ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும் ? | ALP ASTROLOGY

 



ஜாதகம், ஏன் பார்க்க வேண்டும்? ஜாதகம், ஏன் படிக்க வேண்டும்?அனைவருக்கும் வணக்கம் 🙏இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்🙏இந்த அட்சய லக்னம் பத்ததி ஜோதிடத்தை படிக்க சொல்கிறோம். 

ALP ASTROLOGY VIDEOS: https://youtu.be/yUyU0zPOIX4?si=8eTpyaTmzfjJ2CGn

ஏன் படிக்கச் சொல்கிறோம்?ஜோதிடம் படிப்பதனால் நமக்கு என்ன பலன்?ஒரு பலன் தேவைன்னா ஒரு ஜோதிடரை போய் பார்த்து, நம்ம பலன்களை தெரிஞ்சுக்கலாம் என்று தோணலாம்.நம்முடைய அன்றாட வாழ்க்கையில,  நம்ம பிறப்பிலிருந்து நம்மளுடைய வாழ்நாள் இறுதி வரையுமே, ஜோதிடம் நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கிறது. அப்படி அந்த தேவைப்படக்கூடிய ஒவ்வொரு நிகழ்வுக்கும், நாம் ஒருத்தரை சார்ந்து இல்லாமல் நாமே அதைப் பார்த்து தெரிஞ்சுக்கணும்னா நம்ம வாழ்க்கைல எந்த காலகட்டங்களில் எந்த நிகழ்வுகள், என்ன மாதிரியான பிரச்சனைகள்  வரும் எனத் தெரிந்து தற்காத்து கொள்ளலாம்.

சமீபத்துல ஒரு நண்பருக்கு நடந்த ஒரு நிகழ்வு.நண்பரின் பெண், காலேஜில் படிப்பவர். அப்  பெண்ணுக்கு, ஏதோ ஒரு மன அழுத்தம் - மனசில ஒரு டிப்ரஷன் ஆயிடுச்சு. அதனுடைய அழுத்தம் - அதற்கு தாங்க முடியல - அதுக்கு என்ன தீர்வு தெரியல - நம்ம கிட்ட வந்தாங்க. அந்த பொண்ணு ஜாதகத்தை பார்த்த உடனே இந்த நேரத்தில் அதனுடைய பேராசைக்காக ஒரு விதமான கற்பனை - ஒரு தவறான ஒரு புரிதலோடு அது இருக்கு . ஏதாவது ஒரு அவமானம் ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கு - அப்படின்னு நமக்கு புரிஞ்சது.மாற்றுப் பரிகாரமாக அவர்களுக்கு ஒரு செயல் செய்யச் சொன்னேன். இது எல்லாருக்கும் சொல்றதா அப்படின்னா நிச்சயமாக கிடையாது. ஒரு சில ஜாதகங்கள், சில கிரக இணைவுகள் இருக்கும் போது இந்த பரிகாரத்தை சொல்வதுண்டு.

அந்த குடும்பத்துல, அவங்க சொந்தக்காரங்க ஒருத்தவங்க - மாற்று இனத்தவர்களோடு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்க குடும்பத்தோட இவங்களுக்கு பேச்சு வார்த்தைகள் இல்லாமல் இருந்தது. அப்போ இந்த 11வது வீடு அப்படின்னா,  மூத்த சகோதரம் அப்படி கல்யாணம் பண்ணி இருக்காங்களா? உங்களுக்கு மனசுக்கு பிடிக்காத திருமணம் பண்ணி இருக்காங்களான்னு கேட்டா, ஆமாம் - அப்படின்னு சொன்னாங்க.அவர்கள் வீட்டுக்கு ஒரு நாள் இந்தப் பெண்ணை போயிட்டு வர சொல்லுங்க.அப்படின்னு சொன்னா - அது அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்தாங்கன்னா ஜாதகத்தில் இருக்கக்கூடிய குற்றம் மாறிடும் - அந்த குற்றம் மாறிட்டாலே - அதனுடைய தன்மைகள் சூழ்நிலைகள்  மாறிவிடும். சில அவமானங்களை, சில இடத்தில் பிரச்சனைகளையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தனும் - அந்த பொண்ணுக்கு. அதனால படிப்பு தடைபடனும் - அவங்க குடும்பத்தில் பிரச்சனைகள் வரணும் -அது வீட்டை விட்டு வெளியேறணும் - அப்படிங்கிற ஒரு சூழ்நிலை வருகிறது. அப்போ இந்த சூழ்நிலைக்கு இதுவே ஒரு பரிகாரமா சொல்லும்போது அவங்களுக்கு பிடிக்காத ஒரு செயலை அந்த பொண்ண செய்யும்போது அதுவும் அவங்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சினைகள் தராமல் அதை அவங்க சொந்தக்கார பொண்ணு - அது மூத்த சகோதரம் அப்படிங்கிற ஒரு தொடர்புடைய நிகழ்வு - அதுல அவங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காத ஒரு சூழ்நிலை - அந்த வீட்டுக்கு இந்த பொண்ணை போயிட்டு வர்ற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணினாங்க.

அந்த வீட்டுக்கு போய்  முழுமையாக இரண்டு மணி நேரம் கூட அந்த பொண்ணு இல்ல. அங்க போயிட்டு வந்துச்சு. இப்பொழுது அந்தப் பெண் கொஞ்சம் தெளிவுடன் இருக்கிறார். அடுத்தது, இந்த மாதிரி, திருமணம் ஆனவர்களுக்கு, இரண்டு திருமணம் யோகம் இருக்கு. அப்படிங்கற ஒரு சூழ்நிலைகள் வரும்போது, அதற்கு பரிகாரமாக, அதே பொண்ணு, அதே மாப்பிள்ளை, மறு மாங்கல்யம் பண்ணிடுங்க. முதல் திருமணத்தை இரண்டாவது திருமணமாக ஆக்டிவேட் பண்ணிட்டீங்க அப்படின்னா, அந்த முதல் திருமணம் பிரச்சனைக்குரியதாக மாறும் எனும் விதி அங்கு அடிபட்டுப் போகும். அப்போ, கிரகங்கள் நமக்கு வழியும் விடுகிறது, நம் வாழ்க்கையை மாற்றியும் தருகிறது எனும் போது, அது நல்ல விதமாக இருக்கும் போது பயன்படுத்திக்கோங்க. 

நல்லா கவனிங்க, கிரகங்கள்  - 7 வது பாவகம் நன்றாக இல்லை, 11 வது பாவகம் நன்றாக  உள்ளது என்றால் மட்டும் தான் இதனை செய்ய வேண்டும். 11 வது பாவகமும் சரியில்லை எனும் போது, இதனை செய்தால் நன்றாக இராது. எனவே, ஜாதகத்தின் நிலையை அறிந்து செயல்படுத்தும் போது கண்டிப்பா அதனுடைய தன்மைகள் கொஞ்சம் மாறுவதை நாம் கண்கூடாக புரிஞ்சுக்க முடியுது.

செவ்வாய் சரியில்லைன்னா ரத்ததானம் கொடுங்க - காயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம் - அப்படின்னு சொல்றோமோ - அதை போன்ற பரிகாரம் தான் - அட்சய லக்ன பத்ததி வகுப்பின் சிறப்புகள்.

ஜாதகத்தினுடைய நிலை அறிந்து இந்த மாதிரி சில சூழ்நிலைகளை அதுவே அமைச்சு கொடுத்தது அப்படின்னா - கண்டிப்பா அதுவே உங்களுக்கு அந்த தெய்வங்கள் இயற்கையாகவே கொடுக்கக்கூடிய பரிகாரமாக மாறும்  அப்படிங்கறது, இதுல இருந்து புரிஞ்சுக்கலாம்.உங்க வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏன் வருகிறது, எப்போது வருகிறது, என்பதை உணர்ந்து அதற்கான தீர்வுகளை தேடுங்க!!!

கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும்!!!

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR