது சார்ந்த கல்விகள் அப்படிங்கறது பலன் கொடுக்கும் அப்படின்னு சொல்ல முடியும்.

 இப்ப அவங்க வந்தாங்க. என் பொண்ணு நீட் எக்ஸாம் பாஸ் ஆவாங்களா? ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. படிப்பாங்களா? அப்படிங்கற கேள்வி. அடுத்த நெக்ஸ்ட் லெவல் அவங்க சீட் கிடைச்சிருமா? அப்படிங்கிற கேள்வி இருந்தது.

 இப்ப அவங்களுக்கு வயது 18. அவங்களோட பிறந்த லக்னம் அப்படிங்கறது மிதுன லக்னம். இப்ப அட்சய லக்னம் அவங்களுக்கு சிம்ம லக்னம். இந்த கேதுவோட நட்சத்திரம் இரண்டாம் பாதம் அப்படிங்கறது போய்டிருக்கு. 

 அவங்ககிட்ட சொன்னோம் இப்போ இந்த கல்விக்கு உண்டான அமைப்பு ரொம்ப நல்லா இருக்கு. அதை விட கோச்சார கிரகங்கள் உங்களுக்கு ரொம்ப எளிமையா பலன் கொடுக்கிறது அப்படின்னு தான் சொல்ல முடியும்.

 என்ன அப்படின்னா ஜாதகம் தெரிந்தவர்களுக்கு ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு ஜஸ்ட் இந்த லக்னத்தை வச்சே சொல்ல முடியுமானா? சொல்ல முடியும்.

 அவங்களுடைய பிறந்த காலகிரகம் அப்படிங்கிறது படிப்பை தரக்கூடியது இரண்டாம் பாவகம். இரண்டாம் பாவகம் எப்படி இருக்குனா? நல்லா இருக்கு.

இரண்டாம் பாவகம் :

பொதுவாகவே கல்விக்கு அப்படிங்கிறது இரண்டாம் பாவகம் பார்ப்போம். இரண்டாம் பாவக அதிபதினு சொல்லக்கூடிய கிரகம் ஆறாம் இடத்தில் போய் உட்கார்ந்து இருக்கு. அதே மாதிரி ஆறாம் அதிபதினு சொல்லக்கூடிய கிரகம் பன்னிரெண்டாம் ஆம் இடத்தில்.

 மகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:

அப்போ இந்த சனி பகவானுடைய பார்வை அப்படிங்கறது இரண்டாம் இடத்தில் விழும்போது இந்த ஜாதகிக்கு மருத்துவம் சம்பந்தப்பட்ட கல்வி அப்படிங்கிறது வரணும் அப்படிங்கறது விதி. இப்ப நான் சொன்னது ALP லக்னம் சிம்ம லக்னம். அங்க மகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்.

 மகம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்திலேயே அவங்க எழுதி இருப்பாங்க. ஆனா அவங்களுக்கு கிடைச்சிருக்காது அப்படின்னு சொன்னோம். ஆமா மேடம் போன வருஷமே என் பொண்ணு எக்ஸாம் எழுதுனா ஆனா அது கிடைக்கல அப்படின்னாங்க.

 இப்ப மகம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் அவங்களுக்கு வாய்ப்பு இருக்குது. நல்லா ட்ரை பண்ண சொல்லுங்க அப்படின்னா.

 என்ன அப்படின்னா நைட் நேரம் நிறைய படிக்க சொல்லுங்க. இரவு நேரத்தில் அவங்க படிப்பது அவங்க கல்விக்கு பலம்  கொடுக்கக் கூடியது. அவங்க சொன்னதும், ஆமா என் பொண்ணு நைட்ல தான் படிக்கிறா அப்படின்னாங்க. சொல்ல முடியுமானா? சொல்ல முடியும்.

 அவங்களுடைய கல்வி முறை அப்படிங்கறது நல்லா இருக்குது. ரொம்ப ஸ்பீடான பொண்ணு. நெனச்சதை சாதிக்கக்கூடிய தன்மை அந்த குழந்தைக்கு இருக்குது. கண்டிப்பாக படிப்பாங்க. அதுவும் அவங்க டெக்னிக்கல் இந்த சர்ஜரி சம்பந்தப்பட்ட படிப்பு அப்படிங்கிறது அவங்களுக்கு ரொம்ப நல்லா கை கொடுக்கும் அப்படிங்கறத சொன்னேன். இப்ப கோச்சார கிரகங்களை வச்சு பார்த்தாலும்  அருமையான பலன் அப்படிங்கறதை நம்ம அட்சய லக்ன பத்ததில எடுக்க முடியும்.

 அந்த லக்னத்திற்கு ஆறாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் தொடர்பு அந்த ஜாதகருக்கு இருக்குதானா? இருக்குது. அவ்ளோ அழகா இருக்குது.

 ரிசல்ட் வரும்போது அந்த பொண்ணுக்கு நீட் சீட் கிடைக்கக்கூடிய தன்மை அப்படிங்கிறது இங்க கிடைக்குது. ரொம்ப ஈசியாக சொல்லலாம்.

 ALP தனுசு லக்னம்:

இதே மாதிரி வேற ஒரு லக்னம் தனுசு லக்னம். இவங்களுக்கு இப்பதான் லக்னம் புள்ளி அப்படிங்கறத ஆரமிச்சிருக்குது. மூலம் நட்சத்திரம் நான்காம் பாதம் போயிட்டு இருக்குது. இப்போ இவங்களுக்கு மருத்துவம் சம்பந்தப்பட்ட கல்வி கைகொடுக்குமானா? ரொம்ப அழகா கை கொடுக்கும்.

நடந்துட்டே படிக்க சொல்லுங்க :

எப்படி அதை சொல்ல முடியும்னா சொல்ல முடியும். இவங்களுடைய நட்சத்திர புள்ளிங்கறது இவங்களுக்கு ரொம்ப அழகா கை கொடுக்குது. இவங்களுக்கு நல்லா இருக்குமானா? சூப்பரா இருக்கும். அவங்க கிட்ட சொன்னோம் பொண்ணு படிக்கும்போதே தூங்குது நினைக்கிறேன். கொஞ்சம் படிக்கும்போது நடந்துட்டு படிக்க சொல்லுங்க அப்படின்னேன். ஆமா என் பொண்ணு படிக்கும் போது தூங்கிட்டு தான் படிக்கிறா அப்படினாங்க. நடந்துட்டே படிக்க சொல்லுங்க அவங்களால படிக்க முடியும்.

 அவங்க வந்து உள்ளூர் படிக்கிறதை விட வெளிநாட்டுக்கு போய் படிக்கணும்கிற எண்ணம் தான் அவங்களுக்கு ஜாஸ்தியா இருக்குன்னு சொன்னோம். ஆமாங்க அவ உள்ளூர்ல இல்ல வெளியூர்ல தான் படிக்கணும். அதுவும் வெளிநாட்டில் தான் படிக்கணும்னு ஆசைப்படுறாங்க அப்படின்னாங்க.

 ஆமாங்க அப்படித்தான் அந்த ஜாதக அமைப்பு இருக்குது. தைரியமா படிக்க சொல்லுங்க. அந்த வாய்ப்பு அவங்களுக்கு ரொம்ப அருமையா வரும் அப்படின்னு சொல்ல முடிந்தது.

 ஏன்னா ஒவ்வொரு லக்னமும் அந்த நட்சத்திர புள்ளிகளும் இந்த குழந்தையோட தன்மைகள் அவங்க மனோபாவம் எப்படி இருக்கு? அப்படிங்கறத நம்ம ஏஎல்பி மெத்தட்ல அட்சய லக்ன பத்ததில ரொம்ப தெள்ள தெளிவா சொல்ல முடியும்.

பூராடம் நட்சத்திரம் :

ஒரு ஜாதகர் எதற்காக படிக்கிறார்? அவருக்கு அந்தப் படிப்பு கை கொடுக்குமா? அது அவரால் படித்து முடிக்க முடியுமா? அப்படிங்குறத சொல்ல முடியுமான்னா? சொல்ல முடியும்.

 இதே இது ஒருத்தவங்களுக்கு பூராடம் நட்சத்திரம் போயிட்டு இருக்கு. உங்களுடைய படிப்போட தன்மை எப்படி இருக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா, ரொம்ப லேசியா இருக்கும். படிக்கவே மாட்டார். சிலர் வந்து Ph.D. லெவல்ல படிப்பாங்க. சிலர் வந்து ரொம்ப லேசியா இருப்பாங்க. படிக்கவே மாட்டாங்க. படிச்சத மறந்துடுவாங்க. மறதி அப்படிங்கறது அவங்களுக்கு ஜாஸ்தியா இருக்கும். இதே ஜாதகம் ஒன்னு வந்தது.

பூரம் நட்சத்திரம் :

அதே மாதிரி சிம்ம லக்னத்தில பூரம் நட்சத்திரம் போச்சு ஒரு ஜாதகம். உங்க பொண்ணு படிக்கவே மாட்டேங்கிறாங்க. படிக்கிறத மறந்து போயிடறாங்க அப்படின்னேன். ஆமா என் பொண்ணு அப்படித்தான் இருக்கா. பத்தாங்கிளாஸ் ஆவது பாஸ் ஆயிடுவாளா? அப்படின்னு ஒரு கேள்வி. கவனிச்சுக்கோங்க 10-ம் கிளாஸ் ஆவது பாஸ் ஆயிடுவாங்களான்னு.கண்டிப்பா பாஸ் ஆவாங்க. கொஞ்சம் டிரெயின் பண்ணி படிக்க சொல்லுங்க அப்படின்னேன்.

மனோபாவத்தை ஒரு நிலைப்படுத்த :

சரி என்ன மந்திரங்கள் சொல்லலாம்? இப்ப படிக்கிற குழந்தைகளுக்கு என்ன பரிகாரம் சொல்லலாம்? மந்திரங்கள் மூலமாக மந்திர உச்சாடத்தின் மூலமாக அவங்களுடைய மனோபாவத்தை ஒரு நிலைப்படுத்த முடியும்.

 ஏன்னா இவங்களுடைய படிப்பினுடைய நிலை அப்படிங்கறது படிநிலையாக இருக்கும். மறந்து போயிருவாங்க. அதிகமான பிரஷர் அப்படிங்கறது எடுத்துக்குவாங்க. பாத்தீங்கன்னா நீட் எழுதுற குழந்தைகள் நிறைய குழந்தைகள் தப்பான முடிவுகள் எடுக்குறாங்க. பெற்றோருக்கு அழுத்தத்தை கொடுக்குது. ஏன்னா படிப்போட பிரஷர் அப்படிங்கறது அவங்களால தாங்க முடியல. அப்போ அவங்களுக்கு மியூசிக் அப்படிங்கறது கேப்பாங்க சில குழந்தைகள். சில குழந்தைகள் என்ன பண்ணுவாங்க படிச்சிட்டு இருக்கும்போதே டக்குனு ஒரு டூர் அப்படின்னு போயிட்டு வருவாங்க.

 இந்த மாதிரி உள்ள குழந்தைகளுக்கு என்ன  செய்யணும் அப்படின்னா மந்திரங்கள் அப்படிங்கறது சொல்லணும். இப்போ எல்லாருக்குமே தெரியும் இந்த மந்திரம். நம்ம ஹயக்ரீவர்  மந்திரம்.

"ஞானானந்தமயம் தேவம்

நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம்

ஹயக்ரீவ முபாஸ்மாஹே"

 இந்த மந்திரத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து, தினமும் இந்த மந்திரத்தை அந்த குழந்தைகள் 11 தடவை காலையும் மாலையும் கண்டிப்பாக சொல்லணும். அதே மாதிரி நைட் நேரம் படிக்கும்போது இந்த குழந்தைகள் சொன்னாங்கன்னா, அவங்க படிப்போட திறன் அப்படிங்கிறது அதிகமாகும். கவனிக்கிற திறன் அப்படிங்கறது அதிகமாக இருக்கும். ஏன்னா படிப்புங்குறது இவங்களுக்கு கொஞ்சம் ஒரு பிரஷராக இருந்தாலும், இந்த மந்திரம் சொல்ல சொல்ல சொல்ல அவங்களுக்கு மனமும் லைக்கும். அந்த மனமும் படிச்சத அப்படியே உட்கொள்ளும். ரொம்ப ஒரு சிறப்பான மந்திரம் ஹயக்ருவருடைய மந்திரம்.

நீங்க youtubeல பார்த்தாலும் போதும். ஹயக்ரீவர் மந்திரம் அப்படிங்கறது பார்த்தாலும் போதும். நாலு வரி மந்திரம். உங்க குழந்தைகளுக்கு நீட்  படிக்கிறவங்களுக்கு பத்தாங்கிளாஸ் படிக்கிறவங்களுக்கு பிளஸ் டூ படிக்கிறவங்களுக்கு இந்த குழந்தைகளோட மந்திரம் அப்படிங்கறது சொல்லுங்க.

ஏலக்காய் :

அதே மாதிரி அவங்க கைல எப்போதும் ஏலக்காய் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. ஒரு மூணு ஏலக்காவாது அவங்க கைல  இருக்கணும். எப்போதுமே அப்படிங்கறது சொல்லிக்கிறேன். அதே மாதிரி ஏலக்காய் மாலை கட்டி கோர்த்து அத போட முடிஞ்சதுன்னா ஹயக்ரீவர் கோவில்ல போய் போட்டுட்டு வாங்க ரொம்ப சிறந்த பலனை கொடுக்கும்.

கொண்டக்கடலை மாலை :

சிலர் வந்து கொண்டக்கடலை மாலை போடுவாங்க. அதுவும் நல்ல பலனை கொடுக்கும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை போடணும். நம்ம எல்லாருக்குமே தெரிந்தது.

"குரு பிரம்மா குரு விஷ்ணு

குருதேவோ மகேஸ்வரஹ

குரு சாக்ஷாத் பரபிரம்மா

தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ"

இந்த மந்திரத்தை அந்த குழந்தைகளுக்கு அதிகமாக சொல்லி கொடுங்க. இத அவங்க கேட்க மாட்டேங்கிறாங்க. கேட்கிற மனப்பான்மையில் இல்லை. உங்க போன் ரிங் டோன்ல வச்சுக்கோங்க. அந்த குழந்தைங்களோட ரிங்டோன்ல இந்த மந்திரத்தை வச்சுக்கோங்க. ஹயக்ரீவர் போட்டோவ வாங்கி அந்த குழந்தைகள் பாக்குற இடத்துல வையுங்க. கண்டிப்பாக இந்த குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும் அதிக திடத்தன்மையும் மனம் இதை செஞ்சுதான் தீரனும் என்கிற ஒரு தன்மை இந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஏற்படும் அப்படின்னு சொல்லிக்கிறேன்.

நன்றி.

 - Dr ஸ்ரீ குரு உமாவெங்கட்

 -(ALP ASTROLOGER )

www.alpastrology.com

whatsapp / call: 9786556156 /9363035656


Comments