தசா புத்திகள் ALP ஜோதிடத்தில் எப்படி செயல்படுகிறது முழு விளக்கம். ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட். ALP ஜோதிடர்.

 

வீடியோ லிங்க் https://youtu.be/W3Tzw2kKx1g?si=KR7IvyMSSRVesvWM

வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியர் ஸ்ரீ குரு உமாவெங்கட். ஒரு நண்பர் கேட்டிருந்தாங்க தசா புத்தி அப்படிங்கிறது பாரம்பரிய முறை அனுசரிச்சு தான் நீங்க சொல்றீங்களா? இல்லைனா ALP முறையில் ஏதாவது மாற்றம் இருக்குதா? அப்படின்னு கேள்வி கேட்டிருந்தாங்க.

 இந்த தசா புத்தி அப்படிங்கிறது பிறந்த நட்சத்திரத்தை வைத்து தான் நம்ம கணக்கு அப்படிங்கிறது பாக்குறோம். எல்லாருமே அப்படித்தான் பண்றாங்க. அதுல எந்த மாற்றமும் கிடையாது.

ஒருத்தங்களுக்கு பிறந்த நட்சத்திரம் அப்படிங்கிறது உதாரணமாக கார்த்திகை நட்சத்திரமாக இருந்தது அப்படின்னா, இன்னைக்கு அவங்களுக்கு குரு திசை போகுது அவங்களுடைய 42- 45 வயசுக்கு குரு திசை இங்க புனர்பூசம் நட்சத்திரத்தில் மிதுன ராசியில் குரு தசா நடக்குது. இங்க எல்லாருக்குமே தெரிந்ததுதான்.

www.alpastrology.com

குரு தசா :

இந்த குரு தச நம்ம ALPயில் எந்த விதமாக பயன்படுது அப்படிங்கிறத நம்ம பாப்போம். இன்னைக்கு ஒரு நண்பர் பிறந்த நட்சத்திரம் உங்களுக்கு மகர ராசியில் பிறந்திருக்கிறார். மகர ராசியில் பிறந்த ஒரு ஜாதகருக்கு மீன ராசியில் தசா புத்தி போகுது. அப்போ அவருடைய லக்னம் அப்படிங்கிறது சிம்ம லக்னமாக இருக்கக் கூடாது.

சிம்ம லக்னமாகவோ, துலா லக்னமாகவோ இருக்கும்போது அந்த பத்து வருட காலம் அப்படிங்கிறது இந்த ஜாதகருக்கு கொஞ்சம் பிரச்சனைகளையும் நோயையும் ஒரு அவமானத்தையும் ஒரு தண்டனையும் தரக்கூடிய ஒரு காலமாக அமையுமானா கண்டிப்பாக அமையும்.

எப்போதுமே நம்ம பிறந்த லக்னத்திற்கு தான் தசா புத்தி அப்படிங்கிறது நண்பர்கள் சொல்லுவாங்க. இதே ஒரு நண்பர் வந்து பிறந்த லக்னம் மிதுன லக்னமாக இருந்து, இன்னைக்கு தசா புத்தி பத்தாம் இடத்தில் நடக்குது, அதுவும் நீர் ராசியில் இருக்குது. நீங்க வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய யோகம் இருக்குது.

பிறந்த லக்னம் மிதுன லக்னம், தசா புத்தி மீன ராசில நடக்குது உங்களுக்கு பிறப்பு லக்னத்திற்கு உங்களுக்கு யோகத்தை கொடுக்கும்னு சொல்லுவோம்.

அதே லக்னத்திற்கு சிம்ம லக்னமா ஒருத்தருக்கு இருக்குது, 25 லிருந்து 30 வயசுக்குள்ள இருக்குதுன்னு வச்சுக்கோங்களேன் அந்த தசா புத்தி அவங்களுக்கு பெரும் பிரச்சனைகளை கொடுக்கும். அரசு தண்டனையை கொடுக்கும்.

இதே 50 லிருந்து 60 வயசுக்குள்ள துலா லக்னம் அட்சய லக்னமாக இருக்கும்போது, அதே மீன ராசியில் நடக்கக்கூடிய தசா புத்திங்கிறது நோயை கொடுக்கும். பரம்பரையில் பிரச்சனைகளை உருவாக்கும் அப்படிங்கறதுல எந்த மாற்றமும் கிடையாது.

அந்தப் பூர்வீகம் நோய் சம்பந்தப்பட்டது பெரும் பரம்பரை இழப்பு அதே மாதிரி இந்த நிலம் சம்பந்தப்பட்டதுல பிரச்சனை அப்படிங்கிறது அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

லக்னத்திற்கு தான் தசா புத்தி பாக்கணும். இன்றைய என்னோட லக்னம் என்னது? அந்த லக்னத்திற்கு எனக்கு தசாபுத்தி எப்படி இருக்கு? அது நல்ல பாவகங்களில் இருந்தது என்றால் என்னை மேம்படுத்தி விடும். அது பிரச்சனைக்குரிய பாவகங்கள்ல இருந்ததுனா எனக்கு என்ன கொடுத்தாலும் அங்க திருப்திங்கிறது இருக்காது. முழுமையாக ஒரு செயலை என்னை செய்ய விடாது.

10 வருஷம் காலம் :

சிலர் பாத்தீங்கன்னா வீடு கட்டுவாங்க பாதியிலேயே நிறுத்திருவாங்க. நிலம் வாங்குவாங்க அதை என்ன செய்யணும் தெரியாம அப்படியே போட்டுருவாங்க. கரெக்டா அந்த 10 வருஷம் காலம் அதை பயன்படுத்த முடியாமலோ இல்லைனா பயன்படுத்தி அதை அனுபவிக்க தெரியலன்னு சொல்லுவாங்க தெரியுமா கிடைச்சா அனுபவிக்க தெரியாம இருப்பாங்கன்னு அது மாதிரி தான்.

ஃபாரின்ல இருப்பாங்க. தாத்தா, பாட்டி சொத்து கிடைத்திருக்கும். நீங்க சொல்ற மாதிரி தசா புத்திகள் ஆறு எட்டாக இருக்குது. எனக்கு நிலம் கிடைச்சிருச்சு. நிலம் யோகமா அமையுது. ஆனா நீங்க ஃபாரின்ல இருக்கீங்க.

இந்த நிலத்தை தொடவோ இந்த நிலத்துல அனுபவிக்கவோ இல்லைனா அதுல உட்கார்ந்து ஒரு கிளாஸ் தண்ணியோ ஒரு காபியோ குடிக்க முடியாத ஒரு தன்மை அப்படிங்கிறதுதான் உங்களுக்கு இருக்கும். இதுதான் தசா புத்திங்கிறது உணர்த்தும்.

சிலருக்கு பிரச்சனையாகவே அமையும். நிலம் கிடச்சுமே அதுல கோர்ட்டு , கேஸ் சம்பந்தப்பட்டது அதற்காக அலையக்கூடிய ஒரு காலமாகவே அமையும். என்னுடைய லக்னத்திற்கு என்னுடைய தசா புத்தி எப்படி இருக்குதுன்னு பார்த்து அதை செஞ்சா போதும். பாரம்பரியத்தில் தசா புத்தி எப்படி பார்க்கிறோமோ அதே மாதிரி தான் பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்றைய என்னுடைய அட்சய லக்னத்திற்கு என்னுடைய தசா புத்தி எந்தவிதமான பலனை தரப்போகிறது அப்படிங்கிறது மாத்திரம் தான் நாம கூறுகிறோம் நண்பர்களுக்கு. நன்றி.

ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156


Comments