இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் கண்டிப்பாக மலர் மருத்துவம் தான் படிப்பார்கள். ஸ்ரீ குரு உமாவெங்கட். - ALP அஸ்ட்ராலஜர்.
full video link: https://youtu.be/SvahO8bwO7M?si=Eajp_kepc-e_9cfa
வணக்கம்.
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் ஸ்ரீ குரு உமாவெங்கட். 
ஒவ்வொருத்தவங்களுக்கு என்ன நட்சத்திர புள்ளி போகும்போது அவங்க வாழ்க்கையில
என்ன மாற்றம் நடக்கும். அந்த கிரகம் அனுசரிச்சு தான் அந்த நல்ல மாற்றம்
ஆனாலும் சரி. ஒரு அழுத்தம் தரக்கூடிய மாற்றம் ஆனாலும் சரி. 
மீனம் லக்னம்
:
அதற்கு
பரிகாரங்களும் அதற்கு எப்படி நடந்துக்கணும்கிறது நம்ம பாத்துட்டு வாரோம்.
ஒருத்தவங்களுக்கு மீனம் லக்னம் அட்சய லக்னமாக போகுது. அதுவும் ரேவதி நட்சத்திரம்
சென்று கொண்டிருக்கிற காலங்கள். இவங்க இந்த காலகட்டத்தில் திடீரென ஒரு கல்வி
அப்படிங்கிறது படிப்பாங்க. நீண்ட காலமாக ஒரு செயல் நடக்கணும்னு திட்டமிட்டு
இந்த ரேவதி நட்சத்திரம் செல்லக்கூடிய காலங்களில் இவங்க கல்வி படிக்கிறதுங்கிறது
நல்லா இருக்கும்.
சிலர் மலர்
மருத்துவம் படிக்கக்கூடிய ஒரு தன்மை அப்படிங்கிறது இந்த ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு
ரொம்ப சூப்பரா இருக்குன்னு சொல்லலாம். அட்சய லக்னம் மீனம் லக்னமாக இருக்கும்போது,
நட்சத்திர புள்ளி ரேவதி நட்சத்திரமாக செல்லும் காலங்களில் இது நடக்குமானா
கண்டிப்பாக நடக்கும்னு சொல்லலாம். அதே மாதிரி நட்சத்திரங்களை பார்ப்பது ரொம்ப
சிறப்பு. அதுவும் 32 நட்சத்திரக் கூட்டமும் சொல்லுவோம் அதை பார்ப்பது ரொம்ப ரொம்ப
சிறப்புன்னு சொல்லலாம்.
வெளிநாடு
அமைப்பு :
 சிலர் இந்த காலங்கள்ல கடல் தாண்டி வெளியே
போவாங்க. இந்த ரேவதி நட்சத்திரம் செல்லக்கூடிய காலங்களில் கப்பல் வேலை
வாய்ப்புக்கு முயற்சி பண்ணீங்கன்னா கண்டிப்பாக கிடைக்கும்னு சொல்லலாம். கடல்
தாண்டி செல்வது. வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு இருக்குதானா கண்டிப்பாக இருக்குதுன்னு
சொல்லலாம். இப்போ உங்களுக்கு ரேவதி நட்சத்திரம் போகுதுங்களா உங்களுக்கு வெளிநாடு
அமைப்பு வேலை இருக்குமானா வேலை இருக்குது. முயற்சி பண்ணுங்க நான் முயற்சி
பண்ணிட்டு இருக்கேன் அப்படின்னா இப்ப அது நடக்கும் அப்படின்னு சொல்லலாம். 
சிலருக்கு தோணில
பயணம் பண்ணுவாங்க. அவங்களுக்கு நீண்ட கால ஆசையாக இருக்கும். அப்போ ஒரு சின்ன டூர்
மாதிரி போகும்போது அந்த தோணில பயணம் பரிசில்ல பயணம் பண்றது அதெல்லாம் உங்களுக்கு
நடக்கும். 
நீங்க
நண்பர்கள் சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கு அந்த பரிசல் பயணம்
ரேவதி நட்சத்திரம் ஆக்டிவேஷன்னு சொல்லலாம். சிலருக்கு இடது கண்
சார்ந்த பிரச்சினைகள் அப்படிங்கறது ஏற்படும். ஒரு சிலர் வீட்டில் திடீர்னு மீன்
தொட்டி வாங்கி வளர்க்கணும் அப்படிங்கற எண்ணத்தை கொடுக்கும். அப்போ உங்களுக்கு
ரேவதி நட்சத்திரம் அட்சய லக்னமாகவோ ( ALP ), அட்சய ராசியாகவும் (ARP) கண்டிப்பாக
இருக்கும்னு சொல்லலாம். 
பிரச்சனை உள்ள
நிலம் உங்களைத் தேடி வரும் :
கடல் சார்ந்த
பயணங்கள் சிலர் பயணம் பண்ணுவாங்க. அதே மாதிரி வில்லங்க பத்திரம்னு சொல்லுவாங்க.
பத்திரங்கள் வில்லங்கம் உள்ள பத்திரங்கள் ஒரு நிலம் வாங்கினீங்க அதுல பிரச்சனை
உள்ள நிலம் உங்களைத் தேடி வரும். அதுல கவனம் அப்படிங்கறது
தெரிஞ்சுக்கோங்க. 
சிலருக்கு
சகோதரர்கள் உறவுகள்ல பிரச்சனை அப்படிங்கறது ஏற்படும். அந்த மாதிரி இவங்களுக்கு சிறைவாசம்,
அதாவது சிலருக்கு தண்டனை அரசால் கிடைக்கக்கூடிய தண்டனை அப்படிங்கறது இவங்களுக்கு
ஏற்படுத்துமானா கண்டிப்பாக ஏற்படுத்தும். 
ஒரு சில
நண்பர்களுக்கு சனியோட நட்சத்திர புள்ளி போகும்போது அதுவும் சனியோட நட்சத்திர
புள்ளிகள் போகும்போது இந்த சிறைவாசம் ஜெயில்ல போய் ஒரு நாள் உட்காருவது அந்த
நிகழ்வுகள் நடக்கும். 
இவங்களுக்கு
இந்த சிறையில போய் பாத்துட்டு வர்றது இல்ல ஒன்னுமே இல்லைன்னா சிறை கைதிகளுக்கு
தானம் கொடுக்குற மாதிரி போயிட்டு வருவாங்களா கண்டிப்பாக போயிட்டு வருவாங்க. ஒண்ணுமே இல்லைங்க போலீஸ் ஸ்டேஷன்ல போய்
யாருக்காவது கூட போயிட்டு வர சந்தர்ப்பம் இல்லைன்னா ஒரு பைன்  கட்டக்கூடிய
ஒரு சந்தர்ப்பம் கூட இவங்க வாழ்க்கையில ஒரு நிகழ்வாக நடக்குமானா கண்டிப்பாக
நடக்கும் என்று சொல்லலாம். 
தானம் :
அதே மாதிரி கல்
உப்பு வாங்கி தானம் பண்றது இவங்களுக்கு ரொம்ப சிறப்பா இருக்கும். இந்த
காலகட்டங்களில் கல் உப்பு பயன்படுத்துறது இவங்க வாழ்க்கையில மாற்றமாக இருக்கும்.
சிலருக்கு கொய்யாப்பழம் சாப்பிடற பழக்கம். கொய்யா மரம் வாங்கி நடுற பழக்கம்
அப்படிங்கறது இருக்கும். ஊனமுற்றவர்கள் உதவி செய்வது நல்லா இருக்கும். 
ராவணன்
தரிசனம் கிடைக்கும் :
அதே மாதிரி
ராவணன் தரிசனம் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். 
எப்படி ராவண
தரிசனம் கிடைக்கும்? 
அப்படின்னா
சிலர் கோவில்களில் புனித பயணம் அப்படிங்கறது போவாங்க. அங்க பாத்தீங்கன்னா,
ராவணனுடைய பிம்பம் அப்படிங்கறது இருக்கும். அதோட சரித்திரம் அப்படிங்கறது அங்க
எழுதி இருக்கும். அதை பார்ப்பார்கள் படிப்பார்கள் உணர்வார்கள் அப்படின்னு
சொல்லிக்கிறேன். 
வெளிநாட்டு
பயணம் இவங்களுக்கு ரொம்ப யோகமாக இருக்கும். இவங்களுக்கு அசோக மரம்
நடுவது ரொம்ப சிறப்பா இருக்கும். இவங்க எதிர்பாராமல் பழைய காலத்துல
நடக்கக்கூடிய ரகசிய அரை ரகசிய பட்டறைனு சொல்லுவாங்க. ரகசிய
கல்லறைன்னு அந்த மாதிரி இடங்கள்ல எல்லாம் அதை போய் பார்ப்பது ஒரு நிகழ்வாக மகா
பெரிய நிகழ்வாக இவங்க வாழ்க்கையில் நடக்கும்னு சொல்லலாம். 
யாரை வழிபாடு பண்ணனும் ? 
அதே மாதிரி
இந்த காலகட்டத்துல யார் வழிபாடு பண்ணனும் அப்படின்னா மகாலட்சுமி வழிபாடு ரொம்ப
சிறப்பு. ஸ்ரீ ரங்கநாதர்
வழிபாடு ரொம்ப ரொம்ப
சிறப்புன்னு சொல்லலாம். அதுவும் கடல் மேல படுத்திருக்க கூடிய அனந்த சயன பெருமாள்
வழிபாடு ரொம்ப சிறப்பா இருக்கும். 
அதே மாதிரி
இவங்க ஃப்ளவர் ஷோ  ( flower show) போய் பாக்கிறது இவங்களுக்கு இந்த காலகட்டத்தில்
நடக்கும். ஊட்டியில் இருக்கிறவங்க என்னைக்குமே பிளவர் ஷோ பாப்பாங்க. ஆனா கிடையாது.
நம்ம
சென்னையிலோ வேற ஏதாதோ இடத்துல இருக்குறவங்களும் இந்த காலகட்டத்துல நீண்ட நாளாக
அதோட பிளான் இட்டு அது நடக்கல. இப்பதான் நடக்குது அப்படின்னா உங்களுக்கு ரேவதி
நட்சத்திரத்தில் இரண்டாவது பாதம் நடக்குதா செக் பண்ணி பாருங்க கண்டிப்பா
நடக்கும்னு சொல்லலாம். 
கதம்ப மாலை வாங்கி சுவாமிக்கு கொடுங்க அது ரொம்ப
சூப்பரா இருக்கும். நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றம் வரணும்னா பகவானுக்கு
கதம்ப மாலை அப்படிங்கறது வாங்கி கொடுங்க அது ரொம்ப சூப்பரா இருக்கும். 
அதே மாதிரி
கோயில் பூசாரிகளுக்கு உங்களால் ஆன உதவி அப்படிங்கறது பண்ணுங்க. அவங்களுக்கு
தேவையான வஸ்திரம் உங்களோட ஆன தட்சணை அவங்களுக்கு வாரி வழங்குங்கள். நிறைய
வாழ்க்கையில முன்னேற்றம் அப்படிங்கிறது நமக்கு கிடைக்கும். நன்றி. வணக்கம்.
ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment