தனுசு ராசிகள் வணங்க வேண்டிய குமரமலை முருகன். ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் - ALP அஸ்ட்ராலஜி.
அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய
நாளாக அமைய வாழ்த்துக்கள்.  தனுசுக்கு
அவங்க வாழ்க்கையில ஏற்படக்கூடிய பல போராட்டமான இன்னல்கள்ல இருந்து
பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய ஒரு சிறந்த பரிகாரத்தை பத்தி தான் இன்னைக்கு
நம்ம பாக்க போறோம். 
மூல நட்சத்திரம் :
ஏன்னா அங்க மூல நட்சத்திரம் இருக்கு.
இந்த மூல நட்சத்திரத்தினுடைய தன்மை என்னன்னா அடுத்தவங்களுக்கு ஆணிவேராக செயல்படுவாங்க.
தனக்குன்னு வச்சுக்க தெரியாது. அப்போ தனக்குகிறது வேணும் இல்லையா. 
அந்த நிலை அவங்க அடைவதற்கு அவங்க என்ன பண்ணனும்? யார வழிபாடு பண்ணனும்?
அப்படின்னா பூர்வ புண்ணிய பலமாகவும்
அவங்களுடைய அயன சயனம் போகமாகவும் செயல்படக்கூடியவர் செவ்வாய் பகவான். அந்த
செவ்வாயினுடைய அதிதேவதை முருகப்பெருமான்.  
அந்த முருகப்பெருமான எங்க போய் வழிபாடு
செய்யணும்? 
குமர மலை அப்படிங்கற இடத்தில முருகன் இருக்கிறார். 
இந்த குமரன் மலை எங்க இருக்கு? 
புதுக்கோட்டை மிக அருகாமையில குமரமலை இருக்கு. 
இந்த குமரன் மலை முருகன் எதுக்கு ரொம்ப
விசேஷமானவர் தெரியுமா? 
நோய் தீர்க்கும் காரணியாக செயல்படக்
கூடியவர். ஒரு வைத்தியருக்கு நிகரானவர். ஒரு மருத்துவராக அங்கு உள்ள பகுதி
மக்களுக்கு பலன் தரக்கூடியவர். 
பூராடம் நட்சத்திரம் :
ஏன் இந்த தனுசுக்கு செல்வதற்கு
முக்கியமான காரணம் என்ன அப்படின்னா, பூராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் இருக்கு.
அதுவும் சஞ்சீவி மூலிகைக்கு உள்ள அந்த மூல நட்சத்திரமும் உங்களுக்கு தனுசு
ராசில தான் இருக்கு. 
அதுவும் குருவோட வீட்டுல. அந்த பூராட நட்சத்திரம் சஞ்சீவி மூலிகையை அந்த மூலிகை மந்திரத்தை சஞ்சீவி மந்திரத்தை சொல்லக்கூடிய வலிமைமிக்க சுக்ராச்சாரியார் உடைய நட்சத்திரம் அது.
அது 6, 11 க்கு அதிபதியாக செயல்படக்கூடியது. அப்போ அப்படிப்பட்ட அந்த ராசிக்காரர்களுக்கு, இந்த குமரன் மலை உங்களுக்கு சஞ்சீவியாக அனைத்து விதமான நோய்களை தீர்க்கக் கூடிய காரணியாக செயல்படுவார்.
குறிப்பா அங்க சொல்லணும்னா வாத நோய். யாருக்கெல்லாம் வாத நோயால் பாதிக்கப்படறாங்களா அவங்க எல்லாம் இந்த குமரன் மலைக்கு போயிட்டு வரலாம்.
அது தனுசு ராசியா தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. யாருக்கெல்லாம் வாத நோய் பிரச்சனை இருக்கிறதோ நரம்பு தளர்ச்சி இருக்கிறதோ நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கிறதோ ஏன்னா வாத நோய் எப்படி ஏற்படுது? அந்த உடம்புல வாதம் அதிகமாகும்போது இந்த புதனுடைய அனுக்கிரகம் குறையும்போது அங்க பிரச்சனைகள் வருது.
அப்போ அதை சரி செய்றவர் யார் அப்படின்னா இந்த குமரமலை முருகன். இந்த குமரமலை முருகனை நீங்க போய் வழிபாடு செய்யுங்க. உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்க்கும்.
வியாழக்கிழமை :
அன்று குருவோட நாளான வியாழக்கிழமை
அன்று அந்த குமரமலைக்கு போயிட்டு, முடிஞ்சதுனா செவ்வாய் ஓரையில 3, 3 இரண்டு
மும்மூன்று  விளக்குகளை மொத்தம் ஆறு விளக்குகள்
ஏற்றனும். ஆறு அகல் தீபங்கள் நெய் தீபமாக ஏற்றி, நெய் விளக்கு போடணும். முடிஞ்சா
அந்த நெய்யாலேயே அபிஷேகம் செய்து அந்த முருகனை வழிபாடு செய்யுங்க.
கண்டிப்பா உங்களுக்கு எல்லா விதத்திலும் நல்ல பலன்கள் நிச்சயமாக கிடைக்கும்.
நன்றி.
ALP ASTROLOGY: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment