நல்ல வேலை நல்ல வருமானம் இருந்தும் ஏன் திருமண வாழ்க்கை அமையவில்லை? - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட். - ALP அஸ்ட்ராலஜர்.
full video link: https://youtu.be/qaIi_vTHC9Y?si=KTI5V-hLrD-MXMjv
வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர்
ஸ்ரீ குரு உமாவெங்கட். திருவனந்தபுரத்தில் இருந்து. இப்ப நிறைய பேருக்கு திருமணம்
பற்றி நிறைய கேள்விகள் அப்படிங்கறது வருகிறது. என்னதான் பெண் பார்த்தும் அமையல.
என்னதான் வேலை பார்த்தும் கிடைக்கல. என்னதான் முயற்சி பண்ணாலும் எங்களுக்கு
திருப்தி இல்ல அப்படிங்கறது. 
ஜாதக அமைப்பு :
இன்னைக்கு காலையில ஒரு ஜாதகம் பார்த்தோம்.
அதுல சொல்லக்கூடிய நிகழ்வு எதிர்பார்த்த வேலை அப்படிங்கறது
அவர்களுக்கு அமையல அப்படிங்கறது. அவர்களுடைய ஜாதக அமைப்பு அப்படிங்கறது உதாரணமாக
அவங்களுடைய லக்னம் அப்படிங்கறது கன்னி லக்னமாக இருக்குன்னு
வச்சுக்கோங்க. கன்னி லக்னத்திற்கு 10ஆம் அதிபதி சொல்லக்கூடிய புதன். அவர் மூன்றாம்
இடத்தில் நல்ல நிலையில் இருக்கிறார். ஆனால் இந்த ஜாதகருக்கு கம்யூனிகேஷன்
சம்பந்தப்பட்ட வேலை அப்படிங்கறது இந்த லக்னம் ஆரம்பித்த போதே கிடைத்ததா என்றால் கிடைச்சிருச்சு.
ஆனா அந்த ஜாதகர் அந்த வேலை வாய்ப்பை
எடுக்கலையானா எடுக்கல. அவருக்கு எதிர்பார்க்கிற வேலை அப்படிங்கறது கிடைக்காதுனால
அவர் அந்த வேலையை விட்டுட்டாருனு சொல்லலாம். 
தனக்கு மனதுக்குப் பிடித்த வேலை தான்
கிடைக்கணும். அதற்கு அப்புறமா அந்த வேலைக்கு போவேன். அப்படின்ற தன்மையை அந்த
ஜாதகருக்கு கொடுத்து இருக்குன்னு சொல்லலாம். 
எனக்கு கிடைத்த வேலை விட்டுட்டு, நான்
கிடைக்காத வேலையை தேடி அலையிறது அப்படிங்கறது அவங்க ஜாதகத்தோட அமைப்பா இருந்தது.
இந்த மாதிரி நிறைய பேர் ஒரு கைல வெண்ணையை கொடுத்தாங்க அப்படின்னா அந்த வெண்ணையை
மாற்றி நெய்யாக்கி கொள்வது அவங்க கைல தான் இருக்கு. 
அதற்கு அவங்க ஜாதகம் அப்படிங்கறது
ஒத்துழைக்கணும். அவங்களுடைய லக்னம்,
நட்சத்திர புள்ளி அப்படிங்கறது ஒத்துழைக்கணும். வேலை இருக்குது அந்த வேலையில போய்
சேர்ந்தாங்கன்னா வருமானம் அப்படிங்கறது கிடைக்கும். தான் எதிர்பார்த்த வேலை
அப்படிங்கறது அமையலன்னு சொல்லிட்டு, கெடச்ச வேலையை விட்டுட்டு வீட்டில் அமைதியாக
உட்கார்ந்து இருக்கக்கூடிய ஒரு நபரை ஒன்னும் செய்ய முடியாது. 
அட்சய லக்ன பத்ததி வகுப்பை படித்து
உணர்ந்தால் மட்டுமே உணர முடியும் அப்படிங்கறது சொல்லிக்கிறேன். ஏன்னா ஒரு செயல்
நடக்கிறது எதிர்பாராத விதமாக அவங்களுக்கு அந்த செயல் தானாக அமையுது. எந்த
முயற்சியுமே பண்ணல. ஆனா அந்த அமையக்கூடிய அமைப்பு என்பது இவருக்கு ஈசியா கிடைச்சிருச்சு.
அதோட தன்மையை அவருக்கு தெரியல.
இதுக்கப்புறம் அவருக்கு வெளிநாட்டு வேலை இருக்குதான்னு கேட்டீங்கன்னா கண்டிப்பாக
இருக்குது. 
வெளிநாட்டு  வேலை அமைப்பு :
ஏன்னா இவருக்கு வேலை அப்படிங்கறது உள்ளூர்ல
கிடையாது வெளியூர்ல தான். வெளிநாட்டுல அமைப்பு உள்ள வேலைகளை முயற்சி பண்ணுங்க.
கண்டிப்பாக உங்களுக்கு கை கொடுக்கும் அப்படிங்கற மாதிரி சொன்னோம். அதே மாதிரி
எனக்கு வேலை இருக்குதா? இல்லையா? என்னோட ஜாதக அமைப்பு படி சிலருக்கு 35, 40 வயசு
வரைக்கும் வேலை அமையாது. அவங்களுக்கு அவங்களுடைய ஜாதகத்துல லக்னத்தில்
இருக்கக்கூடிய கிரகங்கள் அப்படிங்கறது மனச இயக்கும். 
உதாரணமாக அவங்களுக்கு லக்னத்தில் ராகுவோ ,செவ்வாயோ இருந்தார்
அப்படினா அவங்களுக்கு என்னதான் நடந்தாலுமே அவங்களுக்கு மனம் தெளிவற்றதாக  இருக்கும்.  
செவ்வாய் பகவான் கன்னி லக்னத்திற்கு
அஷ்டமாதிபதி ஆகிறார். அப்ப அவர் மனசுல உட்கார்ந்து இருந்து அந்த வேலையில திருப்தி
அற்றத்தன்மை. வருமானத்துல, அந்த லைஃப்ல ஒரு  திருப்தியற்ற நிலை  அப்படிங்கறத அவருக்கு அங்க குறி காட்டுவார். 
கொஞ்சம் நிறுத்தி நிதானமா அவருடைய வேலை
என்னது கிடைச்ச வேலை எடுத்துட்டாருன்னா அவரோட வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும்
அப்படிங்கிறது நம்ம சொன்னோம். 
இதே மாதிரி தான் அட்சய லக்ன பத்ததில ஒவ்வொரு
ஜாதகத்துலயும் அவங்களுடைய வேலை அமைப்பு எப்படி இருக்கும். அந்த வேலையை அவர்கள்
எடுத்துக் கொண்டால் அதற்கு பிறகு வரக்கூடிய வாய்ப்பு அப்படிங்கறது எப்படி
இருக்கும் ரொம்ப சொல்லலாம். 
சித்திரை  நட்சத்திரம் :
உதாரணமா உங்களுக்கு ஹஸ்தம் நட்சத்திரம்
போயிட்டு இருக்கு. அடுத்தது சித்திரை நட்சத்திரம் போகுது அப்படின்னா செவ்வாய்
பகவான் லக்னத்தில் உட்கார்ந்து இருக்கிறார். 
கஷ்டப்பட்டு செய்யக்கூடிய வேலைகள்  அப்படிங்கறது இவங்களுக்கு எளிதாக கிடைக்கும்.
அதுவும் ரொம்ப செக்யூரிட்டி சிஸ்டம், ஒரு யுனிக்கா செய்யக்கூடிய வேலைகள்
அப்படிங்கறது அந்த ஜாதகருக்கு கிடைக்கும் அப்படிங்கறது சொன்னோம். அவர்களும் அதை
உணர்ந்தார்கள். சிலருக்கு இதை ஏத்துக் கொள்ளக்கூடிய தன்மை அப்படிங்கறது இருக்கும்.
வயது வந்து ரொம்ப ஆகல சின்ன வயசுதான் அப்போ அதை ஏற்றுக் கொண்டாங்கனா அவங்க
வாழ்க்கை முறை அப்படிங்கறது நல்லா இருக்கும். 
இங்க தான் எதிர்பார்க்கிற வேலை அப்படிங்கறதை
விட கிடைத்த வேலையை அங்க வரமாக மாற்றிக் கொள்வது சிறப்பாக அமையும்ன்னு சொல்லலாம். 
நீங்க எல்லாருமே கேள்விப்பட்டிருப்பீங்க.
நான் ஒரு வேலைக்கு போனேன். அந்த வேலையில் உட்கார்ந்து என் வேலையை பார்த்துட்டு
இன்னொரு வேலை அப்படிங்கறது எனக்கு குடுத்தாங்கன்னு சொல்வாங்க. எவ்வளவு அழகா
இருக்கும். எப்பா அவனுக்கு ஜாக்பாட் அடிச்சதுன்னு சொல்லுவாங்க. இதுதான் அவங்க வாழ்க்கையில
நடக்கக்கூடிய ஒரு ஜாக்பாட். ஒரு திடீர் அதிர்ஷ்டம் அவங்களுக்கு வேலை மூலமா
கிடைக்குமானா கண்டிப்பா கிடைக்கும். 
ஆனா அதை நாம உணரனும். என்ன வேலை கிடைக்குதோ
ஏத்துக்கணும். அது என்னங்க நான் படிச்சிருக்கேன், இருக்கட்டும் உங்கள் ஜாதக நிலை
அப்படி இல்லை. படித்த படிப்பிற்கும் நீங்கள் செய்யும் வேலைக்கும் எந்த சம்பந்தமும்
கிடையாது. எத்தனை பேர் வந்து படிச்ச படிப்புக்கு வேலை பாக்குறீங்க அப்படிங்கறத
கொஞ்சம் சொல்லுங்க பாக்கலாம். 
சிலருக்கு மட்டுமே அந்த யோகமும் சொல்லலாம்
சிலர் வாழ்க்கை பொருளாதாரத்தின் அடிப்படையில என்ன வேலை கிடைச்சாலும் பார்க்கலாம்
அப்படிங்கறது தான் பாக்குறாங்க. அது சிலருக்கு ஒரு யோகமாகவும் ஒரு சிலருக்கு
அழுத்தம் தரக்கூடிய செயலாகவும் மாறும். 
எப்போதுமே அப்படித்தான் இருக்குமா
கிடையாதுங்க. கிரகம் மாற்றம் நடக்கும் போது அது உங்களுக்கு அழகான ஜாக்பாட்
அப்படிங்கறது உங்களுக்கு கண்டிப்பாக கொடுக்கும். நீங்க கேப்பீங்க எல்லாருமே எனக்கு
இந்த அதிர்ஷ்டம் ஏதாவது வாழ்க்கையில் இருக்குதானு. 
இது தாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம்.
உங்களுக்கு தெரியாமலே உங்களுக்குள்ள நடக்கக்கூடிய மாற்றம்ங்கறது இந்த அதிர்ஷ்டம்.
அதை உணர்ந்தால் நீங்க உங்க வாழ்க்கையில கண்டிப்பாக வெற்றி பெற முடியும்
அப்படிங்கறத சொல்லிக்கிறேன். மீண்டும் ஒரு ஜாதக ஆய்வில் சந்திப்போம். 
நன்றி.
ALP Astrology Office: +91 9363035656 | +91 9786556156

Comments
Post a Comment