பிரச்சனையைக் காட்டிக்கொடுக்கும் பாவகம். - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். - ALP ஜோதிடர்.

 
full video link: https://youtu.be/g0DO5FmfKoI?si=RhJwgzbXMQv7CPH4

அனைவருக்கும் வணக்கம். ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். இன்னைக்கு நம்ம ஒரு எல்லாரும் கேட்ட ஒரு கேள்வி.

 எட்டு அப்படிங்கிறாங்களே எட்டு அப்படின்னாலே பிரச்சனை தானா?

ஜாதகத்தில்  எட்டாம் பாவத்துல இருக்கு எட்டாம் பாவத்துல இருக்குன்னு சொல்றாங்களே அப்போ எட்டாம் பாகம் பிரச்சனைக்குரிய பாவகமா? கேள்வி நிறைய பேருக்கு இருக்குது.

எட்டு பிரச்சனைக்குரிய பாவகமா?

ஆமா.

ஆனா பிரச்சனைகளை காட்டி கொடுக்கக்கூடிய பாவகம் அப்படின்னு சொன்னா அது சரியான வார்த்தையாக இருக்கும்னு சொல்லலாம். நம்மளை இயக்கக் கூடியது 12 கட்டங்கள் அப்படின்னு சொல்வோம்.

ஒவ்வொரு கட்டங்களுக்குமே ஒவ்வொரு பொறுப்புகள் இருக்கு. அந்த ஒவ்வொரு பொறுப்புகளுக்கும் அவங்க தான் காரண கர்த்தாவாக இருக்கணும்.

 இப்ப எட்டு அப்படின்னா அதோட பொறுப்பு என்ன?

நம்முடைய உடல் கூறுகளை நம்ம 12 பாகமாக பிரிக்கிறோம். அந்த 12 பாவகத்திற்கும் 12 பலன்கள் அப்படிங்கிறது இருக்கு.

அப்போ எட்டாம் பாவகத்தோட பலன்கள் என்னவா இருக்குனா, நம்ம பிரதானமாக எல்லாரும் கேட்கக்கூடிய என்னுடைய கர்மா எப்படிப்பட்டது அப்படிங்கிற கேள்விக்குரிய பதிலும் எட்டுல தான் இருக்கு.

நான் எவ்வளவு வருஷம் வாழுவேன் அப்படிங்கிற கேள்விக்குரிய பதிலும் எட்டுல தான் இருக்கு.

 ஆயுள் பாவகம் :

நம்மளுடைய ஆயுள் பாவகம் அப்படின்னு சொல்றது எட்டாம் பாவகம். அப்போ அந்த எட்டாம் பாவகத்தோட சிறப்புகள் என்ன அப்படின்றது தான் இன்னைக்கு இந்த வீடியோவில் நம்ம பார்க்க போறோம்.

 12 பாவகங்களும் அதன் உறுப்புகளும் :

ஏன்னா எந்த விஷயங்களுமே இது நல்லது இது கெட்டது அப்படிங்கிறது கிடையாதுங்க. 12 பாவங்களுமே நமக்குத் தேவையான விஷயங்களை கொடுக்கக்கூடிய ஒரு நிகழ்வுதான்.

அதுல எட்டுங்கிறது கழிவு அப்படின்னு சொல்லலாம். இப்போ நம்ம உடல்ல எடுத்துகிட்டோம்னா, நம்மளுடைய தலையில் இருந்து பாதம் வரைக்கும் நம்ம உடல் கூறுகளை பிரிக்கும் போது, லக்னம் அப்படிங்கிறது தலைப்பகுதி.

2 அப்படிங்கிறது நம்மளுடைய முகம் அப்படின்னு சொல்லலாம். 3 அப்படிங்கிறது நம்மளுடைய கழுத்து, தோள்பட்டை  பகுதிகள் அப்படின்னு சொல்லலாம். 4 அப்படிங்கிறது இருதயம், மார்பு சம்பந்தப்பட்ட பகுதிகள். 5 மேல் வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகள். 6 என்பது அடிவயிறு சம்பந்தப்பட்ட பகுதிகள். 7 அப்படின்னு சொல்றது முதுகுத்தண்டு வடம் சம்பந்தப்பட்ட பகுதிகள். 8 என்பது பிறப்புறுப்பும்பந்தப்பட்ட கழிவுகளை வெளியேற்றக் கூடிய பகுதிகள். 9 அப்படிங்கிறது தொடை பகுதி. 10 அப்படிங்கிறது முழங்காலும் மூட்டு பகுதிகள். 11 அப்படிங்கிறது கணுக்கால். 12 என்பது பாதம். இதுதான் 12 உடற்கூறுகள் அப்படின்னு சொல்றது.

அதுல இந்த 12 நிகழ்வுகள் அப்படிங்கிறது ஜாதகருடைய சுற்றி நிகழக்கூடிய தன்மைகள் எல்லாமே 1 ஆம் பாகம். அவர்களுடைய குடும்பத்தை சுற்றி நடக்கக் கூடியது. அவங்க வருமானம் அப்படிங்கிறது பணம் வருவாய் தரக்கூடிய பாதம் அப்படிங்கி றது 2 ஆம் பாகம் தான் படிப்பு சம்பந்தப்பட்டது அப்படின்னு சொல்லலாம்.

3 அப்படிங்கிறது அவர்களுடைய முயற்சி.  4 அப்படிங்கிறது அவருடைய தாய், சொத்து ,சுகம் சார்ந்தது. 5 பூர்வ புண்ணியம், குழந்தைகள். 6 என்பது எதிர்ப்புகள் நோய் கடன். 7 கிறது கணவன் அல்லது மனைவி நண்பர்கள். 8 அப்படிங்கிறது ஆயுள்.

அப்ப அந்த ஆயுள் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயம். அப்போ அந்த ஆயுள் பத்தி நம்ம ஏன் பயப்படனும் 8 பாவகம் நல்லா இருந்தாதான் ஒரு மனிதன் ஆயுளோடு இருக்க முடியும் அப்படிங்கிற ஒரு நிகழ்வு இருக்கு இல்லையா.

 அப்போ ஒவ்வொரு கட்டங்களுக்குமே ஒவ்வொரு விஷயங்கள் இருக்கு. நம்ம மனிதனுக்கு தேவைப்படக் கூடிய ஒரு பலன்கள் எடுக்கணும் அப்படின்னா அதுல 8 ஆம் பாவகம் மிக முக்கியமான பாவகம்.  திடீர் முக்கிய முடிவுகளை தருவது 8 ஆம் பாவகம் தான். திடீர் அதிர்ஷ்டங்களை தருவதும் 8 ஆம் பாவகம் தான். அதே நேரத்துல நமக்கு பிரச்சனைகள் தீராத பிரச்சனைகளை தரக்கூடியதும் 8 ஆம் பாவகம் தான். அப்போ இந்த 8 ஆம் பாவகம் அப்படிங்கிறது பிரச்சனைக்குரிய பாவகம் அப்படிங்கிறத விட எங்கெல்லாம் நம்ம தப்பு பண்ணி இருப்போம் எங்கெல்லாம் நம்ம மிச்சம் வச்சிருக்கோம் நம்ம கர்மாவை கழிப்பதற்கு எங்கெல்லாம் மிச்சம் வைத்திருக்கும் அப்படிங்கிறது குறிக்காட்டக்கூடிய பாவகம் தான் பொருத்தமாக இருக்கும்.

 கழித்தல் :

இப்ப நம்ம ALP அட்சய லக்ன பத்ததி  ஜோதிடத்துல ரொம்ப இம்பார்ட்டண்ட் அப்படிங்கிறது ஒவ்வொரு பாவங்களுக்கும் ஒவ்வொரு செயல்கள் கொடுக்கப்பட்டாலும் இந்த 8 அப்படிங்கிறது நம்மளுடைய கழித்தல். நம்மளுடைய கர்மாவை கழித்தல் அப்படிங்கிறது 8 சார் அடிக்கடி சொல்லக்கூடிய ஒரு விஷயம் எந்த ஒரு பாவகமுமே கெட்டது அப்படிங்கிறது கிடையாது.

அதுல உள்ள எல்லா விஷயமும் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் மட்டுமே தான் ஒரு மனிதன் நல்ல விதமாக எல்லா செயல்களையும் அனுபவிக்க முடியும் அப்படிம்பாங்க.

அதுல எட்டாவது அப்படிங்கிறது நம்மளுடைய உடம்புல மிக முக்கியமான ஒரு பார்ட். நம்ம உடம்புல கழிவுகள் வெளியேறவில்லை அப்படின்னா என்ன அவஸ்தைகளை கொடுக்கும் அப்படிங்கிறது புரிஞ்சு உணர்ந்த உங்களுக்கு தெரியும். அதேபோல 8 ஆம் இடம் அப்படிங்கிறதுதான் நமக்கு எல்லா விதமான மறைமுகமான நிகழ்வுகளை ஏற்படுத்தக் கூடியது.

நம்மளுடைய உடல் உறுப்புகளை மறைமுகமான செயல்களை செய்யக்கூடிய அத்தனையும் 8 ஆம் பாவகம் அப்படின்னு தான் சொல்லணும். அப்போ அதெல்லாம் கெட்டுப் போகும்போது நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் வரும் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலைகள் எல்லாம் வருது இல்லையா.

எச்சரிக்கை மணி :

அப்போ அப்படிப்பட்ட 8 ஆம் பாவகத்தை நம்ம எப்படி கொண்டாடணும் அந்த 8 ஆம் பாவகத்தோட தன்மை நமக்கு 8 ஆம் பாவகம் எங்க தான் இருக்குதோ அங்கெல்லாம் நமக்கு பிரச்சனைகள் காத்துகிட்டு இருக்கு அப்படிங்கிற ஒரு எச்சரிக்கை மணி அலாரம் அடிக்கும் இல்லையா இப்ப நம்ம வண்டியில போயிட்டு இருக்கோம் ரெட் சிக்னல் விழுகுது சிவப்பு நிற சிக்னல் அப்படிங்கிறது தான் 8 ஆம் இடம் இந்த இடம் நீ நிறுத்தி போக வேண்டிய இடம் இந்த இடம் உனக்கு பிரச்சனைக்குரிய இடம் இங்கே நீ வேகமாக கிராஸ் பண்ணா ஆபத்து இருக்கு அப்படிங்கிறத நமக்கு குறி காட்டக்கூடிய பாவகமே இந்த 8 ஆம் பாவகம் அப்படின்னு சொல்லலாம். இந்த 8 ஆம் பாவகம் எங்கெல்லாம் இருந்தா எதன் மூலமா நமக்கு பிரச்சனை வரும் என்றாலும் கூட நம்ம தெரிஞ்சுக்க போறோம்.

இப்போ உதாரணமா ஒருத்தருக்கு அட்சய லக்னம் எல்லாருக்கும் லக்னத்தில் இருந்து 8 ஆம் பாவகம் வேலை செய்யும் அப்படினா லக்னத்தில் இருந்து எடுக்காதீங்க உங்களுடைய இன்றைக்கு வயதுக்குரிய லக்னம் என்ன அப்படிங்கிறதுல இருந்து எடுங்க. அந்த வயதுக்குரிய லக்னத்தை எடுத்து அந்த லக்னத்திற்கு 8 ஆம் பாவகம் என்ன அப்படிங்கிறத பாருங்க. உதாரணமாக நம்ம சில லக்னமாக பார்க்கிறோம் அப்படின்னு சொன்னா இப்போ அட்சய லக்னம் அப்படிங்கிறது மகர லக்னமாக இருக்குது அப்படின்னு வச்சுக்கோங்களேன். மகர லக்னமாக இருக்குது இந்த மகர லக்னத்திற்கு 8 ஆம் வீடு எங்க இருக்குதோ அதிலிருந்து 8 ஆம் வீடு தான் நமக்கு பிரச்சனைகளை குறி காட்டக்கூடிய ஒரு நிகழ்வாக அமையும். இப்போ இந்த 8 ஆம் பாவகம் இந்த வீட்டில் உரிய அதிபதி யாராக இருப்பாங்க அப்படின்னு சொன்னா சூரிய பகவானாக இருக்குது இந்த சூரிய பகவான் மகர லக்னத்திற்கு பிரச்சனைகளை குறிகாட்டக் கூடிய எச்சரிக்கை மணியை அடிக்கக்கூடிய எச்சரிக்கையாளர் யாருன்னு சொன்னா சூரிய பகவான். ரெட் அலார்ட் அப்படின்னு சொல்லுவோம் இல்லையா நம்மள எச்சரிக்கையாக எச்சரிக்கை படுத்துதல் அப்படிங்கிறது தான் இவருடைய வேலை. இந்த இடத்தில் எல்லாம் நீ தப்பு பண்ணி இருக்க. இந்த இடத்தில் இருந்ததனால் நீ கவனமா இருக்கணும் அப்படிங்கிறத சொல்றதுதான் இவருடைய வேலை. அப்போ இவர் என்ன பண்றாரு இந்த லக்னத்திலேயே இருக்காரு அப்படின்னு வச்சுக்கோங்களேன் லக்னத்திலேயே சூரியன் இருக்காரு அப்படின்னா இந்த ஜாதகர் என்ன பண்ணுவாரு அவருடைய எண்ணங்களாலும் அவருடைய செயல்களாலும் அவரே பிரச்சினைகள் எல்லாம் மாட்டிக்குவாரு அப்படிங்கிற ஒரு நிகழ்வு இருக்குது. அப்போ இந்த ஜாதகர் கடந்த கால நிகழ்வுல சரியான விதைகளை விதைக்கவில்லை அப்போ அவர் தண்டனைகளை பெறக்கூடிய காலமாக இது மாறும் அப்படிங்கிறது தான் இந்த 8 ஆம் பாவகத்தினுடைய நிலை.

 சூரியன் 2ல் இருக்காங்க :

இப்போ இதுவே சூரியன் வந்து 2ல இருக்காங்க அப்படின்னு வச்சுக்கோங்களேன் அவர் எங்க எச்சரிக்கையாக இருக்கணும் அப்படின்னா அவர் வந்து குடும்பம். குடும்பமே அவருக்கு பிரச்சனைக்குரியதாக மாறும். குடும்பத்தினால தான் அவருக்கு தண்டனைகள் காத்துகிட்டு இருக்குது அப்போ குடும்பம் அப்படிங்கிற நிகழ்வுக்காக அவர் தன்னை செலவழிக்க வேண்டியது இருக்கும் அப்படிங்கிற நிகழ்வு அப்போ குடும்ப உறவுகளிடம் எவ்வளவு கவனமாக இருக்கணும் அப்படிங்கிறத புரிந்து கொள்ளக்கூடிய அதே மாதிரி வருமானத்தில் பிரச்சனை தரும் அப்போ உங்களுக்கு வரக்கூடிய வருமானத்தை எந்த அளவுக்கு போற்றிப் பாதுகாக்கணும் அப்படிங்கிறது உணர்த்தக்கூடியதும் இதுதான் வருமானம் உங்களுக்கு பிரச்சனைகள் இருக்கக்கூடிய ஒரு இடமாக உங்களுக்கு காட்டுது அப்படிங்கிறப்போ நீங்க அங்க கவனமா இருங்க அப்படிங்கிறாங்க ரெண்டுங்கிறது என்ன நம்ம பேசக்கூடிய பேச்சு அப்போ நீ பேசினால் பிரச்சனைகளை நீ சந்திப்ப பேசாத அப்படிங்கிறத குறி காட்டக்கூடிய பாவகம் இது அப்போ 8 எங்கெல்லாம் இருக்குதோ அந்த இடம் சார்ந்த நிகழ்வுகளை நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதனுடைய அர்த்தம் அப்படின்னு சொல்லலாம்.

 சூரியன் ஏழில் :

அடுத்து இப்போ சூரியன் வந்து ஏழுல இருக்காரு அப்படின்னு வச்சுக்கலாம். யார் மூலமாக பிரச்சினை இருக்கும் மனைவி மூலமாக, கணவன் மூலமாக ,நண்பர்கள் மூலமாக பிரச்சனைகள் இருக்கலாம் என இங்க இந்த பிரச்சனைகள் நம்ம வந்து சரியா ஹேண்டில் பண்ணல அதனால இந்த இடம் பலவீனம் ஆயிடுச்சு இந்த வீட்டினுடைய அதிபதி உன் தண்டனையை தரக்கூடிய யாரு உன்னுடைய நண்பர்கள் தான், உன்னுடைய கணவன் தான் அல்லது உன்னுடைய மனைவிதான், அந்த தண்டனையை நீ அனுபவிச்சு தான் ஆகணும் அப்படின்னா நீ அவன்கிட்ட எப்படி பக்குவமாக நடந்து கொள்ளனுமோ அப்படி பக்குவமாக நடந்தால் மட்டும் தான் அந்த தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் அப்படிங்கிறத உங்களுக்கு எச்சரிக்க கூடிய பாவகம்.

 8 ஆம் பாவகத்துடைய அதிபதி 10 ல் :

 அதேபோல இப்போ 10 ல் இருக்காருன்னு வச்சுக்கோங்களேன் சூரியன் தொழில் மூலமாகவே நீ தண்டனைகளை அனுபவிப்பாய் வேலை உனக்கு பிரச்சனையாக மாறும் அப்போ கிடைச்ச வேலையை காப்பாத்துகிறது தான் புத்திசாலித்தனம் அங்க வேலை செய்யக்கூடியவங்க பிரச்சனை பண்ணுவாங்களா கண்டிப்பா பிரச்சனை பண்ணுவாங்க தொழிலாக செய்றீங்க அப்படின்னா வேலையாட்கள் மூலமா பிரச்சனை இருக்குதா கண்டிப்பா இருக்கும். தொழில் எதிர்பார்த்த மாதிரி இருக்காதா கண்டிப்பா இருக்காது. அப்போ அதெல்லாம் உனக்கு தவறான நிகழ்வுகளாக நம்ம செய்த வினை பயன் இங்குதான் வேலை செஞ்சிருக்கு. போன கடந்த காலத்துல நம்ம சரியாக தொழில்ல ஹேண்டில் பண்ணல நமக்கு கிடைத்த வாய்ப்புகளை நம்ம சரியா பயன்படுத்தல அது தவறாக பயன்படுத்தி இருக்கோம் அப்படிங்கிறதால தான் அந்த 8 ஆம் பாவகத்துடைய அதிபதி 10 லிருந்து நமக்கு பிரச்சனைகளை தருவார் தரப் போறார் அப்படிங்கிறத நமக்கு கைகாட்டக்கூடிய பாவகம் அப்படிங்கிறதுதான் இது இந்த 8 ஆம் பாவகத்துடைய வேலை.

 அப்போ இந்த 8 ஆம் பாவகத்துடைய அதிபதி எங்க இருக்காரோ அது சார்ந்த பிரச்சனைகளை ஜாதகர் நிச்சயமாக அங்கெல்லாம் கவனமாக இருக்கணும்கிறத உங்களுக்கு புரிய வைக்கிறது தான் ALP ஜோதிடம்.

 தீர்வை தேடி :

அதனால இந்த இந்த நிகழ்வுகள் இங்கெல்லாம் இருந்து பிரச்சனைகள் வர காத்திருக்கு. இதெல்லாம் நீங்க ஹேண்டில் இருக்கும் பண்றதுன்னா நீங்க ரொம்ப பக்குவமா ஹேண்டில் பண்ணனும். இதெல்லாம் இப்படித்தான் இருக்க போகுது. இதற்கான தீர்வை தேடி நம்ம ஓடணும்னு அவசியம் இல்ல. இது நம்ம ஹேண்டில் பண்ண தெரிஞ்சுக்கிட்டாலே போதும்.

 என்ன பண்ணுவோம் இப்போ சுனாமி வரப்போகுது அப்படின்னு நமக்கு தெரிஞ்சுருச்சு, எங்க தாக்க போகுது நம்மளுடைய தொழில் ஸ்தானத்தை தாக்க போகுது அப்படின்னு நமக்கு தெரிஞ்சு போச்சு. அப்போ என்ன பண்ணனும் ஒன்னு நம்ம தொழில் செய்யாம வேலை வாய்ப்புகளை தேடி ஓடிக்கணும். இல்லை என்றால் அந்த இடத்தை பாதுகாக்கணும். இல்ல அங்க வேலை செய்யக்கூடிய வேலையாட்களை நம்ம பத்திரமா அவங்களுக்கு தகுந்த மாதிரி நம்ம ஹேண்டில் பண்ண கத்துக்கணும் அப்படிங்கிறதுதான்.

 சரி, இப்போ இந்த எட்டாம் இடம் அப்படிங்கிறது ஒவ்வொரு நிகழ்வுகளுக்குமே எடுத்துக்கலாம். ஒரு பாவக காரகத்துவங்கள் அப்படிங்கிறது ஓராயிரம் காரகத்துவங்கள் இருக்கு. இப்போ எட்டுகிறது எச்சரிக்கையைக் குறி காட்டக்கூடிய நிகழ்வு அப்படிங்கிறது மட்டும் நம்ம பார்த்தோம். அந்த எட்டுங்கிறது தான் ஆயுள் அப்படிங்கிறதையும் நம்ம பார்த்தோம். அப்போ ஆயுள் அப்படிங்கிறது  பூரணமான ஒரு தீர்க்க ஆயுள் அப்படிங்கிறது எட்டாம் பாவகம் அந்த எட்டாம் பாவத்தின் அதிபதி எங்கெல்லாம் இருக்காரோ அந்த இடத்துல நமக்கு நோய்கள் வரும். பிரச்சனைகள் இருக்கும் அப்படிங்கிறது நம்ம தெரிஞ்சுக்கணும்.

குழந்தை :

இப்போ ஒரு குழந்தை உடைய ஜாதகமா இருக்கு இந்த எட்டாம் பாவத்து அதிபதி இரண்டாம் இடத்தில இருக்கு. அந்த குழந்தை இந்த லக்னம் மாறும் வரை பேச்சு திக்கி திக்கி வரும். பேச்சு அவ்வளவு சரளமாக இருக்காது. தடைபட்ட பேச்சு அப்படிங்கிறது பார்த்தோம். ஸ்பீடு பிரேக் அப்படிங்கிறதுதான் எட்டாம் பாவகம். தடுத்தல் அப்படிங்கிறதுதான் எட்டாம் பாவகம்.

 அப்போ அந்த மாதிரி ஒவ்வொரு நிகழ்வுகளையும் நமக்கு இணைச்சு நம்மளை புரிய வைக்கிறதுதான் ALP ஜோதிடத்தினுடைய தார்ப்பரியாம். உணர்வதும் உணர்த்துவதும். என்னுடைய நிலை, நான் வாங்கி வந்த வரம், என்னுடைய கொடுப்பினை இப்படிப்பட்டதுதான் இதை நான் ஏத்துக்கிட்டு இதோட வாழ நான் பயணிக்கிறேன் அப்படிங்கிற புரிதல் உங்களுக்கு கொடுக்கிறதுதான் இந்த ஜோதிடம்.

 கட்டாயம் நீங்க படிக்கணும். நீங்க படிச்சீங்கனாலே உங்களுடைய தன்மைகள்ல நீங்க மாற்றத்தை கொண்டு வர முடியும். அது உங்க வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். மீண்டும் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.

 நன்றி.

www.alpastrology.com

ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156


Comments