திருமணம் மற்றும் படிப்பு என்பது, நம் கையிலா அல்லது கிரகங்களின் கையிலா? - ALP ஜோதிட ஆய்வு.

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில், அட்சய இல்லத்தில், ஆன்மீக Glitz சேனலின் வாயிலாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

அட்சய லக்ன பத்ததியின் தந்தை. வாக்கு யோகி. உயர் திரு. Dr. சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், ஜோதிட ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கலந்துரையாடல் நிகழ்வில் சில துளிகள்....

வணக்கம், சார், 

என் பெயர் லட்சுமி,  திருப்போரூரில் இருந்து வந்திருக்கேன். 

குழந்தைகளுக்கு  திருமணம்னு பார்க்கிறோம். அது காதல் திருமணமா முடியுது. சில  நேரத்துல பெற்றோர்கள் அமைத்த திருமணமா முடியுது. இது நம்ம முடிவெடுத்து நடக்குதா, இல்ல அவங்க முடிவு எடுத்ததனால், அந்த நேரத்துல நடக்குதாங்கிறது என்பது கேள்வி சார்.www.alpastrology.com

ஐயா: 

இந்தக் காலத்துல, இது முக்கியமான கேள்வி. ஏன்னா, இந்த வீடியோ பார்க்கிறவங்களுக்கு இது முக்கியம். பெண்ணா இருக்கலாம், ஆணாக இருக்கலாம், இந்த 17 வயதிலிருந்து, இந்த 27 வயதுக்குள்ள, 25 வயதுக்குள்ள நடக்கக் கூடிய கால கட்டங்களில், பெற்றோர்களுடைய மனநிலையில் மிகப் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துறது காதல்.

நல்ல பொண்ணா பார்த்து பார்த்து வளர்த்திருப்பாங்க. பையனை பார்த்து  பார்த்து வளர்த்திருப்பாங்க. பெண்ணோ அல்லது பையனோ, சடனா ஒரு முடிவெடுக்கும் போது, பெற்றோர்களால் தாங்க முடியறது இல்ல. ரெண்டே ரெண்டு விஷயம் மட்டும் தான், நாம் சொல்லணும்.

உதாரணத்திற்கு, நம்ம ஒரு  நட்சத்திரம் சொல்லுவோம் இல்ல, இப்ப மூல நட்சத்திரம் 1 ஆவது பாதம், இருக்கும் போது,  நீங்க 27 வயசாக இருந்தாலும்,  25 வயசா இருந்தாலும், 23 வயசு இருந்தாலும், காதல் திருமணம் தான். அப்ப அந்த டைம் போகும் போது, கவனமாக போகணும், ஏன், அப்படி என்றால் தனி கவனம் செலுத்த வேண்டிய இடம். 

வீட்டில் பையனோ அல்லது பெண்ணோ, ஸ்கூல்ல படிக்கிறாங்க. பெற்றோர்கள்,  ஸ்கூல்ல கொண்டு போய் விடவும், அழைச்சிட்டு வரவும் செய்கிறோம். இவர்களுக்கு, ALP ஆக மூலம் 1,2, செல்கையில், பெற்றோர்கள், க்ளாஸ் டீச்சர் கிட்டயோ, அல்லது ஹெச்.எம். கிட்டயோ, அந்த ஸ்கூல்ல போய் கண்டிப்பாக பார்த்து பேசணும்.  முன்னாடியே ஒரு விழிப்புணர்வுக்காக, இந்த நட்சத்திரப் புள்ளி சொல்றேன்.

மூலம் 1, 2,  ALP நட்சத்திரமாக செல்கையில், பெற்றோருக்கு குழந்தைகள் மேல் கவனம் தேவை. 

என் நண்பர் ஒருவரிடம், இப்ப உன் பொண்ணுக்கு, மூல நட்சத்திரம் 1,2 வரப் போகுது. கொஞ்சம் கவனமாக பார்த்துக்கப்பா, என்று சொன்னேன். அதற்கு அவர், என் பொண்ணைப் பார்த்து, நீ இப்படி சொல்ற.  அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே. என் மேல அவ்வளவு பாசமாக இருக்கிறாள்.  அதற்கு நான் அவரிடம், இந்த நட்சத்திரம் போகும் போது,  நீ இல்ல,  யாராயிருந்தாலும் அப்படித் தான், நானா  இருந்தாலும் அப்படித்தான். தயவு செய்து கவனமாக இரு என்று சொன்னேன். மூலம் 1,2  முடியும் போது, அந்த பெண், ஒருத்தனை திருமணம் பண்ணிட்டு போயிட்டா. அந்தப் பெண்ணுக்கு திருமணமானது, ரெண்டு நாள் கழிச்சு தான், தெரியும்.


ஒரு நட்சத்திரப் புள்ளி, அந்த அளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முழு கவனமாக இருக்க வேண்டிய இடத்துல இருக்கிறோம். நாம், பயப்பட்டு என்ன பண்ணப் போறோம்? இந்த நட்சத்திரம் போகும் போது என்ன பண்ணப் போறோம்? 

கிரகங்கள் இந்த வயதில் போகும் போது, இப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கும். இந்த 17 இல் இருந்து 27 வரைக்கும், கிரகங்கள்,  இனக் கவர்ச்சிகளுக்கான, உணர்வு நிலைகளைக் கொடுக்கும். இது முழுக்க முழுக்க கிரகங்களோட அடிப்படையில் நடக்குது. இந்த நேரத்துல, இன்னாரை சந்திக்கணும் அப்படிங்கறது எழுதப்பட்டது. இதனை, நீங்களோ, நானோ மாற்ற முடியாது.  இது வந்து முன்னரே பிளான் செய்யப்பட்டது. பெரிய நிகழ்வுகளை, டிசைன் பண்ணி இருக்கு.

சந்திக்கிறதும், சந்திக்காததும், உன்கிட்ட ஒரு வாய்ப்பையும், நான் கொடுக்கிறேன்னு இரண்டு வாய்ப்பையும் நான் உங்களுக்கு கொடுக்கிறேன்.  இப்ப என்னுடைய ஆசைகள் என ஒண்ணு இருக்கு. எனக்கு நடக்கக் கூடிய நிகழ்வுகள்னு ஒண்ணு இருக்கு. நான் வந்து ஒரு பொருள் வாங்கணும்னு நினைக்கிறேன். இது என்னுடைய ஆசை.  இது எனக்கு எப்படி வேணாலும் வரலாம். இது வந்து கட்டத்தை மீறியும் வரலாம். 

இப்ப இதுக்கு, இன்னொரு உதாரணம் சொன்னா நல்லா இருக்கும். இங்க இருக்கிறவங்க எல்லாருமே படிச்சிருக்கோம்ல. நான் படித்த படிப்புக்கு வேலை பார்க்கிறது யார் என கை தூக்க சொன்னா, ரெண்டு பேர் வேணும்னா கை தூக்கலாம்.

நம்ம படிப்பு என்கிறது ஆசை. ஆனால் வேலை என்கிறது, நம்ம ஆசை இல்லை. அது விதிக்கப்பட்டதா இருக்கும். இன்னைக்கு இன்ன வேலைக்கு தான் போகணும்னு விதிக்கப்பட்டிருக்கும். ஆனா, நாம இது தெரியாம,  என்ன பண்றோம், பி.காம். படிக்கிறோம். பி.எஸ்.சி படிக்கிறோம். எம்.எஸ்.சி படிக்கிறோம். எம்.பி.பி.எஸ் படிக்கிறோம். எம்.பி.பி.எஸ் படிச்சுட்டு, அட்மின் ஆக வேலை பார்க்கிறார்கள். இதற்கு, நீங்க அட்மின்ல படிக்கணும். ஆனா எம்.பி.பி.எஸ் படிச்சிருக்கீங்க, என்றால், ஆமா சார், அப்பா ஒரு டாக்டர். அவர் ஒரு ஹாஸ்பிடல் வைத்திருக்கிறார். அதனால, நான் ஹாஸ்பிடல்ல அட்மின் தான் சார் பார்க்கிறேன். நான் இன்னைக்கு வரைக்கும், எங்க  ஹாஸ்பிடல்ல அவுட் பேஷன்ட் (ஓ.பி) பார்த்து ட்ரிட்மென்ட் கொடுத்ததில்லை. காரணம், என் அப்பாவோட ஹாஸ்பிடலில், 25 டாக்டர்கள் வேலை செய்கிறார்கள். அந்த ஹாஸ்பிடல்ல, இவர் நிர்வாகம் பண்றாரு. எப்படி பாருங்க?  எம்.பி.பி.எஸ் படித்து நிர்வாகம் பண்றாரு.

நாம் என்ன தான் நினைச்சாலும், கிரகம் அதன் வேலையை செய்கிறது. 

இந்த வேலை என்கிறது விதிக்கப்பட்டதான ஒன்றாக இருக்கு. ஆனா படிப்புங்குறது அப்படி கிடையாது.  நீங்கள் என்ன வேணாலும் படிங்க.

அப்பா சொல்றது படிக்கலாம். அம்மா சொல்றத படிக்கலாம்.

தயவு செய்து படிக்கும் போது மட்டும், அப்பா சொல்றது யாரும் கேட்காதீங்க.அம்மா சொல்றதக் கூட கேட்ருங்க.  அதே போல்,  திருமணத்தில் அம்மா சொல்றதை யாரும் கேட்காதீங்க. அப்பா சொல்றத கேளுங்க. இது எழுதப்படாத சட்டம்.www.alpastrology.org

நான் ஒரு ஜோதிடர். நீங்க சொல்றத நான் ஏன் கேட்கணும் என்றால், நாங்க எத்தனையோ பேர் பார்த்துட்டு தான், உங்களுக்கு சொல்றோம். ஏன்னா, அப்பா ஆகப் பட்டவர், மகன் அல்லது மகளின் படிப்பு விஷயத்தில் எடுத்த முடிவுகள், தோல்வியைத்  தான் அடைய வைக்குது.

ஒரு பெண்ணின் தந்தை, தன் பெண்ணை எம் பி பி எஸ் ஆக்கிட்டேன்,  அப்படின்னு சொன்னார்.  அந்த பொண்ணு நாசாவுல பெரிய சைன்டிஸ்ட் ஆகணும்னு இருக்கு. நாசாவுலேயே நம்பர் ஒன்னா வரணும் அப்படின்னு இருக்கு. நீங்க, அந்த பொண்ணை பிடித்து உட்கார வைத்து, நீங்க உங்க  ஆசைக்காக என்ன பண்ணிட்டீங்க, எம்.பி.பி.எஸ். படிக்க வச்சுட்டீங்கனு  நான் சொல்லுவேன். 

படிப்புக்கு யார் முடிவெடுக்க கூடாது என்றால் அப்பா.

அதே மாதிரி திருமணத்துக்கு யாரு முடிவெடுக்கக் கூடாது, என்றால்  அம்மா.

என்னை மாதிரியே பொண்ணு வரணும் என பையனின் அம்மா சொல்கிறார். இது தேவலோகத்திலேயே செஞ்சு வர்ரதா, என்ன? அதே சமயம், வீட்டுத் திருமணம் என்பது  நிச்சயிக்கப்பட்டது.  இந்த நேரத்துல இவரை சந்திக்க வேண்டும் என்பது, அங்க ஜாதகத்தில் இருக்கும். அந்த நேரத்துல அந்த பெண்ணையோ, அந்த மகனையோ, அந்த மகளையோ சந்திக்க கூடிய அமைப்பு இருக்கும். அதன் பிறகு தான் காதல் வரும். இது வந்து எழுதப்படாத சட்டமாகும். இந்த ஜாதகம் நம்ம வாழ்க்கையை, வாழ வைக்குது.

நன்றி வணக்கம்.ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156

 

Comments