அட்சய லக்ன பத்ததி முறையில் (அட்சய வாஸ்து)

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில், அட்சய இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் தந்தை. வாக்குயோகி. உயர்திரு. Dr. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், ஜோதிட ஆர்வலர்களின்  கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கலந்துரையாடல் நிகழ்வில் சில துளிகள்…….
வணக்கம் ஐயா. என் பெயர் லட்சுமி. சென்னையில் இருந்து பேசுகின்றேன். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் வாஸ்து உள்ளதா?  அதனை எப்படிப் பார்ப்பது?

ஐயாவின் பதில்: 


வாஸ்து என்பது இடத்தை மாற்றுவது, கட்டடத்தை மாற்றுவது, இந்த திசை ஒத்துவரும், இந்த திசை ஒத்து வராது, இந்த திசை பிடிக்கும், பிடிக்காது என்று சொல்வார்கள்.

அட்சய லக்ன பத்ததி முறையில், அட்சய வாஸ்துவை எனர்ஜி என்று சொல்கின்றோம். ஆற்றல் என்று சொல்கின்றோம். வீட்டில் ஜன்னல் முழுவதும் அடைத்து உள்ளீர்கள் எனில் காற்றோட்டம் இல்லாமல், வீட்டிற்குள் எப்படி இருக்கும்? 

எவ்வளவு கருவிகள் (Fan) வைத்திருந்தாலும், காற்றின் தன்மை வெப்பமாக இருக்கும். வீடு முழுவதும் நிறைய பொருட்களை அடக்கி வைத்துள்ளீர்கள் எனில் எப்படி இருக்கும்?  10 -20 ஆட்கள் இருக்க கூடிய இடத்தில், நிறைய ஆட்கள் இருப்பின், அந்த இடத்தில் உள்ள எனர்ஜி லெவல் எப்படி இருக்கும் என்று வாஸ்து வகுப்பில் பார்க்கின்றோம்.



ஒரே வீட்டில் தான் இருக்கின்றோம். நான்கு  வருஷத்துக்கு முன்னால் வீடு வாஸ்து எல்லாம் சரி செய்தும்,  நான்கு வருஷத்துக்கு அப்புறம் வீட்டில் பிரச்சனைகள் வருகிறது, அந்த வீட்டில் பிரச்சனைகள், சங்கடங்கள் நிகழ்கிறது, பதட்டம் இருக்கிறது, பயம் இருக்கிறது, எனின் வீட்டில் கலர் பெயிண்டிங் மாற்றுங்கள், அது ஒரு பரிகாரம். பழைய பொருட்களை அகற்றி விடுங்கள். பொருட்கள் மூலம் வீட்டை அடைத்தால், வீட்டின் எனர்ஜி பாதிக்கப்படும். www.alpastrology.com

10 ஆட்கள் இருக்க வேண்டிய இடத்தில் 100 பேர் இருந்தால் எப்படி இருக்கும்? மூச்சு விட முடியாமல் கடினமாக இருக்கும். அந்த மாதிரி தான் எனர்ஜி லெவல் பார்க்கின்றோம். 

காலங்கள் மாறும் போதும்,  ஒவ்வொரு நட்சத்திரப் புள்ளிகள் மாறும் போதும், ஒவ்வொரு லக்னம் மாறும் போதும், இந்த அமைப்புகள் மாறுமா எனக் கேட்டால், மாறும் என்று சொல்ல முடியும்.

உதாரணமாக, பாண்டிச்சேரியில் ஒரு வீடு,  ALP லக்னம், விருச்சிக லக்னம்,   3, 4 க்கு உரிய சனி பகவான், நாலாம் அதிபதி கன்னியில், 11 ல் இருக்கக் கூடாது. பெரிய வீடு கட்டி, பராமரிப்பதே கஷ்டமாக உள்ளது. வாஸ்து சம்பந்தப்பட்டது, மேற்கு பக்கம் சம்மந்தப்பட்டது, எனக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது என்கின்றனர்.



விருச்சிக லக்னம், கன்னியில் சனி பகவான் இருந்தால், வீடு சம்பந்தப்பட்ட வாஸ்து குறைபாடுகள் கண்டிப்பாக வரும். ஏனென்றால் பெரிய வீடாக இருக்கும். சிறிய வீடாகக் கட்ட மாட்டார்கள், 11 -ல் கிரகம் என்றால் பிரம்மாண்டமாக இருக்கும். பெரிய வீடாக இருப்பதால், பூட்டி வைக்கவும் முடியாது. தினமும் சுத்தம் செய்ய முடியவில்லை. 8000 சதுர அடி வீடு. இருப்பது இரண்டு பேர். அதுவே அவர்களுக்கு  மிகப் பெரிய போராட்டமாக இருக்கும்.

எனவே கிரகங்களைப் பொறுத்த வரைக்கும், லக்னம் மாறும் போது,  வீடுகளின் தன்மைகளை நாமே மாற்றிக் கொள்கிறோம். நாமே பல பொருட்களைக் கொண்டு வந்து வைக்கின்றோம். ஜன்னல்களை திறக்காமல் இருப்போம். வீட்டு வாசல் கதவை திறக்காமல் இருப்பது என்று எனர்ஜி லெவல்களை நாமே கூட்டிக்கொள்கின்றோம் அல்லது குறைத்துக் கொள்கின்றோம். எனவே முடிந்த அளவு ஜன்னல் கதவுகளை திறந்து வையுங்கள். வாசலை பாதுகாப்பாக திறந்து வையுங்கள். வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரவே வராது. www.alpastrology.org

வீட்டை மூடி வைத்திருந்தால் கண்டிப்பாக ஒரு துர்வாசனை வரும். அங்கு வாஸ்து பிரச்சனை உள்ளது என அறியலாம். அதற்கு தகுந்த, மாற்றுப் பரிகாரங்கள் செய்து, மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

லக்னம் மாறும், வீடு மாறாது. ஆனால் வீட்டின் தன்மைகள் மாறும். அதற்கு தகுந்த மாதிரி வீட்டை மாற்றிக் கொண்டால், வீட்டில் உள்ள பொருட்களை மாற்றிக் கொண்டாலே போதும்.
நன்றி.

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656


Comments

  1. ஐயா கலியுக அவதார மூர்த்தி திரு பொதுஉடை மூர்த்தி அவர்கள் பாதம் தொட்டு வணங்கி தாங்கள் வாஸ்து விளக்கம் தந்தது மிகவும் சிறப்பு

    ReplyDelete
  2. நன்றி ஐயா அடுத்த அட்சய வாஸ்து வகுப்பு எப்பொழுது ஐயா

    ReplyDelete

Post a Comment