தொழில் செய்யலாமா? - ALP ஜோதிட ஆய்வு. ALP ஆசிரியர் & ALP ஜோதிடர். Dr. C.K. சத்தியநாராயணன்


அனைவருக்கும் வணக்கம். 

சமீபத்தில் ஒரு ஜோதிடரை சந்தித்தேன். அவர் பிறந்த தேதி, பிறந்த நேரம்,  பிறந்த ஊர், எல்லா தகவல்களும் நமக்குக் கொடுத்தார். இந்த ஜாதகத்தை பார்க்கும் படியும் சொன்னார். அதேபோல அவர் விஷயங்கள் வெளியில் தெரியக்கூடாது என்று நம்மிடம் கேட்டுக் கொண்டதனால் ஒரு சிம்பிள் பாயிண்ட் மட்டும் சொல்கிறேன். 

இவருடைய ஜென்ம லக்னம் கும்பம். கும்பத்திற்கு 2,11 க்குரியவர், லாப அதிபதியும் தன காரகனும் ஆகிய குரு. குரு பத்தாம் இடத்தில்  விருச்சிகத்தில் இருப்பது மிகவும் சாதகமான அமைப்பு என்று நினைத்துக் கொண்டு, தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். 

நான் தொழில் செய்யலாமா என்ற 
இந்தக் கேள்வியை, இவர் ஒருத்தரிடம் மட்டும் கேட்கவில்லை, இரண்டு, மூன்று ஜோதிடர்களிடம் கேட்டிருக்கிறார். இரண்டு மூன்று பேரும் தாராளமாக தொழில் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். www.alpastrology.org



அதாவது, இந்த ஜாதகர் நம்மிடம் முதலில் வரவில்லை. கடைசியாகத்  தான் வந்தார். நம்ம கிட்ட என்ன சொன்னார் என்றால், சார் எல்லாரும் சொல்லித் தான் சார் தொழில் செய்தேன். அதில் எனக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. அதிலிருந்து எப்படி நான் வெளியில வர்றதுன்னு தெரியல அப்படின்னு சொல்லி, இந்த மாதிரி சூழ்நிலையில தான் என்கிட்ட வந்தார். இது சரியான விஷயமா என்று கேள்வியாக கேட்டார். சொன்ன விஷயங்கள் சரியா என்று கேட்டார். ஆமா சார் நீங்க சொன்ன எல்லா விஷயமும் சரிதான். ஜென்ம லக்கினத்திற்கு 2,11 ஆம் இடத்துக்குரியவர் தன காரகனும் குரு தான், லாப அதிபதியும் குரு தான். அவர் பத்தாம் இடத்தில் இருக்கும் அமைப்பு மிகவும் அருமையான அமைப்பு என்று சொல்லலாம். அவர்கள் சொன்ன விதம் சரியாக இருந்தாலும் கூட, இப்போ அவருடைய வயதினுடைய லக்னம் மிதுனம். சார் கடன் ஆகிவிட்டதா என்று கேட்டோம். ஆமாம் என்று சொன்னார். காரணம் என்னவென்றால், அவரின் வயதின் லக்னம் மிதுனம். 7,10 ஆம் இடத்துக்கு உரியவர் குரு. அவர் ஆறாம் இடமான விருச்சிகத்தில் உள்ளார். இந்த அமைப்பு ஜாதகருக்கு கடனை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுதான் சார் அமைப்பு என்று சிம்பிளாக சொன்னோம். ஏனென்றால் ஒரே ஒரு ரெஃபரன்ஸ் பாயிண்ட் மட்டும் இருந்தால் போதும். நாம் பிறக்கும்போது நம் வெயிட் மூணு கிலோ. இப்போது நம்முடைய வெயிட் என்ன இருக்கு என்று பார்க்க வேண்டும். பிறக்கும் போது நம் சிந்தனைகள் எங்க இருக்கு, என்று பார்க்க வேண்டும். பிறக்கும் போது, நாம் விளையாட்டுகளுக்கு ஆசைப்படுவோம். பட்டாசு வெடிக்கணும்னு ஆசைப்படுவோம். இந்த மாதிரி ஆசைகள் இருக்கும். ஆனால் இன்றைக்கு வளர்ந்ததுக்கு பிறகு கார் வாங்கணும், பங்களா வாங்கணும், சொத்து வாங்கணும்,  நல்ல தொழில் செய்து பெரிய அளவில் வரணும், கௌரவமா இருக்கணும், இப்படித்தான் ஆசைப்படுவோம். வயதினுடைய லக்னங்கள் மாறும் போது சிந்தனைகளும் மாறுகிறது என்பதுதான் அட்சய லக்ன பத்ததியின் உடைய பேசிக்கான கான்செப்ட். www.alpastrology.com



இப்போ அவருடைய ALP லக்னம் மிதுனம். 7,10 ஆம் இடத்துக்குரிய குரு பகவான், ஆறாம் இடமான விருச்சிகத்தில் இருப்பது, கடனை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது, என்று சொன்னோம். நீங்க எந்த ஒரு விஷயமாக பார்த்தாலும் சரி அட்சய லக்ன பத்ததி முறையில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஒரு பெரிய பெரிய முடிவுகள் எடுக்கும் போது, நீங்க மிகவும் கவனமாக இருப்பது நல்லது. காரணம் என்னவென்றால், நாம ஒரு விஷயத்தை பண்றோம். அது நம்மை  மட்டும் பாதிக்காது, நம்முடைய ஃபேமிலியும் பாதிக்கும் என்பதுதான் முக்கியமான விஷயம். அதனால ஒரு விஷயத்தை எடுத்து வைக்கும் போது, ஒரு அட்சய லக்ன பத்ததி ஜோதிடரை கேட்டீர்கள் என்றால், உங்களுடைய வாழ்க்கையினுடைய பயணம் சரியாக இருக்கும் என்று சொல்லலாம். ஏனென்றால் நான் என்ன வேண்டுமானாலும் சம்பாத்தியம் செய்துவிடலாம். பணம் கூட சம்பாத்தியம் செய்து விடலாம். ஆனால் நேரம் போனால் திரும்பி வராது என்பது தான் முக்கியம். இப்போ ALP லக்னம் என்ன போய்க்கொண்டிருக்கிறது என்று பாருங்கள். அது வைத்து தொழில் செய்யலாம் வேண்டாமா, ஃபாரின் போகலாமா வேண்டாமா, இந்த விஷயத்தை படிக்கலாமா,  வேண்டாமா, அந்த விஷயத்தை சரியாக தீர்மானம் செய்துவிட்டு அதை செய்யும் போது உங்களுடைய வாழ்க்கை அடுத்த லெவலுக்கு போகும் என்பதில் எந்த விதமான கேள்வியும் இல்லை. அதனால் முடிவுகள் எடுப்பது சரியாக எடுப்பது முக்கியம். 

நன்றி. 

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656


 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR