மகர கும்ப ராசிகள் வணங்க வேண்டிய முருகன். ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ALP அஸ்ட்ராலஜர்.
அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
மகரம் மற்றும் கும்பம்
: 
 இந்த மகரம், கும்பம் இரண்டுமே சனி  பகவானுடைய ராசிகள். மகரம் கர்மாதிபதி அப்படின்னா கும்பம் லாபாதிபதி. கர்மம்
கழியும்போது லாபம் கிட்டும் அப்படிங்கறது இதனுடைய தார்பரியம். 
இந்த கால புருஷனுக்கு இந்த ரெண்டு
ராசிகளுமே 10, 11 ஆக வருவாங்க. லாபமும் அவர்தான் கஷ்டமும் அவர்தான். அப்படிங்கற
ஒரு தத்துவத்தை உணர்த்துவது தான். 
இந்த ரெண்டுக்குமே சனிபகவான் அதிபதி
என்பதனால் இந்த மகரம்,
கும்பம் இரண்டுக்குமே இந்த சனி பகவானுடைய
தாக்கத்திலிருந்து அல்லது சனி பகவான் கொடுக்கக்கூடிய அந்த மந்த நிலையில் இருந்து
அவங்க நல்ல நிகழ்வுகளை சந்திக்கணும். சுறுசுறுப்பாக இருக்கணும். 
இந்த நேரத்துல அதுவும் சனி பகவான்
வந்து அடுத்தடுத்த நிலைகள்ல அந்த ராசியை தொட்டு போய்கிட்டு இருக்காரு. அதனால
அவருடைய அனுகிரகத்தோடு அவங்களுக்கு நல்ல பலன்களும் நிறைய கிடைக்க வேண்டும்
அப்படின்னா அந்த கலியுக வரதனாக நமக்கு நல்ல பலன்களை கேட்டவுடனே தரக்கூடியவர் யாரு?
அப்படின்னா முருகப்பெருமான். 
எங்கு உள்ள முருகப்பெருமானை வழிபடனும்?
எல்லா இடத்திலும் குன்று இருக்கும்
இடங்களில் எல்லாம் முருகன் இருக்கிறார். அதுவும்
பர்டிகுலரா எந்த இடத்துல இருக்குற முருகனை வழிபடனும் சனி பகவான் அப்படினா இருள்
கிரகம் அப்படின்னு சொல்லுவோம். அந்த இருள் கிரகத்திற்கு வெளிச்சம் கிடைக்கணும்
அப்படின்னா அந்த வெளிச்சத்தை நம்ம உணரணும் அப்படின்னா கண்கள் வேண்டும். அந்த
கண்களை கொடுக்கக்கூடிய அந்த கண் பார்வை திறனை சிறப்பு செய்யக்கூடிய முருகன் யாரு?
என்கண் முருகன். 
பெயரிலேயே கண்களை உடைய முருக பெருமான்
எங்க இருக்காரு? 
திருவாரூர் மாவட்டத்தில. திருவாரூரில்
இருந்து மன்னார்குடி வழித்தடத்துல அந்த என் கண் முருகன் இருக்கிறார். 
எட்டுக்குடி முருகனுக்கும் ,
என்கண் முருகனுக்கும் ரொம்ப ஒரு விசேஷம் உண்டுங்க. எட்டுக்குடி முருகனை செய்ததும்
ஒரே சிற்பி தான். இந்த என் கண் முருகனை செய்ததும் ஒரே சிற்பி தான். 
ராஜா முருகனை பிரதிஷ்டை பண்ணனும்னு
ஆசைப்பட்டார். அதனால எட்டுக்குடியில் முருகனை பிரதிஷ்டை பண்ணிட்டார். இந்த என்
கண்லையும் அவர் என்ன பண்றாரு அந்த சிற்பி கிட்ட ஒரு சத்தியம் வாங்குறார். நீ இந்த
மாதிரி முருகன் சிலையை வேற யாருக்கும் பண்ணி குடுக்க கூடாது. அப்போ அந்த சிற்பி
ராஜா கேட்கும் போது பண்ணாம இருக்க முடியுமா? பண்ணி கொடுத்துவிடுகிறார். 
கொடுத்ததற்கு அப்புறம் இந்த
எட்டுக்குடியில் உள்ள முருகன் மாதிரி என் கண்ணுல ஒரு முருகனை பிரதிஷ்டை பண்ணனும்
நினைக்கும் போது, அது அந்த ராஜாவுக்கு நியூஸ் போகுது. உடனே அந்த சிற்பிய
கூப்பிட்டு உனக்கு கண்ணு இருந்தா தானே பண்ணுவ. இருன்னு அந்த சிற்பியோட கண் பார்வை எடுத்துறார்.
ஆனாலும் அந்த சிற்பி கண்ணு இல்லாமலும்
அந்த முருகனை கண்ணுக்குள்ள கொண்டு வந்து அந்த எட்டுக்குடியில உள்ள மாதிரியே என்
கண்ணிலும் முருகன் சிலையை செய்கிறார். அதே மாதிரி மயில் வாகனத்தில் அமர்ந்த
திருக்கோலத்தில். 
அவரோட மொத்த எடையையும் அந்த மயில் உடைய
ஒத்தைகால் சுமக்கிற மாதிரி. ரொம்ப அபூர்வம்.
நீங்க போனீங்கன்னா பார்த்தீங்கன்னா தெரியும். அந்த அளவுக்கு ஒரு அதிசயமான, ஒரு கல்
எடை எவ்வளவு இருக்கும்? அதை நீங்க போய் பார்த்தீங்கன்னா தெரியும். மயில்வாகனம்,
மயிலையும் செய்து அதன் மேல முருகனுடைய உருவத்தையும் செய்து அந்த மயில் ஒரு கால
தூக்கிக்கிட்டு ஒரு கால் பேலன்ஸ்ல தான் நிக்கும். அந்த மயில் கால் எவ்வளவு
இருக்கும் அதெல்லாம் ரொம்ப அதிசயம். அந்த இறைவனுடைய அனுக்கிரகம் இல்லை
என்றால் இதெல்லாம் சாத்தியம் இல்லை.
அப்போ இதை செஞ்சதை கேள்விப்பட்ட உடனே
அந்த ராஜாவுக்கு ரொம்ப கடுமையா கண்ணு இல்லைனாலும் அந்த முருகன் சிலையை  செஞ்சிட்டாரேன்னு அவரை எப்படியாவது
தண்டிக்கணும்னு வாரார். 
வரும்போது இந்த முருகன் காட்சி
கொடுத்து. இழந்த கண்களையும் அவருக்கு கொடுக்கிறார். அதனால் தான் என் கண்
முருகன் அப்படின்னு வருது. 
கண் பார்வை
பிரச்சனைகள் இருக்கு :
அந்த சிற்பிக்கு இழந்த கண்
பார்வையை மீட்டு கொடுத்ததனால. கண் 
பார்வையற்றவர்களுக்கு எல்லாம் இந்த மகரம், கும்பம் மட்டும்தான் அங்க போய்
வழிபடனும்னு கிடையாதுங்க. யாருக்கெல்லாம் கண் பார்வைல பிரச்சனைகள் இருக்கு,
கண் பார்வை கோளாறு இருக்கு, கண் ஆபரேஷன் பண்ணனும், கண்பார்வை ரொம்ப க்ரிட்டிகளா இருக்கு
அப்படின்னு சூழ்நிலையில இருக்கீங்களா அவங்களாம் போய் என் கண் முருகனுக்கு பால்
அபிஷேகம் செய்து வழிபாடு செய்றீங்களோ அது கண்டிப்பா உங்களுக்கு நிவர்த்தி
ஆகும். 
எப்ப போகலாம் பொதுவா இப்போ கண்
பாதிப்பு யாருக்கு அதிகமா கொஞ்சம் தொந்தரவுகளை தரும்னா மகர லக்னத்திற்கு கூடுதலா
பிரச்சனை இருக்கும். ஏன்னா கண்கள்னு சொல்ல கூடிய இரண்டாம் வீட்டிலேயே சனி
பகவான் இருக்கார். அதனால இவங்க என்ன பண்ணனும் ஒரு முறையாவது சனிக்கிழமை
அன்று அந்த முருகனை போய் வழிபாடு பண்றீங்க அப்படின்னா உங்களுக்கு கண்டிப்பா அந்த
இழந்த பார்வை திரும்ப கிடைக்கும். 
அங்க இன்னொரு முக்கியமான விசேஷம் என்ன
தெரியுமா வன்னி மரத்தடியில் அங்க விநாயகர் இருப்பார்.
அந்தக் கோயில்ல தல விருட்சம் அப்படிங்கறது வன்னி மரம். அதனால அந்த வன்னி
மரத்தையும், சனீஸ்வரருக்கு உரிய விருட்சம் அப்படிங்கறது வன்னி. அதனாலதான் அந்த
வன்னி மரத்தடியில் உள்ள அந்த விநாயகரையும் வழிபட்டு அந்த என்கண் முருகனையும் வழிபடுறீங்கனா
உங்களுக்கு  கண்கள் மட்டும் இல்ல அந்த
இரண்டாம் பாகம் அப்படிங்கறது கண் போன்றது குடும்பம் அந்த குடும்பம் கிற
நிலையில கல்விங்கிற ஒரு நிலையில பொருளாதாரம் அப்படிங்கிற நிலையில
பணவரவுக்கான நிலைகள் அத்தனையும் உங்களுக்கு 
கண்டிப்பாக கிடைக்கும். இந்த என் கண் முருகன் உங்களுக்கு கொடுப்பார். 
அதனால இந்த மகர ,
கும்பம் ராசிகள் காரங்க என்கண் முருகனை வழிபாடு செய்யுங்க. கண்டிப்பாக உங்களுக்கு
சாதகமான பலன்கள் நிறைய உண்டு. 
நன்றி.
ALP ASTROLOGY: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment