வீடியோ லிங்க் : 
வணக்கம்.
நான் சாந்தகுமார், ALP அஸ்ட்ராலஜர் சென்னையில் இருந்து. மனம் பணம் அப்படிங்கற
இரண்டு விஷயங்களை இன்னைக்கு கொஞ்சம் டீப்பா டிஸ்கஸ் பண்ணுவோம். 
மனம்
:
மனதை
ஒழுங்கு பண்ண ஒழுங்கு பண்ண பணத்தை தக்க வைக்க முடியும். இதை தான் இன்னைக்கு
டாபிக்கா பேச போறோம். ஐந்தாம் பாவகம் அப்படிங்கறது மனம். ஐந்தாம் பாவகம் ஒழுக்கம்.
ஐந்தாம் பாவகத்துக்கு எட்டாம் பாவகம் அப்படிங்கறது பன்னிரண்டு. 
வருமானம்
வந்தா அழுத்தமும் வரும் :
அப்போ
மனதினுடைய தீராத பிரச்சினை தான் விரையம். மனதினுடைய அழுத்தம் அதாவது பத்தாம்
பாவகம் அப்படிங்கறது இரண்டு. அதாவது செலவு பண்ணுனா மனசுக்கு தீராத பிரச்சினையா
இருக்கும். இதுவே வருமானம் வந்தா அழுத்தமும் தரும். 
ஒரு
நிலை இல்லாதது மனம் :
இப்ப
ரெண்டுமே தான் மனசுக்கு சம்பந்தமில்லாத ஒரு பிரச்சனையை கொடுக்கக்கூடிய விஷயமா
இருக்கும். வந்தாலும் வந்தது ஏன் வந்ததுன்னு இருக்கும். வரலைன்னா ஏன் வரவில்லை
என்று இருக்கும். இதான் மனுஷனுடைய விஷயம். ஒரு நிலை இல்லாதது மனம் எப்பவுமே. 
மன
ஒழுக்கம் :
அப்போ
இத எவ்வளவு ஸ்டேபிளா வச்சுக்கிறோமோ எமோஷனல் ஸ்டெபிலிட்டி ரொம்ப முக்கியம்
பொருளாதாரத்தில். அப்போ எமோஷனல் டிஸ்டன்ஸ் கூடாதுன்னு சொல்றோம். அதனால மன ஒழுக்கம்
ரொம்ப முக்கியம் பொருளாதார முன்னேற்றத்திற்கு. இத நம்ம பிராக்டிகலாவும் உணர
முடியும்னு நம்புறேன். 
விரையம்
அப்படிங்கறது பழக்கம். பழக்கம் அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா இப்ப
நான் வந்து வைரம் வந்து கடல்ல கடற்கரை ஓரத்தில் இருக்கும்போது தொலைஞ்சு போச்சு.
ஒரு வைர கல்லு தொலைஞ்சிருச்சு. இப்ப நான் தேட ஆரம்பிக்கிறேன் தேடித்தேடி தேடி அது
கல்லா பாக்குறேன் கல்லா பாக்குறேன். இல்லாததை தூக்கி போட்டுக்கிட்டே இருக்கேன்.
இது ரொம்ப வேகமா செஞ்சு செஞ்சு செஞ்சு தூக்கி போட்டு தூக்கி போட்டு வைரம்
கிடைக்கும் போது அதையும் சேர்த்து தூக்கி தூக்கி போட்டு விடுறேன். இத பழக்கணும்னு
சொல்றோம். 
செலவு
பண்றத ஒவ்வொரு தடவையும் செக் பண்ணி செக் பண்ணி செலவு பண்ணனும். அப்ப  இங்க இன்னைக்கு நம்ம வந்து ஒரு மூணு ஸ்டெப்ஸ்
இன்னைக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கு உருவாக்கிக்கப் போறோம். 
முதல்
செலவு முதலீடாக இருக்கட்டும்:
உங்க
முதல் செலவு முதலீடாக இருக்கட்டும். அது 12 ங்கிறது விரையம் மட்டும் இல்ல
முதலீடும் அங்க தான். முதலீடு பண்ற பழக்கங்கள் வேணும். ஒரு குறிப்பிட்ட தொகை
முதல்ல எடுத்து வச்சிடணும். உங்க வயசுக்கும் உங்களோட ஸ்டேட்டஸ் பொறுத்து தான் இந்த
முதலீடு என்கிறது. 
நான்
வந்து சார் 5 ஆயிரம் தான் சம்பாதிக்கிறேன். 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் 100
ரூபாய் வைக்கணும். இல்ல சார் நான் தின கூலி சார். நான் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா
தான் சம்பாதிக்கிறேன். ஆயிரம் சம்பாதிச்சாலும் நூறு ரூபாய் எடுத்து வைக்கணும். இது
பழக்கம் முதல்ல அதை எடுத்து முதலீடா போற்றனும் இன்வெஸ்ட் பண்ணிடனும். 
சேமிக்கணும்
:
அதை
சேமிக்கணும் அப்படிங்கறது முதல் பழக்கம். அதை அந்த மாசத்துக்குள்ளார முதலீடா
போடுறது இன்னொரு பழக்கம். ரொம்ப முக்கியம் இது. இந்த பழக்கம் இன்னைக்கு இல்லைன்னா
லட்ச ரூபா வந்தாலும் லட்ச ரூபாய் செலவு பண்ணிடுவோம். கோடி ரூபாய் வந்தாலும் கோடி
ரூபாய் செலவு பண்ணுவோம். ஏன்னா செலவு கண்ட்ரோல் பண்ற பழக்கம் பணம் வந்த பிறகு பண்ண
முடியாது. பணம் இல்லாத போதே பண்ணனும். 
அப்போ
இன்னைக்கு என்ன பழகுறோம் என்பதை பொறுத்து தான் பணம் நம்மகிட்ட தங்கும். அப்போ இது
ஆரம்பிக்கிறது கம்மி சம்பளம் சம்பாதிக்கிறவங்க தான் முதல்ல இதை ஈஸியா பண்ண
முடியும். அதிக சம்பளம் சம்பாதிக்கிறவங்க இதை பண்ணித்தான் ஆகணும் என்கிற நிலைமை
புரிஞ்சு இத நடைமுறைப்படுத்தணும். 
கணக்கு
எழுதணும் :
முதல்
விஷயம் உங்கள் முதல் செலவு முதலீடாக இருக்கட்டும். இரண்டாவது விஷயம் கணக்கு
எழுதணும். சின்ன சின்ன செலவுகளை கூட கணக்கு எழுதணும். எழுதாத கணக்கு அழுதாலும்
தீராதுன்னு சொல்லுவாங்க. அப்ப கணக்கு எழுதுவது ரொம்ப முக்கியம். என்ன செலவு
நடக்குதோ அதை எழுதி வச்சு பார்க்கும் பொழுது தான் பின்னாடி நம்ம செய்யும் போது
செஞ்சிட்டோம். ரைட் தப்பு செய்யறது தப்பு இல்லங்க. அந்த தப்பையே திரும்ப திரும்ப
செய்யும் பொழுது தான் அதை பெரிய தப்புன்னு சொல்லுவோம். 
அப்போ
தப்பு எப்படி கண்டுபிடிக்கிறது? 
லைப்
அப்படித்தான் இது யாருடைய அட்வைஸ் வச்சு நம்ம பண்ண முடியாது. நம்மள நாமளே ஒழுங்கு
பண்ணிக்க தான் வேண்டி இருக்கு. இப்ப மன ஒழுக்ககங்கிறது அதுக்கு தானே. வேற யாரும்
உங்களுக்கு ஹெல்ப் பண்றது இல்லங்க உங்கள தவிர. 
ஜோதிடமும்
மன ஒழுக்கமும் :
அதனாலதான்
உங்களுக்கு ஜோதிடமும் மன ஒழுக்கமும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டிருக்குனு
பேசுகிறோம். அப்போ உங்களை நீங்க பாருங்க. செலவுகள் எல்லாம் எழுதுங்க. இது
உண்மையிலேயே இது தேவைதானா அப்படின்னு ஒரு மாசம் கழிச்சு அந்த செலவு எல்லாத்தையும்
நீங்களே ஒரு தரம் செக் பண்ணுங்க. அடுத்த தடவை செலவு பண்றது நீங்களே மாத்திப்பீங்க.
அப்படி
உங்கள நீங்களே உங்கள ஒழுங்கு பண்றதுக்கு கணக்கு எழுதுவது ரொம்ப முக்கியம்.
செலவினங்களை குறிப்பிட்டு நோட்டு போட்டு எழுதுறது ரொம்ப முக்கியம். 
மூணாவது
விஷயம் தூங்குறதுக்கு முன்னாடி கட்டாயமா கணக்கு எழுதி இருக்கணும். அப்பப்ப நடந்தது
ஒரு நோட்டில் மார்க் பண்ணிட்டு வரலாம். தூங்கும்பொழுது எவ்வளவு காசு இருந்தது
எவ்வளவு வந்தது? எவ்வளவு செலவு பண்ணோம். இத டாலி பண்ணி க்ளோஸ் பண்ணிட்டு
தூங்கணும். இந்த மூணு ஒழுக்கங்களும் முதல்ல ஆரம்பிக்கும். 
இந்த
ஒழுக்கங்கள் உங்களை சுயமாவே கேள்வி கேட்கும் பதில் சொல்லும். இதிலிருந்து உங்களோட
முன்னேற்றங்கள் ஆரம்பிக்கும். நன்றி.
ALP ASTROLOGY: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment