எனக்கு ஜோதிடம் வருமா? - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் - ALP அஸ்ட்ராலஜர்.


 அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ஜோதிடம் யார் படிக்கலாம்? நிறைய பேர் என்கிட்ட கேட்கக்கூடிய விஷயம் அதாங்க. ஜோதிடம் படிங்கன்னு சொல்றீங்க எனக்கு ஜோதிடம் படிக்க முடியுமா? எனக்கு ஜோதிடம் வருமா? நான் படிக்கலாமா? அப்படி என்று கேள்விகள் தான் நிறைய வருது.

 இதுல ஜோதிடம் யார் படிக்கலாம் நம்ம லக்னம் தன்மைகளை வைத்து ஒவ்வொரு லக்னத்திற்கும் அந்த ஜோதிடம் படிக்கக்கூடிய அமைப்பு எப்படி இருக்கும் அப்படிங்கறது நம்ம பார்க்கலாம். அதுக்கும் முன்னாடி இந்த ஜோதிடம் அப்படிங்கறது நம்ம எல்லாருக்கும் தேவைப்படக்கூடிய ஒரு விஷயம் அப்படிங்கறது நம்ம புரிஞ்சுக்கணும்.

 ஜோதிடம் அப்படிங்கறது பெரிய சமுத்திரம். அந்த சமுத்திரத்துல எல்லா விஷயங்களும் இருக்கு. ஆனா நமக்கு என்ன தேவையோ இப்போ கல்வியின் எடுத்துக்கிட்டோம்னா அந்த கல்வி பல்லாயிரக்கணக்கான வகைகள்ல இருக்கு.

யாரெல்லாம் படிக்கலாம்?

    நான் இன்ஜினியர் ஆகணும்னு ஆசைப்படுறேன். அப்போ எனக்கு என்ன இருந்தால் நான் படிக்க முடியும். எந்த சப்ஜெக்ட்ல நான் மார்க் எடுத்தா படிக்க முடியும்? எனக்கு என்ன டூல்ஸ் இருந்தா நான் படிக்க முடியும்? இப்ப எனக்கு மெரின் இன்ஜினியர் ஆகணும்னு நினைக்கிறேன். அதுக்கு என்ன சப்ஜெக்ட் மட்டும் நான் எடுத்தா போதும்? நான் ஒரு டீச்சர் ஆகணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு நான் என்ன பண்ணனும்? நான் பேங்க்ல ஒர்க் பண்ணனும் ஆசைப்படுறேன். அதுக்கு என்ன பண்ணனும்?

இப்படி நமக்கு தேவையான விஷயங்களை மட்டும் அதில் எடுத்துக்கோங்க அந்த மாதிரி தான் இந்த ஜோதிடம் அப்படிங்கறது நமக்கு என்ன தேவையோ நமக்கு ஒரு சிலர் நிகழ்வுகளை பற்றி புரிஞ்சிக்கணும். அந்த நிகழ்வுகள் ஏன் நடக்குதுன்றதுக்கான காரணம் தெரிஞ்சிக்கணும். அதற்காக நான் ஜோதிடம் படிக்கிறேன்.

 இல்ல எனக்கு கிரகங்களை பத்தி ஆய்வு செய்யணும். எனக்கு வானியல் சாஸ்திரம் படிக்கணும் அதனால ஆர்வம் அதிகமா இருக்கு. தேடல் அதிகமா இருக்கு அதனால நான் படிக்கிறேன். நான் எத்தனையோ இடத்தில் ஜாதகம் பார்த்து இருக்கேன். யார் சொல்றதும் எனக்கு பலன் தரல. எல்லாம் மாத்தி மாத்தி சொல்றாங்க. எனக்கு உள்ள பலன்களை நான் தெரிஞ்சுக்கணும். அதுக்காகவே நான் படிக்க வந்தேன். எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்? எல்லாரும் நல்லா இருக்காங்க. என் கூட பழகுனவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. என்கூட படிச்சவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. எல்லா திறமையும் இருந்தும் எல்லா அறிவும் இருந்தும் எல்லாம் செய்யக்கூடிய அறிவும் இருந்தும். என்னால ஜெயிக்க முடியல என்ன காரணம்? அது தெரிஞ்சுக்கறதுக்காக நான் ஜோதிடம் படிக்க வந்தேன். வாழ்வா சாவாங்கிற போராட்டத்தில் இருக்கேன்.

 எனக்கு அடுத்து போறதுக்கு போக்கு இடமே கிடையாது. இதுலயாவது ஒரு சொல்யூஷன் எனக்கு கிடைச்சுராதா? கடைசி ஆயுதமாக இதை படிக்க வந்தேன். அப்படிங்கறவங்க எல்லாம் நிறைய இருக்காங்க இல்லையா. அதுல யாருக்கெல்லாம் ஜோதிடத்தில் படிக்கலாம் அப்படிங்கறத இப்ப நம்ம பாக்க போறோம்.

ஒவ்வொரு லக்னம் மாறும்போதும் இந்த ஜோதிடத்தின் அவசியம் எப்படிப்பட்டதாக இருக்கும். அப்போ அவங்களுக்கு படிக்கக்கூடிய அந்த வாய்ப்புகள் இருக்குமா? அப்படிங்கறது நம்ம பார்க்கலாம்.

விருச்சிக லக்னம் :

இப்போ விருச்சிக லக்னம். ஜோதிடம் அவங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லா வரும். கண்டிப்பா அவங்க படிக்க முடியும். அந்த படிக்கிறது மட்டும் கிடையாது. அவங்களால அழகா அடுத்தவங்களுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ண முடியும். கற்றுக் கொடுக்க முடியும். புரிய வைக்க முடியும்.

 அதனால அவங்களுக்கு பலன் உண்டா நிச்சயமாக உண்டு. அவங்களுடைய அனுபவத்தையே பலனாக அவங்க சொல்ல முடியும். அந்த அளவுக்கு விருச்சிக லக்னம் அட்சய லக்னமாக இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல குருமார்கள் கிடைத்து, அதன் மூலமா அவர்கள் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியும்.

 ரொம்ப சிறப்பா அவர்கள் இந்த நேரம் புரிந்து அனுபவிச்சு ரசித்து படிக்க முடியும் அப்படின்னா அது விருச்சிக லக்னத்துக்கு முதன்மையாக இருக்குதுங்க. ஏன்னா உங்களுடைய வலி அப்படிப்பட்டது. உங்களுடைய வேதனைகள் கடந்த காலத்தின் வடு அப்படிங்கறது உங்களுக்கு ஒரு இதுக்கு மேல என்ன பண்றது அப்படிங்கறது தேடலை கொடுத்துக்கிட்டு இருக்கு. அதற்கான வழிகள் இந்த ஜோதிடத்தில் உண்டு.

மகர லக்னம் :

அடுத்து மகர லக்னம் கண்டிப்பா படிக்கணும். ஏதாவது ஒரு விஷயத்தை படிக்கணும். அதுக்கு ஜோதிடத்தை படிக்கலாம். அதுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம். இந்த கர்மா ஏன் எனக்கு வந்தது? இந்த கர்மாவில் இருந்து நான் எப்படி தப்பிக்கிறது? இந்த கர்மாவை நான் எப்படி அனுபவித்து கழிப்பது?

இந்த கர்மா எந்த வழியில் எல்லாம் செஞ்சி இருப்பேன். நான் என்ன கர்மா பண்ணி இருந்தா எனக்கு இந்த தண்டனை கிடைத்திருக்கும் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கு இல்லையா, அந்த ஒரு தேடலுக்காக இந்த மகர லக்னக்காரங்க ஜோதிடத்தை படிங்க.

இது உங்களுக்கு எந்த அளவுக்கு பயன்படும் அப்படின்னா உங்களை நீங்கள் சிற்பியாக ஒரு சிலை தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் பாத்திருக்கீங்களா அந்த அளவுக்கு, ஏன்னா இந்த மகர லக்னத்திற்கு யாரும் அவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியாது.

 தன்னை உணர்ந்தால் அவர்கள் வெற்றியாளராக மாறலாம். அப்படி தன்னை உணர்வதற்கு இந்த மகர லக்னக்காரர்கள் ஜோதிடம் படிக்கணும். அவங்க படிக்க முடியுமா? நிச்சயமாக முடியும். அதுவும் இந்த பிரம்மம் முகூர்த்த வேளையில் அவங்க படிக்கிறது அவங்களுக்கு கண்டிப்பாக யோகத்தை கொடுக்கணும்னு சொல்லலாம்.

ஏன்னா சனிபகவானுடைய ராசி. சனினா இருட்டு. சூரிய வெளிச்சத்திற்கு முன்பு அவர்கள் செய்யக்கூடிய அத்தனை விஷயங்களும் வெற்றி பெறும் அப்படின்னு சொல்லலாம்.

மேஷ லக்னம் படிக்கலாமா?

உங்க வாழ்க்கை துணையிடம் இருந்து நீங்கள் எப்படி எல்லாம் பலன்களை சந்திக்க முடியும். உங்கள் நண்பர்கள் எப்படி எல்லாம் உங்களுக்கு உதவுவாங்க.

அந்த நண்பர் சொல்லுவாங்க நீ ஜோதிடம் படிப்பா உனக்கு கண்டிப்பா அவசியப்படும் அப்படின்னு. ஏன்னா உங்க நண்பர்களுடைய வழிகாட்டுதல் படி உங்ககிட்ட உங்க நண்பர்கள் யாராவது நீ இந்த ஜோதிடத்தை படி. உனக்கு பலன் உண்டு அப்படின்னு சொன்னாங்கன்னா கண்டிப்பா அத தட்டாதீங்க. உங்க நண்பர்கள் உங்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருப்பார்கள்.

நண்பர்கள் சொல்லக்கூடிய வார்த்தை உங்களுக்கு பாடமாக அமையும். மேஷ லக்னம் அட்சய லக்னம் யாருக்கெல்லாம் இருக்கு  உங்களுக்கு யோகத்தை தரும்.

 இந்த அட்சய லக்னத்தை நான் எப்படி தெரிந்து கொள்வது?

அந்த கேள்வி இருக்குது இல்லையா என்ன பண்றீங்க கூகுள் பிளே ஸ்டோர்ல ( google play store) போயி ALP (ALP Astrology  App )அஸ்ட்ராலஜி ஆப் அப்படிங்கிறத போட்டீங்கன்னா உங்களுக்கு அந்த ஆப்ஷன் காட்டும். பொதுவுடைமூர்த்தி சார் பெயர் போட்டோ வரும். அதை இன்ஸ்டால் பண்ணுங்க.

இன்ஸ்டால் பண்ணிட்டு செட்டிங்ஸ்குள்ள போயிட்டு. அதுல வந்து உங்களுடைய விருப்பத்தேர்வு மொழி என்ன அப்படிங்கறதை நீங்க தேர்ந்தெடுத்துக்கோங்க. தமிழ் வேணும்னா தமிழ். இங்கிலீஷ் வேணும்னா இங்கிலீஷ். உங்களுக்கு கன்னடம், ஹிந்தி  மொழிகளில் இருக்கு. நீங்க எந்த மொழி தேவையோ அதுல எடுத்துக்கோங்க.

 அதுல உங்களுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊரை சரியாக 4 லெட்டர் நீங்க டைப் பண்ணுங்கனாலே உங்களுடைய ஊர் அதுல காட்டும் ஸ்க்ரீன்ல. அதுல நீங்க ஊர் செலக்ட் பண்ணீங்கன்னா உங்களுடைய லோகேஷன் அதில் லேட்டிடியூட் லாங்கிடியூட் எல்லாம் அழகா ஆட் ஆய்டும். அதுக்கப்புறம் சம்மிட் கொடுத்தீங்கன்னா உங்க ஜாதகம் ஓபன் ஆயிடும். ஃப்ரீ சாப்ட்வேர்ல இருக்கு.

ALP லக்னம் :

அதுல ஒரு கட்டத்துல இந்த ALP னு போட்டு இருக்கும். இந்த 12 கட்டங்கள்ல ஏதாவது ஒரு கட்டத்தில் ALP னு போட்டு இருக்கும். அந்த ALP லக்னம் உங்களது என்னனு பாத்துக்கோங்க.

அந்த லக்னத்தோட தன்மைகள் எங்க இருக்குதுன்னு பாருங்க. அந்த லக்னத்திற்கு உங்களுக்கு ஜோதிடம் எப்படி இருக்கும் நீங்க தெரிஞ்சுக்கலாம்.

4 லக்னங்கள் கட்டாயம் ஜோதிடம் படிக்க வேண்டும்:

அடுத்து  ALP மிதுன லக்னம் ,கன்னி லக்னம், தனுசு லக்னம், மீன லக்னம் இந்த நான்கு லக்னங்கள் கட்டாயம் ஜோதிடம் படிக்க வேண்டும். உங்கள் ஜாதகத்துல எந்த கிரகம் அமைப்புகள் இருந்தாலும் சரிங்க. இந்த நாலு லக்னம் ஜாதகம் படிக்கணுமா? நிச்சயம் படிக்கணும்.

 ஏதாவது ஒரு சர்வீஸ் ஓரியண்டான விஷயத்தை இவங்க கையில எடுத்தா மட்டும் தான் இவங்க வாழ்க்கையில பிரச்சனைகளை இவங்க குறைக்க முடியும். அப்ப நீங்க என்ன பிசினஸ் வேணாலும் பண்ணுங்க. என்ன வேலை வேணாலும் பாருங்க. இந்த ஜோதிடத்தை படிங்க, பாருங்க.

 இதை படிச்சு நீங்க செய்யக்கூடிய வழிகள்லயே நாலு பேருக்கு நீங்க ஃப்ரீயா கூட ஜாதகத்தை பாருங்க. அதுவே உங்களுக்கு சர்வீஸ் ஆக மாறும். அந்த சர்வீஸ் உங்களுக்கு உங்க பிரச்சனைகள் இருந்து விடுபடக்கூடிய வாய்ப்புகளையும் வரன்களையும் கொடுக்கும் என்று சொல்லலாம்.

 ஏன்னா இந்த நான்கு லக்னங்களுமே உபய லக்னங்கள்னு சொல்றது. அடுத்தவங்களுக்கு உபயோகப்படக்கூடிய ஒரு லக்னம். அப்போ இந்த லக்னக்காரங்க ஜோதிடத்தை படிக்கிறாங்கன்னா இவங்களால நிச்சயமாக அடுத்தவர்களுக்கு உபயோகம் உண்டு, வளர்ச்சி உண்டு அப்படின்னு சொல்லலாம்.

 அதனால நீங்க கட்டாயம் படிங்க. உங்களுக்கு படிப்புங்கிறது ஜோதிடங்கிறது கண்டிப்பாக உங்களுக்கு கைகூடும். நீங்க அதுல நல்லா பண்ணலாம். பெயர், புகழ் அடையக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டு. பணத்தை பெரிதாக நினைக்காதீங்க. நீங்க படிங்க. பேரும் வரும், பொருளும் வரும், அருளும் கிடைக்கும், பொருளும் கிடைக்கும். கட்டாயம் இந்த நாலு லக்னங்களுக்குமே உண்டு.

ரிஷப லக்னம் :

அடுத்து ரிஷப லக்னம். கணித முறைகள் ரொம்ப அழகா உங்களால் அப்சர்வ் பண்ண முடியும். டக்கு டக்கு டக்குனு பலன் எடுக்க முடியும். உங்களுக்கு பாயிண்ட் பாயிண்ட்டா மனசுக்குள்ள பதியும். ஒரு விஷயத்தை நீங்க பாக்குறீங்க. ஒரு லக்ன புள்ளி நகர்வு ஒரு வருஷம் ஒரு மாதம் பத்து நாள்.

பூசம் நட்சத்திரம் :

இப்போ எனக்கு பூசம் நட்சத்திரம் போகுது. பூசம் நட்சத்திரம் எனக்கு இந்த காலகட்டங்கள் பிரச்சனைகளை தரக்கூடிய காலம். 4 வருஷம் 5 மாதம், 10 நாள். இந்த காலகட்டங்களில் நான் என்ன பண்ணனும்?

 அப்போ பிரச்சினைக்குரிய நபர்களுடன் பழகிக்கணும். பிரச்சனைகளுக்குள்ள வாழனும். பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருக்கணும். அதையே நமக்கு வரமாக மாற்றிக் கொள்ளவும் முடியும். அது எப்படி? அப்படிங்கறதெல்லாம் அழகா உங்களுக்கு ALP ல புரிஞ்சுக்க முடியும்.

 கடக லக்னம் உங்கள் கவலைகளை மறப்பதற்கு உணர்ச்சிவசப்படுறீங்க இல்லையா நாம தான் இந்த குடும்பத்துக்கே தூணாக இருக்கோம். நம்மள யாருமே புரிஞ்சுக்கல. நான் என் குடும்பத்திற்காக இவ்வளவு எல்லாம் பண்ணி இருக்கேன். இந்த குடும்பம் என்னைய கவனிக்கவே இல்ல. நான் இன்னைக்கு தனிமையாக உணர்றேன்கிற எண்ணம் உங்களுக்குள்ள இருக்கா?

 உங்களுக்கு கடக லக்னம் போகுதா?

கட்டாயம் இந்த ஜோதிடத்தை படிங்க. உங்களுடைய அந்த தனிமையை போக்கும் அருமருந்தாக இந்த ஜோதிடம் வேலை செய்யும். காரணம் இதுதான் நீங்க படிக்க வேண்டிய ஒரு நேரமே இந்த நேரம் தான் அப்படிங்கறது நீங்க புரிஞ்சுக்கலாம்.

மறை ஞானத்தை நீங்கள் தேடுறீங்களா புறச் சூழ்நிலைகள் உங்களுக்கு மாறும். ஒரு மாற்றங்களை தரும். உங்கள் கவலைகள் உங்களை விட்டுப் போகும்.

சிம்ம லக்னம் :

சிம்ம லக்னம் ஒரு தொழிலாக வருமானத்திற்காக ப்யூச்சர்ல என்னுடைய ரிட்டயர்மென்ட் காலத்துல எனக்கு இது உதவிகரமாக இருக்கும் அப்படிங்கற ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கா? நிச்சயம் இந்த ஜோதிடம் உங்களுக்கு வரம் கொடுக்குமா? கண்டிப்பா கொடுக்கும்.

 உங்களால படிக்க முடியும். அடுத்தவங்களுக்கு அழகா பலன் சொல்ல முடியும். அது உங்களுக்கு ஒரு ஆளுமை, தைரியம் , தன்னம்பிக்கை, அதிகமா க ஏற்படுத்தும். இந்த ஜோதிடத் துறையில் நீங்கள் நல்ல நிலைமைக்கு வர முடியுமா? கண்டிப்பாக வரலாம். கட்டாயம் நீங்க படிக்கணும்.

 சரி அதுக்கெல்லாம் என்ன காரணம் காரியங்கள் அப்படிங்கறது நீங்க அட்சய லக்ன வகுப்புக்கு உள்ள வந்த நாலாவது நாள் இதற்கான காரணங்கள் எல்லாம் உங்களுக்கு புரிபடும்.

கும்ப லக்னம் :

அடுத்து கும்ப லக்னம் படிக்கிறதே எனக்கு சந்தோஷம் தான். படிக்கிறதே எனக்கு மகிழ்ச்சி. நான் படிச்சுக்கிட்டே இருக்கணும். ஆய்வு பண்ணிக்கிட்டே இருக்கணும். இந்த ஜோதிடத்துக்குள்ள என்ன எல்லாம் இருக்கு நான் தெரிஞ்சுக்கணும்.

கிரகங்கள் நன்மைகள் தரும் :

இந்த கிரகங்களை பத்தி எல்லாரும் பேசுறாங்க. நானும் பேச வேண்டும். அந்த கிரகங்கள் எனக்கும் நன்மைகள் தரும் அப்படிங்கற ஒரு எண்ணம் தெளிவும் உங்களுக்கு கிடைக்கும். இந்த கும்ப லக்னத்திற்கு அவ்வளவு ஈசியாக இந்த ஜோதிடம் அப்படிங்கறது கை கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம். இந்த ஜோதிடம் மட்டுமே கிடையாதுங்க. தெய்வங்களும் உங்களிடம் பேசும்.

ஏன்னா அந்த அளவுக்கு அந்த நவகிரகங்களும் உங்களுக்கு வந்து பதில் சொல்லும் அப்படிங்கிற அளவுக்கு இந்த அமைப்பு உங்களுக்கு உண்டுன்னு சொல்லலாம்.

துலாம் லக்னம் :

அடுத்ததாக துலாம் லக்னம். துலாம் லக்னம் இத படிக்கலாமா? படிச்சவங்க எல்லாம் என்னத்த சாதிச்சிட்டாங்க. இதுல படிச்சா கஷ்டப்படுவோம் என்று சொல்கிறார்களே, இந்த கர்மா நமக்கு ஒட்டிக்கும்னு சொல்றாங்களே, இதை பண்ணுவோமா? சரி எல்லாரும் படிக்கிறாங்க. நாமளும் பண்ணி தான் பார்ப்போமே. சரி என்னமோ சொல்றாங்க இதுக்குள்ள என்னதான் இருக்குன்னு பாப்போம் தெரிஞ்சுக்கோங்க அப்படிங்கற ஒரு ஆர்வத்தின் தேடல் உங்களுக்குள்ள இருக்கா? கண்டிப்பா நீங்க படிக்கலாம்.

 இப்படி 12 லக்னங்களுமே அட்சய லக்னம் பற்றிய ஜோதிடத்தை படிக்க முடியுமா? சாத்தியமா? நிச்சயமாக படிக்க முடியும். அது சாத்தியம் அப்படின்னு சொல்லலாம். ஆனால் இதை யாரெல்லாம் தொழில்முறையாக செய்ய முடியும்? யாரெல்லாம் குடும்பத்துக்குள்ள மட்டும் பயன்படுத்த முடியும்? யாரெல்லாம் இதிலிருந்து ஜெயிச்சு வெளிய வர முடியும்? பேர் புகழ் அடையமுடியும்? அப்படிங்கறது எல்லாம் ஒவ்வொரு லக்னத்திற்குமே உங்களுக்குன்னு ஒரு கிரகம் அமைப்புகள் இருக்கு இல்லையா.

 வாழ்க்கைக்கல்வி :

அந்த கிரக அமைப்புகள் படி நீங்கள் அடுத்த முடிவு  என்ன பண்ணனும்னு உங்களால புரிஞ்சுக்க முடியும். ஏன்னா இது ஒரு அடிப்படையான வாழ்க்கைக்கல்வி. இது ஜோதிடம் மட்டும் கிடையாதுங்க. அடிப்படையான உங்கள் வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய விஷயங்களை நாம எப்படி எல்லாம் இதுக்குள்ள இருந்து எடுக்க முடியும்? நவகிரகங்கள் எப்படி எல்லாம் நமக்கு அதை அழகாக எடுத்து கொடுக்கும் என்பதை உங்களுடைய அடிப்படை வகுப்பிலேயே உங்களால புரிஞ்சுக்க முடியும். அந்த அளவுக்கு அதனுடைய பாடத்திட்டங்கள் இருக்கு.

அதனால ஜோதிடம் யார் வேண்டுமானாலும் ஜோதிடம் படிக்கலாம். யார் வேண்டுமானாலும்  ஜோதிடராகலாமா? அதற்கு தனி பதிவாக ஒரு பதிவு போடுறோம். படிப்பதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். மீண்டும் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி. வணக்கம்.

www.alpastrology.com

ALP Astrology Office: +91 9786556156 / +91 9363035656

Comments